வியாழன், 10 ஆகஸ்ட், 2023

மண்ணின் மைந்தர்களின் மாபெரும் சுதந்திரப்போர்

 


 ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு மட்டுமல்ல. இஸ்லாத்திற்கும் எதிரிகளாக இருந்தார்கள். மூவாயிரம் குர்ஆன் பிரதிகளை எரித்தார்கள். மஸ்ஜித்களில் தொழுகை நடைபெறும்போதே முஸ்லிம்களை சுட்டுக் கொன்றார்கள். இதனால் தான் நம்முடைய முன்னோர்களான ஆலிம்கள் ஆங்கிலேயர்களை எதிர்ப்பதை மார்க்கத்தின் கடமையைப் போன்று கருதினார்கள்.ஜும்ஆ மேடைகளை அதற்காக பயன்படுத்தினார்கள். பல்லாயிரக்கணக்கான ஆலிம்கள் ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்டார்கள். அத்தகைய ஆலிம்களின்  தியாகத்தை இன்று நினைவு கூர்வது நமது கடமையாகும். وَمَنْ أَظْلَمُ مِمَّنْ مَنَعَ مَسَاجِدَ اللَّهِ أَنْ يُذْكَرَ فِيهَا اسْمُهُ وَسَعَى فِي خَرَابِهَا (البقرة114

தான் பிறந்த சொந்த ஊரை சொந்த நாட்டை நேசிப்பது நபி (ஸல்) அவர்களின் சுன்னத்

وأخرج الأزرقي عن ابن عباس قال : قال رسول الله صلى الله عليه وسلم لما خرج من مكة « أما والله اني لأخرج وإني لأعلم أنك أحب البلاد إلى الله وأكرمها على الله ، ولولا أن أهلك أخرجوني منك ما خرجت » .وأخرج الترمذي عن ابن عباس قال : قال رسول الله صلى الله عليه وسلم لمكة « ما أطيبك من بلدة وأحبك إليّ ، ولولا أن قومك أخرجوني ما سكنت غيرك (در المنثور

நபி ஸல் அவர்கள் மக்காவிலிருந்து வெளியேறிய போது மக்காவை நோக்கிப் பேசுவது போல பின்வரும் வார்த்தையைச் சொன்னார்கள். ஊர்களிலேயே எனக்குப் பிரியமான ஊராகிய மக்கா என்ற உன்னை விட்டும் நான் வெளியேறுகிறேன். நிச்சயமாக உன்னிடம் வசிப்பவர்கள் என்னை வெளியேற்றியிருக்கா விட்டால் நான் ஒருபோதும் வெளியேறியிருக்க மாட்டேன்.    

நபி (ஸல்) அவர்களின் கூறியதைப் போலவே நமது இந்திய ஆலிம்களின் நாவிலும் அல்லாஹ் அது போன்ற வார்த்தையை அல்லாஹ் வெளிப்படுத்திக் காட்டினான்.

இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்த நேரத்தில் மூத்த ஆலிம்களுக்குள் உரையாடல் நடைபெற்றது நாமும் பாகிஸ்தானுக்குச் சென்று விடுவோம். இனிமேல் அது தான் நமக்குப் பாதுகாப்பான ஒரு நகரம் என்று சில ஆலிம்கள் முடிவெடுத்த நேரத்தில் ஹுசைன் அஹ்மது மதனீ ரஹ் மற்றும் அவர்களுடன் இருந்த நம்முடைய முன்னோடிகளான ஆலிம்கள் அதை மறுத்து நாம் எதற்காக இந்த மண்ணிலிருந்து வெளியேற வேண்டும். இது நாம் பிறந்த மண். நாம் பிறந்த நாடு. கடைசி வரை இங்கே இருந்து நாம் போராட வேண்டும் என்று அறிவுரை கூறி அந்தச் செய்தியை மக்களிடம் பரப்பினார்கள். அதாவது நம்மை யாரும் நிர்பந்தமாக வெளியேற்றாமல் நாம் இங்கிருந்து வெளியேறக் கூடாது என்ற கொள்கையை மக்களிடம் பரப்பினார்கள்.    

நமது முன்னோர்களான ஆலிம்கள் இந்தியாவை விட்டுக் கொடுக்காத காரணம் இந்தியாவுக்கும் இஸ்லாத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதால் தான்.

عن ابن عباس قال قال علي بن أبي طالب إني لأعلم أحب بقعة إلى الله في الأرض وأفضل بئر في الأرض وأطيب أرض في الأرض ريحا فأما أحب بقعة إلى الله في الأرض فالبيت الحرام ( وما حوله ) وأفضل بئر في الأرض زمزم وأطيب أرض في الأرض ريحا الهند هبط بها آدم عليه السلام من الجنة فعلق شجرها من ريح الجنة (التمهيد)

 அலீ ரழி அவர்கள் கூறினார்கள். இந்த பூமியின் நிலப்பரப்புகளில் மிகச் சிறந்த நிலப்பரப்பு எது என்பதையும் இந்த பூமியின் கிணறுகளில் மிகச் சிறந்த கிணறு எது என்பதையும் இந்த பூமியின் நறுமணங்களில் மிகச் சிறந்த நறுமணம் எது என்பதையும் நான் அறிவேன். இந்த பூமியின் நிலப்பரப்புகளில் மிகச் சிறந்த நிலப்பரப்பு ஹரம் ஆகும். இந்த பூமியின் கிணறுகளில் மிகச் சிறந்த கிணறு ஜம்ஜம் கிணறு ஆகும். இந்த பூமியின் நறுமணங்களில் மிகச் சிறந்த நறுமணம் இந்தியாவின் நறுமணம் ஆகும். அங்கு தான் நபி ஆதம் அலை அவர்கள் இறக்கப்பட்டார்கள். அதன் நறுமண மரங்கள் சுவனத்தின் நறுமணத்தோடு இணைக்கப்பட்டுள்ளது.

عن ابن عباس رضي الله عنهما قال قال علي رضي الله عنه :أطيب ريح في الأرض الهند أهبط بها آدم عليه الصلاة و السلام فعُلِّق شجرُها من ريح الجنة (حاكم

عن علي  رضي الله عنهما قال: خير واديين في الناس وادي بكة وواد بالهند الذي هبط به آدم ومنه يؤتى بالطيب الذي تطيبون به (كنز العمال

இரண்டு இடங்கள் சிறந்ததாகும். 1.மக்காவின் பள்ளத்தாக்கு 2.இந்தியாவில் ஆதம் அலை இறங்கிய பள்ளத்தாக்கு. அங்கிருந்து தான் நீங்கள் தடவிக் கொள்ளும் வாசனைத் திரவியங்கள் கொண்டு வரப்படுகின்றன. 

قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ (38)البقرة

.وَقَالَ السُّدِّيّ : قَالَ اللَّه تَعَالَى" اِهْبِطُوا مِنْهَا جَمِيعًا " فَهَبَطُوا وَنَزَلَ آدَم بِالْهِنْدِ وَنَزَلَ مَعَهُ الْحَجَر الْأَسْوَد وَقَبْضَة مِنْ وَرَق الْجَنَّة فَبَثَّهُ بِالْهِنْدِ فَنَبَتَتْ شَجَرَة الطِّيب فَإِنَّمَا أَصْل مَا يُجَاء بِهِ مِنْ الطِّيب مِنْ الْهِنْد مِنْ قَبْضَة الْوَرَق الَّتِي هَبَطَ بِهَا آدَم وَإِنَّمَا قَبَضَهَا آسِفًا عَلَى الْجَنَّة حِين أُخْرِجَ مِنْهَا (تفسير ابن كثير

 நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இந்தியாவில் இறங்கினார்கள். அவர்களுடன் ஹஜருல் அஸ்வத் கல்லும் சிறிதளவு சுவனத்தின் இலைகளும் இறங்கின. அந்த இலைகளை இந்திய மண்ணில் தூவினார்கள். அதனால் நறுமண மரங்கள் உருவாயின. நபி ஆதம் இவற்றையெல்லாம் சுவனத்தில் இருந்து கொண்டு வருவதற்குக் காரணம் சுவனத்தை விட்டும் பிரிய மனமில்லாமல் அங்கிருந்து வெளியேற்றப் பட்டதால் தான்...                      

