வியாழன், 24 ஆகஸ்ட், 2023

சிறந்த கணவன்

 



தற்காலத்தில் ஒவ்வொரு குடும்பங்களிலும் கணவன் மனைவி இடையே பிர்ச்சினைகள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருப்பதை கவனித்து எடுக்கப்பட்ட தலைப்பு

ஒருவர் சிறந்த முஃமினாக இருப்பதற்கான அடையாளங்களில் ஒன்று அவர் சிறந்த கணவனாக இருக்க வேண்டும்

عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خَيْرُكُمْ خَيْرُكُمْ لِأَهْلِهِ وَأَنَا خَيْرُكُمْ لِأَهْلِي (ابن ماجة

وَعَاشِرُوهُنَّ بِالْمَعْرُوفِ فَإِنْ كَرِهْتُمُوهُنَّ فَعَسَى أَنْ تَكْرَهُوا شَيْئًا وَيَجْعَلَ اللَّهُ فِيهِ خَيْرًا كَثِيرًا (19)النساء

وَلَهُنَّ مِثْلُ الَّذِي عَلَيْهِنَّ بِالْمَعْرُوفِ (228) البقرة

உங்களுக்கு அந்தப் பெண்களிடம் சில எதிர் பார்ப்புகள் இருப்பது போன்றே அவர்களுக்கும் உண்டு

மனைவியின் உணர்வுகளை மதித்து நடப்பவர்களாக நபி ஸல் அவர்கள் இருந்துள்ளார்கள்

ஆயிஷா ரழி அவர்கள் சிறுமி என்பதால் சிறுமிக்கே உள்ள விளையாட்டுத் தனம் அன்னை அவர்களிடம் ஆரம்ப காலத்தில் இருந்தது. அதை அனுசரித்து அவர்களுடன் நபி ஸல் அவர்கள் வாழ்க்கை நடத்தினார்கள்.

أَنَّ عَائِشَةَ رضي الله عنه قَالَتْ لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا عَلَى بَابِ حُجْرَتِي وَالْحَبَشَةُ يَلْعَبُونَ فِي الْمَسْجِدِ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتُرُنِي بِرِدَائِهِ أَنْظُرُ إِلَى لَعِبِهِمْ  (بخاري

عَنْ عَائِشَةَ  رضي الله عنه أَنَّهَا كَانَتْ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ قَالَتْ فَسَابَقْتُهُ فَسَبَقْتُهُ عَلَى رِجْلَيَّ فَلَمَّا حَمَلْتُ اللَّحْمَ سَابَقْتُهُ فَسَبَقَنِي فَقَالَ هَذِهِ بِتِلْكَ السَّبْقَةِ (ابوداود

ஆயிஷா ரழி அவர்கள் கூறினார்கள். நான் நபி ஸல் அவர்களுடன் பிரயாணத்தில் இருந்தபோது ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. அப்போது நான் முந்தினேன். பின்பு நான் உடல் பருமனாகி விட்ட பிறகு மறுபடியும் எங்களுக்குள் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. அப்போது நபி ஸல் அவர்கள் முந்தினார்கள். பின்பு என்னிடம் அதற்கு இது சரியாகி விட்டது என்று கூறினார்கள்.                                                             

 عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ غَزْوَةِ تَبُوكَ أَوْ خَيْبَرَ وَفِي سَهْوَتِهَا سِتْرٌ فَهَبَّتْ رِيحٌ فَكَشَفَتْ نَاحِيَةَ السِّتْرِ عَنْ بَنَاتٍ لِعَائِشَةَ لُعَبٍ فَقَالَ مَا هَذَا يَا عَائِشَةُ قَالَتْ بَنَاتِي وَرَأَى بَيْنَهُنَّ فَرَسًا لَهُ جَنَاحَانِ مِنْ رِقَاعٍ فَقَالَ مَا هَذَا الَّذِي أَرَى وَسْطَهُنَّ قَالَتْ فَرَسٌ قَالَ وَمَا هَذَا الَّذِي عَلَيْهِ قَالَتْ جَنَاحَانِ قَالَ فَرَسٌ لَهُ جَنَاحَانِ قَالَتْ أَمَا سَمِعْتَ أَنَّ لِسُلَيْمَانَ خَيْلًا لَهَا أَجْنِحَةٌ قَالَتْ فَضَحِكَ حَتَّى رَأَيْتُ نَوَاجِذَهُ (ابوداود

 ஆயிஷா ரழி அவர்கள் கூறினார்கள். நபி ஸல் அவர்கள் தபூக் போரை முடித்து விட்டு ஊர் திரும்பினார்கள் அப்போது ஆயிஷா ரழி அவர்களின் அலமாறிக்கு மேலுள்ள ஸ்கிரீன் விலகி ஆயிஷா ரழி அவர்கள் வைத்திருந்த சில பொம்மைகள் வெளியே தெரிந்தன. ஆயிஷாவே இது என்ன என்று நபி ஸல் கேட்டார்கள், இவை எனது விளையாட்டு பொம்மைகள் என்று ஆயிஷா ரழி அவர்கள் கூற, பின்பு நபி ஸல் அவர்கள் அவற்றின் மத்தியில் ஒரு குதிரை இறக்கைகளுடன் இருப்பதைக் கண்டு எங்கேனும் குதிரைக்கு இறக்கை இருக்குமா என நபி ஸல் கேட்க, உடனே ஆயிஷா ரழி அவர்கள் நபி சுலைமான் அலை அவர்களிடம் இறக்கைகள் கொண்ட குதிரைகள் இருந்தன என்று நீங்கள் கேள்விப்படவில்லையா என்றார்கள். அதைக் கண்டவுடன் நபி ஸல் அவர்கள் கடைவாய்ப் பற்கள் தெரிய சிரித்து விட்டார்கள். - நூல் அபூதாவூத்                     

மனைவியை பலர் முன்னிலையில் அவமானப் படுத்துவது கூடாது

عَنْ أَنَسٍ رضي الله عنه قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ بَعْضِ نِسَائِهِ فَأَرْسَلَتْ إِحْدَى أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ بِصَحْفَةٍ فِيهَا طَعَامٌ فَضَرَبَتْ الَّتِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَيْتِهَا يَدَ الْخَادِمِ فَسَقَطَتْ الصَّحْفَةُ فَانْفَلَقَتْ فَجَمَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِلَقَ الصَّحْفَةِ ثُمَّ جَعَلَ يَجْمَعُ فِيهَا الطَّعَامَ الَّذِي كَانَ فِي الصَّحْفَةِ وَيَقُولُ غَارَتْ أُمُّكُمْ ثُمَّ حَبَسَ الْخَادِمَ حَتَّى أُتِيَ بِصَحْفَةٍ مِنْ عِنْدِ الَّتِي هُوَ فِي بَيْتِهَا فَدَفَعَ الصَّحْفَةَ الصَّحِيحَةَ إِلَى الَّتِي كُسِرَتْ صَحْفَتُهَا وَأَمْسَكَ الْمَكْسُورَةَ فِي بَيْتِ الَّتِي كَسَرَتْ   (بخاري5225

 நபி ஸல் அவர்கள் தன் மனைவிமார்களின் ஒருவரின் வீட்டில் (ஆயிஷா ரழி அவர்களின் வீட்டில்) இருந்தார்கள். (அப்போது சில தோழர்களும் உடன் இருந்தார்கள். அவர்களுக்காக அன்னை ஆயிஷா ரழி உணவு தயார் செய்து கொண்டிருந்தார்கள்) அப்போது மற்றொரு மனைவி தன் வீட்டில் இருந்து உணவைக் கொடுத்தனுப்பினார்கள். அப்போது யாருடைய வீட்டில் நபி ஸல் இருந்தார்களோ அந்த மனைவி அதாவது (ஆயிஷா ரழி அவர்கள் ரோஷம் காரணமாக) அதை தட்டி விட, தட்டு இரண்டாக உடைந்தது. உடனே நபி ஸல் அவர்கள் கோபம் அடையாமல் உடைந்த தட்டையும் அதிலிருந்து சிதறிய உணவுகளையும் சேகரித்தார்கள். பிறகு தோழர்களிடம் உங்களின் அன்னைக்கு ரோஷம் ஏற்பட்டு விட்டது என்று மட்டும் கூறினார்கள். பிறகு அந்த வீட்டில் இருந்த நல்ல தட்டை உணவு கொடுத்தனுப்பிய மனைவிக்குக் கொடுத்தனுப்பி உடைந்த தட்டை இந்த வீட்டில் வைத்தார்கள்.

படிப்பினை- பலர் முன்னிலையில் இவ்வாறு ஒரு மனைவி நடந்து கொண்டால் பொதுவாக எந்த ஒரு ஆணுக்கும் கோபம் வரும். ஆனால் நபி ஸல் அவர்கள் கோபம் அடையவில்லை.                                  

மனைவி மீது பாசம் கொண்ட நபி ஸல் அவர்கள்

فقد قال صلى الله عليه وسلم في حديث أم زرع الطويل قال لعائشة : « كُنْتُ لَكِ كَأَبِى زَرْعٍ لأُمِّ زَرْعٍ » (بخاري5189

பல பெண்கள் ஒன்று சேர்ந்து தங்களுடைய கணவன்மார்களைப் பற்றிப் பேசும் சம்பவத்தை ஆயிஷா ரழி அவர்கள் நபி ஸல் அவர்களிடம் கூறுவார்கள். அதை முழுமையாகக் கேட்ட பின்பு இந்தச் சம்பவத்தில் வரும் உம்மு ஸர்உ  என்ற பெண் அபூ ஸர்உக்கு மனைவியாக இருந்த போது அந்த மனைவி மீது  எத்தகைய பாசம் உள்ளவராக இருந்தாரோ அதுபோல உன்னிடம் நான் பாசமாக இருக்க ஆசைப் படுகிறேன் என்றார்கள்.     

