வியாழன், 19 ஜூன், 2025

பத்து கட்டளைகள்

 20-06-2025

துல்ஹஜ்- 23 بسم الله الرحمن الرحيم  

பத்து கட்டளைகள்

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَات فأتمهنَّ  (البقرة) 124

இன்று நமக்கு சுன்னத்தாக இருக்கும் பல விஷயங்கள்   இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஃபர்ளாக ஆக்கப்பட்டிருந்தது

عَنِ ابْنِ عَبَّاسٍ رض وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَات قَالَ: ابْتَلاهُ اللَّهُ بِالطَّهَارَةِ خَمْسٌ فِي الرَّأْسِ وَخَمْسٌ فِي الْجَسَدِ:فِي الرَّأْسِ قَصُّ الشَّارِبِ وَالْمَضْمَضَةُ وَالاسْتِنْشَاقُ وَالسِّوَاكُ وَفَرْقُ الرَّأْسِ، وَفِي الْجَسَدِ: تَقْلِيمُ الأَظَافِرِ وَحَلْقُ الْعَانَةِ وَالْخِتَانُ وَنَتْفُ الإِبْطِ وَغَسْلُ أَثَرِ الْغَائِطِ وَالْبَوْلِ بِالْمَاءِ(تفسير ابن كثير)مصنف عبد الرزاق –

பத்து காரியங்களைக் கொண்டு அல்லாஹ் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை சோதித்தான். அதாவது  ஃபர்ளாகவே ஆக்கினான். அதை இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வாழ்க்கை முழுவதும்  முறையாக நிறைவேற்றினார்கள்

தலையுடன் சம்பந்தப்பட்டவை ஐந்து. உடலுடன் சம்பந்தப்பட்டவை ஐந்து. அத்தனையும் சுத்தம் சம்பந்தமான விஷயங்களாகும். தலையுடன் சம்பந்தப்பட்டவை 1.மீசையைக் கத்தரிப்பது 2. வாய் கொப்பளிப்பது 3.நாசிக்கு நீர் செலுத்துவது 4. மிஸ்வாக் செய்வது 5. தலைமுடியில் நேர் மாங்கு எடுத்து வாருவது.  உடலுடன் சம்பந்தப்பட்டவை ஐந்து 1.நகம் வெட்டுவது 2.மறைவிட ரோமங்களைக் களைவது  3. கத்னா செய்வது 4. அக்குள் முடிகளைக் களைவது 5. தண்ணீரைக் கொண்டு மல, ஜல சுத்தம் செய்வது.           

மேற்காணும் சுன்னத்துகளில் சிலவற்றை விரிவாக காண்போம்

மீசையைக் கத்தரிப்பதும் தாடி வளர்ப்பதும் தலைமுடியை,  தாடியை அழகு படுத்துவதும் சுன்னத்தாகும்

عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خَالِفُوا الْمُشْرِكِينَ وَفِّرُوا اللِّحَى وَأَحْفُوا الشَّوَارِبَ (بخاري)

ஏதேனும் ஓதினால் அவர்களின் தாடி அசையும் அளவுக்கு நபி ஸல் அவர்களின் தாடி இருந்தது

عَنْ أَبِي مَعْمَرٍ قَالَ سَأَلْنَا خَبَّابًا أَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الظُّهْرِ وَالْعَصْرِ قَالَ نَعَمْ قُلْنَا بِأَيِّ شَيْءٍ كُنْتُمْ تَعْرِفُونَ قَالَ بِاضْطِرَابِ لِحْيَتِهِ (بخاري)

நபி ஸல் அவர்கள் லுஹரிலும் அசரிலும் கிராஅத் ஓதுவார்களா என கப்பாப் ரழி அவர்களிடம் நாங்கள் கேட்டோம். அதற்கு அவர்கள் ஆம் என்றார்கள். எதை வைத்து நீங்கள் அதை அறிந்து கொள்வீர்கள் என்று கேட்டோம். அதற்கு அவர்கள் நபி ஸல் அவர்களின் தாடி அசைவதைக் கொண்டு தெரிந்து கொள்வோம் என்றார்கள்.                                                               

கையால் பிடித்து உலுக்கும் அளவுக்கு தாடி வைத்திருந்த ஹாரூன் அலைஹிஸ்ஸலாம்

قَالَ يَا هَارُونُ مَا مَنَعَكَ إِذْ رَأَيْتَهُمْ ضَلُّوا (92) أَلَّا تَتَّبِعَنِ أَفَعَصَيْتَ أَمْرِي (93) قَالَ يَا ابْنَ أُمَّ لَا تَأْخُذْ بِلِحْيَتِي وَلَا بِرَأْسِي.. (94)سورة طه

மறைந்த மாமேதை அல்லாமா p,s.p ஹழ்ரத் கிப்லா தங்களுடைய பயானில் அடிக்கடி கூறுவார்கள். தாடி வைப்பதன் சிறப்பைப் பற்றி பெண்களிடம் அதிகம் பேச வேண்டும். காரணம் பல வீடுகளில் ஆண்கள் தாடி வைக்க நினைத்தாலும் பெண்கள் விடுவதில்லை.

தலை முடியையும், தாடி முடியையும் அழகு படுத்த வேண்டும். ஆனால் அது நபி வழியில் இருக்க வேண்டும்

إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ (222)البقرة عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ كَانَ لَهُ شَعْرٌ فَلْيُكْرِمْهُ (ابوداود)ஒவ்வொருவரும் தனது முடிகளை அழகு படுத்திக் கொள்ளட்டும்

கணவனின் கண்ணுக்கு மனைவி அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புவது போன்று மனைவியின் கண்ணுக்கு கணவனும் தன்னை அழகாக ஆக்கிக் கொள்ள வேண்டும். அதற்காக அழகு என்பதை தவறாகப் புரிந்த பெண்களில் யாரேனும் தாடி வைக்க வேண்டாம் என்று சொன்னால் அதை ஏற்கக் கூடாது. தாடியை அலங்கோலமாக இல்லாமல் அழகாக வைப்பது நல்லது

قال [ابن عباس]: إني لأتزين لامرأتي كما تتزين لى وما أحب أن أستطف كل حقي الذي لي عليها فتستوجب حقها الذي لها عليَّ لأن الله تعالى يقول: (ولهن مثل الذي عليهن بالمعروف) وقد دخل على الخليفة عمر زوج أشعت أغبر ومعه امرأته وهي تقول: لا أنا ولا هذا لا تريده .. ، فعرف كراهية المرأة لزوجها فأرسل الزوج ليستحم ويأخذ من شعر رأسه ويقلم أظافره فلما حضر أمره أن يتقدم من زوجته فاستغربته ونفرت منه ثم عرفته فقَبِلَتْ به ورجعت عن دعواها رجعت تراجعت إذن عن طلب الطلاق فقال عمر: وهكذا فاصنعوا لهن فوالله إنهن ليحببن أن تتزينوا لهن كما تحبون أن يتزين لكم  (الكتاب : عشرة النساء للنسائي)

இப்னு அப்பாஸ் ரழி அவர்கள் கூறினார்கள் எனக்காக என் மனைவி அலங்காரம் செய்வது போன்று நான் என் மனைவிக்காக அலங்கரித்துக் கொள்வதை விரும்புகிறேன். என் மீது மட்டும் அவளுக்குக் கடமைகள் உள்ளது. அவள் மீது எனக்குக் கடமைகள் எதுவும் இல்லை என்பதை நான் விரும்பவில்லை. காரணம் அல்லாஹ் குர்ஆனில் அந்தப் பெண்களின் மீது உங்களுக்கும் சில கடமைகள் உள்ளது என்று கூறுகிறான். உமர் ரழி அவர்களிடம் தலைவிரி கேலமாக அழுக்கான ஆடையுடன் ஒருவர் மனைவியுடன் வந்தார். அவரிடமிருந்து அப்பெண் விவாகரத்துக் கேட்கிறார் என்பதையும் எதற்காக விவாகரத்துக் கெட்கிறார் என்பதையும் புரிந்து கொண்ட உமர் ரழி அவர்கள் அந்தக் கணவரிடம் முதலில் உன்னை நீ நன்றாக சுத்தப்படுத்திக் கொண்டு வரும்படியும், அழகான ஆடையை அணிந்து வர வேண்டும் என்றும் தலைமுடியை நன்றாக வாரி வர வேண்டும் என்றும் உத்தரவிட்டார்கள். அவர் அவ்வாறே செய்தார். அவர் திரும்பி வந்த பின் அவரை மனைவிக்கு முன்னால் வந்து நிற்கச் சொன்னார்கள். அந்த மனைவி அந்தக் கோலத்தில் அவரைப் பார்த்த பின்பு முதலில் மறுத்தாலும் சற்று நேரத்தில் மனம் மாறி விவாகரத்துக் கேட்கும் எண்ணத்தை மாற்றிக் கொண்டார். அப்போது தான் உமர் ரழி அவர்கள் அந்தக் கணவரிடம். உங்கள் கண்ணுக்கு மனைவி அழகாக இருக்க வேண்டும் என விரும்புவது போன்று மனைவியின் கண்ணுக்கு நீங்கள் அழகாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவார்கள் என்று கூறினார்கள்.

وقال [يحيى بن عبد الرحمن الحنظلي]: أتيت [محمد بن الحنفية] فخرج إلى في ملحفة حمراء ولحيته تقطر من الغالية ، والغالية هي خليط الأطياب بل خليط أفضل الأطياب ، ولحيته تقطر من الغالية ، يقول يحيى فقلت له: ما هذا ؟ قال محمد : إن هذه الملحفة ألقتها على امرأتى ودهنتنى بالطيب وإنهن يشتهين منا ما نشتهيه منهن ، ذكر ذلك القرطبي في تفسيره الجامع لأحكام القرآن (عشرة النساء للنسائي)

யஹ்யா ரஹ் அவர்கள் கூறினார்கள் நான் முஹம்மது இப்னு ஹனஃபிய்யா ரஹ் அவர்களிடம் வருகை தந்தபோது அவர்கள் அழகான நீண்ட அங்கியை அணிந்தவர்களாகவும் மிகச்சிறந்த நறுமணம் தடவியவர்களாகவும் இருந்தார்கள். அந்த நறுமணம் தாடியிலும் வடிந்த படி இருந்தது. அதுபற்றி அவர்களிடம் நான் கேட்டபோது இந்த ஆடையை என் மனைவி எனக்கு அணிவித்தார். இந்த நறுமணத்தையும் அவரே எனக்குத் தடவி விட்டார். நம் கண்ணுக்கு முன்னால் நம் மனைவிமார்கள் அழகாக இருக்க வேண்டும் என நாம் விரும்புவது போல மனைவியின் கண்ணுக்கு முன்னால் நாம் அழகாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவது இயல்பு தானே என்றார்கள்.       

பரட்டைத் தலையுடன் இருப்பவரை ஷைத்தானுக்கு ஒப்பிட்டுக்கூறிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்

عن عَطَاءَ بْنَ يَسَارٍرضقَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ فَدَخَلَ رَجُلٌ ثَائِرَ الرَّأْسِ وَاللِّحْيَةِ فَأَشَارَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ أَنْ اخْرُجْ كَأَنَّهُ يَعْنِي إِصْلَاحَ شَعَرِ رَأْسِهِ وَلِحْيَتِهِ فَفَعَلَ الرَّجُلُ ثُمَّ رَجَعَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلَيْسَ هَذَا خَيْرًا مِنْ أَنْ يَأْتِيَ أَحَدُكُمْ ثَائِرَ الرَّأْسِ كَأَنَّهُ شَيْطَانٌ (مؤطا)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மஸ்ஜிதில் இருந்த போது தலைமுடியும் தாடியும் சீர் செய்யப்படமல் (தலைவிரி கோலமாக) ஒருவர் வந்தார்.  அவரிடம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீங்கள் வெளியே சென்று முடிகளை சீர் செய்து கொண்டு வாருங்கள் என்று சைக்கினை செய்தார்கள். அவ்வாறே அவர் வெளியே சென்று தனது முடிகளை சீர் செய்து கொண்டு வந்தார். அவரிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உங்களில் ஒருவர் ஷைத்தானைப் போன்று தலைவிரி கோலமாக வருவதை விட இது எவ்வளவு மேலானது என்றார்கள்.                                                       

عَنْ يَحْيَى بْنِ سَعِيد أَنَّ أَبَا قَتَادَةَ الْأَنْصَارِيَّ قَالَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ لِي جُمَّةً أَفَأُرَجِّلُهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعَمْ وَأَكْرِمْهَا فَكَانَ أَبُو قَتَادَةَ رُبَّمَا دَهَنَهَا فِي الْيَوْمِ مَرَّتَيْنِ لِمَا قَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعَمْ وَأَكْرِمْهَا(مؤطا)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அபூ கதாதா ரழி அவர்கள் எனக்கு தோள் புஜம் வரை முடி  (கிர்தா) இருக்கிறது. அதை நான் அழகு படுத்தி வாரிக் கொள்ளட்டுமா என்று கேட்க, அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆம் அதை அழகு படுத்திக் கொள்ளுங்கள் என்றார்கள்.அதனால் அபூகதாதா ரழி அவர்கள் ஒருநாளைக்கு இருமுறைஎண்ணெய் தேய்த்து அழகு படுத்துவார்கள்.


போலீஸ் கட்டிங் போன்று தலையில் பாதி முடியும், பாதி மொட்டையுமாக இருப்பது கூடாது

عَنِ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الْقَزَعِ. قَالَ قُلْتُ لِنَافِعٍ وَمَا الْقَزَعُ قَالَ يُحْلَقُ بَعْضُ رَأْسِ الصَّبِىِّ وَيُتْرَكُ بَعْضٌ (مسلم)

عَنِ ابْنِ عُمَرَ رضي الله عنه أَنْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى غُلامًا قَدْ حُلِقَ بَعْضُ رَأْسِهِ وَتُرِكَ بَعْضُهُ فَنَهَاهُمْ عَنْ ذلِكَ قَالَ : إِمَّا أَنْ تَحْلِقُوا كُلَّهُ وَإِمَّا أَنْ تَتْرُكُوا كُلَّهُ (شرح السنة)وفي رواية قال فَإِنَّ هَذَا زِيُّ الْيَهُودِ(شرح السنة)

முதன் முதலில் நரையைப் பார்த்தவர்கள் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம்

عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ أَنَّهُ قَالَ كَانَ إِبْرَاهِيمُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوَّلَ النَّاسِ ضَيَّفَ الضَّيْفَ وَأَوَّلَ النَّاسِ اخْتَتَنَ وَأَوَّلَ النَّاسِ قَصَّ الشَّارِبَ وَأَوَّلَ النَّاسِ رَأَى الشَّيْبَ فَقَالَ يَا رَبِّ مَا هَذَا فَقَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى وَقَارٌ يَا إِبْرَاهِيمُ فَقَالَ يَا رَبِّ زِدْنِي وَقَارًا (مؤطا)

நபி இப்றாஹீம் அவர்களின் காலத்திற்கு முன்பு வரை எவ்வளவு வயதானாலும் யாருக்கும் நரை ஏற்படாது

{وَأُحْيِي الْمَوْتَى بِإِذْنِ اللَّهِ} قيل: أحيا أربعة أنفس: العاذر: وكان صديقا له، وابن العجوز  وابنة العاشر وسام بن نوح؛ فالله أعلم. فأما العاذر فإنه كان قد توفى قبل ذلك بأيام فدعا الله فقام بإذن الله وودكه يقطر فعاش وولد له، وأما ابن العجوز فإنه مر به يُحمل على سريره فدعا الله فقام ولبس ثيابه وحمل السرير على عنقه ورجع إلى أهله. وأما بنت العاشر فكان أتى عليها ليلة فدعا الله فعاشت بعد ذلك وولد لها؛ فلما رأوا ذلك قالوا: إنك تحيي من كان موته قريبا فلعلهم لم يموتوا فأصابتهم سكتة فأحيي لنا سام بن نوح. فقال لهم: دلوني على قبره، فخرج وخرج القوم معه، حتى انتهى إلى قبره فدعا الله فخرج من قبره وقد شاب رأسه. فقال له عيسى: كيف شاب رأسك ولم يكن في زمانكم شيب؟ فقال: يا روح الله، إنك دعوتني فسمعت صوتا يقول: أجب روح الله، فظننت أن القيامة قد قامت، فمن هول ذلك شاب رأسي. فسأله عن النزع فقال: يا روح الله إن مرارة النزع لم تذهب عن حنجرتي؛ وقد كان من وقت موته أكثر من أربعة آلاف سنة، فقال للقوم: صدقوه فإنه نبي؛ فآمن به بعضهم وكذبه بعضهم وقالوا: هذا سحر. (قرطبي

 இறந்தவர்களில் நான்கு நபர்களை உயிராக்கியுள்ளார்கள். 1. ஈஸா அவர்களின் நண்பர் ஆதிர். அவர் இறந்து சில தினங்களுக்குப் பின் உயிராக்கினார்கள். அதன் பின் அவர் குழந்தைகளையும் பெற்றார்.  2. ஒரு மூதாட்டியின் மகன் இவரை இறந்த நிலையில் கஃபனிட்டு கட்டிலில் தூக்கிச் சென்றனர். அவரை உயிராக்கும்படி அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள். அவர் உயிர் பெற்று எழுந்து தனது இயல்பான ஆடையை அணிந்ததுடன் அந்தக் கட்டிலை அவரே வீடு வரை சுமந்து சென்றார்.  3. ஒரு பெண். இறந்த விட்ட இந்தப் பெண்ணின் வீட்டுக்கு இரவில் வந்த ஈஸா அலை அவரை உயிராக்கும்படி அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள். அவர் உயிர் பெற்று எழுந்தார். அவருக்கும் குழந்தைகள் பிறந்தன. 4. நூஹ் அலை அவர்களின் சாம் என்ற மகனை உயிராக்கினார்கள். இதன் பின்னணிடாகிறது அந்தமக்கள் ஈஸா அலை அவர்களிடம் நீங்கள் சமீபத்தில் இறந்தவர்களை மட்டும் தான் உயிர் பெற வைக்கிறீர்கள். ஒருவேளை மயக்கத்தில் இருந்து அவர்களை இறந்த விட்டதாக கருதப் பட்டிருக்கலாம். அவர்களின் மயகத்தை நீங்கள் தெளிய வைத்ததாகவும் நாங்கள் கருதுகிறோம். எனவே இறந்து நீண்ட காலம் ஆகி விட்டவர்களை உயிராக்க முடியுமா குறிப்பாக 4000 வருடங்களுக்கு முன் இறந்த நூஹ் அலை அவர்களின் சாம் என்ற மகனை உயிராக்க முடியுமா என்று கேட்க அதற்கு ஈஸா அலை அவரின் கப்ரைக் காட்டுங்கள் என்றார்கள் அவ்வாறே காட்டப்பட்டது. அவரை உயிராக்கும்படி அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள். அவர் உயிர் பெற்று எழுந்தார். ஆனால் தலைமுடி நரைத்த நிலையில் எழுந்தார். அவரிடம் ஈஸா அலை உங்களின் காலத்தில் நரை என்பதே இல்லையே என்று கேட்க,  நீங்கள் என்னை அழைத்தவுடன் கியாமத் வந்து விட்டதோ என்ற பயத்தில் எழுந்தேன். அதனால் நரைத்து விட்டது என்றார். அவரிடம் அவருடைய சகராத் பற்றி ஈஸா அலை கேட்க, இத்தனை வருடங்கள் ஆகியும் அதன் வலியை இன்றும் உணருகிறேன் என்று கூறினார். மேலும் அவர் அந்த மக்களிடம் ஈஸா அவர்களை தூதர் என நம்புங்கள் என்றார். சிலர் மட்டும் அப்போதே இஸ்லாத்தை ஏற்றனர். வேறு சிலர் இதை சூனியம் என்றார்கள். வேறு சில அறிவிப்பில் அந்த சாம் சற்று நேரத்தில் மீண்டும் அந்த கப்ருக்குள் மய்யித்தாக ஆக்கப்பட்டார். ஆனால் அவர் ஈஸா அலை அவர்களிடம் கோரிக்கை வைத்தார். மீண்டும் என்னை மவ்த்தாக்கும் போது ஏற்கெனவே சகராத்தை அனுபவித்து விட்டதால் சகராத் நிலை மீண்டும் வராமல் இருக்க துஆ செய்யுங்கள் என்றார். அவ்வாறே ஈஸா அலை துஆ செய்தார்கள். 

நரைத்த முடிக்கு கறுப்புச் சாயம் பூசுவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. மருதாணி இட்டு சிவப்பாக்குவது சுன்னத்

عَنْ ابْنِ عَبَّاسٍ رَفَعَهُ أَنَّهُ قَالَ قَوْمٌ يَخْضِبُونَ بِهَذَا السَّوَادِ آخِرَ الزَّمَانِ كَحَوَاصِلِ الْحَمَامِ لَا يَرِيحُونَ رَائِحَةَ الْجَنَّةِ (نسائ- عَنْ جَابِرٍ قَالَ أُتِيَ بِأَبِي قُحَافَةَ يَوْمَ فَتْحِ مَكَّةَ وَرَأْسُهُ وَلِحْيَتُهُ كَالثَّغَامَةِ بَيَاضًا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَيِّرُوا هَذَا بِشَيْءٍ وَاجْتَنِبُوا السَّوَادَ (نسائ

சில மக்கள் புறாவின் ஈரல் கறுப்புச் சாயத்தைக் கொண்டு பூசிக் கொள்வார்கள் அவர்கள் சுவனத்தின் வாடையைக் கூட நுகர மாட்டார்கள்

டை அடிப்பதால் அதிலுள்ள இரசாயனப் பொருட்கள் தலையில் உள்ள தோலினுள் இறங்கி தலைமுடி கொட்ட ஆரம்பிக்கிறது. தலையில் சொரசொரப்பு ஏற்பட்டு தலையின் தோல் சிதில் சிதிலாக ஆக்கப்படுகிறது. அந்த இரசாயனத்தால் கண்பார்வை குறைகிறது. சிந்தனைத் திறனும் பாதிக்கப்படுகிறது என மருத்துவ மேதைகள் குறிப்பிடுகின்றனர்

وعن جابر قال : أتي بأبي قحافة يوم فتح مكة ورأسه ولحيته كالثغامة بياضا فقال النبي صلى الله عليه وسلم : " غيروا هذا بشيء واجتنبوا السواد " . رواه مسلم

மீசையைக் கத்தரிப்பது, நகம் வெட்டுவது, அக்குள் மற்றும் மறைவிட ரோமங்களை நீக்குவதில் அதிக பட்ச கெடு. 

عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ لَمْ يَأْخُذْ مِنْ شَارِبِهِ فَلَيْسَ مِنَّا(ترمذي)

எவர் மீசையைக் கத்தரிக்கவில்லையோ அவர் நம்மைச் சார்ந்தவர் அல்ல.

عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُصُّ أَوْ يَأْخُذُ مِنْ شَارِبِهِ وَكَانَ إِبْرَاهِيمُ خَلِيلُ الرَّحْمَنِ يَفْعَلُهُ (ترمذي)

عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مِنْ الْفِطْرَةِ حَلْقُ الْعَانَةِ وَتَقْلِيمُ الْأَظْفَارِ وَقَصُّ الشَّارِبِ (بخاري

عَنْ أَنَسِ رض قَالَ وَقَّتَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَلْقَ الْعَانَةِ وَتَقْلِيمَ الْأَظْفَارِ وَقَصَّ الشَّارِبِ وَنَتْفَ الْإِبِطِ أَرْبَعِينَ يَوْمًا مَرَّةً (ابوداود

 அனஸ் ரழி கூறினார்கள் நபி ஸல் அவர்கள் மீசையைக் கத்தரிப்பது, மறைவிட ரோமங்களைக் களைவது, அக்குள் முடிகளைக் களைவது நகம் வெட்டுவது ஆகியவை அதிகம் பட்சம் நாற்பது நாட்களுக்கு மேல் இவ்வறைக் களையாமல் விடக் கூடாது என எங்களுக்கு கெடு விதித்தார்கள்.                                                                                                                  

இது அதிக பட்ச அளவாகும். குறைந்த பட்சம் நகம், மீசை ஆகியவற்றை ஒவ்வொரு ஜும்ஆ நாளிலும் அக்குள் முடிகளை நாற்பது நாட்களுக்கு ஒருமுறையும்,  மர்மஸ்தான முடிகளை இருபது நாட்களுக்கு ஒருமுறையும் களைவது சிறப்பு

عن ابن عمر رضي الله عنهما أن النبي كان يأخذ أظفاره ويحفي شاربه في كل جمعة ويحلق العانة عشرين يوما وينتف الإبط في كل أربعين يوما  ولا عذر في تركه وراء الأربعين  (مرقاة المفاتيح)  قَالَ الْقُرْطُبِيّ فِي"الْمُفْهِم" ذِكْر الْأَرْبَعِينَ تَحْدِيد لِأَكْثَر الْمُدَّة وَلَا يَمْنَع تَفَقُّد ذَلِكَ مِنْ الْجُمُعَة إِلَى الْجُمُعَة وَالضَّابِط فِي ذَلِكَ الِاحْتِيَاج(فتح الباري) 

நபி ஸல் அவர்கள் வாரம் ஒவ்வொரு ஜும்ஆ நாளிலும் நகம் வெட்டுபவர்களாகவும் மீசையைக் கத்தரிப்பவர்களாகவும் இருபது நாட்களுக்கு ஒருமுறை மறைவிட ரோமங்களைக் களைபவர்களாகவும் நாற்பது நாட்களுக்கு ஒருமுறை அக்குள் ரோமங்களைக் களைபவர்களாகவும் இருந்தார்கள் இப்னுஉமர் ரழி கூறினார்கள்

وَالْمُرَاد إِزَالَة مَا يَزِيد عَلَى مَا يُلَابِس رَأْس الْإِصْبَع مِنْ الظُّفْر لِأَنَّ الْوَسَخ يَجْتَمِع فِيهِ فَيُسْتَقْذَر وَقَدْ يَنْتَهِي إِلَى حَدّ يَمْنَع مِنْ وُصُول الْمَاء إِلَى مَا يَجِب غَسْله فِي الطَّهَارَة وَلَمْ يَثْبُت فِي تَرْتِيب الْأَصَابِع عِنْد الْقَصّ شَيْء مِنْ الْأَحَادِيث (فتح الباري)

நீளமான நகங்களுக்கிடையில் அழுக்குகள் தங்கும். அவற்றை சரிவர சுத்தம் செய்யவும் முடியாது. ஆகவே நீளமான நகம் உள்ளவரின் உளூ, கடமையான குளிப்பு ஆகியவை நிறைவேறாமல் போக வாய்ப்பு உண்டு