இந்தியாவுக்கும் இஸ்லாத்திற்கும் இவ்வளவு நெருங்கிய இருந்ததால் தான் இந்திய மண்ணை அந்நியர்களிடம் விட்டுக் கொடுக்க ஆலிம்கள் இடம் கொடுக்கவில்லை

சுதந்திரப் போரில் ஆலிம்களின் பங்கு மகத்தானது

ஷாஹ் அப்துல் அஜீஸ் திஹ்லவீ ரஹ் அவர்கள்

பிரிட்டிஷ் அரசாங்கம் முஸ்லிம்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் இன்னல்கள் இழைத்து வருவதைக் கண்டு வேதனைப்பட்ட ஷாஹ் அப்துல் அஜீஸ் திஹ்லவீ ரஹ் அவர்கள் இந்தியாவை தாருல் ஹர்ப்எனப் பிரகடனம் செய்தார்கள். ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடுவது மார்க்கத்தின் கடமை எனப் பிரகடனம் செய்தார்கள்.

மெளலவி அஹ்மத்துல்லாஹ் ஷாஹ் மதராஸி

 தேச விடுதலைக்காக நாடு முழுவதும் துறவிக் கோலத்தில் சுற்றுப்பயணம் செய்து புரட்சிப் பிரச்சாரம் செய்தவர் மௌலவி அஹ்மத்துல்லாஹ் ஷா மதராஸி. சென்னை நவாபின் வழிவந்தவரான இவர் கிழக்கு அயோத்தி எனப்படும் பைசாபாத்தின் அதிபராக இருந்தவர்.இவரது புரட்சிப் பிரச்சாரம் ஆங்கிலேயருக்கு ஆத்திரமூட்டியது. இவரைக் கைது செய்து பைசாபாத் சிறையில் அடைத்தனர். புரட்சியாளார்கள் சிறைக் கதவை உடைத்து இவரை மீட்டு வந்தனர். இவரை உயிருடனோ அல்லது பிணமாகவோ ஒப்படைப்பவருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று ஆங்கிலேய அரசு அறிவித்தது. தலைமறைவாக இருந்த மௌலவி அஹ்மத்துல்லாஹ் ஷா மதராஸி அயோத்தி மன்னன் விரித்த வஞ்சக வலையில் சிக்கினார். அவரைக் காண யானைப் பாகனாக மாறுவேடத்தில் சென்ற போது, அயோத்தி மன்னனின் தம்பி பாவென் என்பவன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். 1858ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் தேதியன்று அவரது தலையை அயோத்தி மன்னன் வெட்டி ஆங்கிலேயரிடம் கொண்டு போய்க் கொடுத்து ஐம்பதினாயிரம் ரூபாய் பரிசைப் பெற்றான்.

வரலாற்று ஆசிரியர் தாம்சன் என்பவர் குறிப்பிடும் முக்கியச் செய்தி

டெல்லியில் ஒரு கேம்ப் ஒன்றில் நான் தங்கியிருந்த போது  மனித உடல்கள் எரிக்கப்படும் வாடையை நுகர முடிந்தது நான் ஒரு வித அச்சத்தோடு வெளியில் எட்டிப் பார்த்த போது அங்கே நான் கண்ட என் காட்சி மனதை பதற வைத்தது. சுமார் 40 மார்க்க அறிஞர்கள் உடம்பில் துணி இல்லாமல் நிர்வாணமாக நெருப்புப்  பள்ளத்திற்கு அருகில் கைகளை கட்டி நிற்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் அவர்களைச் சுற்றி ஆங்கிலேயர்கள் நின்று கொண்டு ஒவ்வொருவராக நெருப்பில் தூக்கி வீசுகிறார்கள் அவ்வாறு வீசப்படும்போது அவர்களிடம் கேட்கிறார்கள் நீங்கள் உங்களுக்கு எதிரான போராட்டத்தை விட்டு விட்டால் உங்களை உயிரோடு விட்டு விடுவோம் என்று மிரட்டுகிறார்கள் ஆனால் அந்த ஆலிம்கள் நாங்கள் கொல்லப்பட்டாலும் உங்களுக்கு எதிராகவே இருப்போம் என்று கூறுகிறார்கள்  கடைசியில் அந்த நாற்பது ஆலிம்களும் நெருப்பில் தூக்கி வீசப்படும் காட்சி இன்றளவும் என் நெஞ்சை விட்டு நீங்கவில்லை என்று அவர் குறிப்பிடுகிறார்

ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய ஷைகுல் ஹிந்த் எனப்படும் மஹ்மூதுல் ஹஸன் ரஹ்

ஆங்கிலேயர்களை எதிர்த்ததற்காக கைது செய்யப்பட்ட ஷைகுல் ஹிந்த் எனப்படும் மஹ்மூதுல் ஹஸன் ரஹ் அவர்கள் சிறையில் இருக்கும்போது ஆங்கிலேயர்கள் தன் கையை தொட்டு விட்டால் அந்தக் கையைக் கழுவாமல் எந்தப் பொருளையும் தொட மாட்டார்கள் எனவே தான் ஒரு ஆங்கிலேயன் கூறுவான் மஹ்மூதுல் ஹஸன் அவர்ளை மால்டா சிறையில் எந்த அளவுக்கு ஆங்கிலேயர்கள் சித்ரவதை செய்தார்கள் என்பதை அவர்கள் வஃபாத்தான பின் குளிப்பாட்டும்போது தான் உணர முடிந்தது.  அதாவது அவர்களை குளிப்பாட்டும்போது இடுப்பில் சதையே இல்லை அது பற்றி அவருடன் சிறையில் இருந்த ஹுஸைன்அஹ்மத் மதனீ ரஹ் அவர்களிடம் கேட்கப்பட்ட போது ஆங்கிலேயர்கள் இரும்பை பழுக்க காய்ச்சி அவரது இடுப்பில் சூடு வைப்பார்கள் அதனால் தான் அவரது இடுப்பில் சதையே இல்லை என்றார்கள் 

காந்தியை பிரபலப்படுத்தியது மஹ்மூதுல் ஹஸன் ரஹ் அவர்கள்

காந்திக்கு மகாத்மா என்று பட்டம் கொடுத்தது மெளலானா அப்துல் பாரீ ரஹ் அவர்கள்

ஷைகுல் ஹிந்த் மஹ்மூதுல் ஹஸன் ரஹ் அவர்கள் மால்டா சிறையில் அடைக்கப்பட்டு மூன்று வருடம் ஏழு மாதம் சிறை வாசத்திற்குப் பின் குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர்களையும், அவர்களுடன் இருந்த நால்வரையும் 1920 ஜூன் 20- ம் தேதி ஆங்கிலேயர்கள் விடுதலை செய்தனர். அவ்வாறு விடுதலை செய்யப்பட்ட அவர்கள் மால்டா விலிருந்து மும்பை துறைமுகத்திற்கு அழைத்து  வரப்பட்டனர். அப்போது  ஷைகுல் ஹிந்த் மஹ்மூதுல் ஹஸன் ரஹ் அவர்களை வரவேற்பதற்காக பல்வேறு ஆலிம்கள், முக்கியத்தலைவர்கள், பொதுமக்கள் வந்திருந்தனர். அவ்வாறு வருகை புரிந்த தலைவர்களில் காந்திஜியும் ஒருவர்.பிறகு மும்பையில் ஒரு அறையில் காங்கிரஸ் தலைவர்களும், மற்றும் உலமாக்களும் இந்தியாவின் நிலை பற்றி ஆலோசனை நடத்தினார்கள். இனிமேல் அகிம்சை வழியில் போராட வேண்டும் என்பது ஆலோசனையின் முக்கிய அம்சமாக இருந்தது. அகிம்சைப் போராட்டத்தின் தலைமைப் பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது என்ற விவாதம் எழுந்தது. அப்போது ஷைகுல் ஹிந்த் அவர்கள் பகலில் தன்னை வரவேற்க வந்தவர்களில் இளம் ஃபாரிஸ்டர் என்று அறிமுகப்படுத்தப்பட்டவர் எங்கே ?  என்று கேட்டு அவரையே அதாவது காந்தியையே தலைவராக நியமிக்கச் சொன்னார்கள்.  அதன் பின்பு  காந்தியை தலைவராக அறிமுகப்படுத்தவும் மக்களிடையே சுதந்திர விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்து முஸ்லிம் ஒற்றுமையை வளர்க்கவும் ஜம்இய்யத்துல் உலமாயே ஹிந்த் பல ஊர்களிலும் பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்தது. அவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கூட்டத்தில் மெளலானா அப்துல் பாரீ ஃபரங்கீ மஹல்லீ ரஹ் அவர்கள் தான் முதலில் காந்தியை மாகாத்மா என பட்டம் சூட்டி அழைத்தார்கள் அன்று முதல் அப்பெயர் பிரபலமடைந்தது.