فقد قال صلى الله عليه وسلم في حديث أم زرع الطويل قال لعائشة : « كُنْتُ لَكِ كَأَبِى زَرْعٍ لأُمِّ زَرْعٍ » (بخاري5189

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنِّي لَأَعْلَمُ إِذَا كُنْتِ عَنِّي رَاضِيَةً وَإِذَا كُنْتِ عَلَيَّ غَضْبَى قَالَتْ فَقُلْتُ مِنْ أَيْنَ تَعْرِفُ ذَلِكَ فَقَالَ أَمَّا إِذَا كُنْتِ عَنِّي رَاضِيَةً فَإِنَّكِ تَقُولِينَ لَا وَرَبِّ مُحَمَّدٍ وَإِذَا كُنْتِ عَلَيَّ غَضْبَى قُلْتِ لَا وَرَبِّ إِبْرَاهِيمَ قَالَتْ قُلْتُ أَجَلْ وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ مَا أَهْجُرُ إِلَّا اسْمَكَ (بخاري 5228

ஆயிஷா ரழி அவர்கள் கூறினார்கள்  நபி ஸல் அவர்கள் என்னிடம் நீ என் மீது எப்போது கோபமாக இருக்கிறாய் எப்போது அன்பாக இருக்கிறாய் என நான் அடையாளம் கண்டு கொள்வேன் என்று கூறினார்கள். அதற்கு நான் அது எப்படி? என்று கேட்டேன். அதற்கு நபி ஸல் அவர்கள் நீ என் மீது அன்பாக இருந்தால் முஹம்மது ஸல் அவர்களுடைய ரப்பின் மீது சத்தியமாக என்று கூறுவாய். நீ என் மீது கோபமாக இருந்தால்  இப்றாஹீம் (அலை) அவர்களுடைய ரப்பின் மீது சத்தியமாக என்று கூறுவாய். என்றார்கள். அதற்கு நான் ஆம் யாரஸூலல்லாஹ் அந்த நேரத்திலும் உங்களுடைய பெயரை மட்டும் என் நாவு ஒதுக்குமே தவிர உங்கள் மீதான நேசம் எப்போதும் எனக்குள் இருக்கும் என்றேன்.                            

عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّكَ لَنْ تُنْفِقَ نَفَقَةً تَبْتَغِي بِهَا وَجْهَ اللَّهِ إِلَّا أُجِرْتَ عَلَيْهَا حَتَّى مَا تَجْعَلُ فِي فِي امْرَأَتِكَ (بخاري

அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி நீ செய்யும் தர்மம் உட்பட ஒவ்வொரு காரியங்களுக்கும் நன்மை உண்டு. உன்னுடைய மனைவிக்கு நீ உணவு ஊட்டி விடுவது உட்பட..

மனைவியிடம் சில கெட்ட குணங்கள் இருந்தாலும் அவளிடமுள்ள வேறு சில நல்ல குணங்களைப் பொருந்திக் கொண்டு அனுசரித்து வாழ்வது

روي أن رجلا جاء إلى [عمر بن الخطاب] رضى الله عنه ليشكو سوء خلق زوجته فوقف على بابه ينتظر خروجه فسمع هذا الرجل امرأة عمر تستطيل عليه بلسانها وتخاصمه وعمر ساكت لا يرد عليها. فانصرف الرجل راجعا وقال: إن كان هذا حال عمر مع شدته وصلابته وهو أمير المؤمنين فكيف حالي؟ وخرج عمر فرآه موليا عن بابه فناداه وقال: ما حاجتك أيها الرجل؟فقال: يا أمير المؤمنين جئت أشكو إليك سوء خلق امرأتي واستطالتها عَلَيّ فسمعت زوجتك كذلك فرجعت وقلت: إذا كان هذا حال أمير المؤمنين مع زوجته فكيف حالي ؟قال عمر ـ يا أخي اسمع لمواقفهم رضوان الله تعالى عليهم ـ يا أخي إني أحتملها لحقوق لها عليّ إنها لطباخة لطعامي، خبازة لخبزي، غسالة لثيابي، مرضعة لولدي وليس ذلك كله بواجب عليها ويسكن قلبي بها عن الحرام فأنا أحتملها لذلك ، فقال الرجل: يا أمير المؤمنين وكذلك زوجتي قال عمر: فاحتملها يا أخي فإنما هي مدة يسيرة (فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا)  (عشرة النساء للنسائي)

 உமர் ரழி அவர்களிடம் ஒருவர் தன் மனைவியின் கெட்ட குணம் பற்றி முறையிட வந்தார். வீட்டை அடைந்தவுடன் உமர் ரழி அவர்கள் வெளியே வருவதை எதிர் பார்த்து வாசலில் காத்திருந்தார். அப்போது வீட்டுக்குள் உமர் ரழி அவர்களின் மனைவி உமர் ரழி அவர்களைத் திட்டுவதையும் அதைக் கேட்டும் உமர் ரழி அவர்கள் பதில் எதுவும் பேசாமல் மவுனமாக இருப்பதையும் கண்டு உமர் ரழி அவர்களின் நிலையே இது என்றால் என்னுடைய நிலை எவ்வளவோ பரவாயில்லை என்று எண்ணி வீட்டுக்குத் திரும்பினார். அப்போது உமர் ரழி அவர்கள் அவரைப் பார்த்து விட்டார்கள். அவரை அழைத்து எதற்காக வந்தீர்கள் என்று கேட்க, அதற்கு அவர் என் மனைவியின் கெட்ட குணம் பற்றி முறையிட வந்தேன். ஆனால் இங்கு வந்ததும் என்னுடைய நிலை எவ்வளவோ பரவாயில்லை என்று எண்ணி வீட்டுக்குத் திரும்பினேன் என்றும் கூறினார். அப்போது உமர் ரழி அவர்கள் அவரிடம் சகோதரரே நன்றாக நான் சொல்வதைக் கேளுங்கள். மனைவியின் மீது எனக்குள்ள கடமைகள் அடிப்படையில் நான் அவள் பேசுவதை சில நேரம் சகித்துக் கொள்கிறேன். என் மனைவி எனக்காக உணவு சமைக்கிறாள். துணி துவைக்கிறாள். என் குழந்தைக்கு பாலூட்டுகிறாள். இதுவெல்லாம் அவள் மீது கடமை இல்லாமலேயே அவள் செய்கிறாள் இத்தனைக்கும் மேலாக அவளால் தான் என்னுடைய உள்ளம் மற்ற பெண்களின் மீது ஹராமான முறையில் அலைபாயாமல் நிலை பெறுகிறது. இத்தனை விஷயங்களுக்காக நான் நான் அவள் பேசுவதை சில நேரம் சகித்துக் கொள்கிறேன் என்று கூற, அதற்கு அந்த மனிதர் என் மனைவியும் அவ்வாறே எனக்காக மற்ற பணிவிடைகள் அனைத்தும் செய்கிறாள் எனினும் வாய் அதிகம் என்று கூற அதற்கு உமர் ரழி நீர் சற்று பொறுத்துக் கொள்ள வேண்டும். இதுவெல்லாம் துன்யாவுடைய கொஞ்ச கால வாழ்க்கை தான் என்றார்கள். பிறகு அந்தப் பெண்களின் சில குணங்களை நீங்கள் வெறுத்தாலும் வேறு சில நல்ல குணங்களை வைத்து பொருந்திக் கொள்ள வேண்டும். எனவும் அறிவுரை கூறினார்கள்.                                         

கணவனின் கண்ணுக்கு மனைவி அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புவது போன்று மனைவியின் கண்ணுக்கு கணவனும் ஷரீஅத்திற்கு மாற்றமில்லாமல் தன்னை அழகாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

قال [ابن عباس]: إني لأتزين لامرأتي كما تتزين لى وما أحب أن أستطف كل حقي الذي لي عليها فتستوجب حقها الذي لها عليَّ لأن الله تعالى يقول: (ولهن مثل الذي عليهن بالمعروف) وقد دخل على الخليفة عمر زوج أشعت أغبر ومعه امرأته وهي تقول: لا أنا ولا هذا لا تريده .. ، فعرف كراهية المرأة لزوجها فأرسل الزوج ليستحم ويأخذ من شعر رأسه ويقلم أظافره فلما حضر أمره أن يتقدم من زوجته فاستغربته ونفرت منه ثم عرفته فقَبِلَتْ به ورجعت عن دعواها رجعت تراجعت إذن عن طلب الطلاق فقال عمر: وهكذا فاصنعوا لهن فوالله إنهن ليحببن أن تتزينوا لهن كما تحبون أن يتزين لكم  (الكتاب : عشرة النساء للنسائي)