 لَكِنْ جَزَمَ النَّوَوِيّ فِي"شَرْح مُسْلِم" بِأَنَّهُ يُسْتَحَبّ الْبُدَاءَة بِمُسَبِّحَةِ الْيُمْنَى6 ثُمَّ بِالْوُسْطَى7 ثُمَّ الْبِنْصِر8 ثُمَّ الْخِنْصَر9 ثُمَّ الْإِبْهَام10 ، وَفِي الْيُسْرَى بِالْبَدَاءةِ بِخِنْصَرِهَا ثُمَّ بِالْبِنْصِرِ إِلَى الْإِبْهَام وَيَبْدَأ فِي الرِّجْلَيْنِ بِخِنْصَرِ الْيُمْنَى إِلَى الْإِبْهَام وَفِي الْيُسْرَى بِإِبْهَامِهَا إِلَى الْخِنْصَر، وَلَمْ يَذْكُر لِلِاسْتِحْبَابِ مُسْتَنَدًاوَتَوْجِيه الْبُدَاءَة بِالْيُمْنَى لِحَدِيثِ عَائِشَة الَّذِي مَرَّ فِي الطَّهَارَة " كَانَ النَّبِىُّ  صلى الله عليه وسلم  يُحِبُّ التَّيَمُّنَ مَا اسْتَطَاعَ فِى شَأْنِهِ كُلِّهِ فِى طُهُورِهِ وَتَرَجُّلِهِ وَتَنَعُّلِهِ (بخاري) باب يَبْدَأُ بِالنَّعْلِ الْيُمْنَى – كتاب اللباس)وَالْبُدَاءَة بِالْمُسَبِّحَةِ مِنْهَا لِكَوْنِهَا أَشْرَف الْأَصَابِع لِأَنَّهَا آلَة التَّشَهُّد ، وَأَمَّا اِتِّبَاعهَا بِالْوُسْطَى فَلِأَنَّ غَالِب مَنْ يُقَلِّم أَظْفَاره يُقَلِّمهَا قَبْل ظَهْر الْكَفّ فَتَكُون الْوُسْطَى جِهَة يَمِينه فَيَسْتَمِرّ إِلَى أَنْ يَخْتِم بِالْخِنْصَرِ ثُمَّ يُكْمِل الْيَد بِقَصِّ الْإِبْهَام وَأَمَّا الْيُسْرَى فَإِذَا بَدَأَ بِالْخِنْصَرِ لَزِمَ أَنْ يَسْتَمِرّ عَلَى جِهَة الْيَمِين إِلَى الْإِبْهَام (فتح الباري)لِلِاسْتِحْبَابِ مُسْتَنَدًاமுஸ்தஹப் என்பதற்கு ஆதாரம் கூறவில்லை

 இமாம் நவவீ ரஹ் கூறினார்கள். நகம் வெட்டுவதில் முஸ்தஹப்பாகிறது  வலது கையின் கலிமா விரலில் ஆரம்பித்து அடுத்து நடுவிரல் பிறகு மோதிர விரல் பிறகு  சுண்டு விரல் பிறகு பெருவிரல் நகங்களை வெட்ட வேண்டும். அதேபோல இடது கையில் முதலாவதாக சுண்டு விரல் பிறகு நடுவிரல் பிறகு நடுவிரல் பிறகு  ஆட்காட்டி விரல் பிறகு பெருவிரல் என்று வருவது முஸ்தஹப்பாகும். காரணம் நபி ஸல் அவர்கள் அனைத்திலும் வலது புறம் துவங்குவதை விரும்பியுள்ளார்கள்.  கலிமா விரலைக் கொண்டு துவங்குவதன் நோக்கம் அதுதான் விரல்களில் சிறந்த விரலாக இருக்கிறது என்பதாலும் அத்தஹிய்யாத் ஓதும்போது அது பயன்படுகிறது என்பதாலும் அது நல்லதாகும். அடுத்து நடுவிரல் நகத்தை வெட்ட வேண்டும் என்பதற்கான காரணம் பெரும் நகம் வெட்டுபவர்கள் உள்ளங்கையை மேல் நோக்கி வைத்தவாறு வெட்டுவார்கள் எனவே கலிமா விரல் நகத்தை வெட்டிய பின்பு அடுத்த வலது புற வரிசையில் நடுவிரல் தான் இருக்கும் என்பதால் அவ்வாறு கூறப்பட்டுள்ளது. அதேபோல இடது  கை விரல் நகங்களை வெட்டும்போது உள்ளங்கை மேல் நோக்கி இருக்கும்போது சுண்டு விரல் தான் முதலில் வலது புறத்தில் இருக்கும்.   

நீளமான நகங்கள் நரகவாதிகளின் அடையாளங்களில் ஒன்றாக கூறப்பட்டுள்ளது

عَنْ أَنَسِ  رضي الله عنه قَالَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا عُرِجَ بِي مَرَرْتُ بِقَوْمٍ لَهُمْ أَظْفَارٌ مِنْ نُحَاسٍ11 يَخْمُشُونَ وُجُوهَهُمْ وَصُدُورَهُمْ فَقُلْتُ مَنْ هَؤُلَاءِ يَا جِبْرِيلُ قَالَ هَؤُلَاءِ الَّذِينَ يَأْكُلُونَ لُحُومَ النَّاسِ وَيَقَعُونَ فِي أَعْرَاضِهِمْ12 (ابوداود) بَاب فِي الْغِيبَةِ -كِتَاب الْأَدَبِ

மிஃராஜுக்கு என்னை அழைத்துச் செல்லப்பட்ட போது நான் சில மனிதர்களைக் கடந்து சென்றேன் அவர்களின் நகங்கள் செம்பால் ஆனதாக, (மிகவும் கூர்மையானதாக) இருந்தன. அவற்றின் மூலம் அவர்கள் தமக்குத் தாமே தமது முகங்களையும் நெஞ்சுகளையும் தங்களின் நகங்களால் குத்தி காயப் படுத்திக் கொள்வதைக் கண்டு, இவர்கள் யார் என்று ஜிப்ரயீல் அலை அவர்களிடம் கேட்டேன். அப்போது அவர்கள் கூறினார்கள். இவர்கள் தான் உலகில் மனித மாமிசம் சாப்பிட்டவர்கள். (புறம் பேசியவர்கள்) அதாவது அடுத்தவர்களின் மானம் மரியாதையை பாழ்படுத்தியவர்கள்

வெட்டிய நகங்களை புதைப்பது பற்றிய விபரங்கள்

நம் உடலில் இருந்து நீக்கப்பட்ட நகம், முடிகளை குப்பையில் போடுவதை விட முடிந்தால் அவற்றை புதைப்பது சிறப்பு

قال الحافظ ابن حجر: قلتُ لأحمد : يأخذ من شعره وأظفاره أيدفنه أم يلقيه ؟ قال : يدفنه . قلت : بَلَغَكَ فيه شيء ؟ قال : كان ابن عمر يدفنه " وقد استحب أصحابنا دفنها لكونها أجزاء من الآدمي والله أعلم (فتح الباري)

وَرُوِيَ أَنَّ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِدَفْنِ الشَّعْر وَالْأَظْفَار وَقَالَ : لَا يَتَلَعَّب بِهِ سَحَرَة بَنِي آدَم . قُلْت وَهَذَا الْحَدِيث أَخْرَجَهُ الْبَيْهَقِيُّ مِنْ حَدِيث وَائِل بْن حُجْرٍ نَحْوه . وَقَدْ اِسْتَحَبَّ أَصْحَابنَا دَفْنهَا لِكَوْنِهَا أَجْزَاء مِنْ الْآدَمِيّ وَاَللَّه أَعْلَم (فتح الباري)

 இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ் அவர்களிடம் கேட்கப்பட்டது. நகம், முடி வெட்டியவர் தனது முடியை புதைப்பது நல்லதா அல்லது வெறுமனே தூக்கிப் போடுவது போதுமா என்று கேட்கப்பட்டது. அதற்கு இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ் அவர்கள் புதைக்க வேண்டும் என பதில் கூறினார்கள் இது விஷயமாக தங்களிடம் ஆதாரம் ஏதேனும் கிடைத்துள்ளதா என்று கேட்க, அதற்கு அவர்கள் ஆம்  இப்னு உமர் ரழி அவர்கள்  நகம், முடிகளை புதைப்பவர்களாக இருந்துள்ளார்கள். மேலும் நபி ஸல் அவர்கள் நகம், முடிகளை புதைக்கும்படி ஏவினார்கள் மேலும் கூறினார்கள் நகம், முடிகள் மூலமாக மனிதர்களில் சூனியக்காரர்கள் ஏதேனும் தவறாகப் பயன்படுத்தி விடக்கூடாது என்பதற்காகவும் புதைப்பதே நல்லது.                                                       

இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ் அவர்கள் கூறும்போது நகம், முடி என்பது மனிதனின் உடல் அங்கங்களாக இருப்பதால் மனிதனை எப்படி மண்ணில் புதைப்போமோ அவ்வாறு மண்ணில் புதைப்பது நல்லது என்று கூறினார்கள். 

மிஸ்வாக் என்ற சுன்னத்தும் இப்றாஹீம் அலை அவர்களுக்கு கட்டளையிடப் பட்டிருந்தது

عَنْ أَبِي أَيُّوبَ قَاَل قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعٌ مِنْ سُنَنِ الْمُرْسَلِينَ الْحَيَاءُ وَالتَّعَطُّرُ وَالسِّوَاكُ وَالنِّكَاحُ (ترمذي) - كِتَاب النِّكَاحِ

عَنْ أَبِى هُرَيْرَةَ  رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِى لأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ مَعَ كُلِّ صَلاَةٍ (بخاري) وَقَالَتْ عَائِشَةُ رضي الله عنها عَنِ النَّبِىِّ  صلى الله عليه وسلم (السواك) مَطْهَرَةٌ لِلْفَمِ مَرْضَاةٌ لِلرَّبِّ (بخاري) باب السِّوَاكِ– كتاب الجمعة

தொழுகை அல்லாத நேரங்களிலும் நபி ஸல் அவர்கள் மிஸ்வாக் செய்வார்கள்

عَنْ حُذَيْفَةَ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ مِنْ اللَّيْلِ يَشُوصُ فَاهُ بِالسِّوَاكِ(بخاري) باب السِّوَاكِ– كتاب الجمعةعَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ عَنْ أَبِيهِ قَالَ قُلْتُ لِعَائِشَةَ بِأَىِّ شَىْءٍ كَانَ يَبْدَأُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلمإِذَا دَخَلَ بَيْتَهُ قَالَتْ "بِالسِّوَاكِ" (مسلم) بَاب السِّوَاكِ- كِتَاب الطَّهَارَةِ 

வீட்டுக்கு வந்தவுடன் நபி ஸல் அவர்கள் எந்த செயலைக் கொண்டு தொடங்குவார்கள் என்று ஆயிஷா ரழி அவர்களிடம் கேட்கப்பட்ட போது வீட்டுக்கு வந்தவுடன் மிஸ்வாக் செய்வார்கள் என ஆயிஷா ரழி அவர்கள் பதில் கூறினார்கள்

சகராத் நிலையிலும் மிஸ்வாக் செய்வதை விரும்பிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்

عن عَائِشَةَ  رضي الله عنها كَانَتْ تَقُولُ إِنَّ مِنْ نِعَمِ اللَّهِ عَلَيَّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تُوُفِّيَ فِي بَيْتِي وَفِي يَوْمِي وَبَيْنَ سَحْرِي وَنَحْرِي13 وَأَنَّ اللَّهَ جَمَعَ بَيْنَ رِيقِي وَرِيقِهِ عِنْدَ مَوْتِهِ دَخَلَ عَلَيَّ عَبْدُ الرَّحْمَنِ وَبِيَدِهِ السِّوَاكُ وَأَنَا مُسْنِدَةٌ14 رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَأَيْتُهُ يَنْظُرُ إِلَيْهِ وَعَرَفْتُ أَنَّهُ يُحِبُّ السِّوَاكَ فَقُلْتُ آخُذُهُ لَكَ فَأَشَارَ بِرَأْسِهِ أَنْ نَعَمْ فَتَنَاوَلْتُهُ فَاشْتَدَّ عَلَيْهِ وَقُلْتُ أُلَيِّنُهُ لَكَ15 فَأَشَارَ بِرَأْسِهِ أَنْ نَعَمْ فَلَيَّنْتُهُ فَأَمَرَّهُ وَبَيْنَ يَدَيْهِ رَكْوَةٌ أَوْ عُلْبَةٌ يَشُكُّ عُمَرُ فِيهَا مَاءٌ فَجَعَلَ يُدْخِلُ يَدَيْهِ فِي الْمَاءِ فَيَمْسَحُ بِهِمَا وَجْهَهُ يَقُولُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ إِنَّ لِلْمَوْتِ سَكَرَاتٍ ثُمَّ نَصَبَ يَدَهُ فَجَعَلَ يَقُولُ فِي الرَّفِيقِ الْأَعْلَى حَتَّى قُبِضَ وَمَالَتْ يَدُهُ (بخاري) باب مَرَضِ النَّبِىِّ  صلى الله عليه وسلم وَوَفَاتِهِ-كتاب المغازى

அல்லாஹ் எனக்குத் தந்த அருட்கொடைகளில் ஒன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனது  வீட்டில் என்னுடன் தங்கும் நாளில் என்னுடைய கழுத்துக்கும் நெஞ்சுக்குமிடையே தலை சாய்த்த நிலையில் வஃபாத்தானார்கள். அல்லாஹ் அவர்களின் கடைசி நேரத்தில் எனது உமிழ் நீரையும் அவர்களின் உமிழ் நீரையும் ஒன்று சேர்த்தான். அதாவது என் சகோதரர் அப்துர் ரஹ்மான் ரழி என்னிடம் வருகை தந்தார். அவரிடம் ஒரு மிஸ்வாக் குச்சி இருந்தது. நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை என் மடியில் சாய்த்து வைத்திருந்த நிலையில் அவர்கள் அந்த மிஸ்வாக் குச்சியையே பார்ப்பதை நான் கண்டு அவர்கள் மிஸ்வாக் செய்ய விரும்புகிறார்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன். அதை உங்களுக்கு வாங்கித் தரட்டுமா என்று கேட்ட போது ஆம் என்று தலையசைத்தாரகள். அதை நான் வாங்கித் தந்தேன். ஆனால் புதிய மிஸ்வாக் என்பதால் அவர்களுக்கு அது சிரமமாக இருந்தது. அதை உங்களுக்கு மிருதுவாக்கித் தரட்டுமா என்று கேட்ட போது ஆம் என்று தலையசைத்தாரகள். அதை பற்களால் கடித்து அவர்களுக்கு மிருதுவாக்கித் தந்தேன். அதை வாங்கி பற்களில் தேய்த்தார்கள். அவர்களின் முன்னிலையில் ஒரு குவளை நீர் இருந்த து. அவர்களின் இரு கைகளையும் அதில் நுழைத்து பின்பு அந்தக் கைகளால் முகத்தைத் தடவினார்கள். பிறகு கலிமா சொன்னவர்களாக நிச்சயமாக ஒவ்வொரு மவ்த்துக்கும் சகராத் உண்டு என்று கூறி, தன் கைகளை மேலே தூக்கி உயர்த்தி உயர்ந்த சுவனத்திலே...என்ற வார்த்தையைக் கூறிய நிலையில் அவர்களின் உயிர் பிரிந்தது.அவர்களின் கைகள் தானாக கீழே சரிந்தது.                                                                                         

நாசிக்கு நீர் செலுத்துவதும் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு கடமையாக்கப் பட்டிருந்தது

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا اسْتَيْقَظَ أُرَاهُ أَحَدُكُمْ مِنْ مَنَامِهِ فَتَوَضَّأَ فَلْيَسْتَنْثِرْ ثَلَاثًا فَإِنَّ الشَّيْطَانَ يَبِيتُ عَلَى خَيْشُومِهِ (بخاري) باب صِفَةِ إِبْلِيسَ وَجُنُودِهِ– كتاب بدء الخلق -(خيشومه ) هو الأنف وقيل أقصى الأنف- 

உங்களில் ஒருவர் தூங்கி எழுந்து உளூச் செய்தால் மூன்று முறை மூக்கை சுத்தம் செய்து கொள்ளட்டும் ஏனெனில் ஷைத்தான் அவருடைய மூக்கந் தண்டின் மீது இரவைக் கழித்திருப்பான்.  

மறைவிட ரோமங்களை சிரைப்பதையும், அக்குள் முடிகளை பிடுங்குவதையும்அல்லாஹ் 

இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ்  ஃபர்ளாக்கினான். 

மர்மஸ்தான ரோமங்களை சிறைப்பது என்றும், அக்குள் முடிகளை பிடுங்குவது என்றும் ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. இது சிறப்பு என்ற அடிப்படையில் கூறப்பட்டதாகும்.  அக்குள் முடிகள் அடிக்கடி வளரும் என்பதால் பிடுங்குவது சிறப்பு. அதனால்  வலி ஏற்படும் என்றிருந்தால் சிரைப்பதும் கூடும்

يُستحب حَلْقُ جَمِيع مَا عَلَى الْقُبُل وَالدُّبُر وَحَوْلهمَا قَالَ وَذَكَرَ الْحَلْق لِكَوْنِهِ هُوَ الْأَغْلَب وَإِلَّا فَيَجُوز الْإِزَالَة بِالنَّوْرَةِ4 وَالنَّتْف وَغَيْرهمَاوَقَالَ النَّوَوِيّ: السُّنَّة فِي إِزَالَة شَعْر الْعَانَة الْحَلْق بِالْمُوسَى3 فِي حَقّ الرَّجُل وَالْمَرْأَة مَعًا- وَالْمُسْتَحَبّ الْبُدَاءَة فِيهِ بِالْيُمْنَى

இமாம் நவவீ ரஹ் அவர்கள் கூறும்போது மர்மஸ்தான முடிகளை கத்தி போன்றதைக் கொண்டு சிரைப்பது சுன்னத் என்றும் அதிலும் வலது புறத்தைக் கொண்டு முதலில் ஆரம்பிப்பது சிறப்பு என்றும் கூறியுள்ளார்கள்

عَنْ يُونُس بْن عَبْد الْأَعْلَى قَالَ دَخَلْت عَلَى الشَّافِعِيّ وَرَجُل يَحْلِق إِبْطه فَقَالَ :إِنِّي عَلِمْت أَنَّ السُّنَّة النَّتْف وَلَكِنْ لَا أَقْوَى عَلَى الْوَجَع-قَالَ الْغَزَالِيّ : هُوَ فِي الِابْتِدَاء مُوجِع وَلَكِنْ يَسْهُل عَلَى مَنْ اِعْتَادَهُ قَالَ: وَالْحَلْق كَافٍ لِأَنَّ الْمَقْصُود النَّظَافَة رواه اِبْن أَبِي حَاتِم فِي "مَنَاقِب الشَّافِعِيّ

யூனுஸ் ரஹ் அவர்கள் கூறினார்கள் நான் இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்களைச் சந்திக்கச் சென்றேன். அப்போது அவர்களுக்கு ஒரு நாவிதர் அக்குள் முடிகளை சிரைத்துக் கொண்டிருந்தார். அப்போது இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்கள் என்னிடம் கூறினார்கள். அக்குள் முடிகளைப் பிடுங்குவது தான் சுன்னத். இருந்தாலும்  என்னால் வலியைத் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால் இவ்வாறு செய்கிறேன் என்றார்கள். இமாம் கஸ்ஸாலி ரஹ் அவர்கள் கூறும்போது பிடுங்குவது என்பது ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும் போகப் போக இலகுவாகி விடும். (அடிக்கடி முடிகள் வளராமல் இருக்க பிடுங்குவதே சிறப்பாகும்). இருந்தாலும் சிரைப்பதும் கூட போதுமாகும். காரணம் நமக்கு சுத்தம் தான் நோக்கம். அது எப்படியிருந்தாலும் சரி என்று கூறியுள்ளார்கள். 

மறைவிட ரோமங்களைக் களைவதில் கவனக்குறைவு கணவன் மனைவிக்கு மத்தியிலும் பிரிவை ஏற்படுத்தி விடலாம்

-عَنْ جَابِرِ رض قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزَاةٍ فَلَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ ذَهَبْنَا لِنَدْخُلَ فَقَالَ أَمْهِلُوا حَتَّى نَدْخُلَ لَيْلًا أَيْ عِشَاءً كَيْ تَمْتَشِطَ الشَّعِثَةُ5وَتَسْتَحِدَّ الْمُغِيبَةُ (مسلم)- بَاب كَرَاهَةِ الطُّرُوقِ- كِتَاب الْإِمَارَةِ-النورة : أخلاط من أملاح تستعمل لإزالة الشعر

நாங்கள் நபி ஸல் அவர்களுடன் பிரயாணத்தில் இருந்தோம். நாங்கள் மதீனாவை அடைந்த போது உடனே வீட்டுக்குச் செல்ல நினைத்தோம். ஆனால் நபி ஸல் அவர்கள் கூறினார்கள். சற்று தாமதியுங்கள். நாம் இரவானதும் வீட்டுக்குச் செல்வோம். காரணம் நாம் வந்த தகவல் இப்போதுதான் நம் மனைவிமார்களுக்குத் தெரிந்திருக்கும். இத்தனை நாட்கள் கணவன் இல்லாததால் தன்னை அலங்கரித்துக் கொள்ளாத மனைவிமார்கள் தலை வாரி அலங்கரித்துக் கொள்ளட்டும். மறைவிடங்களில் கத்தியைப் பயன்டுத்தி (சுத்தம் செய்து) கொள்ளட்டும் என்றார்கள் 

 படிப்பினை- நீண்ட நாட்கள் கழித்துத் திரும்பும் கணவன்  திடீரென்று  வீட்டுக்குள் வந்து விட்டால் ஒருவேளை  மனைவி தன்னை சுத்தப் படுத்திக் கொள்ள  நேரம் இல்லாமல் போகலாம்.  அத்துடன் கணவன்  உறவு கொண்டால் அவள் மீது வெறுப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.  அது பிரிவை ஏற்படுத்தி விடலாம் என்பதால் நபி ஸல் அவ்வாறு கூறினார்கள்.                                       

 சுன்னத் எனும் கத்னாவும் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு கடமையாக்கப்பட்டதாகும்

عَنْ أَبِى هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ  صلى الله عليه وسلم  قَالَ  اخْتَتَنَ إِبْرَاهِيمُ عليه السلام بَعْدَ ثَمَانِينَ سَنَةً  وَاخْتَتَنَ بِالْقَدُومِ (بخاري) باب الْخِتَانِ بَعْدَ الْكِبَرِ وَنَتْفِ الإِبْطِ  -كتاب اللباس- عَنْ عُثَيْمِ بْنِ كُلَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِأَنَّهُ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ قَدْ أَسْلَمْتُ فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلْقِ عَنْكَ شَعْرَ الْكُفْرِ يَقُولُ احْلِقْ -قَالَ الراوي- وأَخْبَرَنِي آخَرُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِآخَرَ مَعَهُ أَلْقِ عَنْكَ شَعْرَ (شِعَار) الْكُفْرِ وَاخْتَتِنْ (ابوداود) بَاب فِي الرَّجُلِ يُسْلِمُ فَيُؤْمَرُ بِالْغُسْلِ- كِتَاب الطَّهَارَةِوَعَنْ أَحْمَد وَبَعْض الْمَالِكِيَّة : يَجِب وَعَنْ أَبِي حَنِيفَة وَاجِب وَلَيْسَ بِفَرْضٍ . وَعَنْهُ سُنَّة يَأْثَم بِتَرْكِهِ .وَذَهَبَ أَكْثَر الْعُلَمَاء وَبَعْض الشَّافِعِيَّة إِلَى أَنَّهُ لَيْسَ بِوَاجِبٍ  (فتح الباري)

கத்னாவை சிறு வயதிலேயே செய்வது சிறந்தது

وَاخْتُلِفَ فِي الْوَقْت الَّذِي يُشْرَع فِيهِ الْخِتَان قَالَ الّمَاوَرْدِيّ: لَهُ وَقْتَانِ وَقْت وُجُوب وَوَقْت اِسْتِحْبَاب فَوَقْت الْوُجُوب الْبُلُوغ وَوَقْت الِاسْتِحْبَاب قَبْله ، وَالِاخْتِيَار فِي الْيَوْم السَّابِع مِنْ بَعْد الْوِلَادَة وَقِيلَ مِنْ يَوْم الْوِلَادَة فَإِنْ أَخَّرَ فَفِي الْأَرْبَعِينَ يَوْمًا ، فَإِنْ أَخَّرَ فَفِي السَّنَة السَّابِعَة ، فَإِنْ بَلَغَ وَكَانَ نِضْوًا نَحِيفًا يُعْلَم مِنْ حَاله أَنَّهُ إِذَا اُخْتُتِنَ تَلِفَ سَقَطَ الْوُجُوب . وَيُسْتَحَبّ أَنْ لَا يُؤَخَّر عَنْ وَقْت الِاسْتِحْبَاب إِلَّا لِعُذْرٍ وَقَالَ أَبُو الْفَرَج السَّرَخْسِيّ: فِي خِتَان الصَّبِيّ وَهُوَ صَغِير مَصْلَحَة مِنْ جِهَة أَنَّ الْجِلْد بَعْد التَّمْيِيز يَغْلُظ وَيَخْشُن فَمِنْ ثَمَّ جَوَّزَ الْأَئِمَّة الْخِتَان قَبْل ذَلِكَ 

وَقَالَ مَالِك : يَحْسُن إِذَا أَثْغَرَ أَيْ أَلْقَى ثَغْره وَهُوَ مُقَدَّم أَسْنَانه ، وَذَلِكَ يَكُون فِي السَّبْع سِنِينَ وَمَا حَوْلهَا ، وَعَنْ اللَّيْث يُسْتَحَبّ مَا بَيْن سَبْع سِنِينَ إِلَى عَشْر سِنِينَ ،قَالَ الْوَلِيد فَسَأَلْت مَالِكًا عَنْهُ فَقَالَ : لَا أَدْرِي ، وَلَكِنَّ الْخِتَان طُهْرَة فَكُلَّمَا قَدَّمَهَا كَانَ أَحَبّ إِلَيَّ . وَأَخْرَجَ الْبَيْهَقِيُّ حَدِيث جَابِر: أَنَّ إِبْرَاهِيم عَلَيْهِ السَّلَام خَتَنَ إِسْحَاق وَهُوَ اِبْن سَبْعَة أَيَّام .(فتح الباري)

பொருள்- 5,வெளியூர் சென்ற கணவனை பிரிந்திருந்த மனைவி தன்னை அலங்கரித்து, தன் மறைவிட ரோமங்களை நீக்குவதற்காக6,கலிமா விரல் 7,நடுவிரல் 8,மோதிர விரல் 9,சுண்டு விரல் 10,பெருவிரல் 11,செம்பு 12,புறம் பேசுபவர்கள் 13,என் கழுத்துக்கும், நெஞ்சுக்குமிடையில் 14,நெஞ்சில் சாய்த்து 15,மிருதுவாக்கித் தரட்டுமா ?