சுதந்திரப் போரில் முஸ்லிம்கள்

இந்த நாட்டின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் ஒரு முஸ்லிம்

  இந்திய விடுதலைப் போரின் முன்னோடிகளாகத் திகழ்பவர் ஒரு முஸ்லிம் தான் என்பதை வரலாறு எடுத்துக் காட்டுகிறது. கடற்போர் பல செய்த தமிழ் மன்னர்களைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் புகழ்ந்து உரைக்கின்றன. அம்மன்னர்களைப் போன்று கடற்போர் பல செய்தவர் குஞ்சாலி மரைக்காயர். ஆங்கிலேயர் நம் நாட்டை அடிமைப்படுத்துவதற்கு முன் இங்கு வந்து கால்பதித்த போர்ச்சுகீசியரை விரட்டியடிக்க கடற்போர்கள் செய்த குஞ்சாலி மரைக்காயர் தான் இந்திய விடுதலைப் போரின் முன்னோடி. கடற்போரில் சாகசங்கள் புரிந்த இந்த வீரத் தளபதியை வெற்றி கொள்ள முடியாத எதிரிகள் நயவஞ்சகமாகக் கொன்றனர்.

சுதந்திரப் போரின் முன்னோடிகள் முஸ்லிம்கள்

 ஆங்கிலேயர் வணிகம் செய்ய வந்த காலத்தில் இருந்தே அவர்களை ஆங்காங்கே எதிர்த்துக் கொண்டிருந்தவர்கள் முஸ்லிம்கள்.அவர்களில் முஸ்லிம் மன்னர்கள் அதிகம் இருந்தனர். ஆங்கிலேயருக்கு நாட்டை ஆளும் எண்ணம் வந்துவிட்டதை முதலில் கணித்து  அவர்களை எதிர்த்தவர் வங்காளத்தை ஆண்ட சிராஜ்-உத்-தொவ்ளா ஆவார். முதல் இந்தியபோராட்டம்என்று அறியப்படும் 1857-ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் புரட்சியில்  அதிகப்படியான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் அதிகப்படியானோர் தங்கள் உயிரையும் இழந்தனர்.

இந்தியாவின்தந்தை என்றழைக்கப்படும் மகாத்மா காந்தியடிகள் தன் சுயசரிதையான  சத்தியசோதனையில், விடுதலை போராட்ட ஆரம்ப காலத்தில் தனக்கு உறுதுணையாக இருந்த  ஆதம் ஜவேரி  சகோதரர்கள் குறித்து குறிப்பிடுகின்றார். அன்றைய தேதிக்கு சுமார் 150 கோடி சொத்துக்களை சுதந்திரப் பணிக்காக இழந்திருந்தனர் இந்த சகோதரர்கள்.[ தென் தமிழகத்தில் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் தன்னுடைய சுதேசி கப்பல் லட்சியத்தை அடைய பொருளாதாரம் மிகப்பெரும் தடையாக இருந்தது.அந்நேரத்தில், சுமார் இரண்டு லட்சம் மதிப்பிலான 8000 பங்குகளை வாங்கி வ.உ.சியின் நோக்கத்திற்கு உறுதுணையாக இருந்தவர் ஏ.ஆர்.பக்கீர் முஹம்மது ராவுத்தர் சேட்.

நேதாஜி உருவாக்கிய கடல் கடந்த இராணுவமான இந்திய தேசிய இராணுவத்தில் தளபதி பொறுப்பு முதற்கொண்டு பல்வேறு பதவிகளை முஸ்லிம்கள் அலங்கரித்திருந்தனர். நேதாஜி வியந்து போற்றும் அளவு அதிகப்படியான பொருளாதார உதவிகளையும் இஸ்லாமிய வணிகர்கள் அளித்தனர்.

மார்க்க அறிஞர்கள், சுதந்திர எண்ணங்களைத் தீவிரமாக விதைக்கும் வண்ணமாக, கதராடை அணியாத மணமகன் திருமணத்தில் தாங்கள் கலந்து கொள்ள மாட்டோம் என்றும் ஆங்கிலேயர்களின் மொழியான ஆங்கிலம் படிக்க க்கூடாது என்றும் பத்வா அளித்திருந்தனர். பக்கீர்கள் எனப்படும் யாசகம் தேடுவோர் வீடு வீடாக சுதந்திரக் கீதங்களைப்பாடி மக்களின் விடுதலை எண்ணங்களைத் தீவிரப்படுத்தினர்.

இந்திய விடுதலைக்கு இஸ்லாமியப் பெண்களும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்திருந்தனர். சுதந்திர இந்தியாவின் தேசிய கொடியை வடிவமைத்தவர் சுரையா தியாப்ஜி ஆவார்.[16]

1975 டிசம்பர் மாதம் 27ம் தேதி வெளியான இல்லஸ்டிரேட்டட் வீக்லிஎன்னும் பத்திரிக்கையில் அதன் ஆசிரியர் குஷ்வந்த் சிங் பல ஆதாரங்களுடன் எடுத்துக் கூறி உறுதிப்படுத்தியுள்ளார். இந்திய விடுதலைக்காகச் சிறை சென்றவர்களிலும், உயிர் நீத்தவர்களிலும் இஸ்லாமியர் அதிகமாகவே இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது.

டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னமான இந்தியா கேட் எனும் பகுதியில் இந்தியாவுக்காக  உயிர் நீத்த 95,300 இராணுவ வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில் 61,945  பேர் முஸ்லிம்கள்.

 

சுதந்திரப் போராட்டத்திற்காக நிதி உதவி செய்ததில் முஸ்லிம் பிரமுகர்களின் மாபெரும் பங்களிப்பு.

 போராடும் காங்கிரஸ் பேரியக்கத்தின் பொருளாதார ஆதாரங்களுக்காக நிதி திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் கமிட்டி முனைந்தது. 1921 மார்ச் 31 - ஆம் தேதி விஜயவாடாவில் கூடிய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டுவது என்றும், அந்நிதிக்கு திலகர் நினைவு சுயராஜ் நிதி என்றும் பெயரிட்டனர். அந்த நிதியில் 60 லட்சத்தை பம்பாயிலும் மீதமுள்ள 40 லட்சத்தைப் பிற நகரங்களிலும் வசூல் செய்ய வேண்டுமென்று காந்திஜி அறிவித்தார். பம்பாயின் மிகப் பெரிய தொழில் அதிபர்களான ஏ.பி. காட்ரெஜ் மூன்று லட்சமும், ஜெயநாராயணன் இந்து மல்தானி ஐந்து லட்சமும், ஆனந்திலால் இரண்டு லட்சமும் நிதி வழங்கினர். லட்சக்கணக்கில் நிதி திரண்டுகொண்டிருந்த அந்நேரத்தில் பம்பாயின் மிகப் பெரிய பஞ்சாலையின் அதிபரான உமர் சுப்ஹானி என்ற இஸ்லாமியர் காந்திஜியிடம் நேரில் சென்று, திலகர் நினைவு சுயராஜ்ய நிதிக்காக ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.காசோலையை கையில் வாங்கிய காந்திஜியின் கண்கள் அதில் நிரப்பப்பட்டிருந்த தொகையை வாசித்த போது  ஆச்சரியத்தால் விரிந்தது.காங்கிரஸ் கமிட்டியின் நிதி திரட்டும் திட்டத்தை ஒருவரே நிறைவேற்றித் தருகிறாரே என்ற மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், சுதந்திரப்போராட்ட நிதி என்பதால் அதில் பலரது  பங்களிப்பும் இருந்தால்தான் அது சிறப்புடையதாக அமையும் என்று காந்திஜி கருதினார். எனவே அக் காசோலையை உமர் சுப்ஹானியிடமே திருப்பிக் கொடுத்து, சில லட்சங்கள் மட்டும் வழங்குங்கள் என்கிறார். காந்திஜியின் விருப்பப்படி சில லட்சங்களை உமர் சுப்ஹானி வழங்கினார்.  ஒரு கோடி ரூபாயை திலகர் நினைவு சுயராஜ்ய நிதிக்கு உமர் சுப்ஹானி வழங்க முன்வந்த செய்தி ஆங்கில அரசுக்கு எட்டுகிறது. பம்பாய் மாகாண வைஸ்ராய் உடனடியாக உமர் சுப்ஹானியின் தொழிலை முடக்குவதற்கான நடவடிக்கைகளில் இறங்குகிறார். உமர் சுப்ஹானியின் பஞ்சாலையில் உற்பத்தியாகும் பஞ்சை அரசே விற்றுத்தரும் என்று நிர்ப்பந்தப்படுத்தி வாங்கி, மிகக் குறைந்த விலையில் விற்றது. இதனால் உமர் சுபஹானிக்கு ஏற்பட்ட நஷ்டம் மூன்று கோடியே அறுபத்து நான்கு லட்சம். இதனை அவரது சகோதரி பாத்திமா இஸ்மாயில் ஒரு பத்திரிகைப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் 

சுதந்திரப் போருக்காக வாரி வழங்கிய வள்ளல் ஹபீப்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் விடுதலைப் போராட்டத்தில் கிழக்காசியாவில் வாழ்ந்த இஸ்லாமியர்கள் பெரும் பங்கு கொண்டனர். மியான்மரில் (அன்றைய பர்மா) ஹபீப் பெரும் வணிகராகத் திகழ்ந்தவர்.