  இப்னு அப்பாஸ் ரழி அவர்கள் கூறினார்கள் எனக்காக என் மனைவி அலங்காரம் செய்வது போன்று நான் என் மனைவிக்காக அலங்கரித்துக் கொள்வதை விரும்புகிறேன். என் மீது மட்டும் அவளுக்குக் கடமைகள் உள்ளது. அவள் மீது எனக்குக் கடமைகள் எதுவும் இல்லை என்பதை நான் விரும்பவில்லை. காரணம் அல்லாஹ் குர்ஆனில் அந்தப் பெண்களின் மீது உங்களுக்கும் சில கடமைகள் உள்ளது என்று கூறுகிறான். உமர் ரழி அவர்களிடம் தலைவிரி கேலமாக அழுக்கான ஆடையுடன் ஒருவர் மனைவியுடன் வந்தார். அவரிடமிருந்து அப்பெண் விவாகரத்துக் கேட்கிறார் என்பதையும் எதற்காக விவாகரத்துக் கெட்கிறார் என்பதையும் புரிந்து கொண்ட உமர் ரழி அவர்கள் அந்தக் கணவரிடம் முதலில் உன்னை நீ நன்றாக சுத்தப்படுத்திக் கொண்டு வரும்படியும், அழகான ஆடையை அணிந்து வர வேண்டும் என்றும் தலைமுடியை நன்றாக வாரி வர வேண்டும் என்றும் உத்தரவிட்டார்கள். அவர் அவ்வாறே செய்தார். அவர் திரும்பி வந்த பின் அவரை மனைவிக்கு முன்னால் வந்து நிற்கச் சொன்னார்கள். அந்த மனைவி அந்தக் கோலத்தில் அவரைப் பார்த்த பின்பு முதலில் மறுத்தாலும் சற்று நேரத்தில் மனம் மாறி விவாகரத்துக் கேட்கும் எண்ணத்தை மாற்றிக் கொண்டார். அப்போது தான் உமர் ரழி அவர்கள் அந்தக் கணவரிடம். உங்கள் கண்ணுக்கு மனைவி அழகாக இருக்க வேண்டும் என விரும்புவது போன்று மனைவியின் கண்ணுக்கு நீங்கள் அழகாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவார்கள் என்று கூறினார்கள்.

وقال [يحيى بن عبد الرحمن الحنظلي]: أتيت [محمد بن الحنفية] فخرج إلى في ملحفة حمراء ولحيته تقطر من الغالية ، والغالية هي خليط الأطياب بل خليط أفضل الأطياب ، ولحيته تقطر من الغالية ، يقول يحيى فقلت له: ما هذا ؟ قال محمد : إن هذه الملحفة ألقتها على امرأتى ودهنتنى بالطيب وإنهن يشتهين منا ما نشتهيه منهن ، ذكر ذلك القرطبي في تفسيره الجامع لأحكام القرآن (عشرة النساء للنسائي)

யஹ்யா ரஹ் அவர்கள் கூறினார்கள் நான் முஹம்மது இப்னு ஹனஃபிய்யா ரஹ் அவர்களிடம் வருகை தந்தபோது அவர்கள் அழகான நீண்ட அங்கியை அணிந்தவர்களாகவும் மிகச்சிறந்த நறுமணம் தடவியவர்களாகவும் இருந்தார்கள். அந்த நறுமணம் தாடியிலும் வடிந்த படி இருந்தது. அதுபற்றி அவர்களிடம் நான் கேட்டபோது இந்த ஆடையை என் மனைவி எனக்கு அணிவித்தார். இந்த நறுமணத்தையும் அவரே எனக்குத் தடவி விட்டார். நம் கண்ணுக்கு முன்னால் நம் மனைவிமார்கள் அழகாக இருக்க வேண்டும் என நாம் விரும்புவது போல மனைவியின் கண்ணுக்கு முன்னால் நாம் அழகாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவது இயல்பு தானே என்றார்கள்.

மனைவி வாயாடியாக இருந்தாலும் அனுசரித்துப் போகும் கணவனுக்கு சிறப்பு உண்டு

وعن لقيط بن صبرة قال : قلت : يا رسول الله إن لي امرأة في لسانها شيء يعني البذاء قال : " طلقها " . قلت : إن لي منها ولدا ولها صحبة قال : " فمرها " يقول عظها " فإن يك فيها خير فستقبل ولا تضربن ظعينتك ضربك أميتك " . رواه أبو داود

மனைவி என்பவள் வாழ்க்கைத் துணைவி தானே தவிர அடிமை அல்ல

சில கூட்டுக் குடும்பங்களில் இந்தப் பிரச்சினைகள் உள்ளன. கணவன் குடும்பத்தில் நாத்தனார், மாமனார், மாமியார் என அனைவருக்குமான வேலையை புதிதாக வந்த மருமகளிடமே ஒப்படைத்து விட்டு அவள் தான் வேலை செய்ய வேண்டும் என்று கட்டாயப் படுத்துவார்கள்.   

وَتُفْرَضُ عَلَى الزَّوْجِ إذَا كَانَ مُوسِرًا نَفَقَةُ خَادِمِهَا . وَهَذَا عِنْدَ أَبِي حَنِيفَةَ وَمُحَمَّدٍ . وَقَالَ أَبُو يُوسُفَ : تُفْرَضُ لِخَادِمَيْنِ لِأَنَّهَا تَحْتَاجُ إلَى أَحَدِهِمَا لِمَصَالِحِ الدَّاخِلِ وَإِلَى الْآخَرِ لِمَصَالِحِ الْخَارِجِ .(هداية) باب النفقة

கணவன் வசதி படைத்தவனாக இருந்தால் மனைவியின் பணியாளருக்கான செலவினங்களும் அவன் மீது கடமையாகும். இக்கருத்து இமாம் அபூஹனீஃபா ரஹ் மற்றும் இமாம் முஹம்மது ரஹ் ஆகியோரின் கருத்தாகும் ஆனால் இமாம் அபூயூசுஃப்  ரஹ் அவர்களின் கருத்து கணவன் வசதி படைத்தவனாக இருந்தால் மனைவியின் இரண்டு பணியாளருக்கான செலவினங்கள் அவன் மீது கடமையாகும். ஒரு பணியாளர் (பெண் பணியாளர்) வீட்டின் உள் வேலைகளை கவனிப்பதற்காக மற்றொரு பணியாளர் வெளி வேலைகளை (மளிகைப் பொருட்கள் வாங்கி வருவது) போன்ற வேலைகளை கவனிப்பதற்காக...-ஹிதாயா

     وقوله في الكتاب إذا كان موسرا إشارة إلى أنه لا تجب نفقة الخادم عند إعساره وهو رواية الحسن عن أبي حنيفة رحمه الله وهو الأصح

கணவன் ஏழையாக இருப்பின் மனைவிக்கு உதவியாளர் வைத்துக்கொள்வது கணவனுக்கு கடமையில்லை

وأما أن تجبر المرأة على شيء من الخدمة فلا أصل له بل الإجماع منعقد على أن على الزوج مؤنة الزوجة كلها ونقل الطحاوي الإجماع على أن الزوج ليس له إخراج خادم المرأة من بيته فدل على أنه يلزمه نفقة الخادم على حسب الحاجة إليه وقال الشافعي والكوفيون يفرض لها ولخادمها النفقة إذا كانت ممن تخدم  (فتح الباري

மனைவியை எந்த ஒரு பணிவிடைக்கும் கட்டாயப் படுத்துவதற்கு மார்க்கத்தில் எவ்வித ஆதாரமும் இல்லை. மனைவிக்கான அனைத்து செலவினங்களுக்கும் பொறுப்பு கணவன் தான் ஏற்க வேண்டும் அதன்படி இமாம் தஹாவீ ரஹ் அவர்கள் கூறும்போது மனைவிக்கு உதவியாக யாரேனும் உதவியாளரை வைத்துக் கொள்ளாமல் மனைவியே அத்தனை வேலைகளையும் செய்யட்டும் என இருப்பது கணவனுக்கு அறவே கூடாது. ஃபத்ஹுல் பாரீ

படிப்பினை- மேற்படி சட்டம் கணவன் மனைவி பிள்ளைகள் மட்டுமே இருக்கும் ஒரு குடும்பத்திற்கான சட்டமாகும். மேற்படி குடும்பத்தில் கணவன் வசதி படைத்தவனாக இருந்தால் மனைவியின் இரண்டு பணியாளருக்கான செலவினங்கள் அவன் மீது கடமை எனும்போது கூட்டுக் குடும்பத்தில் அனைத்து வேலைகளையும் மனைவியின் மீது பொறுப்பு சுமத்தலாமா என்று சிந்திக்க வேண்டும்.             

தன் குழந்தைக்கு மனைவி தாய்ப்பால் தர மறுத்து விட்டால் அதற்கான வாடகைத் தாயை கணவன் ஏற்படுத்த வேண்டும்.