புதன், 11 ஜூன், 2025

உரிமைகளை மீட்க தொடர்ந்து போராடுவோம்

 13-06-2025

துல்ஹஜ் - 16


بسم الله الرحمن الرحيم  

உரிமைகளை மீட்க தொடர்ந்து போராடுவோம்



https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்


 வக்ஃப் திருத்தச் சட்டத்தை  திரும்பப் பெற வலியுறுத்தி  பல்வேறு வகையிலும் போராட்டங்கள் இதற்கு முன்பும் நடத்தப்பட்டன. எனினும் இப்போராட்டங்களை தொடர்ந்து நடத்திக் கொண்டேயிருக்க வேண்டும். எப்படி விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக அச்சட்டம் வாபஸ் பெறப் பட்டதோ அதுபோன்று நம்முடைய தொடர் போராட்டங்கள் காரணமாக  வக்ஃப் திருத்தச் சட்டம் வாபஸ் பெறப் படலாம் என்ற நோக்கத்தில் வருகிற 13-06-2025 வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் எழும்பூர் இராஜ ரத்தினம் ஸ்டேடியம் அருகில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தை ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் அனைத்து  முஸ்லிம் அமைப்புகளின் ஒத்துழைப்போடு ஏற்பாடு செய்துள்ளது. இதில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள இந்த ஜும்ஆவில் அறிவிப்புச் செய்ய வேண்டும்.                 

உரிமைகளுக்காக ஜனநாயக ரீதியில் போராடுவது அவசியம்

ஒவ்வொரு உரிமைகளையும் மீட்பதற்காக எப்படிப் போராட வேண்டும் என்பதை அதற்குரியவர்களிடம் கலந்து ஆலோசித்து ஜமாஅத்துல் உலமா அறிவிக்கும். அத்தகைய போராட்டங்களில் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.          

துஆ இபாத த் மிகவும் அவசியம். அதை முதலில் நாம் செய்ய வேண்டும். அதற்கடுத்து ஜனநாயக அடிப்படையில் போராடுவதும் தேவையானது. அதற்கென்றே சிலர் இருக்கிறார்கள் அவர்கள் போகட்டும். நான் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பேன் என்று கருதுவது கோழைத்தனம். மேலும் துஆ இபாதத் ஆகியவை நாம் மட்டுமே செய்ய முடியும். போராட்டங்களில் சகோதர சமயத்தவர்களும் நம்முடன் இணைந்து போராடுவார்கள். இன்று அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. ஏனெனில் இது நமக்கு மட்டும் எதிரான சட்டம் அல்ல. இந்திய அரசியல் சாசனத்திற்கே எதிரான சட்டம். இதனால் அனைவரும் பாதிக்கப்படுவார்கள்.             

ஜெர்மனியில் ஹிட்லர் நடத்திய போராட்டங்களைப் பற்றி ஒரு கவிஞன் எழுதினான். ஹிட்லரின் படைகள் யூதர்களைத் தாக்க வந்தபோது நான் சும்மா இருந்தேன். என்னைத் தாக்கவில்லையே என்று.  அடுத்து இன்னொரு மத த்தவரைத் தாக்க வந்தபோதும் சும்மா இருந்தேன். என்னைத் தாக்கவில்லையே என்று. அடுத்து தொழிற்சங்கத்தினரைத் தாக்க வந்தபோதும் நான் சும்மா இருந்தேன். என்னைத் தாக்கவில்லையே என்று.  அடுத்து என்னைத் தாக்க வந்தபோது எனக்கு உதவ யாரும் இல்லை.     

உரிமைகளை மீட்க  போராடுவதற்கு முன்பு சுய சீர்திருத்தம் மிகவும் முக்கியம்

நாம் ஒவ்வொருவரும் நம் தனிப்பட்ட வாழ்க்கையைப் பரிசுத்தமாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

(ஹழ்ரத் ஹுஸைன் அஹ்மத் மதனீ ரஹ் கூறினார்கள்- இஸ்லாம் பாதுகாக்கப்பட வேண்டும் என உரத்து முழங்குகிறார்கள். ஆனால் தம் அன்றாட வாழ்வில் இஸ்லாத்தை விட்டும் விலகி இருக்கிறார்கள். இஸ்லாம் ஒன்றும் சிலை கிடையாது. அதனைப் பாதுகாப்பதற்கு.... படை பட்டாளம் தேவைப் படுவதற்கு.. மாறாக உங்களின் அன்றாட வாழ்வில் இஸ்லாத்தைப் பின்பற்றுங்கள். நீங்களும் பாதுகாக்கப் படுவீர்கள். இஸ்லாமும் பாதுகாக்கப் பட்டு விடும்.)                                                                                     

உங்களை வெளியேற்றுவோம் என எதிரிகள் மிரட்டியபோது நீங்கள் உங்களின் தனிப்பட்ட வாழ்வில் என்னை அஞ்சி நடந்தால்  நான் இங்கேயே உங்களைக் குடியமர்த்துவேன் என அல்லாஹ் வாக்குறுதி அளித்தான்.

உங்களை வெளியேற்றி விடுவோம் என்ற மிரட்டல் நமக்குப் புதிதல்ல. ஒவ்வொரு காலத்திலும் முஃமின்களுக்கு இந்த மிரட்டல் வந்தது

فما كَانَ جَوَابَ قَوْمِهِ إِلَّا أَنْ قَالُوا أَخْرِجُوا آلَ لُوطٍ مِنْ قَرْيَتِكُمْ (56)النمل-لَنُخْرِجَنَّكَ يَا شُعَيْبُ وَالَّذِينَ آمَنُوا مَعَكَ مِنْ قَرْيَتِنَا أَوْ لَتَعُودُنَّ فِي مِلَّتِنَا (88 الاعراف-  وَقَالَ الَّذِينَ كَفَرُوا لِرُسُلِهِمْ لَنُخْرِجَنَّكُمْ مِنْ أَرْضِنَا أَوْ لَتَعُودُنَّ فِي مِلَّتِنَا فَأَوْحَى إِلَيْهِمْ رَبُّهُمْ لَنُهْلِكَنَّ الظَّالِمِينَ (13) وَلَنُسْكِنَنَّكُمُ الْأَرْضَ مِنْ بَعْدِهِمْ ذَلِكَ لِمَنْ خَافَ مَقَامِي وَخَافَ وَعِيدِ  الانبياء (14

இதில் மற்றொரு கருத்தும் உள்ளது.ஆரம்பிக்கும்போது كفروا  என ஆரம்பித்து, முடிக்கும்போது لنهلكن الظالمين   என்று அல்லாஹ் முடித்துள்ளான். அவர்கள் காஃபிர்களாக மட்டுமன்றி ظالمين களாக ஆகி, நாம் مظلوم   களாக இருக்கும் நிலையில் நாம் உண்மை முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வின் உதவி நிச்சயம் வரும். கடைசி காலத்தில் உலகெங்கும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகி ஒதுங்க இடம் இல்லாத போது இமாம் மஹ்தீ அவர்களின் ஆட்சி வரும்  ஹதீஸ் உள்ளது.  

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ، قَالَ : ذَكَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَلاءً يُصِيبُ هَذِهِ الأُمَّةَ حَتَّى لا يَجِدُ الرَّجُلُ مَلْجَأً يَلْجَأُ إِلَيْهِ مِنَ الظُّلْمِ ، فَيَبْعَثُ اللَّهُ رَجُلا مِنْ عِتْرَتِي أَهْلِ بَيْتِي ، فَيَمْلأُ بِهِ الأَرْضَ قِسْطًا وَعَدْلا كَمَا مُلِئَتْ جَوْرًا وَظُلْمًا ، يَرْضَى عَنْهُ سَاكِنُ السَّمَاءِ وَسَاكِنُ الأَرْضِ ، لا تَدَعُ السَّمَاءُ مِنْ قَطْرِهَا شَيْئًا إِلا صَبَّتْهُ مِدْرَارًا ، وَلا تَدَعُ الأَرْضُ مِنْ نَبَاتِهَا شَيْئًا إِلا أَخْرَجَتْهُ حَتَّى يَتَمَنَّى الأَحْيَاءُ الأَمْوَاتَ ، يَعِيشُ فِي ذَلِكَ سَبْعَ سِنِينَ أَوْ ثَمَانِ سِنِينَ أَوْ تِسْعَ سِنِينَ  [ مصنف عبد الرزاق 

ஐவேளைத் தொழுகையை முறையாக கடை பிடிக்க வேண்டும். தஹஜ்ஜத் தொழுகையையும் கடைபிடிக்க வேண்டும்.

பத்ருப் போர் நடைபெறுவதற்கு முன்பு ஆறு மாத காலம் நாங்கள் தஹஜ்ஜத் தொழுகையை விடாமல் தொழுதோம் என அன்னை ஆயிஷா ரழி அவர்கள் கூறினார்கள். பத்ருப்போர் நடைபெறுவதற்கு முன்பு இரவில் யாஹய்யு யாகய்யூம் என்று அழுது துஆச் செய்ததால் தான் அல்லாஹ் வெற்றியைத் தந்தான் (என்பதை எந்த முஸ்லிம் மறுக்க முடியும்.  விஷயம் எல்லை மீறிப் போய் விட்டது இனிமேல் நாம் உட்கார்ந்து துஆ செய்து என்ன சாதிக்கப் போகிறோம் என்று சிலர் பேசுவது வேதனையாக இருக்கிறது) 

ரப்புக்கு நாம் செய்யும் அதிகமான சஜ்தாக்கள் எப்படிப்பட்ட எதிரியையும் வீழ்த்தும்.

ஒரு மகான் கூறுவார்களாம். இந்த பூமிக்கென்று ஒரு தாகம் உண்டு. அதுதான் சஜ்தாவின் தாகம். நீங்கள் ரப்புக்கு சஜ்தா செய்வது கொண்டு அந்த தாகத்தை நீங்கள் தணிக்கா விட்டால் அதற்கு இரத்த வெறி பிடித்து விடும். 

ஒருமுறை இஸ்ரேலியப் பெண் அமைச்சரிடம் பத்திரிக்கை நிருபர்  பேட்டி எடுத்தார்.  யூதர்களாகிய உங்களை கடைசி காலத்தில் முஸ்லிம்கள் கொல்லுவார்கள். அப்போது மரம், மலைக்குப் பின்னால் நீங்கள் ஒதுங்கிக் கொள்வீர்கள். ஆனால் அந்த மரமும் மலையும் உங்களுக்கு எதிராக உங்களைக் காட்டிக் கொடுக்கும் என்று முஸ்லிம்கள் கூறுகிறார்களே அது உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டபோது, அந்த அமைச்சர் இது எங்களுக்கு நன்றாகவே தெரியும். இது எப்போது நடக்கும் என்பதும் தெரியும்.  முஸ்லிம்கள் அனைவரும் ஜும்ஆவுக்கு ஒன்ரு கூடுவது போன்று ஒவ்வொரு நேரத் தொழுகைக்கும் ஒன்று கூடுவார்கள். அப்போது இது நடக்கும். அதை எதிர் கொள்ள நாங்கள் தயார் என்று பேசியுள்ளார். ஒட்டு மொத்த  முஸ்லிம்களிடமும் இறையச்சம் வந்து விட்டால் அல்லாஹ் எல்லாவற்றையும் நம் வசமாக்கித் தருவான் என்பதில் முஃமினுக்கு சந்தேகம் இருக்காது. 

  عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُقَاتِلَ الْمُسْلِمُونَ الْيَهُودَ فَيَقْتُلُهُمْ الْمُسْلِمُونَ حَتَّى يَخْتَبِئَ الْيَهُودِيُّ مِنْ وَرَاءِ الْحَجَرِ وَالشَّجَرِ فَيَقُولُ الْحَجَرُ أَوْ الشَّجَرُ يَا مُسْلِمُ يَا عَبْدَ اللَّهِ هَذَا يَهُودِيٌّ خَلْفِي فَتَعَالَ فَاقْتُلْهُ إِلَّا الْغَرْقَدَ فَإِنَّهُ مِنْ شَجَرِ الْيَهُودِ (مسلم) 5203

عن أَبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَيُوشِكَنَّ أَنْ يَنْزِلَ فِيكُمْ ابْنُ مَرْيَمَ حَكَمًا عَدْلًا فَيَكْسِرَ الصَّلِيبَ وَيَقْتُلَ الْخِنْزِيرَ وَيَضَعَ الْجِزْيَةَ وَيَفِيضَ الْمَالُ حَتَّى لَا يَقْبَلَهُ أَحَدٌ حَتَّى تَكُونَ السَّجْدَةُ الْوَاحِدَةُ خَيْرًا مِنْ الدُّنْيَا وَمَا فِيهَا ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ وَاقْرَءُوا إِنْ شِئْتُمْ {وَإِنْ مِنْ أَهْلِ الْكِتَابِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ وَيَوْمَ الْقِيَامَةِ يَكُونُ عَلَيْهِمْ شَهِيدًا}- (بخاري) 3448

மொத்த உலகின் சொத்து சுகங்களை விட முஃமினின் உள்ளத்தில் சஜ்தாவின் மதிப்பு கூடும்போது எல்லாம் நமக்கு வசப்படும்

துஆ மாபெரும் ஆயுதம். அதைப் பயன்படுத்த வேண்டும். ஒருபோதும் நிராசையாகி விடக்கூடாது

கடலில் விழுந்து தத்தளிக்கும் ஒருவன் துஆ செய்வது போல அல்லாஹ்விடம் கெஞ்சி துஆசெய்ய வேண்டும்.

ஹஜ்ஜாஜுக்கு எதிராக ஸயீத் ரழி அவர்கள் செய்த துஆவை அல்லாஹ்  உடனே ஏற்றுக் கொண்டான் 

ثم دعا الحجاج بآلات اللهو، فضربت بين يدي سعيد فبكى سعيد. فقال الحجاج: ويلك يا سعيد. فقال سعيد: الويل لمن زحزح عن الجنة، وأدخل النار. فقال: يا سعيد أي قتلة تريد أن أقتلك بها؟ قال: اختر لنفسك يا حجاج، فوالله لا تقتلني قتلة إلا قتلك الله مثلها في الآخرة. قال: فتريد أن أعفو عنك؟ قال: إن كان العفو من الله فنعم، وأما منك أنت فلا. فقال: اذهبوا به فاقتلوه. فلما أخرج من الباب ضحك، فأخبر الحجاج بذلك، فأمر برده فقال: ما أضحكك وقد بلغني أن لك أربعين سنة لم تضحك؟ قال: ضحكت عجباً من جراءتك على الله، ومن حلم الله عليك، فأمر بالنطع فبسط بين يديه، وقال: اقتلوه. فقال سعيد: " كل نفس ذائقة الموت " . ثم قال: " وجهت وجهي للذي فطر السموات والأرض حنيفاً مسلماً وما أنا من المشركين " . قال: وجهوه لغير القبلة. فقال سعيد: " فأيما تولوا فثم وجه الله " فقال: كبوه لوجهه. فقال: " منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى " فقال الحجاج: اذبحوه. فقال سعيد: أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمداً عبده ورسوله. ثم قال: اللهم لا تسلطه على أحد يقتله بعدي. فذبح على النطع رحمة الله تعالى عليه، فكان رأسه يقول بعد قطعه: لا إله إلا الله مراراً. وذلك في شعبان سنة خمس وتسعين. وكان عمر سعيد تسعاً وأربعين سنة،(حياة الحيوان– البداية والنهاية 

قال عون ابن أبي شداد العبدي ... وبلغنا أن الحجاج عاش بعده خمسة عشر ليلة ووقع الاكلة في بطنه فدعا بالطبيب لينظر اليه فنظر اليه ثم دعا بلحم منتن فعلقه في خيط ثم أرسله في حلقه فتركها ساعة ثم استخرجها وقد لزق به من الدم فعلم أنه ليس بناج وبلغنا أنه كان ينادي بقية حياته مالي ولسعيد بن جبير كلما أردت النوم أخذ برجلي (حلية الاولياء)

ஹஜ்ஜாஜ் கடைசியாக கொலை செய்த து ஸயீத் இப்னு ஜுபைர் ரழி அவர்களைத் தான். உன்னை எப்படிக் கொல்லட்டும் என ஸயீத் ரழி அவர்களிடமே அவன் கேட்க, அது உன் இஷ்டம். ஆனால் அல்லாஹ் மீது சத்தியமாக நீ என்னை எப்படிக் கொன்றாலும் அல்லாஹ் பதிலுக்கு உன்னை மறுமையில் கொல்லுவான்.  என்று கூறியபோது, நான் உன்னை மன்னிப்பதை விரும்புகிறாயா என்று கேட்க, மன்னிப்பு அல்லாஹ்விடமிருந்து என்றால் அது எனக்கு சந்தோஷம். உன் மன்னிப்பு எனக்குத் தேவையில்லை என்றார்கள். பிறகு ஹஜ்ஜாஜ் ஸயீத் ரழி அவர்களைக் கொல்ல உத்தரவிட்டான். ஸயீத் ரழி சிரித்தார்கள். உடனே ஹஜ்ஜாஜ் 40 வருடங்களாக சிரித்த தில்லை என்று உன்னைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன். எதற்காக நீ இப்போது சிரித்தாய் என்று கேட்க, அல்லாஹ்வுக்கு எதிராக உனது திமிரையும், அல்லாஹ் உன்னை இன்னும் விட்டு வைத்திருப்பதையும் எண்ணி ஆச்சரியத்தால் சிரிக்கிறேன். என்றார்கள். பிறகு அவர்களைக் கொல்வதற்காக படுக்க வைக்கப்பட்ட போது ஒவ்வொரு ஆத்மாவும் மவ்த்தை அனுபவித்தே தீரும் என்றார்கள். அப்போது கிப்லாவின் பக்கம் முகம் இருந்தது. அந்த சந்தோஷத்தில் ஸயீத் ரழி வஜ்ஜஹ்து ஓதினார்கள். உடனே ஹஜ்ஜாஜ் அவரின் முகத்தை கிப்லாவை விட்டும் திருப்புங்கள் என்றான். அவ்வாறு திருப்ப ப்பட்ட போது   என்ற ஆயத்தை ஓதினார்கள். அவரைக் குப்புறப் படுக்க வையுங்கள் என்றான் ஹஜ்ஜாஜ். அப்போது  فأيما تولوا فثم وجه الله

என்ற ஆயத்தை ஸயீத் ரழி அவர்கள்  ஓதினார்கள். பின்பு ஸயீத் ரழி அவர்கள்  منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى "

ஷஹீதாக்கப்பட்டார்கள். அவர்களின் நாவு கடைசி நேரத்தில் கலிமாவை உச்சரித்த து மட்டுமன்றி, அவர்களின் தலையைத் துண்டாக்கிய பின்பும் அவர்களின் தலை மட்டும் கலிமாவை மொழிந்து கொண்டே இருந்தது.  இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் ஸயீத் ரழி அவர்கள் கடைசி நேரத்தில் யாஅல்லாஹ் எனக்குப் பின் வேறு யார் மீதும் இவனை நீ சாட்டி விடாதே என்று துஆ செய்தார்கள். அதை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான். இதற்குப் பின் 15 இரவுகள் மட்டுமே ஹஜ்ஜாஜ் வாழ்ந்தான். இந்த 15 நாட்களும் தூங்கவே இல்லை. படுத்தால் என் காலைப் பிடித்து ஸயீத் இழுப்பது போன்றிருக்கிறது என்பான்

முல்லா ஜீவன் ரஹ் அவர்களைக் கைது செய்ய மன்னர் ஷாஜஹான் உத்தரவிட்ட போது ஹழ்ரத் செய்த துஆவின் விளைவு

மன்னர் ஷாஜஹானுக்கு ஒருமுறை பட்டாடை அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது. அதை அவர் அணிந்தார். அப்போது ஒளரங்கசீப் ரஹ் அவர்கள் தன் தந்தையிடம் வேண்டாம் தந்தையே நீங்கள் பட்டாடை அணியக்கூடாது என் உஸ்தாத் முல்லா ஜீவன் ரஹ் அவர்கள் ஆண்கள் பட்டாடை அணியக்கூடாது என அறிவுரை கூறியுள்ளார்கள். என்று தடுக்க, அதைக் கேட்காத ஷாஜஹான் என்னைத் தடுக்க அவர் யார் என்று கூறியதுடன் பட்டாடைகளை அணிந்தார். அத்தோடு முல்லா ஜீவன் ரஹ் அவர்களைக் கைது செய்யவும் உத்தரவிட்டார். அது தெரிந்த முல்லா ஜீவன் ரஹ் அவர்கள் ரப்பிடம் தொழுது துஆச் செய்வதில் ஈடுபட்டனர். அதேநேரம்  இதை அறிந்து பயந்த ஒளரங்கசீப் ரஹ் அவர்கள் தன் தந்தையிடம் சென்று கெஞ்சுகிறார்கள். ஹழ்ரத் அவர்கள் நமக்கு எதிராக துஆச் செய்தால் என்ன ஆகும். எனவே தயவு செய்து கைது உத்தரவை வாபஸ் பெறுங்கள். என்று கெஞ்ச, மன்னர் ஷாஜஹான் கைது உத்தரவை வாபஸ் பெறுகிறார். அந்த உத்தரவை வாங்கிக் கொண்டு வேகமாக ஒளரங்கசீப் ரஹ் அவர்கள் உஸ்தாதிடம் வருவதற்குள் உஸ்தாத் அவர்கள் துஆ ஓதி கைகளை முகத்தில் தடவி விட்டார்கள். ஒளரங்கசீப் ரஹ் விஷயத்தைக் கூறியவுடன் முல்லா ஜீவன் ரஹ் அவர்கள் நீங்கள் இத்தகைய காரியத்தில் ஈடுபட்ட காரணத்தால் உம்முடைய ஆட்சிக்காலம் வரை தான் முகலாய அரசு நீடிக்கும் என்றார்கள். அதன்படி ஒளரங்கசீப் ரஹ் அவர்களோடு முகலாய ஆட்சி முடிவுக்கு வந்தது


 


வக்ஃப்  திருத்த சட்டத்தால் பாதிப்புகள்

நமது இந்திய நாட்டில் நம்முடைய முன்னோர்களான முஸ்லிம் மன்னர்கள் மற்றும் பெரும் செல்வந்தர்கள் தங்களுடைய சொத்துக்களில் ஒரு பகுதியை மஸ்ஜித், மதரஸா போன்ற பொதுச் சேவைகளுக்காக வக்ஃப் செய்து விட்டுச் சென்றனர். அவற்றில் சில சொத்துக்கள் மட்டும் தான் இன்று மஸ்ஜித் மற்றும் மதரஸாக்களாக தர்காக்களாக செயல் பட்டு வருகின்றன. நிறைய வக்ஃப் சொத்துகள் பயன்படுத்தப்படாமல் உள்ளன. இந்திய இராணுவம் மற்றும் ரயில்வேவிற்கு அடுத்தபடியாக அதிக சொத்துக்கள் வக்ஃபு சொத்துக்களாக உள்ளது. இந்த மொத்த சொத்துக்களின் பரப்பளவு 9.4 இலட்சம் ஏக்கர். உலகில் 54 இஸ்லாமிய நாடுகள் இருக்கின்றன. எந்த நாட்டிலும் இந்தியாவில் இருக்கும்  அளவிற்கு வக்ஃபு சொத்துக்கள் இல்லை. இந்தியாவில் இருக்கும் அளவிற்கு தர்காக்கள், பள்ளிவாசல்கள் மற்றும் மதராசக்களின் எண்ணிக்கை உலகில் எந்த இஸ்லாமிய நாட்டிலும் இல்லை. இதனால் தான் அரசாங்கத்தின் பார்வை இந்த வக்ஃபு சொத்துக்கள் மீது ஏற்பட்டுள்ளது. நம்முடைய முன்னோர்கள் எந்த நோக்கத்திற்காக வக்ஃப் செய்தார்களோ அந்த நோகத்தை சிதைக்கும் வகையில் இந்த வக்ஃப் திருத்த மசோதா  வடிவமைக்கப்பட்டுள்ளது.                                                            

வக்ஃப் திருத்த சட்டத்தின் ஆபத்துகளைப் பற்றிமஹாராஷ்டிர மாநில வக்ஃப் வாரியத்தின் 

ஓய்வுபெற்ற தலைமை நிர்வாக அதிகாரி ஷேக் அப்துல் ரவுஃப் கூறியது

   வக்ஃப் தொடர்பான புதிய சட்டத்திருத்தத்தில். வக்ஃப் வாரியத்தின் மொத்தமுள்ள  22 உறுப்பினர்களில்  10 முஸ்லிம்கள் மட்டுமே இருப்பார்கள் என்றும்... அந்த 10 முஸ்லிம்களில் 2 முஸ்லிம் பெண்களும் இருக்க வேண்டும் என்றும். மீதமுள்ள 12 பேர்...அரசு நியமனம் என்பதால்... அவர்கள் முஸ்லிம்களாகவோ அல்லது முஸ்லிம்கள் ல்லாதவர்களாகவோ இருக்கலாம் எனவும்... ஆக... முஸ்லிம் அல்லாதவர்கள் குறைந்த பட்சம் 2 பேர் முதல் அதிகபட்சம் 12 ஆக இருக்கலாம் எனவும்... இதனால்... சென்ட்ரல் வக்ஃப் கவுன்சிலில் மொத்தம் உள்ள 22 பேரில் 12 பேர் முஸ்லிம் அல்லாதவர்கள் மெஜாரிட்டி ஆக இருக்க முடியும்.                        

 “ மாநில வக்ஃப் வாரியங்கள் இப்போதைய புதிய சட்டத்திருத்தப்படி, முஸ்லிம் அல்லாத ஒருவரை அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) வைத்திருக்க முடியும். அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்படும், வாரியத்தின் தலைவர், 2 எம்பி மற்றும் 2 எம்எல்ஏ இனிமேல் முஸ்லிம்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை;  பொதுப்பிரிவிலிருந்து இப்படியாக... முஸ்லிம்களின் மத விவகாரங்களை தலைமை தாங்கி நிர்வாகம் செய்வோரில்.... பெரும்பான்மை முஸ்லிம் அல்லாதவர்களை கொண்டு வாரியம் நிரப்பப் பட முடியும்,”           

மஸ்ஜித் மதரஸாக்களுக்காக நம் முன்னோர்கள் செய்த தர்மங்கள் வீணாகி விடக்கூடாது. 

மஸ்ஜித்களை உருவாக்க வேண்டும் மஸ்ஜித்களை பாதுகாக்க வேண்டும்.

மஸ்ஜித்களை அழிக்க வேண்டும் என்றெண்ணியவர்களை அல்லாஹ் அழித்த வரலாறுகள் நிறைய உண்டு. 

அவர்களின் அழிவு உடனே நடைபெறும். அல்லது பல காலங்கள் கழித்தும் நடக்கும்.

أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ (1) أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ (2) وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ (3) تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِنْ سِجِّيلٍ (4) فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَأْكُولٍ (5)        -    وَأَرْسَلَ أَبَرْهَة يَقُول لِلنَّجَاشِيِّ إِنِّي سَأَبْنِي كَنِيسَة بِأَرْضِ الْيَمَن لَمْ يُبْنَ قَبْلهَا مِثْلهَا فَشَرَعَ فِي بِنَاء كَنِيسَة هَائِلَة بِصَنْعَاء رَفِيعَة الْبِنَاء عَالِيَة الْفِنَاء مُزَخْرَفَة الْأَرْجَاء سَمَّتْهَا الْعَرَب الْقُلَّيْس لِارْتِفَاعِهَا لِأَنَّ النَّاظِر إِلَيْهَا تَكَاد تَسْقُط قَلَنْسُوَته عَنْ رَأْسه مِنْ اِرْتِفَاع بِنَائِهَا وَعَزَمَ أَبَرْهَة الْأَشْرَم عَلَى أَنْ يَصْرِف حَجّ الْعَرَب إِلَيْهَا كَمَا يُحَجّ إِلَى الْكَعْبَة بِمَكَّة وَنَادَى بِذَلِكَ فِي مَمْلَكَته فَكَرِهَتْ الْعَرَب الْعَدْنَانِيَّة وَالْقَحْطَانِيَّة ذَلِكَ وَغَضِبَتْ قُرَيْش لِذَلِكَ غَضَبًا شَدِيدًا حَتَّى قَصَدَهَا بَعْضهمْ وَتَوَصَّلَ إِلَى أَنْ دَخَلَهَا لَيْلًا فَأَحْدَثَ فِيهَا وَكَرَّ رَاجِعًا فَلَمَّا رَأَى السَّدَنَة ذَلِكَ الْحَدَث رَفَعُوا أَمْره إِلَى مَلِكهمْ أَبَرْهَة وَقَالُوا لَهُ إِنَّمَا صَنَعَ هَذَا بَعْض قُرَيْش غَضَبًا لِبَيْتِهِمْ الَّذِي ضَاهَيْت هَذَا بِهِ فَأَقْسَمَ أَبَرْهَة لَيَسِيرَنَّ إِلَى بَيْت مَكَّة وَلَيُخَرِّبَنَّهُ حَجَرًا حَجَرًا .

ذَكَرَ الْوَاقِدِيّ بِإِسْنَادِهِ أَنَّهُمْ لَمَّا تَعِبُوا لِدُخُولِ الْحَرَم وَهَيَّئُوا الْفِيل جَعَلُوا لَا يَصْرِفُونَهُ إِلَى جِهَة مِنْ سَائِر الْجِهَات إِلَّا ذَهَبَ فِيهَا فَإِذَا وَجَّهُوهُ إِلَى الْحَرَم رَبَضَ وَصَاحَ وَجَعَلَ أَبَرْهَة يَحْمِل عَلَى سَائِس الْفِيل وَيَنْهَرهُ وَيَضْرِبهُ لِيَقْهَر الْفِيل عَلَى دُخُول الْحَرَم

அப்ரஹா தனது யானைப் படைகளை  ஹரமை நோக்கி அனுப்ப முயன்ற போது அந்த யானைகள் அந்த திசையில் செல்லாமல் அடம் பிடித்தன. மற்ற திசைகளில் செலுத்தினால் அடம் பிடிக்கவில்லை. ஹரமின் பக்கம் செலுத்த முனைந்த போது மட்டும் முரண்டு பிடித்தன. அப்ரஹா எப்படியேனும்  தனது யானையை ஹரமின் பக்கம் செலுத்துவதற்காக அதனை அடித்து விரட்டிக் கொண்டிருந்தான். அந்நேரத்தில் தான் அல்லாஹ் அபாபீல் பறவைகளை  அனுப்பினான்.                          

وَأَرْسَلَ اللَّه عَلَيْهِمْ طَيْرًا مِنْ الْبَحْر أَمْثَال الْخَطَاطِيف وَالْبَلَسَان . مَعَ كُلّ طَائِر مِنْهَا ثَلَاثَة أَحْجَار يَحْمِلهَا : حَجَر فِي مِنْقَاره وَحَجَرَانِ فِي رِجْلَيْهِ أَمْثَال الْحِمَّص وَالْعَدَس لَا يُصِيب مِنْهُمْ أَحَدًا إِلَّا هَلَكَ وَلَيْسَ كُلّهمْ أَصَابَتْ وَخَرَجُوا هَارِبِينَ يَبْتَدِرُونَ الطَّرِيق

அவை  கடலில் இருந்து கிளம்பி வந்தன. சிறிய அளவில் இருந்த அந்த ஒவ்வொரு பறவையின் இரு கால்களிலும் இரு நெருப்புக் கற்கள், அதன் வாயில் ஒரு கல் என, ஒவ்வொரு பறவையுடனும் மூன்று கற்கள் இருந்தன. அதை அப்பறவைகள் யானைக் கூட்டத்தின் மீது வீசின. அந்தக் கற்கள் வெறும் துவரம் பருப்பு அல்லது சிறிய கொண்டைக் கடலை அளவில் மட்டுமே இருந்தன. ஆனால் அவை பட்டு யாருடைய  உடம்புக்குள் சென்றதோ அவர்கள் துடிதுடித்து அந்த இடத்திலேயே இறந்தனர். மற்றவர்கள் அங்கிருந்து ஓட ஆரம்பித்தனர்.

وَقَالَ اِبْن إِسْحَاق فَخَرَجُوا يَتَسَاقَطُونَ بِكُلِّ طَرِيق وَيَهْلِكُونَ عَلَى كُلّ مَنْهَل وَأُصِيبَ أَبَرْهَة فِي جَسَده وَخَرَجُوا بِهِ مَعَهُمْ يَسْقُط أُنْمُلَة أُنْمُلَة حَتَّى قَدِمُوا بِهِ صَنْعَاء وَهُوَ مِثْل فَرْخ الطَّائِر فَمَا مَاتَ حَتَّى اِنْصَدَعَ صَدْره عَنْ لُبّه فِيمَا يَزْعُمُونَ.

அபாபீல் பறவைகள் வீசிய நெருப்புக் கற்கள் உடலுக்குள் ஊடுருவி சென்றவுடன் உடம்பில் அங்கங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக கழன்று விழுந்து பலர் இறந்தனர். (யானைகளின் உடலுக்குள்ளும் அவை ஊடுருவி அவை மதம் பிடித்து அங்குமிங்கும் அங்குமிங்கு ஓடி இறந்தன.)  அப்ரஹாவின் உடம்பிலும் நெருப்புக் கல் விழுந்த து. அவனை அல்லாஹ் உடனே சாகடிக்கவில்லை. அவனுடைய உடம்பில் அங்கங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக கழன்று விழும் நிலையில் அவனோடு இருந்த  மற்றவர்கள் அதாவது கல் யார் மீது விழவில்லோயோ அவர்கள் நீண்ட தூரம் பயணம் செய்து யமன் வரை அவனைத் தூக்கி வந்தார்கள். மிகவும் வேதனைப் பட்டு கோழிக் குஞ்சு போன்று எலும்பும் தோலுமாக ஆகி விட்ட நிலையில்  அவன் கடைசியில் இறந்தான்.  அவனுடைய வாய் வழியாக அவனுடைய இருதயம் வெளியே வந்த நிலையில் அவன் இறந்தான் என வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.                               

படிப்பினை- இறையில்லத்தை பாழ்படுத்த வந்தவனின் நிலையை அல்லாஹ் இப்படித் தான் ஆக்கினான்

புக்து நஸ்ர் என்பவன் பைத்துல் முகத்தஸை நாசமாக்கினான். இறுதியில் அவருக்கு ஏற்பட்ட கதி..

وَقَالَ سَعِيد عَنْ قَتَادَة : قَالَ أُولَئِكَ أَعْدَاء اللَّه النَّصَارَى حَمَلَهُمْ بُغْض الْيَهُود عَلَى أَنْ أَعَانُوا بُخْتُنَصَّرَ الْبَابِلِيّ الْمَجُوسِيّ عَلَى تَخْرِيب بَيْت الْمَقْدِس وَقَالَ السُّدِّيّ : كَانُوا ظَاهَرُوا بُخْتُنَصَّرَ عَلَى خَرَاب بَيْت الْمَقْدِس حَتَّى خَرَّبَهُ وَأَمَرَ أَنْ تُطْرَح فِيهِ الْجِيَف (تفسير ابن كثير

 ஸுலைமான் (அலை) மரணித்த பின்பு யூதர்களின் கை வசம் பைத்துல் முகத்தஸ் இருந்த து அப்போது அதை மஜூஸியான  புஹ்து நஸ்ர் என்பவன் அதைக் கைப்பற்றி மாபரும் அழிவை ஏற்படுத்தினான். பைத்துல் முகத்தஸைக் கைப்பற்றி தீக்கிரையாக்கினான். தவ்ராத் வேதமும், பத்துக் கட்டளைகளும், தாபூத் என்ற பெட்டியும், மூஸா (அலை) அவர்களின் அற்புதக் கைத்தடியும் நெருப்புக்கு இரையாகின. பள்ளிவாசலை அவனது ஆட்கள் இடித்துத் தரை மட்டமாக்கினர். புக்துநஸர் கையில் அகப்படாமல் யூதர்கள் தப்பியோடினார்கள். இப்படி ஓடியவர்களில் சிலர் இப்போதைய மதீனாவிலும், சிரியாவிலும் குடியேறினார்கள். இவ்வாறாக 40 ஆண்டுகள் வெறும் காடாகவே பைத்துல் முகத்தஸ் இருந்தது. 

புக்து நஸ்ரின் மோசமான அழிவு பற்றி பல விதமான அறிவிப்புகள் உள்ளன. 

وقوله تعالي : {ثُمَّ رَدَدْنَا لَكُمُ الْكَرَّةَ عَلَيْهِمْ...  (سورة الاسراء} وعذب بختنصر بالمسخ سبع سنين ومسخ الله تعالى بختنصر من الدوابّ كلها، فجعل من كل صنف من الدوابّ رأسه رأس سبع من السباع الأسد، ومن الطير النسر،   (تفسير  الطبري

அல்லாஹ் புக்து நஸ்ரின் உருவத்தை  வன விலங்குகளின் ஒன்றின் உருவத்தைப் போல மாற்றியமைத்தான் என மேற்படி அறிவிப்பு... 

மற்றொரு அறிவிப்பில் நம்ரூதைப் போல அவனது மூளையில் கொசு புகுந்து  வேதனை செய்த து என்றும் கூறப்பட்டுள்ளது

ثم لما أراد الله هلاك بختنصر انبعث فقال لمن في يده من بني إسرائيل: أرأيتم هذا البيت الذي خربته والناس الذين قتلت منهم؟ وما هذا البيت؟ قالوا: هذا بيت الله وهؤلاء أهله كانوا من ذراري الأنبياء فظلموا وتعدوا فسلطت عليهم بذنوبهم وكان ربهم رب السموات والأرض ورب الخلق كلهم يكرمهم ويعزهم فلما فعلوا ما فعلوا أهلكهم الله وسلط عليهم غيرهم فاستكبر وظن أنه بجبروته فعل ذلك ببني إسرائيل. قال: فأخبروني كيف لي أن أطلع إلى السماء العليا فأقتل من فيها وأتخذها ملكا لي فإني قد فرغت من الأرض، قالوا: ما يقدر عليها أحد من الخلائق قال: لتفعلن أو لأقتلنكم عن آخركم، فبكوا وتضرعوا إلى الله تعالى فبعث الله عليه بقدرته بعوضة فدخلت منخرة حتى عضت بأم دماغه فما كان يقر ولا يسكن حتى يوجأ له رأسه على أم دماغه فلما مات شقوا رأسه فوجدوا البعوضة عاضة على أم دماغه ليري الله العباد قدرته (تفسير البغوي)

சுருக்கம்- பைத்துல் முகத்தஸை நாசப்படுத்திய புக்து நஸ்ரை அல்லாஹ் உடனே அழிக்கவில்லை. அவன் கடைசி காலத்தில் மிகவும் அட்டூழியம் செய்தான். அவனுக்குள் பெருமை குடி கொண்டது. மோசமான கூட்டமான யூதர்கள் விஷயத்தில் நிறைய யூதர்களைக் கொன்றதன் மூலம் நபிமார்களால் செய்ய முடியாத செயலை தாம் செய்ததாக அவன் பெருமை கொண்டான். அதனால் இன்னும் நிறைய அநியாயம் செய்தான். அப்போது பனீ இஸ்ராயீல் சமூகத்தில் சில நல்லவர்கள் அவனது அழிவுக்காக துஆ செய்தனர். இறுதியில் அவனுடைய மூளைக்குள் ஒரு கொசு புகுந்தது. அது அவனை வேதனைப் படுத்திக் கொண்டிருந்தது. அதனால் அவன் இறந்தான். அவன் இறந்த பின் அவனது தலையை பிளந்து பார்த்த அவனது மூளையை தாக்கிக் கொண்டிருந்த கொசு கண்டு பிடிக்கப்பட்டது.                

கடைசி காலத்தில் இறையில்லமான கஃபாவை தாக்க வரும் கும்பலை அல்லாஹ் அழிப்பான் என்ற முன்னறிவிப்பு

عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَغْزُو جَيْشٌ الْكَعْبَةَ فَإِذَا كَانُوا بِبَيْدَاءَ مِنْ الْأَرْضِ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ وَفِيهِمْ أَسْوَاقُهُمْ وَمَنْ لَيْسَ مِنْهُمْ قَالَ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ ثُمَّ يُبْعَثُونَ عَلَى نِيَّاتِهِمْ (بخاري

கடைசி காலத்தில் கஃபாவை தாக்க ஒரு கும்பல்  படையெடுத்து வரும் அப்போது அவர்கள் வரும் வழியிலேயே பூமி பிளந்து உள்வாங்கப் படுவார்கள். அப்போது அந்தக் கும்பல் மட்டுமல்லாமல் அங்கு கடை வைத்திருக்கும் வியாபாரிகள் உட்பட அனைவரும் அழிந்து விடுவார்கள். இவ்வாறு நபி ஸல் அவர்கள் கூறிய போது அன்னை ஆயிஷா ரழி அவர்கள் நபி ஸல் அவர்களிடம் கெட்டவர்கள் அழிக்கப்படுவது நியாயம் தான் ஆனால் நல்லவர்களும் ஏன் அழிக்கப்பட வேண்டும் என்று காரணம் கேட்கும்போது நபி ஸல் அவர்கள் கூறினார்கள். தீயவர்கள் அழிக்கப்படும்போது நல்லவர்களும் அழிக்கப்படுவார்கள். பின்பு அவரவர் நிய்யத்துக்குத் தகுந்த மாதிரி எழுப்பப் படுவார்கள் என்று கூறினார்கள். அதாவது அதற்குத் தகுந்த நற்கூலி வழங்கப் படுவார்கள்.   

மஸ்ஜித்களை திட்டமிட்டு எதிரிகள்  அழித்தாலும் அதற்கு பதிலாக எண்ணற்ற மஸ்ஜித்கள் உருவாகின்றன. ஆனாலும் ஒரு மஸ்ஜிதுக்கு எதிரிகள் மூலம் ஆபத்து வந்தாலும் அதைப்  பார்த்துக் கொண்டு சும்மா இருப்பவன் முஃமினல்ல. 

உலகில் மற்ற நாடுகளை விட இந்தியாவில் தான் அதிகமான மஸ்ஜித்கள் இருக்கிறது என்பது இதற்கு மிகப் பெரும் சான்றாகும். 

அதுமட்டுமல்ல. உலகம் முழுவதும் முஸ்லிம்களே கிடையாது என்று சொல்லப்பட்ட பல நாடுகளில்  இன்று முஸ்லிம்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டேயிருக்கிறது. பள்ளிவாசல்களின் எண்ணிக்கையும் பெருகிக் கொண்டேயிருக்கிறது. 

சீன அரசாங்கம் ஆயிரக்கணக்கான மஸ்ஜித்களை இடித்ததாகக் கூறுவார்கள். ஆனால் சீன அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது வெய்சூ பிராந்தியத்தில் மட்டும் 24,000 மஸ்ஜித்கள் உருவாகியுள்ளதாக கூறியுள்ளார். ஃபிரான்ஸில் 2014 ம் ஆண்டுகளுக்கு முன்பு  20 பெரிய பள்ளிவாசல்கள் மட்டுமே இருந்துள்ளன. ஆனால் இன்று ஆயிரக்கணக்கான மஸ்ஜித்கள் உள்ளன.  ஜெர்மனியில் 1999- ல் 40  பள்ளிவாசல்கள் மட்டுமே இருந்துள்ளன. ஆனால் இன்று 4000  மஸ்ஜித்கள் உள்ளன. இங்கிலாந்தில் 1890- ல் ஒரு  பள்ளிவாசல் மட்டுமே இருந்துள்ளது. ஆனால் இன்று இங்கிலாந்து முழுவதும் ஆயிரக்கணக்கான  மஸ்ஜித்கள் உள்ளன. இதுபோன்று பெல்ஜியம், இத்தாலி, ரஷ்யா போன்ற பல்வேறு நாடுகளிலும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் நபர்களின் எண்ணிக்கையும் பள்ளிவாசல்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன. நேபாளத்தில் கடந்த 15 ஆண்டுகளில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் இஸ்லாத்தை ஏற்றதாக நேபாள் இஸ்லாமிக் சொஸைட்டியில் உள்ள குர்ஷித் ஆலம் என்பவர் குறிப்பிடுகிறார். 

ஒரு வாரத்திற்கு இரண்டு பள்ளிவாசல்கள் வீதம் ஆண்டுக்கு 100 பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் கட்டப்படுகின்றன என்று பிரபல அமெரிக்க செய்தி ஊடகமான சி.என்.என். குறிப்பிடுகிறது. அதுமட்டுமல்லாமல் இஸ்லாத்தின் அபரிமிதமான வளர்ச்சி அமெரிக்காவில் எந்த அளவிற்கு உச்சத்தை எட்டியது என்றால் கிறித்தவ தேவாலயங்கள் மூடப்பட்டு அந்த தேவாலயங்கள் மஸேஜித்களாக மாற்றப்பட்ட நூற்றுக்கணக்கான நிகழ்வுகள் அமெரிக்க கிறித்தவ மக்கள் இஸ்லாத்தை நோக்கி எந்த அளவிற்கு ஈர்க்கப்பட்டுள்ள்னர் என்பதற்கு சான்றாக உள்ளது

வியாழன், 5 ஜூன், 2025

குர்பானியின் சட்டங்கள்

 06-06-2025

துல்ஹஜ்-9


بسم الله الرحمن الرحيم  

உழ்ஹியாவின் சட்டங்கள் 

மற்றும் ஈதுல் அழ்ஹா பயான் 



https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்


இந்த வருடம் 2025-ல் ஜும்ஆ நாளுக்கு அடுத்த நாளே ஈதுல் அழ்ஹா வருவதால் முதல் நாள் ஜும்ஆவில் அறுப்பின் சட்டங்களைப் பேசி விட்டு, இரண்டாம் நாளான ஈதுடைய நாளில் பங்கு வைப்பதின் சட்டங்களையும் அகீகா மற்றும் நேர்ச்சை பற்றிய சட்டங்களையும் அய்யாமுத் தஷ்ரீக்குடைய தக்பீரைப் பற்றியும் பேசி விட்டு அதற்குப் பிறகு கடைசி காலத்தில் பாலஸ்தீன மண்ணில் நடைபெறப்போகும் மிகப்பெரிய யுத்தத்தில் முஸ்லிம்களுக்கு அல்லாஹ் தக்பீர் என்ற தக்பீர் முழக்கத்தைக் கொண்டே அல்லாஹ் வெற்றியைத்தருவான் என்ற முன்னறிவிப்பையும் பேசுவதுடன் இன்றைய சூழ்நிலையில் அந்த பாலஸ்தீன மக்கள் படும் துன்பங்களை சுட்டிக் காட்டி அதற்காக அழுது  துஆச் செய்யும்படி ஒவ்வொரு முஃமினையும் தூண்ட வேண்டும்.                      

لَنْ يَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَكِنْ يَنَالُهُ التَّقْوَى مِنْكُمْ كَذَلِكَ سَخَّرَهَا لَكُمْ لِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَبَشِّرِ الْمُحْسِنِينَ (37)الحج

சீக்கிரம் குர்பானி கொடுப்பது நல்லது. குத்பா முடிந்து மிம்பரிலிருந்து கீழே இறங்கியுடன்  நபி ஸல் குர்பானி கொடுத்துள்ளார்கள்

عَنْ جَابِرِ رضي الله عنه قَالَ شَهِدْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْأَضْحَى بِالْمُصَلَّى فَلَمَّا قَضَى خُطْبَتَهُ نَزَلَ مِنْ مِنْبَرِهِ وَأُتِيَ بِكَبْشٍ فَذَبَحَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ وَقَالَ بِسْمِ اللَّهِ وَاللَّهُ أَكْبَرُ هَذَا عَنِّي وَعَمَّنْ لَمْ يُضَحِّ مِنْ أُمَّتِي (ابوداود)

அறுப்பின் சுன்னத்துகள்-

குர்பானிப் பிராணியை அறுக்கும் போது  நிய்யத்துடன் வஜ்ஜஹ்த்து, பிஸ்மில்லாஹ் ஓதி தக்பீர் சொல்வது நல்லது சலவாத் கூறுவதும் நல்லது என இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்கள் தமது  நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

عَنْ جَابِرِ رضي الله عنه قَالَ:ضَحَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِكَبْشَيْنِ فِى يَوْمِ الْعِيدِ فَقَالَ حِينَ وَجَّهَهُمَا (إِنِّى وَجَّهْتُ وَجْهِىَ لِلَّذِى فَطَرَ السَّمَوَاتِ وَالأَرْضَ حَنِيفاً وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ) (إِنَّ صَلاَتِى وَنُسُكِى وَمَحْيَاىَ وَمَمَاتِى لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لاَ شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ اللَّهُمَّ مِنْكَ وَلَكَ عَنْ مُحَمَّدٍ وَأُمَّتِهِ ثُمَّ سَمَّى اللَّهَ وَكَبَّرَ وَذَبَحَ (نسائ  وتستحب الصلاة على النبيصلى الله عليه وسلم عند الذبح (الأم للشافعي)

நாம் குர்பானி கொடுக்கும்போது அல்லாஹும்ம ஹாதா மின்க்க வஇலைக்க ஃபதகப்பல் மின்னீ என்று ஓதலாம்.

எந்தப்பிராணியை அறுத்தாலும் அறுக்கும் முன் கத்தியை தீட்டுவது, 

அறுத்தவுடன் உடனே உரிக்காமல் சூடு ஆற விடுவது நல்லதாகும்

عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ كَتَبَ الْإِحْسَانَ عَلَى كُلِّ شَيْءٍ فَإِذَا قَتَلْتُمْ فَأَحْسِنُوا الْقِتْلَةَ وَإِذَا ذَبَحْتُمْ فَأَحْسِنُوا الذَّبْحَ وَلْيُحِدَّ أَحَدُكُمْ شَفْرَتَهُ فَلْيُرِحْ ذَبِيحَتَهُ (مسلم) قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا قُطِعَ مِنْ الْبَهِيمَةِ وَهِيَ حَيَّةٌ فَهِيَ مَيْتَةٌ1 (أحمد

உயிர் முற்றிலும் பிரியாத நிலையில் எந்தப் பிராணியின் தோல் உரிக்கப்படுமோ அது முறையாக அறுக்கப் பட்டிருந்தாலும் தானாக செத்த பிராணியைப் போன்றுதான். இதன் விளக்கம் என்னவென்றால் நாம் முறையாக பிராணியை அறுப்பதே நஜீஸாக இருக்கக்கூடிய இரத்தத்தை விட்டும் நீங்கி சுத்தமான இறைச்சி நமக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான். மனிதன் உட்பட எந்த ஒரு உயிரிணமும் உயிரோடு இருக்கும்போது இரத்த ஓட்டம் எங்கும் நிற்காமல் ஓடிக் கொண்டே இருக்கிறது. ஆனால் எப்போது அப் பிராணி நாம் அறுக்காமல் இறந்து விடுகிறதோ அப்போது இரத்த ஓட்டம் நின்று விடுவதால் இரத்தம் மற்ற உறுப்புக்களின் பாகங்களோடு கலந்து விடுகிறது. அதனால் அந்தப் பிராணியே நஜீஸாகி விடுகிறது. அதே நேரத்தில் நாம் முறையாக அறுத்து அதன் துடிப்புகள் அடங்கும் வரை விட்டு விடுகிறோம். அதன் உயிர் முழுமையாக பிரியும்போது தான் முழு இரத்தமும் வெளியேறுகிறது. துடிப்புகள் அடங்கும் முன்பே நாம் அறுக்கும்போது இரத்தம் முழுமையாக வெளியேறுவதில்லை. அதன் உடல் பாகங்களோடு இரத்தம் கலந்து விடுவதால் அந்தப் பிராணியை நஜீஸ் என்கிறோம்.             

وَلِأَنَّ الْمُنَجَّسَ هُوَ اخْتِلَاطُ الدَّمِ الْمَسْفُوحِ بِأَجْزَائِهِ عِنْدَ الْمَوْتِ ، حَتَّى حَلَّ الْمُذَكَّى لِانْعِدَامِ الدَّمِ فِيهِ (هداية

அறுக்கப்படும் பிராணிக்கு முன்னால் கத்தியை தீட்டுவது அதனை பல முறை சாகடிப்பதாகும்

عن ابن عباس رضي الله عنه أن رجلا أضجع شاة وهو يحد شفرته2 فقال النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أتريد أن تُمِيتَها موتاتٍ هَلاَّ حَدَدْتَ شَفْرَتك قبل أن تُضْجِعَها (مستدرك الحاكم) كتاب الاضحية) عن معاوية بن قرة عن أبيه : أن رجلا قال : يا رسول الله إني لأرحم الشاة أن أذبحها فقال رسول الله صلى الله عليه و سلم : إن رَحِمْتَها رحِمَك الله  (مستدرك الحاكم) كتاب الاضحية)

ஒருவர் கத்தியை தீட்டியபடியே ஆட்டைப் படுக்க வைத்தார். அதைக் கண்ட நபி ஸல் அவர்கள் இதை ஒருமுறை மவ்த்தாக்க நினைக்கிறீரா அல்லது பலமுறை மவ்த்தாக்க நினைக்கிறீரா நீ  ஆட்டைப் படுக்க வைக்கும் முன்பு மறைவாக கத்தியைத் தீட்டியிருக்க வேண்டாமா என நபி ஸல் அவர்கள் எச்சரித்தார்கள். மற்றொரு நபித்தோழர் நபி ஸல் அவர்களிடம் நான் ஆடுகளை அறுக்கும்போது அவைகளிடம் மிகவும் மென்மையாக நடந்து கொள்ள விரும்புவேன் என்று கூறியவுடன் நபி ஸல் கூறினார்கள். நீர் அவ்வாறு அவைகள் மீது இரக்கம் காட்டினால் அல்லாஹ் உம் மீது இரக்கம் காட்டுவான் என்றார்கள்.