பெரும் கோடீஸ்வரர். நேதாஜி, மியான்மர் சென்ற போது அவர் தம் சொத்துக்கள் அனைத்தையும் இந்திய நாட்டின் விடுதலைக்காக அர்ப்பணம் செய்தார். அதைக் கண்டு நேதாஜி பிரமித்து விட்டார். இதன் பின் கிழக்காசியாவில் நேதாஜி பயணம் செய்த இடங்களிலெல்லாம் ஹபீபின் வள்ளல் தன்மையைப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். நாட்டைப் பிடித்திருக்கும் பிணி நீங்க ஹபீப் மருந்து தேவைஎன்று அவர் பேசிய கூட்டங்களில் எல்லாம் சொல்லலானார். சட்டத்தை மீறி தண்டியில் உப்பு அள்ளிய காந்தியடிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மகாராஷ்டிர மாநிலத்தில் வெற்றிகரமாக பொது வேலைநிறுத்தம் நடத்தியவர் அப்துல் ரசூல் குர்பான் ஹுஸைன். அப்போது அம்மாநிலத்தில் பல இடங்களில் கலவரங்கள் நடந்தன. இக்கலவரங்களைத் தூண்டிவிட்டதாக அப்துல் ரசூல் குர்பான் ஹுஸைன் மீது வழக்குத் தொடரப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1931ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதியன்று ஏர்வாடா சிறையில் அவர் தூக்கிலிடப்பட்டார்.

 

ககோரி ரயில் கொள்ளை வழக்கில் புரட்சி வீரர் அஷ்பாகுல்லாஹ் கான் மீது விசாரணை நடைபெற்றது. நீ முஸ்லிம். மற்ற புரட்சிக்காரர்கள் இந்துக்கள். அவர்களைக் காட்டிக் கொடுத்தால் உனக்கு நிபந்தனையற்ற விடுதலை கிடைக்கும். ஏராளமான பணமும் தரப்படும்என்றெல்லாம் கூறி வெள்ளை அதிகாரிகள் ஆசை காட்டினார்கள். இந்த ஆசை வார்த்தைகளையெல்லாம் கேட்ட அஷ்பகுல்லாஹ் கான் பாறைபோல் அசையாமல் நின்றார். தங்கள் பிரித்தாளும் சூழ்ச்சி பலிக்காமல் போகவே பிரிட்டிஷார் இவருக்குத் தூக்குத் தண்டனை கொடுத்தனர். அவர் தூக்கில் ஏற்றப்பட்ட நாளன்று திருக்குர்ஆனைக் கழுத்திலே தொங்கப் போட்டார்.ஹாஜிகளைப் போன்று லப்பைக் லப்பைக்என கூறிக் கொண்டிருந்தார். 

சுதந்திரத்திற்காக தமிழகத்தில் முஸ்லிம்களின் தியாகம்

தென்னகத்தின்பல பகுதிகளிலிருந்து ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் புரட்சியாளர்கள் கிளர்ச்சி செய்தனர். 1800ஆம் ஆண்டு இக்கிளர்ச்சிக்கு கோவையில் தலைமை தாங்கி நடத்தியவர் முஹம்மது ஹசன். ஓசூரில் தலைமை வகித்து நடத்தியவர் ஃபத்தேஹ் முஹம்மது. குடகுப் பகுதியில் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்து நடத்திய மக்கான் கான், மகபூப்தீன் ஆகியோரை ஆங்கிலேயர்கள் கைது செய்தனர். மங்களூருக்கு அருகில் உள்ள எட்காலி குன்றில் இவர்கள் இருவரும் 1800ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதியன்று தூக்கிலிடப்பட்டனர்.

விடுதலைப் போரில் ஈடுபடுவதற்காக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலையை உதறி எறிந்தவர். கம்பம் பீர்முஹம்மது பாவலர். இவர் கதர் இயக்கத்தின் தீவிரத் தொண்டராகத் திகழ்ந்தவர். விடுதலை உணர்வைத் தூண்டும் நாடகத்தில் நடித்ததற்காக இவர் கைது செய்யப்பட்டு அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். பொதுக்கூட்டங்களில் பேச ஆங்கிலேய அரசு இவருக்குத் தடை விதித்தது. அதனால் இவர்வாயைத் துணியால் கட்டிக் கொண்டு மேடையேறி சைகைகளின் மூலம் பேசி வரலாறு படைத்தவர்.

ஆங்கிலேய அரசின் இராணுவத் தளபதியாக இருந்த நீல் எனப்படும் நீசன் மிகுந்த கொடூரக்காரன். சிப்பாய்க் கலகத்தின் போது கண்ணில் பட்ட இந்தியர்களைச் சுட்டுக் கொன்றவன். இவனுக்குச் சென்னையில் சிலை வைக்கப்பட்டிருந்தது. அச்சிலையைத் தகர்க்கும் போராட்டம் 1927ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இராமநாதபுரம் முஹம்மது சாலியா சிலையை சம்மட்டியால் அடித்து உடைத்தார். இவருக்கு முன்று மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த அப்துல் மஜீது, லத்தீப், இராமநாதபுரம் மஸ்தான், பண்ருட்டி முஹம்மது உசேன் முதலியவர்கள் சிலை உடைப்புப் போரில் பங்கு கொண்டு 6 மாதம் முதல் 2 வருடம் வரை கடுங்காவல் தண்டனை பெற்றனர்.

மருத நாயகம் என்னும் கான் சாகிபு

ஒரு காலத்தில் ஆங்கிலேயருக்கு வேண்டியவராக இருந்து, பிறகு அவர்களுக்கு எதிராக மாறியவர் கான்சாஹிப். இவர் யூசுப்கான், நெல்லூர் சுபேதார், முஹம்மது யூசுப், கும்மந்தான், கம்மந்தான் சாகிபு என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டார். யூசுப் கான் சாஹிபு மதுரையில் ஆங்கிலேயரின் கொடியைப் பீரங்கி வாயில் வைத்துச் சுட்டுப் பொசுக்கி விட்டு சுதந்திரப் பிரகடனம் செய்தவர். இவர் தொழுகை நடத்திக் கொண்டிருந்த போது சொந்த நாட்டுத் துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டார். ஆங்கிலேயர் அவரைத் தூக்கிலிட்டுக் கொன்றனர். இவரது உடலும் தலையும் தனித்தனியாக வெட்டி எடுக்கப்பட்டது. அவரது தலை அடக்கம் செய்யப்பட்ட இடம்மதுரை அருகே சம்மட்டி புரத்தில் உள்ளது.

வியாழன், 3 ஆகஸ்ட், 2023

ஹஜ்ஜே மக்பூலுக்கான 7 அடையாளங்கள்

 

ஹஜ்ஜை முடித்த ஹாஜிக்கு மட்டுமல்லாமல் பொதுவாகவே ஒரு முஸ்லிம் மிகச் சிறந்த நற்காரியத்தைச் செய்து முடித்த பிறகு அந்த நற்காரியம் ஏற்கப்பட்டது என்பதற்கான அடையாளங்களாக கீழ்காணும் தன்மைகள் அவரிடம் உருவாக வேண்டும். ரமழான் நோன்புக்கும் இது பொருந்தும்.           

عن علي رض:"كونوا لقبول العمل أشد اهتماما منكم بالعمل ألم تسمعوا الله عز وجل يقول "إنما يتقبل الله من المتقين" (المائدة /27).(كتاب أذكار الحج والعمرة)

  அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்- ஒரு அமலைச் செய்வதில் எந்த அளவுக்கு கவனம் செலுத்தினோமோ அதை விட அதிகமாக அந்த அமல் ஏற்கப்பட்டதா என்பதில் கவனம் செலுத்துங்கள்.

ஒரு அமலைச் செய்த பின் அது ஏற்கப்படுவது பற்றி அதிகம் கவலைப்பட்ட நல்லோர்கள்

قال عبد العزيز بن أبي رواد: "أدركتهم يجتهدون بالعمل الصالح, وإذا فعلوه وقع عليهم الهم؛ أيقبل منهم أم لا؟!".

முன்னோர்கள் கஷ்டப்பட்டு உளத்தூய்மையுடன் அமல் செய்தாலும் அது மக்பூலா என்ற கவலை நீடித்திருக்கும்

كان بعض السلف إذا صلى صلاة كان يستغفر من تقصير فيها كما يستغفر المذنب من ذنبه.