وَالْوَالِدَاتُ يُرْضِعْنَ أَوْلَادَهُنَّ حَوْلَيْنِ كَامِلَيْنِ لِمَنْ أَرَادَ أَنْ يُتِمَّ الرَّضَاعَةَ وَعَلَى الْمَوْلُودِ لَهُ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوفِ لَا تُكَلَّفُ نَفْسٌ إِلَّا وُسْعَهَا لَا تُضَارَّ وَالِدَةٌ بِوَلَدِهَا وَلَا مَوْلُودٌ لَهُ بِوَلَدِهِ (233) البقرة

அதற்காக மனைவி எந்த வேலைகளையும் செய்ய வேண்டாம் என்பதல்ல. மனைவிக்கு உதவியாக பணியாளர்களை அமர்த்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது

عن مالك أن خدمة البيت تلزم المرأة ولو كانت الزوجة ذات قدر وشرف إذا كان الزوج معسرا قال ولذلك ألزم النبي صلى الله عليه و سلم فاطمة بالخدمة الباطنة وعليا بالخدمة الظاهرة       (فتح الباري

இமாம் மாலிக் ரஹ் அவர்கள் கூறும்போது மனைவி என்ன தான் வசதி படைத்த குடும்பத்தைச் சார்ந்த பெண்ணாக இருந்தாலும் வசதியற்ற கணவனுக்கு மனைவியாக அவள் வாழும் சூழ்நிலை ஏற்பட்டால் வீட்டு வேலைகளை அவளும் வெளி வேலைகளை கணவனும் கவனித்துக் கொள்ள வேண்டும். இந்த சூழ்நிலையில் வெளி வேலைகளுக்குக் கணவன் பொறுப்பேற்க வேண்டும். இதனடிப்படையில் தான் நபி ஸல் அவர்கள் தன்னுடைய மகள் ஃபாத்திமா ரழி அவர்கள் தன்னுடைய வேலைச் சுமையை நபி ஸல் அவர்களிடம் வந்து முறையிட்ட போது வீட்டு வேலைகளை ஃபாத்திமா ரழி அவர்களும் வெளி வேலைகளை அலீ ரழி அவர்களும் கவனித்துக் கொள்ள ஏவினார்கள்.                    

தஸ்பீஹ் ஃபாத்திமா ரழி உடைய சம்பவத்தை இந்த இடத்தில் ஞாபகப் படுத்தலாம்.

தன் மீது கடமை இல்லா விட்டாலும் கணவனின் உறவினர்களை அனுசரித்து வாழும் மனைவிக்கு சிறப்பு

عَنْ جَابِرِ رَضِيَ اللَّهُ عَنْهُ  قَالَ هَلَكَ أَبِي وَتَرَكَ سَبْعَ بَنَاتٍ أَوْ تِسْعَ بَنَاتٍ فَتَزَوَّجْتُ امْرَأَةً ثَيِّبًا فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَزَوَّجْتَ يَا جَابِرُ فَقُلْتُ نَعَمْ فَقَالَ بِكْرًا أَمْ ثَيِّبًا قُلْتُ بَلْ ثَيِّبًا قَالَ فَهَلَّا جَارِيَةً تُلَاعِبُهَا وَتُلَاعِبُكَ وَتُضَاحِكُهَا وَتُضَاحِكُكَ قَالَ فَقُلْتُ لَهُ إِنَّ عَبْدَ اللَّهِ هَلَكَ وَتَرَكَ بَنَاتٍ وَإِنِّي كَرِهْتُ أَنْ أَجِيئَهُنَّ بِمِثْلِهِنَّ فَتَزَوَّجْتُ امْرَأَةً تَقُومُ عَلَيْهِنَّ وَتُصْلِحُهُنَّ فَقَالَ بَارَكَ اللَّهُ لَكَ أَوْ قَالَ خَيْرًا (بخاري5367

  ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:(என் தந்தை) அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் (உஹுதுப் போரில்) இறந்துவிட்டார்கள். (இறக்கும்போது) ஒன்பது பெண் மக்களை (அல்லது ஏழு பெண் மக்களை) விட்டுச் சென்றார்கள். ஆகவே, (கன்னி கழிந்த) ஒரு பெண்ணை நான் மணமுடித்துக்கொண்டேன். அப்போது என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஜாபிரே! நீ மணமுடித்துக் கொண்டாயா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். அதற்கு "கன்னிப் பெண்ணையா, கன்னி கழிந்த பெண்ணையா (யாரை மணந்தாய்)?" என்று கேட்டார்கள். நான் "இல்லை; கன்னி கழிந்த பெண்ணைத்தான் (மணந்தேன்), அல்லாஹ்வின் தூதரே!" என்று பதிலளித்தேன்.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,"கன்னிப் பெண்ணை மணந்து "நீ அவளுடனும் அவள் உன்னுடனும் கொஞ்சிக் குலவி விளையாடலாமே" அல்லது "நீ அவளுக்கும் அவள் உனக்கும் மகிழ்வூட்டலாமே" என்று கேட்டார்கள்.அதற்கு நான்,"(என் தந்தை) அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் "ஒன்பது" அல்லது "ஏழு" பெண் மக்களை விட்டுவிட்டு இறந்துவிட்டார்கள். (வயதில்) அவர்களையொத்த ஒரு (இளவயதுப்) பெண்ணை (மணமுடித்து) அவர்களிடம் அழைத்துச் செல்வதை நான் விரும்பவில்லை; அவர்களைப் பராமரித்துச் சீராகப் பேணி நிர்வகிக்கும் (பக்குவமுள்ள) ஒரு பெண்ணையே (அவர்களிடம்) அழைத்துச் செல்ல நான் விரும்பினேன்" என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ் உனக்கு "பரக்கத் செய்வானாக" என்று, அல்லது "நல்ல வார்த்தையை" என்னிடம் கூறினார்கள்.

படிப்பினை- அல்லாஹ் உனக்கு "பரக்கத் செய்வானாக" என்ற துஆ அந்த மனைவிக்கும் பொருந்தும்

சிரமப்படும் கணவனுக்கு எல்லா வகையிலும் உதவியாக இருந்த ஒரு மனைவிகளைப் பற்றிய சம்பவம்

கதீஜா ரழி அவர்கள் ஹிரா குகைக்குச் சென்று உணவு கொடுத்து வந்த சம்பவம்- அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நோயின் போது உதவியாக இருந்த அவர்களின் மனைவி ரஹீமா அலை அவர்களைப் பற்றி..

وروى ابن سعد في "الطبقات" (8/ 197) بسند صحيح عَنْ عِكْرِمَةَ:  " أَنَّ أَسْمَاءَ بِنْتَ أَبِي بَكْرٍ كَانَتْ تَحْتَ الزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ. وَكَانَ شَدِيدًا عَلَيْهَا، فَأَتَتْ أَبَاهَا فَشَكَتْ ذَلِكَ إِلَيْهِ فَقَالَ: " يَا بُنَيَّةُ اصْبِرِي فَإِنَّ الْمَرْأَةَ إِذَا كَانَ لَهَا زَوْجٌ صَالِحٌ ثُمَّ مَاتَ عَنْهَا فَلَمْ تَزَوَّجْ بَعْدَهُ ، جُمِعَ بَيْنَهُمَا فِي الْجَنَّةِ ".

மனைவியின் சம்பாத்தியத்தில் சோம்பேறிகளாக வீட்டில் பொழுதைக் கழிக்கும் ஆண்களுக்கு எச்சரிக்கை

عَنْ عِيَاضِ بْنِ حِمَارٍ الْمُجَاشِعِىِّ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ...... وَأَهْلُ النَّارِ خَمْسَةٌ الضَّعِيفُ الَّذِى لاَ زَبْرَ لَهُ الَّذِينَ هُمْ فِيكُمْ تَبَعًا لاَ يَتْبَعُونَ أَهْلاً وَلاَ مَالاً وَالْخَائِنُ الَّذِى لاَ يَخْفَى لَهُ طَمَعٌ وَإِنْ دَقَّ إِلاَّ خَانَهُ وَرَجُلٌ لاَ يُصْبِحُ وَلاَ يُمْسِى إِلاَّ وَهُوَ يُخَادِعُكَ عَنْ أَهْلِكَ وَمَالِكَ ». وَذَكَرَ الْبُخْلَ أَوِ الْكَذِبَ « وَالشِّنْظِيرُ الْفَحَّاشُ ». (مسلم

 ஐந்து விதமான நபர்கள் நரகவாதிகள் 1, புத்தி சாதுர்யம் இல்லாத பலவீனமானவர். (சோம்பேறி) இவருக்கென சுய சம்பாத்தியம் இல்லாமல் எப்போதும் உங்களைப் பின் தொடர்வார். இப்படிப்பட்டவர்கள் குடும்பத்தையும் தேட மாட்டார்கள்.சம்பாதிக்கும் வழியையும் தேட மாட்டார்கள். 2 எந்த ஆசையையும் விட்டு வைக்காத மோசடிக்காரன்- (இவன் அடுத்தவர்களை ஏமாற்றியே தனது எல்லா ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்வான்.) அற்பமான பொருளாக இருந்தாலும் இவன் அடுத்தவர்களை ஏமாற்றித் தான் அதை அடைவான் 3, (கூடவே இருந்து குழி பறிக்கும்) துரோகி- இவன் காலையிலும், மாலையிலும் (எந்த நேரமும்) உன்னுடைய பொருள் விஷயத்திலும், உன் வீட்டார் விஷயத்திலும் உனக்கு துரோகம் செய்வான். 4,கஞ்சன் அல்லது பொய்யன் 5,அசிங்கமான வார்த்தைகளைப் பேசும் ஒழுக்கமற்றவன்

சுய சம்பாத்திம் இல்லாமல் அடுத்தவரை அண்டி வாழும் சோம்பேறியைப் பற்றி கூறப்பட்ட இந்த ஹதீஸ் மனைவியின் சம்பாத்தியத்தில் சோம்பேறிகளாக, குடிகாரர்களாக வீட்டில் பொழுதைக் கழிக்கும் ஆண்களுக்கும் பொருந்தும்.              