மென்மையாக அழைத்துச்செல்வதும், தண்ணீர் கொடுப்பதும், ஒரு ஆட்டின் முன் மற்றொரு ஆட்டை அறுக்காமலிருப்பதும் 

والأولى أن تساق إلى المذبح برفق  وتضجع  برفق ويعرض عليها الماء قبل الذبح ولا يحد الشفرة قِبَالتها ولا يذبح بعضها قِبالة بعض (بحر الرائق) عنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رض قَالَ مَرَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَجُلٍ وَهُوَ يَجُرُّ شَاةً بِأُذُنِهَا فَقَالَ دَعْ أُذُنَهَا وَخُذْ بِسَالِفَتِهَا3 (ابن ماجة)  عن الوضين بن عطاء رضي الله عنه  أن جزارًا فتح بابا علي شاة ليذبحها فانفلتت منه حتي جاءت الي النبي صلي الله عليه وسلم فأَتْبَعَها فأخذ يسحبها برِجْلِها4 فقال لها النبي صلي الله عليه وسلم اصبري لأمر الله وأنت يا جزار  (مصنف عبد الرزاق) جزارகசாப்புக்கடைக்காரர்

நபி ஸல் அவர்கள் ஒரு மனிதரைக் கடந்து சென்றார்கள். அவர் தனது ஆட்டின் காதைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்தார். அதைக் கண்ட நபி ஸல் அவர்கள் அதன் காதை விட்டு விடு. அதன் பிடரியைப் பிடித்து இழுத்து வா என்றார்கள். காதைப் பிடித்தால் ஆட்டுக்கு வலி ஏற்படும். பிடரியைப் பிடித்தால் வலி ஏற்படாது என்பதால் இவ்வாறு. கூறினார்கள். மற்றொருவர் ஆடு அடைத்து வைக்கப்படிருந்த இடத்தைத் திறந்தார். அதிலிருந்து அந்த ஆடு நழுவி நேராக நபி ஸல் அவர்களை நோக்கி ஓடி வந்தது. அதை விரட்டி வந்த அதன் உரிமையாளர் அதன் காலைப் பிடித்து தரதரவென இழுத்தார். நபி ஸல் அவரைக் கண்டிக்கும் விதமாக அல்லாஹ்வின் அனுமதியின் பேரில் நீ இதை அறுக்கிறாய் சற்று பொறுமையைக் கடைபிடி என்றார்கள்.

மிருகங்களும் அடைக்கலம் தேடி வருகின்ற புகலிடமாக நபி ஸல் அவர்கள் இருந்தார்கள்

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ قَالَ أَرْدَفَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَلْفَهُ ذَاتَ يَوْمٍ فَأَسَرَّ إِلَيَّ حَدِيثًا لَا أُحَدِّثُ بِهِ أَحَدًا مِنْ النَّاسِ وَكَانَ أَحَبُّ مَا اسْتَتَرَ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِحَاجَتِهِ هَدَفًا أَوْ حَائِشَ نَخْلٍ قَالَ فَدَخَلَ حَائِطًا لِرَجُلٍ مِنْ الْأَنْصَارِ فَإِذَا جَمَلٌ فَلَمَّا رَأَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَنَّ وَذَرَفَتْ عَيْنَاهُ فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَسَحَ ذِفْرَاهُ فَسَكَتَ فَقَالَ مَنْ رَبُّ هَذَا الْجَمَلِ لِمَنْ هَذَا الْجَمَلُ فَجَاءَ فَتًى مِنْ الْأَنْصَارِ فَقَالَ لِي يَا رَسُولَ اللَّهِ فَقَالَ أَفَلَا تَتَّقِي اللَّهَ فِي هَذِهِ الْبَهِيمَةِ الَّتِي مَلَّكَكَ اللَّهُ إِيَّاهَا فَإِنَّهُ شَكَا إِلَيَّ أَنَّكَ تُجِيعُهُ وَتُدْئِبُهُ(ابوداود

நபி ஸல் அவர்கள் சுவதேவைக்காக ஒரு அன்சாரித் தோழரின் பின் பக்கச் சுவற்றின் பக்கம் ஒதுங்கியபோது அங்கே ஒரு ஒட்டகம் நபி ஸல் அவர்களைக் கண்டவுடன் தேம்பி அழத் துவங்கியது.  நபி ஸல் அவர்கள் அதன் திமிலைத் தடவிக் கொடுத்த பின் அது அமைதியானது உடனே நபி ஸல் அவர்கள் அதன் உரிமையாளரை அழைத்து நீர் இந்த வாயில்லாப் பிராணிகள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்ச வேண்டாமா நீ அதைப் பட்டினி போட்டதாகவும், அதைக் கொடுமைப் படுத்தியதாகவும் என்னிடம் முறையிட்டது என நபி ஸல் கூறினார்கள்

அறுக்கும் போது குர்பானிப் பிராணியை கிப்லாவை முன்னோக்கி வைத்து அறுப்பது

استقبال الذابح القبلة وتوجيه الذبيحة إليها وذلك في الهدي والأضحية أشد استحبابا لأن الاستقبال مستحب في القربات وفي كيفية توجيهها ثلاثة أوجه أصحها يوجه مذبحها إلى القبلة ولا يوجه وجهها ليمكنه هو أيضا الاستقبال والثاني يوجهها بجميع بدنها والثالث يوجه قوائمها5(مجموع

அறுக்கத் தெரிந்தால் முடிந்த வரை தானே அறுப்பது, அல்லது அறுப்பவருக்கு பக்கத்தில் நிற்பது

الْأَوْلَى في الْقُرَبِ أَنْ يَتَوَلَّاهَا الْإِنْسَانُ بِنَفْسِهِ وَإِنْ أَمَرَ بِهِ غَيْرَهُ فَلَا يَضُرُّ لِأَنَّهُ عليه الصَّلَاةُ وَالسَّلَامُ سَاقَ مِائَةَ بَدَنَةٍ فَنَحَرَ بيده نَيِّفًا وَسِتِّينَ ثُمَّ أَعْطَى الحِرْبَةَ عَلِيًّا فَنَحَرَ الْبَاقِيَ وَإِنْ كان لَا يُحْسِنُ ذلك فَالْأَحْسَنُ أَنْ يَسْتَعِينَ بِغَيْرِهِ كيلا يَجْعَلَهَا مَيْتَةً وَلَكِنْ يَنْبَغِي أَنْ يَشْهَدَهَا بِنَفْسِهِ لِقَوْلِهِ عليه الصَّلَاةُ وَالسَّلَامُ لِفَاطِمَةَ رض قَوْمِي فَاشْهَدِي أُضْحِيَّتَكِ فإنه يُغْفَرُ لَك بِأَوَّلِ قَطْرَةٍ من دَمِهَا كُلُّ ذنبه (سنن الكبري للبيهقي)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஜ்ஜதுல் விதாவில் 100 ஒட்டகங்களை அறுத்தார்கள். அதில் 63 ஒட்டகங்களை தாமே அறுத்தார்கள். மீதியை அலீ ரழி அவர்களிடம் ஒப்படைத்தார்கள்.

குர்பானிப் பிராணியில் கூட்டு சேர்ந்து கொண்ட ஏழு பேர் அதனை அறுக்கும்போதும் கூட்டாக அறுத்த சம்பவம்

عن أَبي الأَسَدِّ السُّلَمِىّ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ رضي الله عنه قَالَ :كُنْتُ سَابِعَ سَبْعَةٍ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَمَرَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَجَمَعَ كُلُّ رَجُلٍ مِنَّا دِرْهَمًا فَاشْتَرَيْنَا أُضْحِيَّةً بِسَبْعَةِ دَرَاهِمَ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ لَقَدْ أَغْلَيْنَا بِهَا6 فَقَالَ النَّبِىُّ صلى الله عليه وسلم: إِنَّ أَفْضَلَ الضَّحَايَا أَغْلاَهَا وَأَنْفَسُهَا  فَأَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم  رَجُلاً يَأْخُذُ بِيَدٍ وَرَجُلاً بِيَدٍ وَرَجُلاً بِرِجْلٍ وَرَجُلاً بِرِجْلٍ وَرَجُلاً بِقَرْنٍ وَرَجُلاً بِقَرْنٍ وَذَبَحَهَا السَّابِعُ وَكَبَّرْنَا عَلَيْهَا جَمِيعًا (مستدرك الحاكم) كتاب الاضحية) (طبراني)

ஒருமுறை நாங்கள் ஏழு பேர் ஒரு பிராணியில் கூட்டாக இருந்தோம். அதில் நபி ஸல் அவர்களும் ஒருவராக இருந்தார்கள். ஆளுக்கு ஒரு திர்ஹம் சேர்த்து வைத்து ஏழு திர்ஹத்திற்கு ஒரு பிராணியை வாங்கினோம். அந்தப் பிராணியை அறுக்கும் போது அதன் நான்கு கால்களை நான்கு பேர் பிடிக்க, அதன் இரு கொம்புகளை இருவர் பிடிக்க, ஏழாவது நபர் அதனை அறுத்தார்.                   


அறுக்கும் முறை

பிராணியின் கழுத்திலுள்ள இரத்தக்குழாய்கள், மூச்சுக்குழல், உணவுக்குழல் ஒரே நேரத்தில் அறுபட வேண்டும். அப்படி அறுத்தாலும் துடிப்பு அடங்கிய பின்பே தோலை உரிக்க வேண்டு இதனால் இரத்தம் விரைவாக வெளியேறி இறைச்சி சுத்தமாகும். கத்தி கூர்மையாக இருப்பதால் விரைவாக அறுக்க முடியும். அதனால் பிராணி வலியை உணர்வதில்லை. உதாரணமாக கூர்மையான பிளேடினால் ஏற்படும் காயம் உடனே வலியைத் தோற்றுவிப்பதில்லை. இரத்தம் வழிந்து சிறிது நேரம்  கழித்தே வலியை உணர்கிறோம்.

.

மேல்நாடுகளில் பின்பற்றப்படும் ஸ்டன்னிங் முறையால் கறியும் சுத்தமாகாது. பிராணியும் வேதனையை உணரும் 

இம்முறைப்படி பிராணியின் தலையில் ஓங்கி அடிக்கப்படுகிறது. உடனே பிராணி செயலிழந்து விடுகிறது. ஆனால் நினைவை இழப்பதில்லை. பிராணி செயலிழந்து விடுவதால் அதற்கு எவ்வித வலியும் ஏற்படுவதில்லை எனக் கருதலாம். ஆனால் உண்மையில் பிராணி மிகுந்த வேதனையுடன் இருக்கிறது.  மூளையும், நரம்பு மண்டலமும் செயலிழந்து விடுவதால் உடலில் துடிப்பு ஏற்படுவதில்லை. அதன் காரணமாக இரத்தம் உடலிலேயே தங்கி விடுகிறது. விரைவாக தசைகளை வெட்டுவதால் சிறிது இரத்தமே வெளியேறக்கூடும். எனவே இறைச்சி சுத்தமற்றதாக ஆகி விடுகிறது. அதன் தோற்றமும் மாறுபடுகிறது. சுவையும் குறைந்து விடுகிறது

ஆகுமாக்கப்பட்ட பிராணிகளில் சாப்பிட தடுக்கப்பட்ட ஏழு பொருட்கள். அவற்றில் இரத்தம் ஹராம். மற்றவை மக்ரூஹ்

1. இரத்தம், 2. பித்தப்பை, 3. ஆண்குறி, 4. பெண்குறி, 5. இரு விதைகள், 6. மூத்திரப்பைகள், 7. கழலை

عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَكْرَهُ مِنَ الشَّاةِ سَبْعًا : الْمَرَارَةَ ، وَالْمَثَانَةَ ، وَالْمحيَاةَ ، وَالذَّكَرَ ، وَالأُنْثَيَيْنِ ، وَالْغُدَّةَ ، وَالدَّمَ (طبراني




கூட்டுக் குர்பானியாக இருந்தாலும் அதன் இறைச்சியிலுருந்து கொஞ்சம் சாப்பிடுவது சுன்னத். 

போய் வாங்குவது கடும் சிரமம் என்று இருந்தாலே தவிர. சிலர் கூட்டுக் குர்பானிக்கு பணம் மட்டும் கொடுத்துவிட்டு அதன் இறைச்சியை உண்பதை கண்ணியக்குறைவாக கருதுவர். அது தவறாகும்

فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ (28الحج) وفي حديث حجة الوداع... ثُمَّ انْصَرَفَ (رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ) إِلَى الْمَنْحَرِ فَنَحَرَ ثَلَاثًا وَسِتِّينَ بِيَدِهِ ثُمَّ أَعْطَى عَلِيًّا فَنَحَرَ مَا غَبَرَ وَأَشْرَكَهُ فِي هَدْيِهِ ثُمَّ أَمَرَ مِنْ كُلِّ بَدَنَةٍ بِبَضْعَةٍ فَجُعِلَتْ فِي قِدْرٍ فَطُبِخَتْ فَأَكَلَا مِنْ لَحْمِهَا وَشَرِبَا مِنْ مَرَقِهَا (مسلم) بَاب حَجَّةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ –قَالَ عَبْد اللَّه بْن وَهْب قَالَ لِي مَالِك أُحِبّ أَنْ يَأْكُل مِنْ أُضْحِيَّته لِأَنَّ اللَّه يَقُول" فَكُلُوا مِنْهَ

ஹஜ்ஜதுல் விதாவில் நபி ஸல் அவர்கள் மொத்தம் 100 ஒட்டகங்கள் குர்பானி கொடுத்தார்கள். தான் அறுக்கும் குர்பானி இறைச்சியில் சிறிதளவேனும் சாப்பிடுவது நல்லது என்ற அடிப்படையில் நபி ஸல் அவர்கள் அத்தனை ஒட்டகங்களில் இருந்தும் ஒவ்வொரு மாமிசத் துண்டை எடுத்து சால்னா காய்ச்சும்படி ஏவினார்கள். அந்த மாமிசத்தை உண்டதோடு, அந்த சால்னாவை சிறிதளவு குடித்தார்கள். அதாவது அத்தனை ஒட்டகங்களின் இறைச்சி சாறு அதில் இறங்கி விட்டதால் இவ்வாறு செய்தார்கள். 

நிறைமாத கர்ப்பமான ஆட்டை அறுப்பது அதன் குட்டியையும் அறுத்ததாக கணக்கிடப்படும்

ذَكَاة الْجَنِينِ  عَنْ أَبِي سَعِيدٍ رض قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْجَنِينِ فَقَالَ كُلُوهُ إِنْ شِئْتُمْ وَقَالَ مُسَدَّدٌ  قُلْنَا يَا رَسُولَ اللَّهِ نَنْحَرُ النَّاقَةَ وَنَذْبَحُ الْبَقَرَةَ وَالشَّاةَ فَنَجِدُ فِي بَطْنِهَا الْجَنِينَ أَنُلْقِيهِ أَمْ نَأْكُلُهُ قَالَ كُلُوهُ إِنْ شِئْتُمْ فَإِنَّ ذَكَاتَهُ ذَكَاةُ أُمِّهِ رواه ابو داود 

குர்பானித் தோலை விற்பது கூடாது. அறுப்பவருக்குக் கூலியாகவும் தரக்கூடாது. ஏழைகளுக்கு தரலாம். மஸ்ஜித் மதரஸாக்களில் அதை வாங்கினாலும் அதை ஏழை மாணவர்களுக்கு முறையாக பயன்படுத்த வேண்டும். 

  ما ذا يفعل بجلدها؟  قال صاحب الهداية:ويتصدق بجلدها أو يعمل منه آلة تستعمل في البيت لقوله عليه السلام لعلي رض "تصدق بجلودها وخطامها ولا تعط أجر الجزار منها شيئا" ولقوله عليه السلام "من باع جلد أضحيته فلا أضحية له" لأن الاعطاء بجلدها او بجزء منهاأجرة في معني البيع


ஈதுல் அழ்ஹா பயான்

குர்பானிக் கறியை பங்கிடுவது தொடர்பான விளக்கங்கள்

فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ (28) ففي  تفسير القرطبي :   فيه ثلاث وعشرون مسألة :

الرابعة عشرة: ذهب أكثر العلماء إلى أنه يستحب أن يتصدق بالثلث ويطعم الثلث ويأكل هو وأهله الثلث.

குர்பானி இறைச்சியை மூன்று பங்காக வைத்து ஒரு பங்கை தனக்கும் 

மற்றொரு பங்கை உறவினர்களுக்கும் மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுப்பது நல்லது

الثامنة : { فكلوا منها } أمر معناه الندب عند الجمهور ويستحب للرجل أن يأكل من هديه وأضحيته وأن يتصدق بالأكثر   مع تجويزهم الصدقة بالكل وأكل الكل   : { فكلوا منها وأطعموا } يدل على أنه لا يجوز بيع جميعه ولا التصدق بجميعه 

தான் அறுத்த பிராணியில் கொஞ்சமேனும் சாப்பிட்டு பெரும்பகுதியை தர்மம் செய்வது நல்லது. குடும்பம் பெரிதாக இருந்தால் பெரும்பகுதியை தனக்கே உபயோகப்படுத்துவதும் கூடும். எக்காரணத்தைக் கொண்டும் குர்பானிக் கறியை விற்பது கூடாது. முற்றிலுமாக தர்மம் செய்வதும் குர்ஆன் ஆயத் அடிப்படையில் நல்லதல்ல.

நேர்ச்சையாக இருந்தால் முற்றிலுமாக தர்மம் செய்து விட வேண்டும். உறவினர்களுக்கு தர  முடியாது

 العاشرة (وليوفوا نذورهم) ويدل ذلك على أن النذر لا يجوز أن يأكل منه وفاء بالنذر وكذلك جزاء الصيد وفدية الأذى لأن المطلوب أن يأتي به كاملا من غير نقص لحم ولا غيره فإن أكل من ذلك كان عليه هدي كامل والله أعلم 

நேர்ச்சை இரண்டு வகை

ومن نذر نذرا مطلقا فعليه الوفاء به وإن علق نذره بشرط فوجد الشرط فعليه الوفاء بنفس النذر (هداية

  எனக்கு இந்தக் காரியம் நடந்தால் நான் இன்ன தர்ம ம் செய்வேன் என நேர்ச்சை செய்வது. இது இரண்டாவது வகை. இந்த நேர்ச்சையைப் பொறுத்த வரை இவர் நினைத்த காரியம் நிறைவேறினால் மட்டுமே நேர்ச்சை கடமையாகும்.  மற்றொன்று எதையும் நிபந்தனையிடாமல் மனதில் ஒரு காரியம் நல்ல படியாக நடைபெற வேண்டும் என்பதற்காக நான் இன்ன தர்ம ம் செய்வேன் என நேர்ச்சை செய்வது. இந்த நேர்ச்சைக்கு அந்தக் காரியம் நடைபெற்று முடிய வேண்டும் என்ற அவசியம் கிடையாது முன்பே அவர் நினைத்த நாளில் நிறைவேற்ற வேண்டும்.                                    

எந்தக் காரியத்தையும் மனதில் நினைக்காமல் நேர்ச்சை செய்வதும் உண்டு. 

عن ثَابِت بْن الضَّحَّاكِ قَالَ نَذَرَ رَجُلٌ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَنْحَرَ إِبِلًا بِبُوَانَةَ فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنِّي نَذَرْتُ أَنْ أَنْحَرَ إِبِلًا بِبُوَانَةَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَلْ كَانَ فِيهَا وَثَنٌ مِنْ أَوْثَانِ الْجَاهِلِيَّةِ يُعْبَدُ قَالُوا لَا قَالَ هَلْ كَانَ فِيهَا عِيدٌ مِنْ أَعْيَادِهِمْ قَالُوا لَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْفِ بِنَذْرِكَ (ابوداود

 ஒரு மனிதர் நபி ஸல் அவர்களிடம் வருகை தந்து நான் புவானா எனும் இடத்தில் ஒரு ஒட்டகத்தை அறுத்து ஏழைகளுக்குப் பங்கிடுவதாக நேர்ச்சை செய்திருந்தேன் அதை அதே இடத்தில் நிறைவேற்றவா என்று கேட்க, அந்த இடத்தில் அறியாமைக் காலத்தின் சிலைகள் ஏதேனும் உள்ளதா என்று கேட்டார்கள். இல்லை என்று அவர் கூறினார். மீண்டும் அவரிடம் அந்த இடத்தில் ஏதேனும் மாற்றாரின் திருவிழாக்கள் நடைபெறுகிறதா என்று கேட்க இல்லை என்று அவர் கூறினார்.  அப்போது நபி ஸல் அவர்கள் அப்படியானால் அந்த  நேர்ச்சையை அந்த இடத்தில் நிறைவேற்றுங்கள் என்றார்கள்.                                                          

எனினும் “எனது நோய் நீங்கினால்” என்று நேர்ச்சை செய்வதை நபி ஸல் விரும்பவில்லை

நோய் நீங்குவதை நிபந்தனையாக வைத்து அல்லது ஒரு காரியம் நிறைவேறுவதை நிபந்தனையாக வைத்து நேர்ச்சை செய்வதை நபி ஸல் விரும்பவில்லை. அது மக்ரூஹ். இந்தக் காரியம் நல்லபடியாக நடைபெற வேண்டும் என்று நேர்ச்சை செய்து அக் காரியம் நிறைவேறும் முன்பு தர்மம் செய்வது மக்ரூஹ் அல்ல.

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَنْذِرُوا فَإِنَّ النَّذْرَ لَا يُغْنِي مِنْ الْقَدَرِ شَيْئًا وَإِنَّمَا يُسْتَخْرَجُ بِهِ مِنْ الْبَخِيلِ (مسلم

 (ஒரு காரியம் நிறைவேறுவதை நிபந்தனையாக வைத்து) நேர்ச்சை செய்யாதீர்கள். அது அல்லாஹ்வின் விதியில் நின்றும் எதையும் தேவையற்று வைக்காது. இந்த வகை நேர்ச்சை கஞ்சனிடம் இருந்து வெளிப்படுவதாகும். 

وجزم القرطبي في المفهم بحمل ما ورد في الأحاديث من النهي على نذر المجازاة فقال هذا النهي محله ان يقول مثلا ان شفى الله مريضي فعلي صدقة كذا ووجه الكراهة أنه لما وقف فعل القربة المذكور على حصول الغرض المذكور ظهر انه لم يتمحض له نية التقرب إلى الله تعالى لما صدر منه بل سلك فيها مسلك المعارضة ويوضحه انه لو لم يشف مريضه لم يتصدق بما علقه على شفائه وهذه حالة البخيل فإنه لا يخرج من ماله شيئا الا بعوض عاجل يزيد على ما اخرج غالبا وهذا المعنى هو المشار إليه في الحديث لقوله وانما يستخرج به من البخيل (فتح الباري

சுருக்கம்- “இன்ன காரியம் நடந்தால் தான்” என்று நேர்ச்சை செய்யும் ஒருவர் அது நடைபெறா விட்டால் நேர்ச்சையை நிறைவேற்ற மாட்டார். தான் செய்யும் தர்மத்திற்கு இவர் தன் காரியத்தைப் பகரமாக ஆக்குவதால் இவர் ஒரு வியாபாரியைப் போல ஆகி விடுகிறார் என்பதால் நபி ஸல் அவர்கள் இதை வெறுத்தார்கள். 

படிப்பினை-  நேர்ச்சை செய்திருந்தால்  தான் நாம் சாப்பிட முடியாது. குர்பானிக்கறியை சாப்பிடுவது சுன்னத் 

அறியாமைக் காலத்தில் குர்பானி தருபவர் அதன் இறைச்சியை உண்பது ஹராம் என்றே கருதினர்

 { فكلوا منها } قال بعض العلماء : قوله تعالى : { فكلوا منها } ناسخ لفعلهم لأنهم كانوا يحرمون لحوم الضحايا على أنفسهم ولا يأكلون منها - كما قلناه في الهدايا - فنسخ الله ذلك بقوله : { فكلوا منها } وبقول النبي صلى الله عليه و سلم :  [ من ضحى فليأكل من أضحيته ] ولأنه عليه السلام أكل من أضحيته وهديه  (قرطبي)    وقال الزهري : من السنة أن تأكل أولا من الكبد 

இமாம் zuharee ரஹ் அவர்கள் கூறும்போது நாம் எடுத்து வைத்துக் கொள்ளும் பிராணியின் பாகங்களில் ஈரல் இருந்தால் நல்லது என்றும் அதை முதலாவதாக உண்பது நல்லது என்றும் கூறியுள்ளார்கள்.                                               

குர்பானி இறைச்சியை சேமிப்பது  பற்றிய சட்டங்கள்

குர்பானி இறைச்சியை வீணாக்காமல் அதை பதப்படுத்தி தேவைக்கேற்ப பயன்படுத்துவது சுன்னத்

- عَنْ ثَوْبَانَ رض مَوْلَى رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ قَالَ لِى رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- وَنَحْنُ بِمِنًى :« أَصْلِحْ لَنَا مِنْ هَذَا اللَّحْمِ ». فَأَصْلَحْتُ لَهُ مِنْهُ ، فَلَمْ يَزَلْ يَأْكُلُ مِنْهُ حَتَّى بَلَغْنَا الْمَدِينَةَ. رواه النسائ

ஸவ்பான் ரழி கூறினார்கள் நபி ஸல் அவர்கள் ஹஜ்ஜதுல் விதாவில் மினாவில் இருக்கும்போது என்னிடம் கூறினார்கள் இந்த குர்பானி இறைச்சியை பதப்படுத்தி வை என்றார்கள் நான் அதைக் காய வைத்து பதப்படுத்தினேன். நாங்கள் அங்கிருந்து மதீனா வந்து சேரும் வரை எங்களின் உணவாக அது இருந்தது

ஆரம்ப காலத்தில் சேமிப்பது தடை செய்யப்பட்டிருந்தது பின்பு அனுமதிக்கப்பட்டது. 

عَنْ عَائِشَةَ رَضِىَ اللَّهُ عَنْهَا قَالَتْ : كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- قَدْ نَهَى عَنْ لُحُومِ الأَضَاحِىِّ بَعْدَ ثَلاَثٍ ، فَلَمَّا كَانَ الْعَامُ الْقَابِلُ وَضَحَّى النَّاسُ قُلْتُ :  يَا نَبِىَّ اللَّهِ إِنْ كَانَتْ هَذِهِ الأَضَاحِىُّ لَتَرْفُقُ بِالنَّاسِ كَانُوا يَدَّخِرُونَ مِنْ لُحُومِهَا وَوَدَكِهَا. قَالَ :« فَمَا يَمْنَعُهُمْ مِنْ ذَلِكَ الْيَوْمَ؟ ». قُلْتُ : يَا نَبِىَّ اللَّهِ أَوَلَمْ تَنْهَهُمْ عَامَ أَوَّلَ عَنْ أَنْ يَأْكُلُوا لُحُومَهَا فَوْقَ ثَلاَثٍ؟ فَقَالَ :« إِنَّمَا نَهَيْتُ عَنْ ذَلِكَ لِلْحَاضِرَةِ الَّتِى حَضَرَتْهُمْ مِنْ أَهْلِ الْبَادِيَةِ لِيَبُثُّوا لُحُومَهَا فِيهِمْ ، فَأَمَّا الآنَ فَلْيَأْكُلُوا وَلْيَدَّخِرُوا ». تحفة 17901  رواه النسائ  

 ஆயிஷா ரழி கூறினார்கள்.  நிச்சயமாக நபி ஸல் அவர்கள் குர்பானி கொடுத்தவர் அதன் இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் வைத்திருக்கக்கூடாது என்று தடுத்தார்கள். (அப்போது குர்பானி கொடுப்பவர்கள் குறைவு என்பதால் குர்பானி கொடுப்பவர்கள் தேடிச்சென்று அனைத்து ஏழைகளுக்கும் தந்துவிட வேண்டும் என்பதால் அவ்வாறு கூறினார்கள்.) அடுத்த வருடம் நிறைய மக்கள் குர்பானி கொடுத்த போது அல்லாஹ்வின் தூதரே  நீங்கள் அனுமதி கொடுத்தால் மீதமாகும்  குர்பானிக் கறியை அவரவர் சேமித்து வைத்துக் கொள்வார்கள் என்று நான் கூறினேன். அப்போது நபி ஸல் அவர்கள் அதில் என்ன தடை உள்ளது என்றார்கள். அப்போது நான் அவர்களிடம் கடந்த வருடம் நீங்கள்அதை தடுக்கவில்லையா என்றேன். அதற்கு நபி ஸல் அவர்கள் கடந்த வருடத்தில் நான் தடுத்த காரணம் குர்பானி கொடுக்க முடியாத வெளியூர் வாசிகளுக்கு பரவலாக குர்பானிக் கறி சென்றடைய வேண்டும் என்பதற்காக அவ்வாறு கூறினேன். இந்த வருடம் நீங்கள் கொடுத்தது போக சேமியுங்கள்.                   