நல்லோர்களில் ஒருவர் பாவம் செய்தவர் தவ்பா செய்வது போல ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் அதில் ஏதும் குறை செய்திருந்தால் மன்னிக்கும்படி அல்லாஹ்விடம் தவ்பா செய்வார்

قال كعب: "من صام رمضان وهو يحدث نفسه إن فرغ من رمضان أنه لا يعود إلى العصيان دخل الجنة بغير مسألة".

யார் ரமழானில் நோன்பு வைக்கும்போது அவரின் மனதில் ரமழான் முடிந்து நான் பாவம் செய்ய மாட்டேன் என மனதில் எண்ணுவாரோ அவர் கேள்வி கணக்கின்றி சுவனம் செல்வார் என கஃப் ரழி அவர்கள் கூறினார்கள்.

أن سلفنا الصالح كانوا يدعون الله ستة أشهر ستة أشهر أن يقبل الله منهم رمضان

முன்னோர்களில் ஒருவர் ரமழான் முடிந்து ஆறு மாதங்கள் வரை அந்த ரமழானின் அமல்கள் அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்ப்பட வேண்டும் என துஆச் செய்வார்கள்.

وقال [مالك ابن دينار] الخوف على العمل أن لا يتقبل- أشد من العمل-

மாலிக் இப்னு தீனார் ரஹ் அவர்கள் கூறும்போது அமல் செயிவதை விட அந்த அமலின் மக்பூலிய்யத் பற்றி கவலைப்படுவது தான் மிகப்பெரிய விஷயம் என்றார்கள்

முதல் அடையாளம்.

தாம் செய்த அமலில் இக்லாஸ் உருவாகுவது தான் முதல் அடையாளம்.

அந்த அமலை வைத்து பெருமை இருக்கக்கூடாது. ஹாஜி என்ற அடைமொழியை தன் பெயருக்கு முன்னால் போடுவதை மிகவும் விரும்புவது. அதைப் போடா விட்டால் கோபித்துக் கொள்வது போன்றவைகள் கூடாது. எந்த அமலை அல்லாஹ்வுக்காக மட்டும் செய்ய வேண்டுமோ அதை பிறரிடம் பெயர் வாங்குவதற்காகச் செய்வது ஷிர்க்

முந்திய உம்மத்தில் இக்லாஸ் இல்லாமல் அமல் செய்தவர்களை அல்லாஹ் பகிரங்கப் படுத்தினான்

முற்காலத்தில் குர்பானி கொடுப்பவர் ஒரு மலை மீது கொண்டு வந்து தனது குர்பானியை வைத்து விடுவார். ஒரு நெருப்பு வந்து அதைக் கரித்துச் சென்றால் மக்பூல் என்பதற்கு அடையாளம்.

وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ َ (27)المائدة

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَزَا نَبِيٌّ مِنْ الْأَنْبِيَاءِ فَقَالَ لِقَوْمِهِ لَا يَتْبَعْنِي رَجُلٌ مَلَكَ بُضْعَ امْرَأَةٍ وَهُوَ يُرِيدُ أَنْ يَبْنِيَ بِهَا وَلَمَّا يَبْنِ بِهَا وَلَا أَحَدٌ بَنَى بُيُوتًا وَلَمْ يَرْفَعْ سُقُوفَهَا وَلَا أَحَدٌ اشْتَرَى غَنَمًا أَوْ خَلِفَاتٍ وَهُوَ يَنْتَظِرُ وِلَادَهَا فَغَزَا فَدَنَا مِنْ الْقَرْيَةِ صَلَاةَ الْعَصْرِ أَوْ قَرِيبًا مِنْ ذَلِكَ فَقَالَ لِلشَّمْسِ إِنَّكِ مَأْمُورَةٌ وَأَنَا مَأْمُورٌ اللَّهُمَّ احْبِسْهَا عَلَيْنَا فَحُبِسَتْ حَتَّى فَتَحَ اللَّهُ عَلَيْهِ فَجَمَعَ الْغَنَائِمَ فَجَاءَتْ يَعْنِي النَّارَ لِتَأْكُلَهَا فَلَمْ تَطْعَمْهَا فَقَالَ إِنَّ فِيكُمْ غُلُولًا فَلْيُبَايِعْنِي مِنْ كُلِّ قَبِيلَةٍ رَجُلٌ فَلَزِقَتْ يَدُ رَجُلٍ بِيَدِهِ فَقَالَ فِيكُمْ الْغُلُولُ فَلْيُبَايِعْنِي قَبِيلَتُكَ فَلَزِقَتْ يَدُ رَجُلَيْنِ أَوْ ثَلَاثَةٍ بِيَدِهِ فَقَالَ فِيكُمْ الْغُلُولُ فَجَاءُوا بِرَأْسٍ مِثْلِ رَأْسِ بَقَرَةٍ مِنْ الذَّهَبِ فَوَضَعُوهَا فَجَاءَتْ النَّارُ فَأَكَلَتْهَا ثُمَّ أَحَلَّ اللَّهُ لَنَا الْغَنَائِمَ رَأَى ضَعْفَنَا وَعَجْزَنَا فَأَحَلَّهَا لَنَا  (بخاري 3124

நபிமார்களில் ஒரு நபி போருக்குப் புறப்பட்டார். அப்போது தன் கூட்டத்தாரிடம் ஒரு பெண்ணின் கற்பை புதிதாக சொந்தமாக்கிக் கொண்டு அவளுடன் உறவு கொள்ளத் தயாராக இருப்பவர்  (புது மாப்பிள்ளை) என்னோடு வர வேண்டாம். வீட்டைக் கட்டி அதற்கு இன்னும் மேல்தளம் அமைக்காதவர் என்னோடு வர வேண்டாம். ஆடுகளை வாங்கி அது குட்டி போடுவதை எதிர் பார்த்துக் காத்திருப்பவர் என்னோடு வர வேண்டாம். (இவர்களெல்லாம் போருக்கு வந்தால் முழு கவனத்தோடு போர் செய்ய மாட்டார்கள் என்று எண்ணியதால் அவ்வாறு கூறினார்கள். அக்காலத்தில் பகல் நேரம் முடிவதற்குள் போர் செய்து முடிக்க வேண்டும் என்ற நியதி இருக்கும் நிலையில்) அசர் நேரத்தில் தான் அந்த ஊரையே நெருங்கினார்கள். அப்போது சூரியனிடம் (பேசினார்கள். )நீயும் குறித்த நேரத்தில் மறைய வேண்டும் என ஏவப்பட்டுள்ளாய். நானும் (இன்றைய பகல்  முடிவதற்குள் போர் செய்யும்படி) ஏவப்பட்டுள்ளேன். என்று கூறி விட்டு யாஅல்லாஹ் நாங்கள் போர் செய்து முடிக்கும் வரை எங்களுக்காக சூரியனைத் தடுத்து வை என்று துஆ செய்தார்கள். அவ்வாறே சூரியன் தடுத்து வைக்கப்பட்டது. அல்லாஹ் வெற்றியைத் தந்தான். ஙனீமத் பொருட்களை அந்த நபி சேகரித்து மலை மீது வைத்தார். நெருப்பு வந்தது. ஆனால் அதைக் கரிக்காமல் சென்று விட்டது. அப்போது அந்த நபி ஙனீமத் பொருட்கள் அனைத்தையும் இங்கு கொண்டு வந்து சேர்ப்பதில் உங்களுக்குள் ஏதோ ஊழல் நடந்துள்ளது. எனவே உங்களில் ஒவ்வொரு குடும்பத்தின் சார்பில் ஒருவர் என்னிடம் வந்து கை கொடுக்க வேண்டும் என்றார்கள். அப்போது ஒருவரின் கை அந்த நபியின் கையோடு ஒட்டிக் கொண்டது. அதன் பிறகு குறிப்பிட்ட அந்த நபரின் குடும்பத்தினர் ஒவ்வொரு நபரும் தன்னிடம் வந்து கை கொடுக்க வேண்டும் என்றார்கள். அப்போது அவர்களில் இருவரின் கை அல்லது மூவரின் கைகள் அந்த நபியின் கையோடு ஒட்டிக் கொண்டது. அப்போது அந்த நபி உங்களிடம் தான் ஊழல் உள்ளது என்று எச்சரித்தார்கள். உடனே அவ்விருவரும் ஒரு மாட்டின் தலை அளவுக்கு தாங்கள் மறைத்து வைத்திருந்த தங்கத்தைக் கொண்டு வந்தார்கள். அதையும் சேர்த்து ஙனீமத் பொருட்களுடன் வைத்த போது நெருப்பு வந்து அதைக் கரித்துக் கொண்டு சென்றது.                          