 

வியாழன், 17 ஆகஸ்ட், 2023

முஃமின்களுக்கு மட்டும் சோதனைகள் ஏன்?


முஸ்லிம்களுக்கு சோதனைகள் அதிகரிப்பது அழிவு நாளின் அறிகுறியாகும்

عن الزبير بن عدي قال : أتينا أنس بن مالك فشكونا إليه الحجاج فقال : اصبروا ( فإنه لا يأتي عليكم يوم أو زمان إلا والذي بعده شر منه حتى تلقوا ربكم ) سمعته من نبيكم صلى الله عليه و سلم (صحيح ابن حبان

 ஜுபைர் இப்னு அதீ ரஹ் அவர்கள் கூறினார்கள் நாங்கள் அனஸ் ரழி அவர்களிடம் வருகை தந்து ஹஜ்ஜாஜ் செய்யும் கொடுமைகளைப் பற்றி முறையிட்டோம். அப்போது அவர்களிடம் நீங்கள் பொறுமை கொள்ளுங்கள். காலங்கள் செல்லச் செல்ல சோதனைகள் பெருகும்.அந்த சோதனைகள் மவ்த் வரையிலும் கூட நீடிக்கலாம் என்றார்கள்

காலங்கள் செல்லச் செல்ல சோதனைகள் அதிகரிக்கலாம்.

தஜ்ஜால் வரும் முன்பு ஏற்படும் பட்டினியின் போது முஃமின்களுக்கு தஸ்பீஹ் தான் உணவு

عَنْ أَبِى أُمَامَةَ الْبَاهِلِىِّ قَالَ خَطَبَنَا رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فَكَانَ أَكْثَرُ خُطْبَتِهِ حَدِيثًا حَدَّثَنَاهُ عَنِ الدَّجَّالِ وَحَذَّرَنَاهُ فَكَانَ مِنْ قَوْلِهِ أَنْ قَالَ « إِنَّهُ لَمْ تَكُنْ فِتْنَةٌ فِى الأَرْضِ مُنْذُ ذَرَأَ اللَّهُ ذُرِّيَّةَ آدَمَ أَعْظَمَ مِنْ فِتْنَةِ الدَّجَّالِ وَإِنَّ اللَّهَ لَمْ يَبْعَثْ نَبِيًّا إِلاَّ حَذَّرَ أُمَّتَهُ الدَّجَّالَ......   وَإِنَّ قَبْلَ خُرُوجِ الدَّجَّالِ ثَلاَثَ سَنَوَاتٍ شِدَادٍ يُصِيبُ النَّاسَ فِيهَا جُوعٌ شَدِيدٌ يَأْمُرُ اللَّهُ السَّمَاءَ فِى السَّنَةِ الأُولَى أَنْ تَحْبِسَ ثُلُثَ مَطَرِهَا وَيَأْمُرُ الأَرْضَ فَتَحْبِسُ ثُلُثَ نَبَاتِهَا ثُمَّ يَأْمُرُ السَّمَاءَ فِى السَّنَةِ الثَّانِيَةِ فَتَحْبِسُ ثُلُثَىْ مَطَرِهَا وَيَأْمُرُ الأَرْضَ فَتَحْبِسُ ثُلُثَىْ نَبَاتِهَا ثُمَّ يَأْمُرُ اللَّهُ السَّمَاءَ فِى السَّنَةِ الثَّالِثَةِ فَتَحْبِسُ مَطَرَهَا كُلَّهُ فَلاَ تَقْطُرُ قَطْرَةٌ وَيَأْمُرُ الأَرْضَ فَتَحْبِسُ نَبَاتَهَا كُلَّهُ فَلاَ تُنْبِتُ خَضْرَاءَ فَلاَ تَبْقَى ذَاتُ ظِلْفٍ إِلاَّ هَلَكَتْ إِلاَّ مَا شَاءَ اللَّهُ ». قِيلَ فَمَا يُعِيشُ النَّاسَ فِى ذَلِكَ الزَّمَانِ قَالَ « التَّهْلِيلُ وَالتَّكْبِيرُ وَالتَّسْبِيحُ وَالتَّحْمِيدُ وَيُجْرَى ذَلِكَ عَلَيْهِمْ مَجْرَى الطَّعَامِ ». قَالَ أَبُو عَبْدِ اللَّهِ سَمِعْتُ أَبَا الْحَسَنِ الطَّنَافِسِىَّ يَقُولُ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ الْمُحَارِبِىَّ يَقُولُ يَنْبَغِى أَنْ يُدْفَعَ هَذَا الْحَدِيثُ إِلَى الْمُؤَدِّبِ حَتَّى يُعَلِّمَهُ الصِّبْيَانَ فِى الْكُتَّابِ.  (ابن ماجة)

அபூ உமாமா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள். நபி ஸல் அவர்கள் ஒருமுறை தஜ்ஜாலின் சோதனையைப் பற்றி எங்களுக்கு உபதேசம் செய்தார்கள். அப்போது கூறினார்கள். மனிதன் படைக்கப்பட்டது முதல் கடைசி வரை ஏற்படும் சோதனைகளில் தஜ்ஜாலை விட மிகப் பெரும் சோதனை எதுவும் இல்லை. இதனால் தான் எந்த  நபியும் தஜ்ஜாலைப் பற்றி தம் சமூக மக்களுக்கு எச்சரிக்கை செய்யாமல் இருந்ததில்லை. ....

தஜ்ஜால் வருவதற்கு முன்பு மூன்று வருடங்கள் மிகவும் சிரமமாக வருடங்களாக இருக்கும். இந்த மூன்று வருடங்களில் முதல் வருடம் அல்லாஹ் வானத்திற்கு உத்தரவிட்டு பெய்ய வேண்டிய மழையில் மூன்றில் ஒரு பங்கை நிறுத்திக் கொள்ள உத்தரவிடுவான்.  அதேபோல் பூமிக்கு உத்தரவிட்டு அது விளைவிக்க வேண்டிய விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கை நிறுத்திக் கொள்ள உத்தரவிடுவான். இரண்டாம் வருடம்  அல்லாஹ் வானத்திற்கு உத்தரவிட்டு பெய்ய வேண்டிய மழையில் மூன்றில் இரு பங்கை நிறுத்திக் கொள்ள உத்தரவிடுவான்.  அதேபோல் பூமிக்கு உத்தரவிட்டு அது விளைவிக்க வேண்டிய விளைச்சலில் மூன்றில் இரு பங்கை நிறுத்திக் கொள்ள உத்தரவிடுவான்.

மூன்றாம் வருடம் அல்லாஹ் வானத்திற்கு உத்தரவிட்டு பெய்ய வேண்டிய மழையை முற்றிலுமாக நிறுத்திக் கொள்ள உத்தரவிடுவான்.  அதேபோல் பூமிக்கு உத்தரவிட்டு அது விளைவிக்க வேண்டிய விளைச்சலை  முற்றிலுமாக நிறுத்திக் கொள்ள உத்தரவிடுவான். புற்பூண்டுகள் விளையாது. கால்நடைகள் இறந்து விடும். என்றெல்லாம் நபி ஸல் அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே அந்த நேரத்தில் உணவுக்கு என்ன வழி என்று தோழர்கள் கேட்க, அதற்கு நபி ஸல் தஹ்லீல் அதாவது லாயிலாஹ இல்ல ல்லாஹ், அல்லாஹு அக்பர்,  தஸ்பீஹ், தஹ்மீத் ஆகியவை தான் உணவாக இருக்கும் என்றார்கள். (அதாவது முஃமின்கள் உணவு கிடைக்காத சூழலில் இவற்றை ஓதுவார்கள். அவ்வாறு ஓதுவதால் அவர்களின் பசி அடங்கும்.)

 

தஜ்ஜால் இருக்கும் போதும் முஃமின்களுக்கு தஸ்பீஹ் தான் உணவு

عن ابن عمر رضي الله عنهما : أن رسول الله صلى الله عليه وسلم سئل عن طعام المؤمنين في زمن الدجال ؟ قال : طعام الملائكة قالوا : و ما طعام الملائكة ؟ قال : طعامهم منطقهم بالتسبيح و التقديس فمن كان منطقة يومئذ التسبيح و التقديس أذهب الله عنه الجوع فلم يخش جوعا (حاكم

தஜ்ஜால் வெளிப்படும் நேரத்தில் முஃமின்களின் சொத்துக்கள் அவனால் அழிக்கப்படும்போது முஃமின்களின் உணவுக்கு என்ன வழி என்று நபித்தோழர்கள் கேட்க, அதற்கு நபி ஸல் அவர்கள் மலக்குகளின் உணவு தான் முஃமின்களின் உணவு என நபி ஸல் கூறினார்கள். மலக்குகளின் உணவு எது என நபித்தோழர்கள் கேட்க, அதற்கு நபி ஸல் அவர்கள் தஸ்பீஹ் தான் அவர்களின் உணவாகும். யார் தஜ்ஜால் வெளிப்படும் நேரத்தில் உணவுக்கு வழியில்லாத போது இந்த தஸ்பீஹை ஓதுவாரோ அவரின் பசி அதனால் நீக்கப்படும். அவர் பசியை அஞ்ச வேண்டியதில்லை என்றார்கள்.