عَنْ ابْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنِّي كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ ثَلَاثٍ عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَزُورُوهَا وَلْتَزِدْكُمْ زِيَارَتُهَا خَيْرًا وَنَهَيْتُكُمْ عَنْ لُحُومِ الْأَضَاحِيِّ بَعْدَ ثَلَاثٍ فَكُلُوا مِنْهَا وَأَمْسِكُوا مَا شِئْتُمْ وَنَهَيْتُكُمْ عَنْ الْأَشْرِبَةِ فِي الْأَوْعِيَةِ فَاشْرَبُوا فِي أَيِّ وِعَاءٍ شِئْتُمْ وَلَا تَشْرَبُوا مُسْكِرًا  رواه ابن ماجة  

நபி ஸல் அவர்கள் கூறினார்கள். நான் மூன்று விஷயங்களை விட்டும் உங்களைத் தடுத்திருந்தேன். கப்ருகளை ஜியாரத் செய்வதை விட்டும் தடுத்திருந்தேன் (ஏனெனில் ஆரம்ப காலத்தில் காஃபிர்களின் கப்ருகள் தான் நிறைய இருந்தது.) இப்போது நீங்கள் ஜியாரத் செய்யுங்கள். அது உங்களுக்கு பல நலவுகளை அதிகப்படுத்தும்.  குர்பானி கொடுத்தவர் அதன் இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் வைத்திருக்கக்கூடாது என்று தடுத்திருந்தேன். இப்போது நீங்கள் அதை உண்ணுங்கள். மீதியை (காய வைத்து) சேமித்து வையுங்கள். (முற்காலத்தில் மதுவுக்காகப் பயன்படுத்திய) சில பாத்திரங்களை (மக்களுக்கு மதுவின் நினைவு வரக் கூடாது என்பதற்காக) அதை பயன்படுத்த தடை விதித்திருந்தேன். இப்போது நீங்கள் அதைப் பயன்படுத்துங்கள். மதுவை அறவே அருந்தாதீர்கள்.                               

முடிந்த வரை மீதமான இறைச்சியை பிரிட்ஜில் வைப்பதை விட காய வைத்துப் பயன்படுத்துவது சுன்னத். 

அய்யாமுத் தஷ்ரீக் என்பதன் பொருள் காய வைக்கும் நாட்கள் என்பதாகும்.

ايام التشريق – من شَرَّقَ   يُشَرِّقُ       )شَرَّقَ  (காய வைத்தான் 

- عَنْ ثَوْبَانَ رض مَوْلَى رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ قَالَ لِى رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- وَنَحْنُ بِمِنًى :« أَصْلِحْ لَنَا مِنْ هَذَا اللَّحْمِ ». فَأَصْلَحْتُ لَهُ مِنْهُ ، فَلَمْ يَزَلْ يَأْكُلُ مِنْهُ حَتَّى بَلَغْنَا الْمَدِينَةَ. رواه النسائ

ஸவ்பான் ரழி கூறினார்கள் நபி ஸல் அவர்கள் ஹஜ்ஜதுல் விதாவில் மினாவில் இருக்கும்போது என்னிடம் கூறினார்கள் இந்த குர்பானி இறைச்சியை பதப்படுத்தி வை என்றார்கள் நான் அதைக் காய வைத்து பதப்படுத்தினேன். நாங்கள் அங்கிருந்து மதீனா வந்து சேரும் வரை எங்களின் உணவாக அது இருந்தது

மீதமான இறைச்சியை பிரிட்ஜில் வைத்து உண்பதால் பாக்டீரியாக்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. அத்தகைய இறைச்சியை சரிவர சமைக்காமல் சாப்பிடுவதால் இரைப்பையில் நோய் ஏற்படும் அதனால் ஈரல், சிறுநீரகம், மூளை பாதிப்புகள் வரலாம். 

வாரக் கணக்கில் மீதமான இறைச்சியை பிரிட்ஜில் வைத்து எடுத்து சமைப்பதால் அதில் இயற்கையாக உள்ள புரதச் சத்துகள் அழிந்து அதன் தூய்மையும் பாதிக்கப்படும். சில சமயங்களில் அது விஷமாகவும் மாறி விடும் வாய்ப்பு உண்டு. 

அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் நாம் சொல்லும் தக்பீரின் தாத்பரியம்

ذكر في الكشاف أن الخليل لما أراد الذبح ونزل جبريل بالفداء خاف عليه العجلة فنادى من الهواء الله أكبر الله أكبر الله أكبر فسمعه الذبيح فقال لا إله إلا الله والله أكبر فقال الخليل الله أكبر ولله الحمد (حاشية الطحاوي

நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்கு மகனாரை அறுத்துப் பலியிட தயாரான போது  ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் மகனாருக்குப் பகரமாக ஆட்டைக் கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். தான் வருவதற்கு முன்னால் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவசரப் பட்டு விடக் கூடாதே என்பதற்காக ஆகாயத்தில் இருந்தே அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என்று சொல்லிக் கொண்டே வர, அதைக்கேட்ட மகனார் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் லாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் என்று சொல்ல, இருவரின் சப்தத்தைக் கேட்ட நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து என்று கூறினார்கள். இவ்வாசகங்கள்தான் தக்பீருத் தஷ்ரீக் என இன்று வரை உள்ளது

தகீபீருத் தஷ்ரீக் உடைய சட்டங்களில் சில....

ويجب تكبير التشريق من بعد فجر عرفة الى عصر العيد مرة فور كل فرض أدي بجماعة متسحبة على أمام مقيم بمصر وعلى من اقتدى به ولو كان مسافرا أو رقيقا أو أنثى عند الإمام أبي حنيفة رحمه الله وقالا تجب فور كل فرض على من صلاه ولو منفردا أو مسافرا أو قرويا الى عصر الخامس من يوم عرفة وبه يعمل وعليه الفتوى  (نور الايضاح

صيغة التكبير والتكبير أن يقول الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد (نور الايضاح

 அரஃபா நாள்  ஃபஜ்ரில் இருந்து  பிறை  10  அசர் வரை ஒவ்வொரு ஜமாஅத் தொழுகைக்குப் பிறகும்  இமாமும் மஃமூமும்  ஒருமுறை தக்பீர் சொல்வது விரும்பத்தக்கதாகும்.  பிரயாணியாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்களுக்கும் இது பொருந்தும்.

இச்சட்டம் இமாம் அபூஹனீஃபா  ரஹ் அவர்களின் கருத்தின் அடிப்படையில் உள்ளதாகும். 

மற்ற இரு இமாம்களின் கருத்துப்படி  இந்த தக்பீர் வாஜிப். அரஃபா நாள்  ஃபஜ்ரில் இருந்து  பிறை  13  அசர் வரை ஒவ்வொரு ஃபர்ளுத்  தொழுகைக்குப் பிறகும்  வாஜிப். தனித்துத் தொழுபவரும் ஃபர்ளுத்  தொழுகைக்குப் பிறகு இதைக் கூற வேண்டும்.  இது தான் ஃபத்வா. 

தக்பீர் தஹ்ரீமாவின் சிறப்புகள் மற்றும் சட்டங்கள் 

 ஒவ்வொரு தொழுகையின் போதும்  தக்பீர் தஹ்ரீமா கூறும் போது  கைகளை காதின் சோனை வரை உயர்த்துவது சுன்னத். ஆனால்  நாவினால் தக்பீர்  கூறுவது ஃபர்ளாகும். கைகளைத் தூக்குவதின் நோக்கம் நான் இந்த தொழுகையை துவங்குகிறேன். எனவே  என்னுடைய அனைத்து சிந்தனைகளையும் என் முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டேன் என்பதும் நோக்கமாகும். மற்றும் ஒரு கூற்றின் படி அல்லாஹ்வின் முன்னிலையில் சரணடைதல் என்ற தாத்பரியமும் உண்டு

والتحريمة بلا فاصل والإتيان بالتحريمة قائما قبل انحنائه للركوع وعدم تأخير النية عن التحريمة والنطق بالتحريمة بحيث يسمع نفسه على الأصح (نور الايضاح

தக்பீர் தஹ்ரீமா கூறும் போது தனித்துத் தொழுபவர் குறைந்த பட்சம் தனக்குக் கேட்கும் அளவுக்கு தக்பீர் கூற வேண்டும். தனக்கே கேட்காத வகையில் வாயில் முனுமுனுத்தால் அது தக்பீர் தஹ்ரீமா கிடையாது. அவரது தொழுகையும் நிறைவேறாது. 

மேலும் நின்ற நிலையில் தான் தக்பீர் தஹ்ரீமா கூற வேண்டும். குனிந்து கொண்டே  கூறினால் நிறைவேறாது. (தொழுகைக்கு தாமதமாக வருபவர் இமாம் ருகூவில் இருக்கும்போது வந்து சேர்ந்தால் பெரும்பாலும் மேற்படி தவற நடைபெற வாய்ப்பு அதிகம்) 

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ صَلَّى لِلَّهِ أَرْبَعِينَ يَوْمًا فِي جَمَاعَةٍ يُدْرِكُ التَّكْبِيرَةَ الْأُولَى كُتِبَتْ لَهُ بَرَاءَتَانِ بَرَاءَةٌ مِنْ النَّارِ وَبَرَاءَةٌ مِنْ النِّفَاقِ (ترمذي)

எவர் நாற்பது நாட்கள் இமாம் ஜமாஅத்துடன் இமாமை  தக்பீர் தஹ்ரீமாவில் பெற்றுக் கொண்டவராக தொடர்ந்து நாற்பது நாட்கள் தொழுவாரோ அவருக்கு இரண்டு விதமான விடுதலைகள் கிடைக்கும். 1. நரக விடுதலை 2. நயவஞ்சகத்தன்மையில் இருந்து விடுதலை

பொதுவாக தக்பீரின் சிறப்புகள்

உலகிலுள்ள முஸ்லிம்களின் நாவில் அதிகமாக உச்சரிக்கப்படும் திக்ர் “அல்லாஹு அக்பர்” 

நாள்தோறும் தொழுகைக்காக அழைக்கப்படும் பாங்கில் சர்வதேச அளவில் சுமார் 45 லட்சம் பள்ளிவாசல்களில் 13 கோடியே 50 லட்சம் முறை “அல்லாஹு அக்பர்” எனும் வார்த்தை ஒலிக்கிறது. (ஒரு பாங்கில் 6 முறை, ஒரு நாளில் சொல்லப்படும் ஐந்து முறை பாங்குகளிலும் சேர்த்து 30 முறை)அதே போன்று தொழுகையை நிறைவேற்ற சொல்லப்படும் இகாமத்தில் (ஹனஃபி மத்ஹபின் படி)13 கோடியே 50 லட்சம் முறையும், இதர 3

மத்ஹப்களின் படி 9 கோடியே 40 லட்சம் முறையும் “அல்லாஹு அக்பர் எனும்  வார்த்தை ஒலிக்திறது.

ஜும்ஆ தினமான வெள்ளிக்கிழமை அன்று மட்டும் 6 பாங்குகள் சொல்லப்படுகின்றது. அதன்படி சுமார் 45 லட்சம் பள்ளிவாசல்களில் 16 கோடியே 20 லட்சம் முறை “அல்லாஹு அக்பர்” எனும் வார்த்தை ஒலிக்கிறது.

நாள்தோறும் தவறாமல் ஐந்து நேரம் தொழும் பாக்கியம் பெற்ற முஸ்லிம் ஒருவர் தனது ஐந்து நேரத் தொழுகையிலும் 94 முறை “அல்லாஹு அக்பர்” என  முழங்குகின்றார். ஸுப்ஹ் தொழுகையில் 11 தடவையும், ளுஹர், அஸர், இஷா ஆகிய தொழுகைகளில் முறையே 22 தடவையும் (66) மக்ரிப் தொழுகையில் 17 தடவையும் அல்லாஹு அக்பர் இடம் பெற்றுள்ளது.

அத்தோடு பாங்கிற்கு பதில் சொல்கிற பழக்கம் இருக்கின்ற ஒரு முஸ்லிம் நாள்தோறும் அல்லாஹு அக்பர் எனும் தக்பீரை 30 முறை கூறுகின்றார்.தொழுகையும் பாங்கிற்கு பதில் சொல்கிற பேணுதலும் உள்ள ஒரு முஸ்லிம் நாள்தோறும் 124 முறை அல்லாஹு அக்பர் எனும் சங்க நாதத்தை கேட்கவும், உச்சரிக்கவும் செய்கின்றார்.

உலகில் அதிக முறை உச்சரிக்கப்படும் சிறப்பை அல்லாஹ்  இந்த “தக்பீரைத்” தவிர வேறெந்த வார்த்தைக்கும் வழங்கவில்லை.

“அல்லாஹு அக்பர்” எனும் தக்பீரின் தாத்பரியம்

அல்லாஹு அக்பர் எனும் வார்த்தையை உச்சரிக்கும்போது அல்லாஹ்வைத் தவிர வேறு எதுவும் வேறு யாரும் எனக்குப் பெரிதல்ல என்ற சிந்தனை நமக்கு வர வேண்டும். ஹனஃபி மத்ஹபின் படி தக்பீர் தஹ்ரீமாவின் போதும் ஷாஃபி மத்ஹபின் படி ஒவ்வொரு முறை ருகூவு செய்யும்போதும் ருகூவில் இருந்து நிமிரும்போதும் இந்த தக்பீரை சொல்லும்போது கைகளைத் தூக்குவதின் தாத்பரியம் அல்லாஹ்வைத் தவிர மற்றவைகளை என் முதுகுக்குப் பின்னால் நான் ஆக்கி விட்டேன். அல்லாஹ்வை மட்டுமே எனக்கு முன் ஆக்கிக் கொண்டேன் என்பதாகும். 

கடைசி காலத்தில் “அல்லாஹு அக்பர்” எனும் தக்பீர் மூலம் கிடைக்கும் மாபெரும் வெற்றி

 عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ سَمِعْتُمْ بِمَدِينَةٍ جَانِبٌ مِنْهَا فِي الْبَرِّ وَجَانِبٌ مِنْهَا فِي الْبَحْرِ قَالُوا نَعَمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَغْزُوَهَا سَبْعُونَ أَلْفًا مِنْ بَنِي إِسْحَقَ فَإِذَا جَاءُوهَا نَزَلُوا فَلَمْ يُقَاتِلُوا بِسِلَاحٍ وَلَمْ يَرْمُوا بِسَهْمٍ قَالُوا لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ فَيَسْقُطُ أَحَدُ جَانِبَيْهَا قَالَ ثَوْرٌ لَا أَعْلَمُهُ إِلَّا قَالَ الَّذِي فِي الْبَحْرِ ثُمَّ يَقُولُوا الثَّانِيَةَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ فَيَسْقُطُ جَانِبُهَا الْآخَرُ ثُمَّ يَقُولُوا الثَّالِثَةَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ فَيُفَرَّجُ لَهُمْ فَيَدْخُلُوهَا فَيَغْنَمُوا فَبَيْنَمَا هُمْ يَقْتَسِمُونَ الْمَغَانِمَ إِذْ جَاءَهُمْ الصَّرِيخُ فَقَالَ إِنَّ الدَّجَّالَ قَدْ خَرَجَ فَيَتْرُكُونَ كُلَّ شَيْءٍ وَيَرْجِعُونَ (مسلم)

ஒருமுறைநபி(ஸல்)அவர்கள்,"ஒரு  பகுதி  கரையிலும்  மற்றொரு  பகுதி  கடலிலும்  அமைந்துள்ள  ஒரு நகரத்தைப்  பற்றி  நீங்கள்  கேள்விப்பட்டிருக்கிறீர்களா?''என்று  கேட்டார்கள். மக்கள்,"ஆம் என்று பதில் அளித்தார்கள்.  நபி(ஸல்) அவர்கள், "இஸ்ஹாக்(அலை) அவர்களின் வழித்தோன்றல்களில் எழுபதாயிரம் பேர் அந்நகரத்தின்  மீது  போர்  தொடுக்காதவரை  யுக முடிவு நாள் இறுதிநாள்  வராது.  அவர்கள்  வந்து (அந்நகரத்தில்இறங்கும்போது அவர்கள் எந்த ஆயுதத்தைக்  கொண்டும் சண்டையிடமாட்டார்கள்; அம்பெய்யமாட்டார்கள்  அவர்கள்"லாயிலாஹ  இல்லல்லாஹு  வல்லாஹு அக்பர்' (அல்லாஹ்வைத் தவிர  வேறு  இறைவனில்லை; அல்லாஹ்  மிகப்  பெரியவன்)என்றேகூறுவார்கள். உடன் அந்நகரத்தில் கடலிலுள்ள ஒரு பகுதி வீழ்ந்துவிடும். பிறகு அவர்கள் இரண்டாவது முறை தக்பீர் கூறுவார்கள். அதன்  மறுபகுதி  வீழ்ந்து விடும் பிறகு அவர்கள் மூன்றாவது முறைதக்பீர்  கூறுவார்கள்.உடனே அவர்களுக்குவழி  திறக்கும். அதில்  நுழைந்து போர்ச்செல்வங்களைத்  திரட்டுவார்கள். அவர்கள் போர்ச் செல்வங்களைப்  பங்கிட்டுக் கொண்டிருக்கும்போது  ஒருவர்  வந்து  உரத்த  குரலில்"தஜ்ஜால் புறப்பட்டு விட்டான் என்று கூறுவார் உடனே  அவர்கள்  எல்லாவற்றையும்  விட்டுவிட்டு(தஜ்ஜாலை நோக்கி) திரும்பிச் செல்வார்கள்.

மற்றொரு அறிவிப்பில் இச்சம்பவம் பின்வருமாறு விரிவாக கூறப்பட்டுள்ளது.

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَنْزِلَ الرُّومُ بِالْأَعْمَاقِ أَوْ بِدَابِقٍ فَيَخْرُجُ إِلَيْهِمْ جَيْشٌ مِنْ الْمَدِينَةِ مِنْ خِيَارِ أَهْلِ الْأَرْضِ يَوْمَئِذٍ فَإِذَا تَصَافُّوا قَالَتْ الرُّومُ خَلُّوا بَيْنَنَا وَبَيْنَ الَّذِينَ سَبَوْا مِنَّا نُقَاتِلْهُمْ فَيَقُولُ الْمُسْلِمُونَ لَا وَاللَّهِ لَا نُخَلِّي بَيْنَكُمْ وَبَيْنَ إِخْوَانِنَا فَيُقَاتِلُونَهُمْ فَيَنْهَزِمُ ثُلُثٌ لَا يَتُوبُ اللَّهُ عَلَيْهِمْ أَبَدًا وَيُقْتَلُ ثُلُثُهُمْ أَفْضَلُ الشُّهَدَاءِ عِنْدَ اللَّهِ وَيَفْتَتِحُ الثُّلُثُ لَا يُفْتَنُونَ أَبَدًا فَيَفْتَتِحُونَ قُسْطَنْطِينِيَّةَ فَبَيْنَمَا هُمْ يَقْتَسِمُونَ الْغَنَائِمَ قَدْ عَلَّقُوا سُيُوفَهُمْ بِالزَّيْتُونِ إِذْ صَاحَ فِيهِمْ الشَّيْطَانُ إِنَّ الْمَسِيحَ قَدْ خَلَفَكُمْ فِي أَهْلِيكُمْ فَيَخْرُجُونَ وَذَلِكَ بَاطِلٌ فَإِذَا جَاءُوا الشَّأْمَ خَرَجَ فَبَيْنَمَا هُمْ يُعِدُّونَ لِلْقِتَالِ يُسَوُّونَ الصُّفُوفَ إِذْ أُقِيمَتْ الصَّلَاةُ فَيَنْزِلُ عِيسَى ابْنُ مَرْيَمَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَّهُمْ فَإِذَا رَآهُ عَدُوُّ اللَّهِ ذَابَ كَمَا يَذُوبُ الْمِلْحُ فِي الْمَاءِ فَلَوْ تَرَكَهُ لَانْذَابَ حَتَّى يَهْلِكَ وَلَكِنْ يَقْتُلُهُ اللَّهُ بِيَدِهِ فَيُرِيهِمْ دَمَهُ فِي حَرْبَتِهِ (مسلم 5157

 கருத்து- கியாமத் நெருக்கத்தில் ஷாம் பகுதியில் உள்ள அஃமாக் மற்றும் தாபிக் ஆகிய ஊர்களை ரோமர்கள் (அதாவது கிறிஸ்தவர்கள்) சுற்றி வளைப்பார்கள்.அப்போது மதீனாவில் இருந்து (இமாம் மஹ்தீ அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தலைமையில் ஒரு படை அவர்களை எதிர் கொள்ளும். அந்தப்படையினர் அப்போதைய மக்களில் சிறந்தவர்களாக இருப்பர் அந்தப்படையினர் அணி வகுத்து நிற்கும்போது ரோமர்கள் (அதாவது கிறிஸ்தவர்கள்) அந்தப்படையை நோக்கி எங்களுடைய மதத்திலிருந்து மதம் மாறியவர்களை மட்டும் எங்களிடம் விட்டு விடுங்கள் என்பார்கள். அதற்கு முஸ்லிம்கள் கூறுவார்கள். அவர்கள் எங்களின் சகோதரர்கள். அவர்களை உங்களிடம் அனுப்ப மாட்டோம் என்று கூறுவர். அதன் பின்பு சண்டை நடைபெறும்.ஆரம்பத்தில் முஸ்லிம்களுக்குத் தோல்வியே மிஞ்சும். முஸ்லிம்களில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் கொல்லப்படுவார்கள். மூன்றில் ஒரு பகுதி முஸ்லிம்கள் போர்க்களத்தை விட்டும் விரண்டோடுவார்கள். அவர்களை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். மீதமுள்ள மூன்றில் ஒரு பகுதியினர் நம்பிக்கை இழந்து விடாமல் தொடர்ந்து போர் செய்வார்கள். அவர்களுக்கு அல்லாஹ் வெற்றியைத் தருவான். ரோமர்களின் தலை நகரத்தை வெற்றி கொள்வார்கள். அவர்கள் எதிரிகள் விட்டுச் சென்ற பொருட்களை சேகரித்துக் கொண்டிருக்கும்போது ஷைத்தான் அங்கு வந்து உங்களின் வீடுகளுக்கு தஜ்ஜால் வந்து விட்டான் என ஒரு பீதியைப் பரப்புவான். அச்செய்தி உண்மையாக இருக்காது. ஏனெனில் அப்போது தான் தஜ்ஜால் அவனது தீவில் இருந்து கிளம்புவான். அதன் பிறகு ஈஸா அலைஹிஸ்ஸலாம் இறங்குவார்கள். தஜ்ஜாலைக் கொல்லுவார்கள்.  

இந்தஹதீஸில் இடம் பெற்றிருக்கும் நகரம் என்பது குஸ்ததீனியா  கான்ஸ்டாண்டி நோபிள் என்றழைக்கப்பட்டு வந்த இஸ்தான்பூல்

(துருக்கியின் தலை நகரம்) நகரத்தையே குறிக்கும் என ஹதீஸ்கலை வல்லுனர்கள் கூறுகின்றார்கள்

மேற்படி ஹதீஸின் மூலம் அல்லாஹு அக்பர் என்ற வார்த்தையின் முக்கியத்துவத்த்தை உணர்த்துவதற்காக மேற்படி ஹதீஸ் கூறப்பட்டது. அதே நேரத்தில் மற்றொரு படிப்பினை என்னவென்றால்  இன்றைய சூழ்நிலையில் ஈமானை மட்டுமே மனதில் உறுதியாக தாங்கிய படி மற்ற அனைத்தையும் இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய பல்வேறு நாடுகளில் இருந்தும் பல்வேறு வழிகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவை இஸ்ரேலிய யூத விரோதிகளால் தடுத்து நிறுத்தப் படுகின்றன.  பாலஸ்தீன மக்களுக்கு அல்லாஹ் இறுதியில் எப்படியும் வெற்றியைத் தருவான் என்பது உறுதியான விஷயமாக இருந்தாலும் இப்போதைக்கு அவர்கள் படும் துன்பங்களைக் கண்டு ஒவ்வொரு முஃமினின் உள்ளமும் தாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. அல்லாஹ்வின் உதவி சீக்கிரமாக அவர்களுக்கு வராதா என்ற ஏக்கமும் கவலையும் ஒவ்வொரு முஃமினின் உள்ளத்திலும் இருந்து கொண்டிருக்கிறது. எனவே அந்தக் கவலையை நெஞ்சில் தாங்கியவர்களாக நாம் ஒவ்வொரு நேரத்திலும் அவர்களுக்காக துஆச் செய்ய வேண்டும்.