 

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ:قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:قَالَ اللهُ عَزَّ وَجَلَّ:فَمَنْ عَمِلَ فِيَّ عَمَلًا أَشْرَكَ فِيهِ غَيْرِي فَأَنَا مِنْهُ بَرِيءٌ هُوَ لِلَّذِي أَشْرَكَ-(رواه البيهقي شعب الايمان)

யார் ஒரு அமலைச் செய்து அதில் அல்லாஹ்வுடன் மற்றொருவரைக் கூட்டாக்கிக் கொள்வாரோ அவரை விட்டும் நான் நீங்கி விட்டேன் என அல்லாஹ் கூறுவதாக நபி ஸல் அவர்கள் நவின்றார்கள்     

عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:إِنَّ أَخْوَفَ مَا أَخَافُ عَلَيْكُمُ الشِّرْكُ الْأَصْغَرُ قَالَ:وَمَا الشِّرْكُ الْأَصْغَرُ؟ قَالَ:الرِّيَاءُ إِنَّ اللهَ يَقُولُ يَوْمَ يُجَازِي الْعِبَادَ بِأَعْمَالِهِمِ:اذْهَبُوا إِلَى الَّذِينَ كُنْتُمْ تُرَاءُونَ فِي الدُّنْيَا فَانْظُرُوا هَلْ تَجِدُونَ عِنْدَهُمْ جَزَاءً أَوْ خَيْرًا(بيهقي شعب الايمان- 

நான் சிறிய ஷிர்கை உங்களிடம் மிகவும் அஞ்சுகிறேன் என நபி ஸல் கூறிய போது சிறிய ஷிர்க் என்றால் என்ன என்று கேட்டதற்கு முகஸ்துதி என நபி ஸல் கூறி விட்டு யார் முகஸ்துதிக்காக அமல் செய்தார்களோ அவர்களிடம் அல்லாஹ் நீங்கள் யாருக்காக இந்த நற்காரியம் செய்தீர்களோ அவர்களிடம் சென்று நற்கூலியை வாங்கிக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ் கூறுவான் என்றார்கள்.             

عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رضي الله عنه خَرَجَ إِلَى مَسْجِدِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا هُوَ بِمُعَاذِ بْنِ جَبَلٍ رضي الله عنه عِنْدَ قَبْرِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَبْكِي،فَقَالَ: مَا يُبْكِيكَ يَا مُعَاذُ ؟ قَالَ: يُبْكِينِي مَا سَمِعْتُ مِنْ صَاحِبِ هَذَا الْقَبْرِ . قَالَ: مَا هُوَ ؟ قَالَ: سَمِعْتُهُ يَقُولُ: " إِنَّ يَسِيرًا مِنَ الرِّيَاءِ شِرْكٌ، وَإِنَّ مَنْ عَادَى أَوْلِيَاءَ اللهِ فَقَدْ بَارَزَ اللهَ بِالْمُحَارَبَةِ، وَإِنَّ اللهَ يُحِبُّ الْأَبْرَارَالْأَخْفِيَاءَ الْأَتْقِيَاءَ الَّذِينَ إِنْ غَابُوا لَمْ يُفْتَقَدُوا، وَإِنْ حَضَرُوا لَمْ يُدْعَوْا وَلَمْ يُعْرَفُوا قُلُوبُهُمْ مَصَابِيحُ الدُّجَى يَخْرُجُونَ مِنْ كُلِّ غَبْرَاءَ مُظْلِمَةٍ (رواه البيهقي شعب الايمان)

முஆத் ரழி அவர்கள் நபி ஸல் அவர்களின் கப்ருக்கு அருகில் அழுது கொண்டிருந்தார்கள் எதற்காக அழுகிறீர்கள் என்று கேட்ட போது இந்த கப்ரு உடையவர் கூறிய வார்த்தைகள் என்னை அழ வைத்து விட்டது. சிறிதளவு முகஸ்துதியும் கூட ஒரு வகையில் ஷிர்க் என நபி ஸல் கூறினார்கள்.         

முகஸ்துதிக்காக அமல் செய்பவர்களுக்கு காத்திருக்கும் நரகம்

فَوَيْلٌ لِلْمُصَلِّينَ (4) الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ (5) الَّذِينَ هُمْ يُرَاءُونَ (6)سورة الماعون -عَنْ اِبْن عَبَّاس رَضِيَ اللَّه عَنْهُمَا عَنْ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ فِي جَهَنَّم لَوَادِيًا تَسْتَعِيذ جَهَنَّم مِنْ ذَلِكَ الْوَادِي فِي كُلّ يَوْم أَرْبَعمِائَةِ مَرَّة أُعِدَّ ذَلِكَ الْوَادِي لِلْمُرَائِينَ مِنْ أُمَّة مُحَمَّد لِحَامِلِ كِتَاب اللَّه وَلِلْمُصَّدِّقِ فِي غَيْر ذَات اللَّه وَلِلْحَاجِّ إِلَى بَيْت اللَّه وَلِلْخَارِجِ فِي سَبِيل اللَّه (طبراني)

நரகத்தில் ஒரு பகுதி உள்ளது அதன் தீங்கை விட்டும் நரகத்தின் மற்ற பகுதிகள் தினமும் 400 தடவை அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கேட்கும். அந்த பகுதி இந்த உலகத்தில் முகஸ்துதிக்காக அமல் செய்த வர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. என நபி ஸல் கூறினார்கள்.                           

முகஸ்துதிக்காக அமல் செய்தவர்கள் மறுமையில் அல்லாஹ்வை காணும்போது உண்மையாக வணங்க நினைத்தாலும் அவர்களின் முதுகுகள் வளையாது

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رضي الله عنه قَالَ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ هَلْ نَرَى رَبَّنَا يَوْمَ الْقِيَامَةِ قَالَ هَلْ تُضَارُونَ فِي رُؤْيَةِ الشَّمْسِ وَالْقَمَرِ إِذَا كَانَتْ صَحْوًا قُلْنَا لَا قَالَ فَإِنَّكُمْ لَا تُضَارُونَ فِي رُؤْيَةِ رَبِّكُمْ يَوْمَئِذٍ إِلَّا كَمَا تُضَارُونَ فِي رُؤْيَتِهِمَا ثُمَّ قَالَ يُنَادِي مُنَادٍ لِيَذْهَبْ كُلُّ قَوْمٍ إِلَى مَا كَانُوا يَعْبُدُونَ فَيَذْهَبُ أَصْحَابُ الصَّلِيبِ مَعَ صَلِيبِهِمْ وَأَصْحَابُ الْأَوْثَانِ مَعَ أَوْثَانِهِمْ وَأَصْحَابُ كُلِّ آلِهَةٍ مَعَ آلِهَتِهِمْ حَتَّى يَبْقَى مَنْ كَانَ يَعْبُدُ اللَّهَ مِنْ بَرٍّ أَوْ فَاجِرٍ وَغُبَّرَاتٌ مِنْ أَهْلِ الْكِتَابِ ثُمَّ يُؤْتَى بِجَهَنَّمَ تُعْرَضُ كَأَنَّهَا سَرَابٌ فَيُقَالُ لِلْيَهُودِ مَا كُنْتُمْ تَعْبُدُونَ قَالُوا كُنَّا نَعْبُدُ عُزَيْرَ ابْنَ اللَّهِ فَيُقَالُ كَذَبْتُمْ لَمْ يَكُنْ لِلَّهِ صَاحِبَةٌ وَلَا وَلَدٌ فَمَا تُرِيدُونَ قَالُوا نُرِيدُ أَنْ تَسْقِيَنَا فَيُقَالُ اشْرَبُوا فَيَتَسَاقَطُونَ فِي جَهَنَّمَ ثُمَّ يُقَالُ لِلنَّصَارَى مَا كُنْتُمْ تَعْبُدُونَ فَيَقُولُونَ كُنَّا نَعْبُدُ الْمَسِيحَ ابْنَ اللَّهِ فَيُقَالُ كَذَبْتُمْ لَمْ يَكُنْ لِلَّهِ صَاحِبَةٌ وَلَا وَلَدٌ فَمَا تُرِيدُونَ فَيَقُولُونَ نُرِيدُ أَنْ تَسْقِيَنَا فَيُقَالُ اشْرَبُوا فَيَتَسَاقَطُونَ فِي جَهَنَّمَ حَتَّى يَبْقَى مَنْ كَانَ يَعْبُدُ اللَّهَ مِنْ بَرٍّ أَوْ فَاجِرٍ فَيُقَالُ لَهُمْ مَا يَحْبِسُكُمْ وَقَدْ ذَهَبَ النَّاسُ فَيَقُولُونَ فَارَقْنَاهُمْ وَنَحْنُ أَحْوَجُ مِنَّا إِلَيْهِ الْيَوْمَ وَإِنَّا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِيَلْحَقْ كُلُّ قَوْمٍ بِمَا كَانُوا يَعْبُدُونَ وَإِنَّمَا نَنْتَظِرُ رَبَّنَا قَالَ فَيَأْتِيهِمْ الْجَبَّارُ فِي صُورَةٍ غَيْرِ صُورَتِهِ الَّتِي رَأَوْهُ فِيهَا أَوَّلَ مَرَّةٍ فَيَقُولُ أَنَا رَبُّكُمْ فَيَقُولُونَ أَنْتَ رَبُّنَا فَلَا يُكَلِّمُهُ إِلَّا الْأَنْبِيَاءُ فَيَقُولُ هَلْ بَيْنَكُمْ وَبَيْنَهُ آيَةٌ تَعْرِفُونَهُ فَيَقُولُونَ السَّاقُ فَيَكْشِفُ عَنْ سَاقِهِ فَيَسْجُدُ لَهُ كُلُّ مُؤْمِنٍ وَيَبْقَى مَنْ كَانَ يَسْجُدُ لِلَّهِ رِيَاءً وَسُمْعَةً فَيَذْهَبُ كَيْمَا يَسْجُدَ فَيَعُودُ ظَهْرُهُ طَبَقًا وَاحِدًا.....(بخاري)