படிப்பினை- முஃமின்கள் தங்களை திருத்திக்கொண்டால் சோதனைகளை அல்லாஹ் மாற்றிக் காட்டுவான்

 

.                        தொடர்ந்து முஸ்லிம்களுக்கு சோதனைகள் வருவதால் முஸ்லிம்கள் மனம் சோர்ந்து விடக்கூடாது

சிலுவை யுத்தம் நடைபெற்ற போது முஸ்லிம்களில் பலர் சிறை பிடிக்கப்பட்டனர். அப்போது அந்த சிறைவாசிகளுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாகவும் அவர்கள் நம்பிக்கை இழந்து விடக்கூடாது என்ற அடிப்படையிலும் அவர்களுக்கு மத்தியில் ஒரு ஆலிம் பேசினார். அப்போது அந்த வழியாகச் சென்ற பிரிட்டிஷ் இராணி அவரைக் கைது செய்யும்படி உத்தரவிட்டார். அவரிடம் விசாரணை நடந்தது. ஆலிமிடம் இராணி கூறினார். இறைவன் எங்கள் பக்கம் தான் இருக்கிறார். அதற்கு அந்த ஆலிம் இல்லை இறைவன் எங்கள் பக்கம் தான் என்றார். உடனே அந்த இராணி இறைவன் எங்கள் பக்கம் இருப்பதால் தான் உங்களைத் தோற்கடித்து எங்களை ஜெயிக்க வைத்துள்ளார். என்று கூற அதற்கு அந்த ஆலிம் கூறினார். காரணம அதுவல்ல. ஆடுகளை மேய்ப்பதற்கு சில நேரங்களில் நாய்களைப் பயன்படுத்துவார்கள். நாய்களுக்கப் பயிற்சி கொடுத்திருப்பார்கள். ஆடுகள் பாதை மாறும்போதும் அந்த நாய் குரைக்கும். அப்போது அந்த  ஆடுகள் சீராகச் செல்லும். அதுபோலத்தான் நாங்கள் பாதை மாறிச் செல்லும்போது எங்களை எச்சரிப்பதற்குத் தான் உங்களைப் போன்றவர்களை இறைவன் எங்கள் மீது சாட்டியுள்ளான். நாங்கள் சீராக இருந்தால் உங்களுக்கு வேலை இல்லை. என்றார். அதுதான் இன்றைய முஸ்லிம்களின் நிலை

வைப்போன்ற உறுதியான ஈமான் அனைவருக்கும் வேண்டும்زِنِّيرة

وكانت زِنِّيرَةُ أمَةً رومية قد أسلمت فعذبت في الله، وأصيبت في بصرها حتى عميت، فقيل لها : أصابتك اللات والعزى، فقالت : لا والله ما أصابتني، وهذا من الله، وإن شاء كشفه، فأصبحت من الغد وقد رد الله بصرها، فقالت قريش : هذا بعض سحر محمد .(الرحيق المختوم)

அபூபக்கர் ரழி அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அடிமைகளில் ஒருவர் தான் இவர். இவரை விடுதலை செய்த நாளில் அவருக்கு கண்பார்வை பறிபோனது அப்பொழுது காஃபிர்கள் இந்த பெண்ணை அபூபக்கர் விடுவித்ததால் தான் நம்முடைய லாத், உஜ்ஜாவிற்கு கோபம் வந்து சாமி கண்ணை குத்தி விட்டது என்றார்கள் ஆனால் அப்பெண்ணுக்கு இச்செய்தி கிடைத்த போது அவர் அதை மறுத்து என் பார்வையை அல்லாஹ் தான் போக்கினான். அவன் நினைத்தால் மறுபடியும் எனக்குப் பார்வையைத் தருவான் என்றார்கள். அவ்வாறு கூறிய அடுத்த நாளே அப்பெண்ணுக்கு கண் பார்வை வந்து விட்டது. அதைக் கேள்விப்பட்ட காஃபிர்கள் அப்போதும் திருந்தாமல் முஹம்மது ஏதோ சூனியம் செய்து பார்வையை வரவழைத்து விட்டார் என்றார்கள்.

 எவ்வாறு தனக்கு நிச்சயம் கண் பார்வை வரும் என உறுதியாக நம்பினாரோ அதுபோன்ற ஈமான் வேண்டும்زِنِّيرة

அல்லாஹ் எப்படியும் நமக்கு உதவி செய்வான் என்று நம்ப வேண்டும்.

கிஸ்ராவின் மாளிகையை சுராகாவுக்கு வாக்களிக்கும் அளவுக்கு வெற்றியின் நம்பிக்கை நபிகளாரின் உள்ளத்தில் இருந்தது

ஹிஜ்ரத் பயணத்தின் போது நபி ஸல் அவர்களைத் துரத்தி வந்த சுராகாவைக் கண்டு அபூபக்கர் ரழி பயந்தார்கள். நபியவர்களைக் கொன்று விட்டு நூறு ஒட்டகங்களைப் பரிசாகப் பெற வேண்டுமென்ற வேகத்தில் அவர் இருந்தார். அவர் அருகில் வந்த பின்பு நடந்த விஷயம் நமக்கெல்லாம் தெரியும் இறுதியில் அவரிடம் நபி ஸல் அவர்கள் சுராக்காவே நீர் கிஸ்ராவின் அணிகலன்களை அணிந்தால் நீர் எப்படியிருப்பீர் தெரியுமா என்று கேட்க, அவர் வியந்தார். அவ்வளவு பெரிய அரசாங்கத்தின் அணிகலன்கள் எனக்கு எப்படி கிடைக்கப் போகிறது என்று ஆச்சரியப்பட்டார். அதற்கு நபி ஸல் கண்டிப்பாக கிடைக்கும் என்றார்கள் அப்படியானால் அகதை எனக்கு எழுதிக் கொடுங்கள் என்று சுராகா கேட்டார்.  நபி ஸல் அவர்கள் அருகில் நின்ற அபூபக்கர் ரழி அவர்களிடம் எழுதித் தருமாறு கூற, அபூபக்கர் ரழி அவர்கள் அங்கு கிடந்த எலும்புத் துண்டில் கிஸ்ராவின் அணிகலன்களை உமக்கு நாம் வாக்களிக்கிறோம் என்று எழுதிக் கொடுத்தார்கள். பிற்காலத்தில் சுராகா முஸ்லிமாகி விட்டார். பின்பு  உமர் ரழி அவர்களின் காலத்தில் காதிஸிய்யா போரில்  பாரசீகம் வெற்றி கொள்ளப்பட்ட போது கிடைத்த கனீமத் பொருட்கள் மஸ்ஜிதுன் நபவியில்  குவித்து வைக்கப்பட்டிருந்தன. அப்போது சுராகாவை அழைத்து ஹழ்ரத் உமர் ரழி இதோ உங்களுக்கு நபி ஸல் அவர்கள் வாக்களித்த கிஸ்ராவின் அணிகலன்கள் என்று ஒப்படைத்தார்கள்.  

படிப்பினை- ஹிஜ்ரத் பயணத்திற்கும் காதிஸிய்யா போருக்கும் இடையே சுமார் 20 வருடங்கள் இடைவெளி இருந்தது. உயர்ந்த ஈமான் உடையவர்கள் நிறைந்த நபி ஸல் அவர்களின் காலத்திலேயே இலட்சியம் நிறைவேற இருபது வருடங்கள் ஆனது என்றால் இன்று பலவீனமான ஈமானை வைத்துக் கொண்டு உடனே பாசிச ஆட்சி முடிவுக்கு வந்து விட வேண்டும் என நினைக்கிறோம்.                        

நம் அன்றாட வாழ்வில் இஸ்லாத்தைப் பின்பற்றினால் சோதனைகளை வெல்ல முடியும்.

இதைத் தான் ஹழ்ரத் ஹுஸைன் அஹ்மத் மதனீ ரஹ் அவர்கள் கூறும்போது

இஸ்லாம் பாதுகாக்கப்பட வேண்டும் என அதிகமாக உரத்து முழங்குகிறார்கள். ஆனால் தம் அன்றாட வாழ்வில் இஸ்லாத்தை விட்டு விலகி இருக்கிறார்கள். இஸ்லாம் ஒன்றும் சிலை கிடையாது அதனைப் பாதுகாப்பதற்கு.... இஸ்லாத்தைப் பாதுகாக்க படை பட்டாளம் தேவையில்லை. உங்களின் அன்றாட வாழ்வில் இஸ்லாத்தைப் பின்பற்றினாலே போதுமானது. நீங்களும் பாதுகாக்கப் படுவீர்கள் இஸ்லாமும் பாதுகாக்கப்பட்டு விடும்

 

15    விதமான கலாச்சாரச் சீர்கேடுகள் நிகழ்ந்தால் உலகில் பல்வேறு சோதனைகள் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும்

عن  أبي هريرة قال : قال رسول الله صلى الله عليه وسلم : " إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافه شره وظهرت القينات والمعازف وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فارتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسخا وقذفا وآيات تتابع كنظام قطع سلكه فتتابع " . رواه الترمذي

1.பொதுச்சொத்துக்களில் ஊழல் 2.அமானித துஷ்பிரயோகம் 3. ஜகாத்தை சுமையாக கருதுவது 4. மார்க்கத்தை வேறு நோக்கத்திற்காக கற்பது. 5. மனைவிக்கு அடி பணிவது 6. தாய் தந்தையை வெறுப்பது 7. நண்பனை நெருக்கமாக்கிக் கொள்வது  8.மஸ்ஜித்களில் வீண் சப்தம்  9.தகுதியற்றவர்கள் தலைவராகுவது 10.தகுதியுள்ளவர் ஒதுக்கப்படுவது  11. ஒருவன் தீமையை பயந்து அவனுக்கு மரியாதை செலுத்துவது 12. இசை   13. இசைக் கேற்ப நடனமாடும் பெண்கள் அதிகமாகுவது  14. மது அதிகமாகுவது 15. முன்னோர்களான நல்லவர்களைக் குறை கூறுவது.மேற்படி பாவங்கள் உலகில் பெருகி விட்டால் சோதனைகள் எந்த அளவுக்கு அதிகரிக்கும் என்றால் தஸ்பீஹ் மணி அறுந்து விழுந்தால் எவ்வாறு தொடர்ச்சியாக அதன் பாசிமாலைகள் சரசரவென விழுமோ அது போன்று தொடர்ந்து ஏதேனும் அசம்பாவிதம் பூமியில் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். 