சிரியாவில் ஏற்படும் குழப்பங்கள், சண்டைகள் அனைத்து ஊர்களையும் பாதிக்கும்

عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا فَسَدَ أَهْلُ الشَّامِ فَلاَ خَيْرَ فِيكُمْ.. (ترمذي) باب مَا جَاءَ فِى الشَّامِ- كتاب الفتن (صحيح ابن حبان) باب ذكر الإخبار على أن الفساد إذا عم في الشام يعم ذلك في سائر المدن -(فَلاَ خَيْرَ فِيكُمْ أي للقعود فيها أو التوجه إليها)

சிரியாவிலும், ஈராக்கிலும், எகிப்திலும் தற்போது என்ன நடைபெறுகிறதோ அதைப்பற்றி அன்றே முன்னறிவிப்புச் செய்த நபி ஸல்

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنَعَتْ الْعِرَاقُ دِرْهَمَهَا وَقَفِيزَهَا وَمَنَعَتْ الشَّأْمُ مُدْيَهَا وَدِينَارَهَا وَمَنَعَتْ مِصْرُ إِرْدَبَّهَا وَدِينَارَهَا وَعُدْتُمْ مِنْ حَيْثُ بَدَأْتُمْ9 وَعُدْتُمْ مِنْ حَيْثُ بَدَأْتُمْ وَعُدْتُمْ مِنْ حَيْثُ بَدَأْتُمْ شَهِدَ عَلَى ذَلِكَ لَحْمُ أَبِي هُرَيْرَةَ وَدَمُهُ (مسلم) باب لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى–كتاب الفتن

 معناه أن العجم والروم يستولون على البلاد فى آخر الزمان فيمنعون حصول ذلك للمسلمين (شرح النووي

பொருள்- இராக் அதன் அளவையான கஃபீஜையும்,  அதன் நாணயமான திர்ஹத்தையும் தர மறுக்கும். சிரியா அதன் அளவையான முத்யையும்,  அதன் நாணயமான தீனாரையும் தர மறுக்கும். எகிப்து அதன் அளவையான இர்தப்பையும்,  அதன் நாணயமான தீனாரையும் தர மறுக்கும். அதாவது இராக், சிரியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளின் மீது கிறிஸ்தவர்களின் ஆதிக்கம் மேலோங்கி விடும். முஸ்லிம்களுக்கு போய்ச் சேர வேண்டிய உணவு தானியங்களையும் நிதியையும் சேர விடாமல் தடுப்பார்கள்      

عَنْ أَبِي نَضْرَةَ قَالَ كُنَّا عِنْدَ جَابِرِ فَقَالَ يُوشِكُ أَهْلُ الْعِرَاقِ أَنْ لَا يُجْبَى إِلَيْهِمْ قَفِيزٌ وَلَا دِرْهَمٌ قُلْنَا مِنْ أَيْنَ ذَاكَ قَالَ مِنْ قِبَلِ الْعَجَمِ يَمْنَعُونَ ذَاكَ ثُمَّ قَالَ يُوشِكُ أَهْلُ الشَّأْمِ أَنْ لَا يُجْبَى إِلَيْهِمْ دِينَارٌ وَلَا مُدْيٌ قُلْنَا مِنْ أَيْنَ ذَاكَ قَالَ مِنْ قِبَلِ الرُّومِ ثُمَّ سَكَتَ هُنَيَّةً ثُمَّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَكُونُ فِي آخِرِ أُمَّتِي خَلِيفَةٌ يَحْثِي الْمَالَ حَثْيًا لَا يَعُدُّهُ عَدَدًا (مسلم)5586 باب لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَمُرَّ الرَّجُلُ - كِتَاب الْفِتَنِ 

கலீஃபா என்பது மஹ்தீ அலை அவர்களாகும். முஸ்லிம்களுக்கு பெரும் சோதனைகள் ஏற்படும்போது இவர்கள் பிறப்பார்கள்

எங்கோ இருக்கும் முகம் தெரியாத முஸ்லிம்களுக்காக துஆ செய்வதில் சிறப்பு உண்டு.

عَنْ أَبِى الدَّرْدَاءِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَا مِنْ عَبْدٍ مُسْلِمٍ يَدْعُو لأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ إِلاَّ قَالَ الْمَلَكُ وَلَكَ بِمِثْلٍ (مسلم) كتاب  الذكر والدعاء والتوبة

முஸ்லிம்களுக்கு ஆபத்துகள் அதிகரிக்கும்போது தொழுகைக்கு உள்ளேயும் துஆ செய்யலாம். அது குனூத்தே நாஜிலா எனப்படும்

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنْ الرَّكْعَةِ الْآخِرَةِ يَقُولُ اللَّهُمَّ أَنْجِ عَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ اللَّهُمَّ أَنْجِ سَلَمَةَ بْنَ هِشَامٍ اللَّهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ اللَّهُمَّ أَنْجِ الْمُسْتَضْعَفِينَ مِنْ الْمُؤْمِنِينَ اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ اللَّهُمَّ اجْعَلْهَا سِنِينَ كَسِنِي يُوسُفَ (بخاري) باب دُعَاءِ النَّبِىِّ صلى الله عليه وسلم اِجْعَلْهَا عَلَيْهِمْ سِنِينَ كَسِنِى يُوسُفَ- كتاب الاستسقاء - عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَاهُ رِعْلٌ وَذَكْوَانُ وَعُصَيَّةُ وَبَنُو لَحْيَانَ فَزَعَمُوا أَنَّهُمْ قَدْ أَسْلَمُوا وَاسْتَمَدُّوهُ عَلَى قَوْمِهِمْ فَأَمَدَّهُمْ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِسَبْعِينَ مِنْ الْأَنْصَارِ قَالَ أَنَسٌ كُنَّا نُسَمِّيهِمْ الْقُرَّاءَ يَحْطِبُونَ بِالنَّهَارِ وَيُصَلُّونَ بِاللَّيْلِ فَانْطَلَقُوا بِهِمْ حَتَّى بَلَغُوا بِئْرَ مَعُونَةَ غَدَرُوا بِهِمْ وَقَتَلُوهُمْ فَقَنَتَ شَهْرًا يَدْعُو عَلَى رِعْلٍ وَذَكْوَانَ وَبَنِي لَحْيَانَ (بخاري) بَاب الْعَوْنِ بِالْمَدَدِ-كتاب الجهاد

மேற்கூறப்பட்ட நான்கு பிரிவினர் இஸ்லாத்தை ஏற்றது போல நடித்து தங்களுக்கு மார்க்கத்தை சொல்லித் தர நபித் தோழர்களை தங்கள் ஊருக்கு அனுப்புமாறு கூறினர். அதன்படி நபி ஸல் எழுபது  ஹாஃபிழ்களை அனுப்பி வைத்த போது அவர்களை திட்டமிட்டு கொன்றனர். இதனால் பெரும் கவலை அடைந்த நபி ஸல் கொலை செய்தவர்களுக்கு எதிராகவும், முஸ்லிம்களின் பாதுகாப்பிற்காகவும் சுமார் ஒரு மாதம் ஃபஜ்ரில் இரண்டாவது ரக்அத்தின் ருகூவிலிருந்து எழுந்து துஆ செய்தார்கள். சில அறிவிப்புகளில் ஐந்து நேரத் தொழுகையிலும் இவ்வாறு செய்தார்கள் என உள்ளது. அதேபோல் முந்திய ஹதீஸில் மக்காவில் இருந்து மதீனாவுக்கு வர விடாமல் தடுக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட முஸ்லிம்களுக்காக அவர்களை விடுதலை செய்யப்படும் வரை இவ்வாறு துஆ செய்தார்கள்

துஆ கேட்பதில் சோர்ந்து விடாமல்  தொடர்ந்து துஆச் செய்ய வேண்டும்

  இஸ்லாமிய எதிரிகளுக்கு அல்லாஹ் உடனடியாக ஏதேனும் தண்டனையை வழங்கி உலக மக்களுக்கு பாடம் கற்பிக்க மாட்டானா என்று ஒவ்வொரு முஸ்லிமுடைய உள்ளமும் துடித்துக் கொண்டிருக்கும் அல்லாஹ்வின் உதவி தாமதமாகவும் வரும்

ஃபிர்அவ்னுக்கு எதிராக மூஸா அலைஹிஸ்ஸலாம் செய்த துஆவை அல்லாஹ் ஏற்றுக் கொண்டாலும் 40 வருடங்களுக்குப் பின்பு தான் அவனை அழித்தான்

وَقَالَ مُوسَى رَبَّنَا إِنَّكَ آتَيْتَ فِرْعَوْنَ وَمَلَأَهُ زِينَةً وَأَمْوَالًا فِي الْحَيَاةِ الدُّنْيَا رَبَّنَا لِيُضِلُّوا عَنْ سَبِيلِكَ رَبَّنَا اطْمِسْ عَلَى أَمْوَالِهِمْ وَاشْدُدْ عَلَى قُلُوبِهِمْ فَلَا يُؤْمِنُوا حَتَّى يَرَوُا الْعَذَابَ الْأَلِيمَ (88) قَالَ قَدْ أُجِيبَتْ دَعْوَتُكُمَا فَاسْتَقِيمَا وَلَا تَتَّبِعَانِّ سَبِيلَ الَّذِينَ لَا يَعْلَمُونَ (89يونس)

قَالَ اِبْن جُرَيْج يَقُولُونَ إِنَّ فِرْعَوْن مَكَثَ بَعْد هَذِهِ الدَّعْوَة أَرْبَعِينَ سَنَة

எத்தனை எதிரிகள் சூழ்ந்தாலும் சிரியவை முற்றிலுமாக அழிக்க முடியாது என்ற முன்னறிவிப்பு

நபிமொழிகளில், வரலாறுகளில் ஷாம் எனப்படுவது இன்றைய சிரியா, பாலஸ்தீனம், ஜோர்டான், லெபனான், ஈராக் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பகுதியாகும். ஷாமுக்காக நபி ஸல் அவர்களின் பிரத்தியேக துஆ உள்ளது

عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ رضقَالَ كُنَّا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نُؤَلِّفُ الْقُرْآنَ مِنْ الرِّقَاعِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طُوبَى لِلشَّامِ فَقُلْنَا لِأَيٍّ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ لِأَنَّ مَلَائِكَةَ الرَّحْمَنِ بَاسِطَةٌ أَجْنِحَتَهَا عَلَيْهَا (ترمذي) بَاب فِي فَضْلِ الشَّامِ وَالْيَمَنِ- كِتَاب الْمَنَاقِبِ( باسطة أجنحتها عليها) أي على بقعة الشام وأهلها بالمحافظة عن الكفر وقال المناوي بَاسِطَةٌ أَجْنِحَتَهَا أي تحفها وتحولها بإنزال البركة ودفع المهالك والمؤذيات

எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் சத்தியத்தை நிலை நாட்டக் கூடிய ஒரு சாரார்  ஷாமில் இருப்பார்கள்

عن مُعَاوِيَةَ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا يَزَالُ مِنْ أُمَّتِي أُمَّةٌ قَائِمَةٌ بِأَمْرِ اللَّهِ مَا يَضُرُّهُمْ مَنْ كَذَّبَهُمْ وَلَا مَنْ خَالَفَهُمْ حَتَّى يَأْتِيَ أَمْرُ اللَّهِ وَهُمْ عَلَى ذَلِكَ فَقَالَ مَالِكُ بْنُ يُخَامِرَ سَمِعْتُ مُعَاذًا يَقُولُ وَهُمْ بِالشَّأْمِ (بخاري) باب قَوْلِ اللَّهِ تَعَالَى ( إِنَّمَا قَوْلُنَا لِشَىْءٍ )كتاب التوحيد

உலகம் முழிவதையும் ஆட்சி செய்யும் அதிகாரத்தை இரண்டு முஸ்லிம்களுக்கு வழங்கியது போன்று இரண்டு காஃபிர்களுக்கும்  அல்லாஹ் வழங்கினான்

قَالَ مُجَاهِد : وَمَلَكَ الدُّنْيَا مَشَارِقهَا وَمَغَارِبهَا أَرْبَعَة : مُؤْمِنَانِ وَكَافِرَانِ فَالْمُؤْمِنَانِ سُلَيْمَان بْن دَاوُد وَذُو الْقَرْنَيْنِ وَالْكَافِرَانِ نُمْرُود وَبُخْتُنَصَّرَ وَاَللَّه أَعْلَم

முஸ்லிம்களின் மாபெரும் எதிரிகளாக இருந்தவர்களுக்கு நீண்ட கால ஆட்சியை அல்லாஹ் தந்தது சோதிப்பதற்குத் தான்

أَلَمْ تَرَ إِلَى الَّذِي حَاجَّ إِبْرَاهِيمَ فِي رَبِّهِ أَنْ آَتَاهُ اللَّهُ الْمُلْكَ إِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّيَ الَّذِي يُحْيِي وَيُمِيتُ قَالَ أَنَا أُحْيِي وَأُمِيتُ قَالَ إِبْرَاهِيمُ فَإِنَّ اللَّهَ يَأْتِي بِالشَّمْسِ مِنَ الْمَشْرِقِ فَأْتِ بِهَا مِنَ الْمَغْرِبِ فَبُهِتَ الَّذِي كَفَرَ..(البقرة258) هَذَاالَّذِي حَاجَّ إِبْرَاهِيمَ فِي رَبِّهِ وَهُوَ مَلِك بَابِل نُمْرُود بْن كَنْعَان بْن كوش بْن سَام بْن نُوح وَيُقَال : نُمْرُود بْن فالخ بْن عَابِر بْن شالخ بْن أرفخشذ بْن سَام بْن نُوح وَمَا حَمَلَهُ عَلَى هَذَا الطُّغْيَان وَالْكُفْر الْغَلِيظ وَالْمُعَانَدَة الشَّدِيدَة إِلَّا تَجَبُّره وَطُول مُدَّته فِي الْمُلْك وَذَلِكَ أَنَّهُ يُقَال إِنَّهُ مَكَثَ أَرْبَعمِائَةِ سَنَة فِي مُلْكه وَلِهَذَا قَال" أَنْ أَتَاهُ اللَّهُ الْمُلْكَ"(تفسير ابن كثير)

அநியாயக்காரனுக்கு அல்லாஹ் நிறைய அவகாசம் தருவான். கடைசியில் தண்டிக்க ஆரம்பித்தால்

அந்த தண்டனை மிகக் கடுமையாக இருக்கும்

வியாழன், 29 மே, 2025

துல்ஹஜ் பத்து நாட்கள் மற்றும் குர்பானியின் சிறப்பு

 30-05-2025


بسم الله الرحمن الرحيم  

துல்ஹஜ்  முதல் பத்து நாட்கள்

மற்றும் குர்பானியின் சிறப்புகள்



https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்


 நாம் அல்லாஹ்வைத் தவிர வேறு எதைக் கொண்டும் யாரைக் கொண்டும் சத்தியம் செய்வது கூடாது. அல்லாஹ் தன் படைப்பினங்களில் முக்கியமானவைகளைக் கொண்டு சத்தியம் செய்வான். அவ்வாறு அல்லாஹ் சத்தியம் செய்பவைகளில் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் ஒன்றாகும். 

قال الله تعالي وَالْفَجْرِ (1) وَلَيَالٍ عَشْرٍ (2) وَالشَّفْعِ وَالْوَتْرِ (3)عن جابر رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : {والفجر وليال عشر}عشر الأضحية والوتر يوم عرفة والشفع يوم النحر هذا حديث صحيح  رواه الحاكم في المستدرك

روي ان الله اختار من السنة ثلاث عشرات:العشر الأخير من رمضان لما فيه من بركات ليلة القدر, وعشر الأضحي لما فيه من يوم التروية ويوم عرفة والأضاحي والتلبية والحج وأنواع المناسك, وعشر المحرم لما فيه من بركات يوم عاشوراء , قال الفقهاء رح لو قال رجل لله علي أن أصوم أفضل الأيام في سنتي هده بعد رمضان  يجب عليه العشر الأول من دي الحجة {زبدة الواعظين} 

அல்லாஹ் வருடத்தில் மூன்று பத்து நாட்களை சிறப்பானதாக ஆக்கி வைத்துள்ளான். 1.ரமழான் மாதத்தின் கடைசி பத்து நாட்களை சிறப்பானதாக ஆக்கியுள்ளான். காரணம் லைலத்துல் கத்ரு என்ற சிறந்த இரவின் பரக்கத் உள்ளது என்பதற்காக. 2 .துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களை சிறப்பானதாக அல்லாஹ் ஆக்கியுள்ளான். காரணம் தர்வியா எனும் துல்ஹஜ்  8-ம் நாளும் அரஃபா நாளும் குர்பானியின் நாட்களும் அதில் உள்ளது என்பதற்காக. 3.முஹர்ரம் மாதத்தின் முதல் பத்து நாட்களை சிறப்பானதாக அல்லாஹ் ஆக்கியுள்ளான். காரணம் ஆஷூரா எனும் சிறந்த நாள் அதில் உள்ளது என்பதற்காக.                                                        

ஃபுகஹாக்கள் கூறுவார்கள். ஒருவர் நான் இந்த வருடத்தில் ரமழானுக்கு அடுத்து சிறப்பான நாட்களில் நோன்பு வைப்பேன் என நேர்ச்சை செய்தால் அவர் துல்ஹஜ் பத்து நாட்களில் அந்த நேர்ச்சையை நிறைவேற்ற வேண்டும்

عَنِ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه قال قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ أَيَّامٍ الْعَمَلُ الصَّالِحُ فِيهِنَّ أَحَبُّ إِلَى اللَّهِ مِنْ هَذِهِ الْأَيَّامِ الْعَشْرِ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ إِلَّا رَجُلٌ خَرَجَ بِنَفْسِهِ وَمَالِهِ فَلَمْ يَرْجِعْ مِنْ ذَلِكَ بِشَيْءٍ (ترمذي)

 இந்த பத்து நாட்களில் செய்யப்படும் நற்செயலை விட வருடத்தின் வேறு எந்த நாளில் செய்யப்படும் நற்செயலும் அல்லாஹ்விடம் மிகப் பிரியமானதாக இல்லை என நபி ஸல் கூறிய போது அல்லாஹ்வின் தூதரே மற்ற நாட்களில் செய்யும் ஜிஹாதை விட இந்த நாட்களில் செய்யப்படும் சிறிய அமல் அல்லாஹ்விடம் மிக உயர்ந்ததா என்று கேட்க, ஆம் என்று நபி ஸல் பதில் கூறி விட்டு. யார் ஜிஹாதுக்கு தனது உயிர் மற்றும் உடைமையுடன்  சென்று அவற்றில் எதனுடனும் வீடு திரும்பவில்லையோ அவரைத்  தவிர என்று கூறினார்கள்.        

இந்த நாட்களில் தக்பீர் மற்றும் தஹ்மீத் தஹலீல் ஆகியவற்றை அதிகப்படுத்த வேண்டும்.  பிறை  1  முதல் 9 வரை நோன்பு வைக்க  முயற்சி செய்ய வேண்டும். இதில் அரஃபா நாளின் நோன்பு மிகவும் வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும்



குர்பானி தர விரும்புவர் பிறை ஆரம்பித்த நாளில் இருந்து நகம் முடி களையக் கூடாது.  

يستحب للمضحي أن لايأخد من شعره وأظفاره شيئا من أول دي الحجة الي أن يضحي  لقول النبي صلي الله عليه وسلم من أراد أن يضحي منكم  فلا يأخد من شعره وأظفاره شئا  

من لم ينو الأضحية في أول دي الحجة فأخد شعره وأظفاره ثم نوي الأضحية يجوز فلا يأخد شعره وأظفاره بعد النية

ஒருவரி துல்ஹஜ் ஆரம்பிக்கும்போது குர்பானியை நிய்யத் செய்யவில்லை. அதனால் அவர் பிறை ஆரம்பித்த பிறகு நகம், முடிகளை வெட்டினார். அதற்குப் பிறகு தான் அவருக்கு அந்த நிய்யத் ஏற்பட்டதென்றால் அவர் நிய்யத் செய்த நேரத்திலிருந்து நகம் முடி வெட்டாமல் இருந்து கொள்ள வேண்டும். 



குர்பானி கொடுக்கும் நாட்களில் குர்பானியை விட மிகச் சிறந்த அமல் வேறு இல்லை.

عَنْ عَائِشَةَ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا عَمِلَ ابْنُ آدَمَ يَوْمَ النَّحْرِ عَمَلًا أَحَبَّ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ مِنْ هِرَاقَةِ دَمٍ وَإِنَّهُ لَيَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِقُرُونِهَا وَأَظْلَافِهَا وَأَشْعَارِهَا وَإِنَّ الدَّمَ لَيَقَعُ مِنْ اللَّهِ عَزَّ وَجَلَّ بِمَكَانٍ قَبْلَ أَنْ يَقَعَ عَلَى الْأَرْضِ فَطِيبُوا بِهَا نَفْسًا (ابن ماجة)

கருத்து-குர்பானி கொடுக்கும் நாளில் குர்பானியை விட மிகச் சிறந்த அமல் வேறு எதுவும் இல்லை. ஒருவர் குர்பானிப் பதிலாக ஒரு கோடி ரூபாய் தர்மம் செய்தாலும் குர்பானிக்கு ஈடாகாது. குர்பானிப் பிராணி மறுமையில் அதே உருவத்தோடு வந்து நமக்காக சாட்சி சொல்லும். மேலும் அதன் இரத்தம் தரையைச் சென்றடைவதற்கு முன்பு அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற்று விடுகிறது. எனவே மன மகிழ்வுடன் குர்பானி கொடுங்கள். 

عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ قَالَقَالَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا رَسُولَ اللَّهِ مَا هَذِهِ الْأَضَاحِيُّ قَالَ سُنَّةُ أَبِيكُمْ إِبْرَاهِيمَ قَالُوا فَمَا لَنَا فِيهَا يَا رَسُولَ اللَّهِ قَالَ بِكُلِّ شَعَرَةٍ حَسَنَةٌ قَالُوا فَالصُّوفُ يَا رَسُولَ اللَّهِ قَالَ بِكُلِّ شَعَرَةٍ مِنْ الصُّوفِ حَسَنَةٌ (ابن ماجة)

விளக்கம்- குர்பானி என்பது நபி இப்றாஹீம் அலை அவர்களின் வழிமுறை என நபி ஸல் கூறியபோது இதனால் என்ன நன்மை என நபித்தோழர்கள் கேட்க, அதன் ஒவ்வொரு முடிக்கும் பகரமாக நன்மை உண்டு என நபி ஸல் கூறியவுடன் ஆச்சரியத்துடன் யாரஸூல ல்லாஹ் அப்படியானால் ஆட்டில் முடிகள் அதிகமாக இலட்சக் கணக்கில் இருக்குமே அதற்கும் நன்மை உண்டா என்று கேட்க ஆம் என நபி ஸல் பதில் கூறினார்கள்.            

     

வறிய நிலையிலும் வருடம் தோறும் குர்பானி கொடுத்தவரின் சிறப்பு 

عن أحمد بن اسحق أنه قال كان لي أخ فقير وكان مع فقره يضحي كل سنة بشاة فلما توفي صليت ركعتين فقلت:اللهم أرني أخي في نومي فأسأله عن حاله فنمت علي الوضوء فرأيت في منامي كأن القيامة قد قامت وحشر الناس من قبورهم فادا أخي راكب علي فرس أشهب وبين يديه نجائب فقلت ياأخي ما فعل الله بك؟ فقال:غفر لي,فقلت بم؟ فقال بسبب درهم تصدقت به علي امرأة عجوز فقيرة في سبيل الله؟ فقلت ما هده النجائب؟قال ضحاياي في الدنيا والتي أركبها أول أضحيتي فقلت الي اين قصدت؟ قال الي الجنة فغاب عن بصري {سنانية}

அஹ்மத் இப்னு இஸ்ஹாக் ரஹ் அவர்கள் கூறினார்கள். எனக்கு ஏழ்மையான ஒரு சகோதரர் இருந்தார். தன்னுடைய வறிய நிலையிலும் வருடம் தோறும் ஆடு குர்பானி கொடுப்பார். ஒருநாள் அவர் வஃபாத்தாகி விட்டார். அவர் இறந்த பின்பு அவரைப் பற்றிய மறுமை வாழ்வின் நிலையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இரண்டு ரக்அத் தொழுது அல்லாஹ்விடம் அல்லாஹ் அவரை என் கனவில் காட்டு. நான் அவரிடம் அவரது நிலையைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என துஆச் செய்தேன். நான் உளூவுடன் தூங்கினேன். அப்போது என் கனவில் கியாமத் ஏற்பட்டு விட்டதைப் போன்றும் மக்கள் அனைவரும் தங்களுடைய கப்ருகளில் இருந்து எழுப்ப ப்படுவது போன்றும் கனவில் கண்டேன். அப்போது அந்த நண்பரையும் கண்டேன். அவர் ஒரு உயர்ந்த குதிரையின் மீது சவாரி செய்த படி இருந்தார். அவருக்கு முன்னால் கால்நடை வாகனங்கள் அணி வகுத்து நின்றன. அவரிடம் நான் அல்லாஹ் உங்களிடம் எவ்வாறு நடந்து கொண்டான் என விசாரித்தபோது அல்லாஹ் என்னை மன்னித்தான் என்று கூறினார். எதனால் என்று நான் கேட்க, ஒரு வயதான, ஏழ்மையான பெண்ணுக்கு ஒரு திர்ஹம் நான் தர்மம் செய்தேன். அதனால் அல்லாஹ் என்னை மன்னித்தான் என்று கூறினார். நான் அவரிடம் இந்த வாகனங்கள் ஏது என்று கேட்க, இதுவெல்லாம் நான் குர்பானி கொடுத்த வாகனங்கள். நான் ஏறிப் பயணம் செய்திருக்கும் இந்த வாகனம் தான் நான் முதலில் கொடுத்த குர்பானி என்று கூறி என் கன்னை விட்டும் மறைந்து விட்டார்.                    

விளக்கம்-ஆடாக இருந்தாலும் அதில் சவாரி செய்யும் வகையில் பெரிய உருவமாக அல்லாஹ் மறுமையில் மாற்றியமைக்க வாய்ப்புண்டு



வசதி இருந்தும் குர்பானி கொடுக்கா விட்டால்

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه  أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ كَانَ لَهُ سَعَةٌ وَلَمْ يُضَحِّ فَلَا يَقْرَبَنَّ مُصَلَّانَا (ابن ماجة

மாதவிடாய் மற்றும் பிரசவத்தீட்டு உள்ள பெண்களும், கர்ப்பிணிப் பெண்களும் குர்பானி கொடுக்கலாம்.  கர்ப்பிணிப் பெண்கள் குர்பானி கொடுக்கக் கூடாது என்ற தவறான எண்ணம் சிலருக்கு இருக்கிறது

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَيْهَا وَحَاضَتْ بِسَرِفَ قَبْلَ أَنْ تَدْخُلَ مَكَّةَ وَهِيَ تَبْكِي فَقَالَ مَا لَكِ أَنَفِسْتِ قَالَتْ نَعَمْ قَالَ إِنَّ هَذَا أَمْرٌ كَتَبَهُ اللَّهُ عَلَى بَنَاتِ آدَمَ فَاقْضِي مَا يَقْضِي الْحَاجُّ غَيْرَ أَنْ لَا تَطُوفِي بِالْبَيْتِ فَلَمَّا كُنَّا بِمِنًى أُتِيتُ بِلَحْمِ بَقَرٍ فَقُلْتُ مَا هَذَا قَالُوا ضَحَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَزْوَاجِهِ بِالْبَقَرِ (بخاري) الأضحية للمسافر والنساء-كِتَاب الْأَضَاحِيِّ

சுருக்கம்- ஆயிஷா ரழி அவர்கள் ஹஜ்ஜுக்கு வந்திருந்த நேரம் பார்த்து அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. என்னால் அந்த அமலும் செய்ய முடியாதே என்று அழ ஆரம்பித்தார்கள். அப்போது நபி ஸல் அவர்கள் இந்த விஷயம் அல்லாஹ் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்படுத்தியுள்ளதாகும். இதற்காக கவலை கூடாது. நீ எல்லா அமல்களையும் நிறைவேற்றலாம். அரஃபாவில் தங்கலாம். மினாவில் தங்கலாம். குர்பானி கொடுக்கலாம். முஜ்தலிஃபாவில் தங்கலாம். தவாஃப் மட்டும் செய்யக் கூடாது. அதை பிறகு நீ நிறைவேற்ற முடியும் என்றார்கள். 