இரண்டாவது அடையாளம் அந்த அமலுக்குப் பின் பாவத்தை விட்டும் திருந்தி வாழ்வது

உதாரணமாக தொழுகையை ஜமாஅத்துடன் தொழும் வழமையை உருவாக்கிக் கொள்வது

நபி ஸல் அவர்களின் காலத்தில் தொழ நேரமில்லை என்று கூறியவர்கள் முனாஃபிக்கீன்கள் மட்டும் தான்

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ أَثْقَلَ صَلَاةٍ عَلَى الْمُنَافِقِينَ صَلَاةُ الْعِشَاءِ وَصَلَاةُ الْفَجْرِ وَلَوْ يَعْلَمُونَ مَا فِيهِمَا لَأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا وَلَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ بِالصَّلَاةِ فَتُقَامَ ثُمَّ آمُرَ رَجُلًا فَيُصَلِّيَ بِالنَّاسِ ثُمَّ أَنْطَلِقَ مَعِي بِرِجَالٍ مَعَهُمْ حُزَمٌ مِنْ حَطَبٍ إِلَى قَوْمٍ لَا يَشْهَدُونَ الصَّلَاةَ فَأُحَرِّقَ عَلَيْهِمْ بُيُوتَهُمْ بِالنَّارِ (مسلم)

தொழுகையை விட தொழிலை பெரிதாக கருதினால்...

قُلْ إِنْ كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُمْ مِنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّى يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ (24)سورة التوبة

நபி ஸல் அவர்களின் காலத்தில் எந்த ஒரு முஸ்லிமும் தொழுகையை விட தொழிலை பெரிதாக கருதவில்லை

قَالَ عَمْرو بْن دِينَار الْأَعْوَر كُنْت مَعَ سَالِم بْن عَبْد اللَّه وَنَحْنُ نُرِيد الْمَسْجِد فَمَرَرْنَا بِسُوقِ الْمَدِينَة وَقَدْ قَامُوا إِلَى الصَّلَاة وَخَمَّرُوا مَتَاعهمْ فَنَظَرَ سَالِم إِلَى أَمْتِعَتهمْ لَيْسَ مَعَهَا أَحَد فَتَلَا سَالِم هَذِهِ الْآيَة" رِجَال لَا تُلْهِيهِمْ تِجَارَة وَلَا بَيْع عَنْ ذِكْر اللَّه(النور37)"ثُمَّ قَالَ هُمْ هَؤُلَاءِ(تفسير ابن كثير

وَقَالَ مَطَر الْوَرَّاق كَانُوا يَبِيعُونَ وَيَشْتَرُونَ وَلَكِنْ كَانَ أَحَدهمْ إِذَا سَمِعَ النِّدَاء وَمِيزَانه فِي يَده خَفَضَهُ وَأَقْبَلَ إِلَى الصَّلَاة (تفسير ابن كثير)

தொழிலை விட தொழுகையை பெரிதாக கருதியவர்களுக்கு சிறப்பு

عَنْ أَسْمَاء بِنْت يَزِيد بْن السَّكَن قَالَتْ قَالَ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ إِذَا جَمَعَ اللَّه الْأَوَّلِينَ وَالْآخِرِينَ يَوْم الْقِيَامَة جَاءَ مُنَادٍ فَنَادَى بِصَوْتٍ يُسْمِع الْخَلَائِق سَيَعْلَمُ أَهْل الْجَمْع مَنْ أَوْلَى بِالْكَرَمِ لِيَقُمْ الَّذِينَ لَا تُلْهِيهِمْ تِجَارَة وَلَا بَيْع عَنْ ذِكْر اللَّه فَيَقُومُونَ وَهُمْ قَلِيل ثُمَّ يُحَاسَب سَائِر الْخَلَائِق(طبراني

ஹஜ் என்பது மனிதனைப் புனிதனாக்கும் வணக்கம். அன்று பிறந்த பாலகனைப் போல பாவமற்றவராகத் திரும்பும் ஒரு ஹாஜி திரும்பவும் தவறுகளில் ஈடுபடுவது கீழ்காணும் உதாரணங்களைப் போன்றதாகும்

وَلَا تَكُونُوا كَالَّتِي نَقَضَتْ غَزْلَهَا مِنْ بَعْدِ قُوَّةٍ أَنْكَاثًا (92)النحل- أن امرأة يقال لها ربطة ابنة سعد كانت تغزل بمغزل كبير فإذا أبرمته وأتقنته أمرت جارتها فنقضته  عَنِ السُّدِّيِّ، قَالَ: كَانَتِ امرأة بمكة، كانت تسمى خرقاء مكة، كانت تغزل، فإذا أبرمت غزلها تنقضه".

மக்காவில் ஒரு பெண் இருந்தாள். ரப்தா என்பது அவள் பெயர். மெல்லிய நூல்களை ஒன்றாக சேர்த்து பெரிய நூல் கண்டை உருவாக்குவாள். அந்த நூல் கண்டு உறுதியான ஒரு நிலையை அடைந்த பின்பு தன்னுடைய பணிப் பெண்ணிடம் சொல்லி அவற்றைப் பிரித்து பழைய நிலைக்கே ஆக்கி விடச் சொல்லுவாள். இதனாலேயே அவள் மடத்தனமான பெண் என அழைக்கப்பட்டாள்.

               

உதாரணம் 1- ஒரு பெண் காலை முதல் மாலை வரை தன் கூந்தலை அலங்கரித்தாள். அழகாக தலையை வாரி, பின்னல் போட்டு, ஜடை போட்டு, அதில் கிளிப்பைச் சொருகி, தலைக்குப் பூச்சூடி, ஒரு புது மணப்பெண்ணைப் போல மாலையில் தயாரான பின்பு, அவள் திடீரென்று அனைத்தையும் அவிழ்த்துப் போட்டு விட்டு தலைவிரி கோலமாக ஆகி விடுகிறாள். இவளைப் போன்று நீங்கள் ஆகி விட வேண்டாம். கதாதா ரஹ் அவர்கள் இத்தகைய ஒரு பெண்ணை நீங்கள் பார்த்தால் அவளை என்ன முட்டாள் தனமான வேலை செய்கிறாள் என்பீர்கள். அவளைப் போல் நிறைய முட்டாள்கள் உள்ளனர்.                                                    

உதாரணம் 2- ஒருவர் ஒரு கட்டிடத்தை மிகவும் நேர்த்தியாக கட்டினார். அதனுடைய ஒவ்வொரு வேலைப்பாடுகளையும் மிக நன்றாக கவனித்து, கதவு இங்கே அமைய வேண்டும், ஜன்னல் இங்கே அமைய வேண்டும் என்றெல்லாம் வேலையாட்களை ஏவி,  இரவும், பகலும் விழித்திருந்து,  ரசித்து, ரசித்து அதனை கட்டினார். ஒரு வகையாக எல்லா வேலைகளும் முடிந்து திறப்பு விழா நேரத்தில் ஒரு புல்டோசரை வைத்து அனைத்தையும் இடித்து தரை மட்டமாக்கி விட்டார். இவரைப் பற்றி நாம் என்ன நினைப்போம்