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ أُمَرَاؤُكُمْ خِيَارَكُمْ وَأَغْنِيَاؤُكُمْ سُمَحَاءَكُمْ وَأُمُورُكُمْ شُورَى بَيْنَكُمْ فَظَهْرُ الْأَرْضِ خَيْرٌ لَكُمْ مِنْ بَطْنِهَا وَإِذَا كَانَ أُمَرَاؤُكُمْ شِرَارَكُمْ وَأَغْنِيَاؤُكُمْ بُخَلَاءَكُمْ وَأُمُورُكُمْ إِلَى نِسَائِكُمْ فَبَطْنُ الْأَرْضِ خَيْرٌ لَكُمْ مِنْ ظَهْرِهَا (ترمذي

எதுவரை உங்களில் தலைவர்கள் நல்லவர்களாகவும் உங்களில் செல்வந்தர்கள் தர்மம் செய்பவர்களாகவும் உங்களுடைய காரியங்கள் உங்களுக்கிடையில் கலந்து ஆலோசிக்கப்படுவைகளாகவும் இருக்குமோ அதுவரை  இந்த பூமியின் மேற்பரப்பு இந்த பூமியின் கீழ்பரப்பை விடவும் நல்லதாக இருக்கும். இந்த பூமி செழிப்பாகவும் அமைதியாகவும் இருக்கும். எப்போது உங்களில் தலைவர்கள் தீயவர்களாகவும் உங்களில் செல்வந்தர்கள் கஞ்சத்தனம் செய்பவர்களாகவும் உங்களுடைய காரியங்கள் அனைத்தும் பெண்களிடம் ஒப்படைக்கப் படக்கூடியதாகவும் ஆகி விடுமோ  அப்போது இந்த பூமியின் கீழ்பரப்பு இந்த பூமியின் மேற்பரப்பை விடவும் மேலானது. அதாவது இந்த பூமியில் பல விதமான சோதனைகள் தோன்றி மனிதர்களை நிம்மதியற்றவர்களாக ஆக்கி விடும். (இந்த பூமியின்  செழிப்பு குறைந்து விடும்.)

தவறுகள் சுட்டிக் காட்டப் பட்டு அதை திருத்திக் கொள்ளாத சூழ்நிலை

முஸ்லிம்களிடம் அதிகமானால் சோதனைகள் அனைவருக்கும் ஏற்படும்.

 عن أبي أمية الشعباني قال : سألت أبا ثعلبة عن هذه الآية { يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم } فقال أبو ثعلبة لقد سألت عنها خبيرا أنا سألت عنها رسول الله صلى الله عليه و سلم قبلا فقال : يا أبا ثعلبة مروا بالمعروف و تناهوا عن المنكر فإذا رأيت شحا مطاعا و هوى متبعا و دنيا مؤثرة و رأيت أمرا لا بد لك من طلبه فعليك نفسك و دعهم و عوامهم فإن وراءكم أيام الصبر صبر فيهن كقبض على الجمر للعامل فيهن أجر خمسين يعمل مثل عمله  (حاكم) وفي رواية ابن حبان إذا رأيت شحا مطاعا وهوى متبعا ودنيا مؤثرة وإعجاب كل ذي رأي برأيه فعليك نفسك

அபூ உமய்யா ரஹ் அவர்கள் கூறினார்கள் நான் அபூ தஃலபா ரழி அவர்களிடம் இறைவசனமாகிய உங்களை மட்டும் நீங்கள் திருத்திக் கொள்ளுங்கள் என்ற வசனம் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் நீங்கள் உண்மையில் மிகப் பெரிய விஷயத்தைப் பற்றிக் கேட்டிருக்கிறீர்கள். நான் இது பற்றி நபி ஸல் அவர்களிடம் கேட்டேன். அதற்கு  அவர்கள்  என்னிடம்  அபூ தஃலபாவே நன்மையை ஏவிக் கொண்டே இரு.. தீமையைத் தடுத்துக் கொண்டே இரு.. ஆனால் எப்போது மக்களிடம் மாபெரும் கஞ்சத்தனத்தையும், மனோ இச்சைக்கு அடிமைப் படுதலையும், உலகமே கதி என்ற நிலையையும், ஒவ்வொருவரும் தன் சிந்தனையை மட்டுமே பெரிதாகக் கருதி மற்றவர்களின் ஆலோசனைகளை அலட்சியப்படுத்தும் காலம் வருமோ அப்போது நீ உன்னை மட்டும் பார்த்துக் கொள். நெருப்புக் கங்கை பற்றிப் பிடித்திருப்பது போன்ற சிரமமான அந்த சூழ்நிலையிலும் நபியின் நடைமுறையை செயல் படுத்துபவருக்கு  அவரைப் போன்ற ஐம்பது பேரின் நன்மை வழங்கப்படும்.                      

  عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ:"أَنَّ مِنْ أَكْبَرِ الذَّنْبِ أَنْ يَقُولَ الرَّجُلُ لأَخِيهِ: اتَّقِ اللَّهَ، فَيَقُولُ: عَلَيْكَ نَفْسَكَ أَنْتَ تَأْمُرُنِي".- عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ:"كَفَى بِالْمَرْءِ إِثْمًا إِذَا قِيلَ لَهُ: اتَّقِ اللَّهَ غَضِبَ". (المعجم الكبير للطبراني

 இப்னு மஸ்ஊத் ரழி கூறினார்கள்- பாவங்களில் மிகப்பெரிய பாவமாகிறது தன் முஸ்லிமான சகோதரரிடம் அல்லாஹ்வை அஞ்சு என்று கூறும்போது நீ உன் வேலையைப் பார். நீ என்ன எனக்கு ஏவுவது என்று கூறுகிறானே அதுதான்  பாவங்களில் மிகப்பெரிய பாவமாகும். இப்னு மஸ்ஊத் ரழி கூறினார்கள்- ஒருவரிடம் அல்லாஹ்வை அஞ்சு என்று சொல்லும்போது  எவன் கோபமடைகிறானோ அவன் பாவி என்பதற்கு அதுவே போதுமானதாகும்.

கெட்டதைப் பெற்றுக் கொண்டால் உங்களை நீங்களே பழித்துக் கொள்ளுங்கள். யார் மீதும் பழி போடாதீர்

 

عَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَا رَوَى عَنْ اللَّهِ تَبَارَكَ وَتَعَالَى أَنَّهُ قَالَ.... يَا عِبَادِي لَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَإِنْسَكُمْ وَجِنَّكُمْ كَانُوا عَلَى أَتْقَى قَلْبِ رَجُلٍ وَاحِدٍ مِنْكُمْ مَا زَادَ ذَلِكَ فِي مُلْكِي شَيْئًا يَا عِبَادِي لَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَإِنْسَكُمْ وَجِنَّكُمْ كَانُوا عَلَى أَفْجَرِ قَلْبِ رَجُلٍ وَاحِدٍ مَا نَقَصَ ذَلِكَ مِنْ مُلْكِي شَيْئًا يَا عِبَادِي لَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَإِنْسَكُمْ وَجِنَّكُمْ قَامُوا فِي صَعِيدٍ وَاحِدٍ فَسَأَلُونِي فَأَعْطَيْتُ كُلَّ إِنْسَانٍ مَسْأَلَتَهُ مَا نَقَصَ ذَلِكَ مِمَّا عِنْدِي إِلَّا كَمَا يَنْقُصُ الْمِخْيَطُ إِذَا أُدْخِلَ الْبَحْرَ يَا عِبَادِي إِنَّمَا هِيَ أَعْمَالُكُمْ أُحْصِيهَا لَكُمْ ثُمَّ أُوَفِّيكُمْ إِيَّاهَا فَمَنْ وَجَدَ خَيْرًا فَلْيَحْمَدْ اللَّهَ وَمَنْ وَجَدَ غَيْرَ ذَلِكَ فَلَا يَلُومَنَّ إِلَّا نَفْسَهُ (مسلم) بَاب تَحْرِيمِ الظُّلْمِ- كِتَاب الْبِرِّ وَالصِّلَةِ

அல்லாஹ் கூறுகிறான் என் அடியார்களே உங்களில் மிகச் சிறந்த இறையச்சம் உடையவரைப் போன்று முதல் மனிதர் முதல் கடைசி மனிதர் வரை மாறி விட்டாலும் அதனால் என்னுடைய அந்தஸ்து கடுகளவும் கூடி விடப்போவதில்லை. உங்களில் மிக மோசமான உள்ளம் உடையவரைப் போன்று முதல் மனிதர் முதல் கடைசி மனிதர் வரை மாறி விட்டாலும் அதனால் என்னுடைய அந்தஸ்து கடுகளவும் குறைந்து விடப்போவதில்லை.உங்களில் முதல் மனிதர் முதல் கடைசி மனிதர் வரை அனைவரும் ஒரு மைதானத்தில் ஒன்று கூடி நின்று நீங்கள் விரும்பியதையெல்லாம் கேட்டு அதையெல்லாம் நான் கொடுத்து விட்டாலும் கடல் போன்ற என்னுடைய கஜானாவில் ஊசியின் முனை அளவு மட்டுமே குறையும். உங்களின் அமல்கள் உங்களுக்குத் தான். அவற்றைப் பாதுகாத்து வைத்து உங்களுக்கு அதன் நற்கூலியை நிரப்பமாக தருவேன். நல்லதைப் பெற்றுக் கொண்டால் அல்லாஹ்வைப் புகழுங்கள். கெட்டதைப் பெற்றுக் கொண்டால் உங்களை நீங்களே பழித்துக் கொள்ளுங்கள். யார் மீதும் பழி போடாதீர்கள்.                                  