உதாரணம்- 3-   ஒருவர் மாடியிலிருந்து கீழே விழுந்து,  காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு அதற்காக புத்தூர் கட்டுப் போடுகிறார். சில நாட்கள் கழித்து மருத்துவர் இவரிடம் நீங்கள் நடைபயிற்சி பழக வேண்டும். தினமும் உங்களுடைய வீட்டு மாடிப்படியில் முடிந்த வரை எத்தனை படிகள் ஏற முடியுமோ ஏற முயற்சி செய்யுங்கள் என்கிறார். இவரும் தினந்தோறும் முயற்சி செய்கிறார். சில படிகள் ஏற முடிகிறது. பிறகு முடியவில்லை. எனினும் நாளுக்கு நாள் முன்னேற்றம். கடைசியாக ஏதோ ஒரு நாளில் அனைத்து மாடிப்படிகளையும் கடந்து மாடிக்குச் சென்று விட்டார். அவ்வாறு மாடிக்குச் சென்றவர் பால்கனியிலிருந்து மறுபடியும் கீழே விழுந்து தன் கை, கால்களை உடைத்துக் கொண்டார். எலும்புகள் நொறுங்கி விட்டது. இவரைப் பற்றி நாம் என்ன நினைப்போம்

உதாரணம்- 4-  ஒருவர் நடந்து செல்லும் போது சேற்றில், சகதியில் விழுந்து விட்டார். அவருடைய ஆடை, மற்றும் உடம்பெல்லாம் சகதி. அதைப் பார்த்த ஒரு நல்ல மனிதர் சகதியில் விழுந்தவரை எப்படியோ காப்பாற்றி, அவரைக் குளிப்பாட்டி, உடம்பையெல்லாம் கழுவி விட்டு புத்தாடை அணிவித்து, மாப்பிள்ளை மாதிரி ஆக்கி, தம்பி... பார்த்துப் போ! மறுபடியும் சேற்றில் விழுந்து விடாதே!  என்று எச்சரித்து அனுப்ப, அவனோ மறுபடியும் நேராகப் போய் சேற்றிலேயே விழுந்து விட்டான். இவனைப் பற்றி நாம் என்ன நினைப்போம்

இதுபோன்று ஹாஜிகள் தமது பாவங்கள் மன்னிக்கப்பட்ட பின் மறுபடியும் பாவத்தில் விழுந்து விடக்கூடாது

ஹஜ் மக்பூல் ஆனதற்கு அடையாளம் அதுபோன்று அமல்களைத் தொடர்ந்து செய்வதாகும்

إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ (30)فصلت

சம்பவம் - இறைநேசர் சிர்ரிய்யுச் சிக்திய்யீ ரஹ் அவர்கள் ஒரு மரத்திடம் பேசினார்கள்.  அந்த மரம் கூறியது . என்னைக் கல்லைக் கொண்டு எரிகிறார்கள் ஆனால் நான் அவர்களுக்கு பழங்களையே தருகிறேன். நான் பல விதங்களிலும் மனிதர்களுக்கு பயன்படுகிறேன் என்று தன் பெருமைகளைக் கூறியபோது அப்போது அந்த இறைநேசர் கேட்டார் நீ இவ்வளவு தூரம் மனிதர்களுக்காக அற்பணிக்கிறாய் ஆனால் உன்னைப் போய் எரிக்கிறார்களே அப்போது அந்த மரம் கூறியது. நான் செய்வதெல்லாம் சரி தான். ஆனால் என்னிடம் ஒரு தவறு உள்ளது நான் காற்றடிக்கும் பக்கம் சாய்ந்து விடுவேன் அதனால் தான் என்னை எரிக்கிறார்கள் என்றது. அதுபோல் மனிதர்களில் சிலர் ஒரு நிலையில்லாமல் இப்படியும் அப்படியும் சாய்பவர்களாக சில நேரம் நல்ல மனம் இருந்தால் தொழுவது சில நேரம் தொழுகையை விடுவது இப்படி இருப்பதால் தான் நரகம்

சிறிதளவு செய்தாலும் தொடர்ந்து செய்தால் தான் பலனைத் தரும்

عَنْ عَائِشَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَيْهَا وَعِنْدَهَا امْرَأَةٌ قَالَ مَنْ هَذِهِ قَالَتْ فُلَانَةُ تَذْكُرُ مِنْ صَلَاتِهَا قَالَ مَهْ عَلَيْكُمْ بِمَا تُطِيقُونَ فَوَاللَّهِ لَا يَمَلُّ اللَّهُ حَتَّى تَمَلُّوا وَكَانَ أَحَبَّ الدِّينِ إِلَيْهِ مَادَاوَمَ عَلَيْهِ صَاحِبُهُ (بخاري)

பல்வேறு விஷயங்களில் சஹாபாக்களின் இஸ்திகாமத்

عَنْ اِبْن عَبَّاس قَالَ : تُلِيَتْ هَذِهِ الْآيَة عِنْد النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ يَا أَيُّهَا النَّاسُ كُلُوا مِمَّا فِي الْأَرْض حَلَالًا طَيِّبًا فَقَامَ سَعْد بْن أَبِي وَقَّاص فَقَالَ يَا رَسُول اللَّه اُدْعُ اللَّهَ أَنْ يَجْعَلنِي مُسْتَجَاب الدَّعْوَة فَقَالَ " يَا سَعْد أَطِبْ مَطْعَمك تَكُنْ مُسْتَجَاب الدَّعْوَة وَاَلَّذِي نَفْس مُحَمَّد بِيَدِهِ إِنَّ الرَّجُل لِيَقْذِف اللُّقْمَة الْحَرَام فِي جَوْفه مَا يُتَقَبَّل مِنْهُ أَرْبَعِينَ يَوْمًا وَأَيّمَا عَبْد نَبَتَ لَحْمه مِنْ السُّحْت وَالرِّبَا فَالنَّار أَوْلَى بِهِ (ابن

ஸஃதுப்னு அபீ வக்காஸ் ரழி  இந்த அறிவுரைக்குப் பின்னால் வாழ்நாள் முழுக்க ஹராமை சாப்பிட்டதே கிடையாது. அவர்கள் கூஃபாவில் இருந்த காலத்தில் அவர்களுடைய ஆடு  வெறு ஒருவருடைய தோட்டத்தில்  சென்று மேயந்து விட்டது என்பதற்காக அந்த ஆட்டில் இருந்து இனிமேல் பால் கூட நான் கறக்க மாட்டேன் என்று கூறும் அளவுக்கு இஸ்திகாமத்துடன் இருந்தார்கள்.                         

சின்னச் சின்ன  விஷயங்களிலும் இமாம்களின் இஸ்திகாமத்

இமாம் அபூஹனீஃபா ரஹ் வாழ்நாள் முழுக்க யாரைப்பற்றியும் புறம் பேசியது கிடையாது

இமாம் ஷாஃபிஈ ரஹ் வாழ்நாள் முழுக்க ஒரு   பொய் கூட பேசியதே கிடையாது

இமாம் அஹ்மதுப்னு ஹன்பல் ரஹ் பேசினால் கல்வியைத்தவிர வேறு எதுவும்  பேசியதில்லை

இன்றைக்கு எந்த விஷயத்திலும் நம்மிடம் இஸ்திகாமத் இருப்பதில்லை. சில இளைஞர்கள்  ஷரீஅத் முறைப்படி திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் அவர்களின்  பெற்றோர் அல்லது அவர்களின் ஊர் நடைமுறை என்பது போன்று விஷயங்கள் குறுக்கே வரும்போது அவர்களின் இஸ்திகாமத் தளர்ந்து விடுகிறது.          

ஹஜ்ஜே மக்பூலுக்கான அடையாளங்களில் மீதமுள்ளவை

3வது அடையாளம் அந்த அமலை அல்லாஹ் கபூல் செய்வான் என்ற நம்பிக்கை இருப்பதுடன் 2ஏற்கா விட்டால் என்ன செய்வது என்ற கவலையும் இருக்க வேண்டும்.

4.தான் செய்த அமலை அமலை மிகவும் சொற்பமானதாக கருதுவது

5.வது அடையாளம். குரோதம் பொறாமை போன்ற தீய பண்புகளில் இருந்து விலகி இருப்பது.

6-வது அடையாளம் ஒவ்வொரு அமல்களிலும் மீதும் ஆர்வம் ஏற்படுவது

7-வது அடையாளம் ஒவ்வொரு வணக்கத்திற்குப்  பின்னாலும் துஆ 1திக்ரை அதிகப்படுத்துவது- 

நூல் மஜாலிஸே ரமழானிய்யா          

1فَإِذَا قَضَيْتُمْ مَنَاسِكَكُمْ فَاذْكُرُوا اللَّهَ (200)البقرة

تَتَجَافَى جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ يَدْعُونَ رَبَّهُمْ خَوْفًا وَطَمَعًا وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ (16)السجدة

 

நாவைப் பேணுவோம்

31-07-2026 ஸஃபர் - 16 بسم الله الرحمن الرحيم          நாவின் விபரீதங்கள் https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN N...