وهو على أنطاكية لما قدمت منهزمة الروم‏:‏ ويلكم أخبروني عن هؤلاء القوم الذين يقاتلونكم أليسوا بشرا مثلكم‏؟ قالوا‏:‏ بلى‏. قال‏:‏ فأنتم أكثر أم هم‏؟ قالوا‏:‏ بل نحن أكثر منهم أضعافاً في كل موطن‏. قال‏:‏ فما بالكم تنهزمون‏؟‏ فقال شيخ من عظمائهم‏:‏ من أجل أنهم يقومون الليل ويصومون النهار، ويوفون بالعهد، ويأمرون بالمعروف، وينهون عن المنكر، ويتناصفون بينهم، ومن أجل أنا نشرب الخمر، ونزني، ونركب الحرام، وننقض العهد، ونغصب، ونظلم، ونأمر بالسخط وننهى عما يرضي الله، ونفسد في الأرض‏.‏ فقال‏:‏ أنت صدقتني‏.‏  (البداية والنهاية                       

ஹிஜ்ரி  15ம் ஆண்டு ஹஜ்ரத் உமர்(ரலி)அவர்களின்ஆட்சிகாலத்தில் நடைபெற்ற யர்மூக் போர்களத்தில்ரோமர்கள் தோற்று அன் தாக்கியா போகும்போதுஅவர்களின் அரசர் ஹிர்கல் கேட்பான் உங்களைப்போன்றுஅவர்களும் மனிதர்கள்தானே அவர்களை விட நீங்கள்அதிகமானவர்கள் இல்லையா அவ்வாறிருந்தும் நீங்கள்தோற்றுவருகிறீர்கள் உங்கள் தோல்விக்கு காரணம் என்னஎன்று கேட்கும்போது அவர்களில் ஒரு வயோதிகர்சொல்வார்.அந்த முஸ்லிம்கள் இரவு நின்றுவணங்குகிறார்கள்.பகலில் நோன்பு நோற்கிறார்கள்.நன்மையை ஏவி.தீமையை தடுக்கிறார்கள்.ஒப்பந்தத்தைநிறைவேற்றுகிறார்கள்.ஆனால் நாம் மதுஅருந்துகிறோம்.விபச்சாரம் செய்கிறோம்.ஒப்பந்தத்தைமீறுகிறோம் அதுதான் காரணம் இதனைக் கேட்ட அரசன்சொல்வான் நீங்கள் சொல்வது உண்மை. அவர்களுக்குவெற்றி கிடைத்தது அவர்களின் பேணுதலானவாழ்க்கையினால்.நூல்.பிதாயா வந்நிஹாயா.பாகம்.7 பக்கம்.20

وَلَقَدْ صَدَقَكُمُ اللَّهُ وَعْدَهُ إِذْ تَحُسُّونَهُمْ بِإِذْنِهِ حَتَّى إِذَا فَشِلْتُمْ وَتَنَازَعْتُمْ فِي الْأَمْرِ وَعَصَيْتُمْ مِنْ بَعْدِ مَا أَرَاكُمْ مَا تُحِبُّونَ مِنْكُمْ مَنْ يُرِيدُ الدُّنْيَا وَمِنْكُمْ مَنْ يُرِيدُ الْآخِرَةَ ثُمَّ صَرَفَكُمْ عَنْهُمْ لِيَبْتَلِيَكُمْ وَلَقَدْ عَفَا عَنْكُمْ وَاللَّهُ ذُو فَضْلٍ عَلَى الْمُؤْمِنِينَ (152) إِذْ تُصْعِدُونَ وَلَا تَلْوُونَ عَلَى أَحَدٍ وَالرَّسُولُ يَدْعُوكُمْ فِي أُخْرَاكُمْ فَأَثَابَكُمْ غَمًّا بِغَمٍّ لِكَيْلَا تَحْزَنُوا عَلَى مَا فَاتَكُمْ وَلَا مَا أَصَابَكُمْ وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ-ال عمران

   கருத்து- நீங்கள் விரும்பியது போல் அல்லாஹ் தன் வாக்குறுதியை நிறைவேற்றினான் அதாவது ஆரம்பத்தில் வெற்றியைத் தந்தான் எனினும் நீங்கள் மலை உச்சியின் நிற்க வேண்டுமென்ற நபியின் உத்தரவை நிறைவேற்றுவதில் கருத்து வேறுபாடு கொண்டீர்கள். சிலர் போர் தான் முடிந்து விட்டதே இனி நாம் கீழே இறங்கி கனீமத்தை எடுக்கலாம் என்றும், வேறு சிலர் என்ன நடந்தாலும் நபிகளார் இங்கு தான் நிற்கும்படி கூறினார்கள் என்று உறுதியாக இருந்தீர்கள். இப்படி கருத்து வேறுபாடு கொண்டதால் உங்களுக்கு நாம் தோல்வியைக் கொடுத்தோம். ஏற்பட்டு சிலர் கீழே இறங்கி வந்தவுடன் அபூசுஃப்யான் தலைமையில் எதிரிகள் வந்து தாக்க முஸ்லிம்கள் நிலை குலைந்து போனார்கள்

படிப்பினை- சிறிய சருகுதலுக்கே இவ்வளவு பெரிய தண்டனை என்றால் அதிலும் குறிப்பாக எல்லோரும் அந்த தவறை செய்யவில்லை. சிலர் மட்டுமே அந்தத் தவறைச் செய்தார்கள். அப்படியிருந்தும் அந்த சஹாபாக்களுக்கே அத்தகைய சோதனை என்றால் நாம் எம்மாத்திரம்.

قال الله تعالي إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ (الرعد11)عَنْ أَبِي الدَّرْدَاءِ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ يَقُولُ"أَنَا اللَّهُ لا إِلَهَ إِلا أَنَا مَالِكُ الْمُلُوكِ وَمَلِكُ الْمُلُوكِ قُلُوبُ الْمُلُوكِ فِي يَدِي وَإِنَّ الْعِبَادَ إِذَا أَطَاعُونِي حَوَّلْتُ قُلُوبَ مُلُوكِهِمْ عَلَيْهِمْ بِالرَّأْفَةِ وَالرَّحْمَةِ وَإِنَّ الْعِبَادَ إِذَا عَصَوْنِي حَوَّلْتُ قُلُوبَهُمْ عَلَيْهِمْ بِالسَّخْطَةِ وَالنِّقْمَةِ فَسَامُوهُمْ سُوءَ الْعَذَابِ فَلا تَشْغَلُوا أَنْفُسَكُمْ بِالدُّعَاءِ عَلَى الْمُلُوكِ وَلَكِنِ اشْتَغِلُوا بِالذِّكْرِ وَالتَّضَرُّعِ إِلَيَّ أَكْفِكُمْ مُلُوكَكُمْ (رواه الطبراني في المعجم الكبير)

என்னுடைய அடியார்கள் எனக்குக் கட்டுப்பட்டு நடந்தால் நான் அவர்களை ஆட்சி செய்யும் அரசர்களுடைய உள்ளங்கள் அந்த அடியார்களுக்கு ஆதரவாக நான் திருப்புவேன். அதற்கு மாறாக எனது அடியார்கள் எனக்கு மாறு நான் அவர்களை ஆட்சி செய்யும் அரசர்களுடைய உள்ளங்களை அந்த அடியார்களுக்கு எதிராக நான் திருப்புவேன். அந்த அரசர்கள் அந்த அடியார்களை கொடுமைப்படுத்துவார்கள். எனவே ஆட்சியாளர்களை மட்டும் குறை சொல்வதில் உங்களுடைய நேரங்களை வீணாக்காதீர்கள். மாறாக என்னை நினைவு கூர்வதைக் கொண்டும் எனக்குப் பணிந்து நடப்பதிலும் நீங்கள் ஈடுபடுங்கள். உங்களுடைய ஆட்சியாளர்களை நான் பார்த்துக் கொள்வேன்

நாவைப் பேணுவோம்

31-07-2026 ஸஃபர் - 16 بسم الله الرحمن الرحيم          நாவின் விபரீதங்கள் https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN N...