ஆயிஷா ரழி அவர்கள் கூறினார்கள் இதன் பின்பு நான் மினாவில் தங்கியிருக்கும்போது என்னிடம் கூட்டுக் குர்பானிக் கறி கொண்டு வந்து தரப்பட்டது. இது ஏது என்று கேட்டேன். நபி ஸல் அவர்கள் தம் மனைவிமார்கள் பெயரில் கொடுத்த மாட்டின் இறைச்சி என்று பதில் கூறப்பட்டது. 


குர்பானி விஷயத்தில் முக்கியமான விளக்கம். 

 ஒரு குடும்பத்தில் யார் சம்பாதிக்கிறாரோ மேலும் ஜகாத்துடைய நிஸாப் அளவுக்கு மிச்சமாக பணம் வைத்துள்ளாரோ அவர் மீது குர்பானி கடமை. ஜகாத் கடமையான சிலர் குர்பானி கடமையான பின்பும் தன் பெயரில் கொடுக்காமல் தன் தந்தை அல்லது தாயார் பெயரில் குர்பானி கொடுக்கிறார்கள். அவ்வாறு தருவதால் இவரின் கடமை நீங்காது.  தாம் கொடுத்தது போக மிச்சமிருந்தால் பெற்றோர் பெயரில் கொடுப்பது தவறில்லை. என் பெற்றோரை விட நான் முக்கியமானவனா என்ற எண்ணத்தில் பலர் இத்தகைய தவறைச் செய்கிறார்கள். தொழுகை இவர் மீது கடமை என்றால் என் பெற்றோர் தொழாமல் நான் தொழுவதா என்று நாம் யாரும் சொல்ல மாட்டோம். அதுபோன்றுதான் குர்பானி. 

தனக்காக அகீகா கொடுக்கப்பட்டிருக்கா விட்டால் அந்த அகீகாவை முதலில்  தராம்ல குர்பானி தரக்கூடாது என்ற எண்ணமும் சிலரிடம் உள்ளது. அகீகா குழந்தைப் பருவத்தில் தான் சுன்னத். அதைத் தாண்டினால் ஜாயிஸ்.  ஆனால் குர்பானி என்பது  வாஜிப். 

وَنَقَلَ التِّرْمِذِيُّ عَنْ أَهْلِ الْعِلْمِ أَنَّهُمْ يَسْتَحِبُّونَ أَنْ تُذْبَحَ الْعَقِيقَةُ فِي السَّابِعِ فَإِنْ لَمْ يُمْكِنْ فَفِي الرَّابِعَ عَشَرَ فَإِنْ لَمْ يُمْكِنْ فَيَوْمِ أَحَدِ وَعِشْرِينَ . وَقَالَ الشَّافِعِيُّ : لَا تُؤَخَّرُ عَنْ السَّابِعِ اخْتِيَارًا فَإِنْ تَأَخَّرَتْ إلَى الْبُلُوغِ سَقَطَتْ عَمَّنْ كَانَ يُرِيدُ أَنْ يَعُقَّ عَنْهُ لَكِنْ إنْ أَرَادَ هُوَ أَنْ يَعُقَّ عَنْ نَفْسِهِ فَعَلَ . (فتح الباري – عمدة القاري

குர்பானி கொடுப்பதற்கு ஆடு தான் சிறந்தது

{ وفديناه بذبح عظيم}{37:107 } أي عظيم القدر ولم يرد عظيم الجثة وإنما عظم قدره لأنه فدى به الذبيح أو لأنه متقبل 

 உளத்தூய்மையுடன்  ஹாபீல் கொடுத்த  ஆட்டை பலஆயிரம் வருடங்கள் சுவனத்த்தில் அல்லாஹ் பாதுகாத்தான்

وقال ابن عباس : هو الكبش الذي تقرب به هابيل وكان في الجنة يرعى حتى فدىالله به إسماعيل-

وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ (27)المائدة      -     عَنْ عَبْد اللَّه بْن عَمْرو قَالَ إِنَّ اِبْنَيْ آدَم اللَّذَيْنِ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدهمَا وَلَمْ يُتَقَبَّل مِنْ الْآخَر كَانَ أَحَدهمَا صَاحِب حَرْث وَالْآخَر صَاحِب غَنَم وَإِنَّهُمْ أُمِرَا أَنْ يُقَرِّبَا قُرْبَانًا وَإِنَّ صَاحِب الْغَنَم قَرَّبَ أَكْرَمَ غَنَمِهِ وَأَسْمَنَهَا وَأَحْسَنَهَا طَيِّبَةً بِهَا نَفْسُهُ وَإِنَّ صَاحِب الْحَرْث قَرَّبَ أَشَرَّ حَرْثِهِ الْكَوْدَن وَالزُّوَان غَيْرَ طَيِّبَةٍ بِهَا نَفْسُهُ وَأَنَّ اللَّه عَزَّ وَجَلَّ تَقَبَّلَ قُرْبَان صَاحِب الْغَنَم وَلَمْ يَتَقَبَّل قُرْبَان صَاحِب الْحَرْث(وفي رواية فَصَعِدَا الْجَبَل فَوَضَعَا قُرْبَانهمَا)فَقَبِلَ اللَّه الْكَبْش فَحَزَنَهُ فِي الْجَنَّة أَرْبَعِينَ خَرِيفًا3 وَهُوَ الْكَبْش الَّذِي ذَبَحَهُ إِبْرَاهِيم عَلَيْهِ السَّلَام(تفسير ابن كثير)

காபீல் ஹாபீல் இருவரும் குர்பானி கொடுத்தாலும் ஹாபீல் கொடுத்த ஆடு மட்டுமே அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. காரணம் உளத்தூய்மை தான். ஹாபீல் தன்னிடம் இருந்த ஆடுகளில் தனக்கு மிகப் பிரியமான ஆட்டை குர்பானி கொடுத்தார். காபீல் விவசாயி என்பதால் தானியங்களை குர்பானியாக கொடுத்தார். அவரிடம் உளத்தூய்மை இருந்திருக்கவில்லை. அந்தக் கால வழக்கப்படி இருவரும் மலை மீது கொண்டு போய் தமது குர்பானிகளை வைத்தார்கள். வானில் இருந்து நெருப்பு வந்து ஹாபீலுடைய ஆட்டை மட்டும் எடுத்துக் கொண்டு சென்றது. அந்த ஆட்டை அல்லாஹ் சுவனத்தில் பாதுகாத்தான் பிற்காலத்தில் அதுதான் இப்றாஹீம் அலை அவர்களுக்காக சுவனத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது அதைத்தான் அவர்கள் அறுத்தார்கள்.      


                            

அக்காலத்தில் குர்பானிப் பிராணிகளையும் அதுபோல் ஙனீமத் பொருட்களையும் 

மலை மீது கொண்டு போய் வைத்து அதை நெருப்பு வந்து கரித்துச் செல்வது அக்கால நடைமுறை

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَزَا نَبِيٌّ مِنْ الْأَنْبِيَاءِ فَقَالَ لِقَوْمِهِ لَا يَتْبَعْنِي رَجُلٌ مَلَكَ بُضْعَ امْرَأَةٍ وَهُوَ يُرِيدُ أَنْ يَبْنِيَ بِهَا وَلَمَّا يَبْنِ بِهَا وَلَا أَحَدٌ بَنَى بُيُوتًا وَلَمْ يَرْفَعْ سُقُوفَهَا وَلَا أَحَدٌ اشْتَرَى غَنَمًا أَوْ خَلِفَاتٍ وَهُوَ يَنْتَظِرُ وِلَادَهَا فَغَزَا فَدَنَا مِنْ الْقَرْيَةِ صَلَاةَ الْعَصْرِ أَوْ قَرِيبًا مِنْ ذَلِكَ فَقَالَ لِلشَّمْسِ إِنَّكِ مَأْمُورَةٌ وَأَنَا مَأْمُورٌ اللَّهُمَّ احْبِسْهَا عَلَيْنَا فَحُبِسَتْ حَتَّى فَتَحَ اللَّهُ عَلَيْهِ فَجَمَعَ الْغَنَائِمَ فَجَاءَتْ يَعْنِي النَّارَ لِتَأْكُلَهَا فَلَمْ تَطْعَمْهَا فَقَالَ إِنَّ فِيكُمْ غُلُولًا فَلْيُبَايِعْنِي مِنْ كُلِّ قَبِيلَةٍ رَجُلٌ فَلَزِقَتْ يَدُ رَجُلٍ بِيَدِهِ فَقَالَ فِيكُمْ الْغُلُولُ فَلْيُبَايِعْنِي قَبِيلَتُكَ فَلَزِقَتْ يَدُ رَجُلَيْنِ أَوْ ثَلَاثَةٍ بِيَدِهِ فَقَالَ فِيكُمْ الْغُلُولُ فَجَاءُوا بِرَأْسٍ مِثْلِ رَأْسِ بَقَرَةٍ مِنْ الذَّهَبِ فَوَضَعُوهَا فَجَاءَتْ النَّارُ فَأَكَلَتْهَا ثُمَّ أَحَلَّ اللَّهُ لَنَا الْغَنَائِمَ رَأَى ضَعْفَنَا وَعَجْزَنَا فَأَحَلَّهَا لَنَا (بخاري)باب قَوْلِ النَّبِىِّ صلى الله عليه وسلم  أُحِلَّتْ لَكُمُ الْغَنَائِمُ–كتاب فرض الخمس

   சுருக்கம்- ஒரு நபி போருக்குப் புறப்படும்போது சில நிபந்தனைகளை முன் வைத்து தன் உம்மத்தை அழைத்துச் சென்றார் தன் மனைவியுடன் இன்னும் சேராத புதிய மணமகன்கள், கட்டிடம் கட்டி விட்டு அதன் மேல்தளம் அமைக்காதவர்கள், கால்நடைகள் குட்டி போடும் நிலையில் அதை எதிர் பார்த்து காத்திருப்பவர் ஆகியோர்  எங்களோடு வரக்கூடாது.(இவர்களால் முழுமையாகப்போரில் கவனம் செலுத்த முடியாது.) என்று கூறி மற்றவர்களை அழைத்துச் சென்றார். அங்கு போய்ச் சேருவதற்குள் அசர் நெருங்கி விட்டது. சூரியன் மறைந்து விட்டால் போரிட முடியாது. ஆகவே அல்லாஹ்விடம் யாஅல்லாஹ் இந்த சூரியனை எங்களுக்காக மறையாமல் தடுத்து வை என துஆ செய்தார். அதன்படி போர் முடியும் வரை சூரியன் மறையாமல் இருந்தது. அல்லாஹ் வெற்றியை கொடுத்தான். அக்காலத்தில் குர்பானி கொடுப்பவர்களும் சரி, ஙனீமத் பொருளை அடைந்தவர்களும் சரி அவர்கள் தியாக உள்ளத்தோடு அவற்றை பயன்படுத்தாமல் ஒரு மலை மீது கொண்டு போய் வைத்து விட வேண்டும். நெருப்பு வந்து அதை கரித்துச் சென்று விட்டால் அவர்களின் குர்பானி ஏற்கப்பட்டது என்று பொருள். அதன்படி இப்போரில் கிடைத்த ஙனீமத் பொருட்களை அவ்வாறே வைத்த போது நெருப்பு வந்ததுஆனால் கரிக்காமல் சென்று விட்டது. அப்போது அந்த நபி தன் உம்மத்தினரிடம் இங்கு வந்து சேர வேண்டிய தியாகப் பொருட்களில் சிலதை யாரோ எடுத்து வைத்துள்ளீர்கள். அதை நேரடியாகவும் சொல்ல மாட்டீர்கள் ஆகவே அதை கண்டு பிடிக்க உங்களில் ஒவ்வொரு குடும்பத் தலைவரும் என்னிடம் வந்து கை கொடுக்க வேண்டும் என்ற போது, வரிசையாக வந்து அவர்கள் கை கொடுத்தனர். அதில் ஒரு குடும்பத் தலைவரின் கை நபியின் கையுடன் ஒட்டிக் கொண்டது உடனே அந்த நபி உங்களின் குடும்பம் முழுவதும் என்னிடம் கை கொடுக்க வேண்டும் என்ற போது அவ்வாறே செய்தனர். அப்போது அவர்களில் இரண்டு அல்லது மூன்று நபர்களின் கைகள் நபியின் கையுடன் ஒட்டிய போது, உங்களிடம் தான் அப்பொருட்கள் உள்ளன. மரியாதையாக அதை கொண்டு வாருங்கள் என்ற போது ஒரு மாட்டின் தலை அளவுக்கு அவர்கள் மறைத்து வைத்திருந்த தங்கத்தை கொண்டு வந்தனர். அதை மலை மீது வைத்த பின்பே நெருப்பு வந்து அதை கரித்துச் சென்றது அவர்களின் தியாகம் ஏற்கப்பட்டது. 

عن أبي هريرة ، رضي الله عنه قال : نزل جبريل عليه الصلاة والسلام إلى النبي صلى الله عليه وسلم ، فقال له النبي صلى الله عليه وسلم : يا جبريل كيف رأيت عيدنا ؟ » فقال : لقد تباهى به أهل السماء . اعلم يا محمد أن الجذع من الضأن خير من السيد من المعز ، وأن الجذع من الضأن خير من السيد من البقر ، وأن الجذع من الضأن خير من السيد من الإبل ، ولو علم الله ذبحا خيرا منه فدى به إبراهيم عليه الصلاة والسلام (كنز العمال)

குர்பானிப் பிராணியை முன்பாகவே வாங்கி வளர்த்து, கொழுக்க வைப்பதின் சிறப்பு

ذَلِكَ وَمَنْ يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوبِ (32)سورة الحج عَنْ اِبْن عَبَّاس رضي الله عنه قال "تَعْظِيمهَا اِسْتِسْمَانهَا وَاسْتِحْسَانهَا

{تفسير القرطبي} وَقَالَ أَبُو أُمَامَة عَنْ سَهْل : كُنَّا نُسَمِّن الْأُضْحِيَّة بِالْمَدِينَةِ وَكَانَ الْمُسْلِمُونَ يُسَمِّنُونَ .رَوَاهُ الْبُخَارِيّ

இப்னு அப்பாஸ் ரழி அவர்கள் கூறினார்கள். மேற்படி குர்ஆன் வசனத்தில் அல்லாஹ்வின் சின்னங்களை கண்ணியப்படுத்தினால் அது இறையச்சத்தின் அடையாளம் என்பதில்  கண்ணியப்படுத்துதல் என்பது அதை முன்னதாகவே வாங்கி தீனி போட்டு கொழுக்க வைப்பதாகும். ஸஹ்ல் ரழி கூறினார்கள் நாங்கள் குர்பானிப் பிராணிகளை முன்பாகவே வாங்கி கொழுக்க வைப்போம். முஸ்லிம்களும் அவ்வறே செய்தனர். 

நபி ஸல் அவர்கள் அறுத்த குர்பானிப் பிராணியைப் போன்றே தம்  குர்பானிப் பிராணியும் இருப்பதை விரும்பிய நபித்தோழர்கள்

عن يُونُس بْن مَيْسَرَةَ بْنِ حَلْبَسٍ قَالَ خَرَجْتُ مَعَ أَبِي سَعِيدٍ الزُّرَقِيِّ صَاحِبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى شِرَاءِ الضَّحَايَا قَالَ يُونُسُ فَأَشَارَ أَبُو سَعِيدٍ إِلَى كَبْشٍ أَدْغَمَ لَيْسَ بِالْمُرْتَفِعِ وَلَا الْمُتَّضِعِ فِي جِسْمِهِ فَقَالَ لِي اشْتَرِ لِي هَذَا كَأَنَّهُ شَبَّهَهُ بِكَبْشِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (ابن ماجة) بَاب مَا يُسْتَحَبُّ مِنْ الْأَضَاحِيِّ

யூனுஸ் இப்னு மய்ஸரா ரஹ் கூறினார்கள் நான் நபித்தோழர் அபூஸயீத் ரழி அவர்களுடன் குர்பானி ஆடு வாங்கச் சென்றேன். அப்போது அபூஸயீத் ரழி அவர்கள் இலேசாக கறுப்பு நிறம் கலந்த, நடுத்தரமான அளவு கொண்ட ஒரு ஆட்டை சுட்டிக்காட்டி இதை எனக்கு வாங்குங்கள் காரணம் இது நபி ஸல் அவர்கள் கொடுத்த குர்பானி ஆட்டைப் போன்று உள்ளது என்றார்கள்.

لابد أن تكون الضحية بما يجزئ، فلا تجزئ الصغيرة التي لم تبلغ سناً ينتفع بها، وحدد ذلك في الإبل بخمس سنين، فإذا تمت السنة الخامسة فهي ناقة أو بعير يضحى به، وتجزئ البقر إذا بلغت السنتين، والمعز إذا بلغت سنة، والضأن إذا بلغت نصف سنة، هكذا حددت أسنانها (شرح عمدة الاحكام)

ஒரு வயது பூர்த்தியடையாத ஆட்டை குர்பானி கொடுப்பது கூடாது.  ஆறு மாத செம்மறியாடு பார்ப்பதற்கு ஒரு வருடம் பூர்த்தியானதைப் போன்று இருந்தால் அதை குர்பானி கொடுக்கலாம்.  மாட்டில் இரண்டு வயது பூர்த்தியடையாத மாட்டை குர்பானி கொடுப்பது கூடாது. ஒட்டகத்தில் ஐந்து  வயது பூர்த்தியடையாத ஒட்டகத்தை குர்பானி கொடுப்பது கூடாது.


குர்பானிப் பிராணியில் இருக்கக் கூடாத குறைகள்

குறிப்பு- நோய் தாக்கிய, ஒற்றைக்கண் உள்ள, நொண்டியான, முற்றிலும் கொம்பு உடைந்த ஆட்டை குர்பானி கொடுக்கக் கூடாது. வெண்மை நிறம் கொண்ட ஆடு சிறந்தது. காயடிக்கப்பட்ட ஆடு மிகவும் சிறந்தது. 

أَنَّ عَائِشَةَ قَالَتْ : كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا ضَحَّى اشْتَرَى كَبْشَيْنِ عَظِيمَيْنِ ، سَمِينَيْنِ أَقْرَنَيْنِ ، أَمْلَحَيْنِ مَوْجُوئَيْنِ (أحمد

நபி ஸல் குர்பானி கொடுத்தால் பருமனான, கொம்பு உள்ள, காயடிக்கப்பட்ட ஆட்டைக் குர்பானி கொடுப்பார்கள்

وإن قطع من الذنب أو الأذن أو العين أو الإلية الثلث أو أقل أجزأه وإن كان أكثر لم يجزه لأن الثلث نتفذ فيه الوصية من غير رضا الورثة فاعتبر قليلا وفيما زاد لا تنفذ إلا برضاهم فاعتبر كثيرا (هداية

வால், காது ஆகியவை மூன்றில் ஒரு பகுதி அறுபட்டிருந்தாலோ அல்லது அதை விடக் குறைவாக அறுபட்டிருந்தால் குர்பானி கொடுக்கலாம்.  கொம்பும் இவ்வாறே மூன்றில் ஒரு பகுதிக்கும் குறைவாக உடைந்திருந்தால் குர்பானி கொடுக்கலாம். அதற்கு மேல் அறுபட்டிருந்தால் குர்பானி கொடுக்கக் கூடாது. 

மூன்றில் ஒரு பங்கு குறை மன்னிக்கப்படும் என்பதற்கு இமாம்கள் கூறும் ஆதாரமாகிறது. வஸிய்யத் உடைய சட்டமாகும். ஒருவர் தன்னுடைய வாரிசுகளின் அனுமதி இல்லாமலேயே மூன்றில் ஒரு பகுதியை வாரிசு அல்லாதவருக்கு வஸிய்யத் செய்ய அனுமதி உண்டு. காரணம் அதுபோக மீதி இரண்டு பங்கு என்பது வாரிசுகளுக்கு மிச்சமிருப்பது என்பது முழுவதும் மிச்சமிருப்பதைப் போன்றே கருதப்படும். பிறருக்கு வஸிய்யத் செய்த மூன்றில் ஒரு பங்கு என்பது குறைந்த அளவு என்பதால் வாரிசுகளுக்குச் சேர வேண்டிய சொத்தில் குறைவு செய்ததாக கவனிக்கப்படாது. அதுபோல் குர்பானிப் பிராணியில் மூன்றில் ஒரு பங்கு குறை மன்னிக்கப்படும்.                                 

குர்பானிப் பிராணியின் கண்களில் எந்தக் குறையும் இருக்கக்கூடாது

عن حذيفة قال قال رسول الله صلى الله عليه و سلم استشرفوا العين والأذن أي اطلبوا سلامتهما (طبراني

குர்பானிப் பிராணியின் கண்களில் மூன்றில் ஒரு பங்கு குறை இருக்கிறதா அல்லது அதைவிடக் கூடுதலாக உள்ளதா என்பதை பரிசோதிக்க ஹிதாயா நூலில் கூறப்படும் விளக்கம் 

ثم معرفة المقدار في غير العين متيسر وفي العين قالوا تشد العين المعيبة بعد أن لا تعتلف الشاة يوما أو يومين ثم يقرب العلف إليها قليللا قليلا فإذا رأته من موضع أعلم على ذلك المكان ثم تشتد عينها الصحيحة وقرب إليها العلف قليلا قليلا حتى إذا رأته من مكان أعلم عليه ثم ينظر إلى تفاوت ما بينهما فإن كان ثلثا فالذاهب الثلث وإن كان نصفا فالنصف (هداية

மற்ற உறுப்புக்களில் குறை இருந்தால் வெளியில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் கண்ணில் குறை இருப்பதை வெளியில் பார்த்துத் தெரிந்து கொள்ள முடியாது. இதற்காக நாம் செய்ய வேண்டியது நீண்ட நேரம் ஆட்டுக்கு எந்த தீனியும் தராமல் இருந்த பிறகு அதற்கான தீனியை எடுத்துக் கொண்டு அந்த ஆட்டின் இரு கண்களில் குறையுள்ளதாக கருதப்படும் கண் மட்டும் திறந்திருக்கும் அமைப்பில் மற்றொரு கண்ணை அதாவது ஆரோக்கியமான கண்ணைக் கட்டி விட்டு தூரத்தில் இருந்து தீனியைக் கொண்டு செல்ல வேண்டும். எவ்வளவு தூரத்தில் ஆடு தன்னுடைய தீனியைப் பார்த்து அதை நோக்கி வர ஆரம்பிக்கிறது என அந்த இடத்தை அடையாளம் இட வேண்டும். பின்பு அடுத்த நாள் அதே மாதிரி மற்றொரு ஆரோக்கியமான கண் மட்டும் திறந்திருக்கும் அமைப்பில் மற்றொரு கண்ணை அதாவது குறையுள்ள கண்ணைக் கட்டி விட்டு தூரத்தில் இருந்து தீனியைக் கொண்டு செல்ல வேண்டும். இந்த முறை தூரத்தில் இருந்தே ஆடு தன்னுடைய தீனியை அடையாளம் கண்டு அதை நோக்கி வர ஆரம்பிக்கும். அந்த இடத்தை அடையாளம் இட வேண்டும். தற்போதைய அடையாளத்தை விட முதல் நாள் போட்ட அடையாளம் மூன்றில் ஒரு பகுதியை விட தூரம் குறைவாக இருந்தால் அல்லது மூன்றில் ஒரு பகுதி மட்டும் இருந்தால் அந்த ஆட்டை குர்பானி கொடுக்கலாம்.      

             

அகீகாவில் ஆடுகளின் எடையை விட எண்ணிக்கை தான் முக்கியம். ஆனால் உழ்ஹியாவில் ஆடுகளின் எடை தான் முக்கியம்.

أَنَّ تَكْثِير الْعَدَد فِي الْعَقيقة مَقْصُود فَهُوَ الْأَفْضَل بِخِلَافِ الْأُضْحِيَّة .لأَنَّ الْمَقْصُود فِي الضَّحَايَا اللحم ولحم السمين،فَشَاة نَفِيسَة أَفْضَل مِنْ شَاتَيْنِ غَيْر سَمِينَتَيْنِ بِقِيمَتِهَا -قَالَ النَّوَوِيّ: فِيمَنْ أَرَادَ أَنْ يُعْتِقَ رَقَبَةً وَاحِدَةً ، أَمَّا لَوْ كَانَ مَعَ شَخْصٍ أَلْف دِرْهَم مَثَلًا فَأَرَادَ أَنْ يَشْتَرِيَ بِهَا رَقَبَة يُعْتِقُهَا فَوَجَدَ رَقَبَة نَفِيسَة أَوْ رَقَبَتَيْنِ مَفْضُولَتَيْنِ فَالرَّقَبَتَانِ أَفْضَل،قَالَ:وَهَذَا بِخِلَافِ الْأُضْحِيَّة فَإِنَّ الْوَاحِدَة السَّمِينَة فِيهَا أَفْضَل، لِأَنَّ الْمَطْلُوب هُنَا فَكّ الرَّقَبَة وَهُنَاكَ طِيب اللَّحْم (فتح الباري)وهكذا قال الشافعى رحمه الله عنه فى الاضحية استكثار القيمة مع استقلال العدد أحب إلى 

  விளக்கம்-நவவீ இமாம் கூறுகிறார்கள்- ஒரு மனிதனிடம் ஆயிரம் ரூபாய் உள்ளது இந்த ஆயிரத்திற்கு அடிமைகளை வாங்கி உரிமை  விட எண்ணுகிறார் அப்போது ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரே ஒரு உயர்ந்த அடிமையையும் காண்கிறார் அதேபோல 500 ரூபாய் மதிப்புள்ள இரண்டு அடிமைகளையும் காண்கிறார் இந்நிலையில் அவர்  ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரே ஒரு உயர்ந்த அடிமையை வாங்கி உரிமை விடுவதை விட  500 ரூபாய் மதிப்புள்ள இரண்டு அடிமைகளை வாங்கி உரிமை விட்டு அவ்விருவரையும் அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பது தான் சிறந்த து ஏனெனில் இங்கே அடிமையின் மதிப்பை விட எண்ணிக்கை தான் முக்கியம். இதேபோல் தான் அகீகாவும். குர்பானீ அப்படியல்ல. குர்பானியில் ஐந்தாயிரம் மதிப்புள்ள இரண்டு ஆடுகளை விட பத்தாயிரம் மதிப்புள்ள கொழுத்த ஆடு சிறந்தது         

குர்பானிப் பிராணியை வாங்கும்போது குறையற்றதாக வாங்கி பின்பு அவரிடம் வளரும்போது ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால்..

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رض قَال ابْتَعْنَا كَبْشًا نُضَحِّي بِهِ فَأَصَابَ الذِّئْبُ مِنْ أَلْيَتِهِ أَوْ أُذُنِهِ فَسَأَلْنَا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَرَنَا أَنْ نُضَحِّيَ بِهِ رواه ابن ماجة - كتاب الأضاحى

அபூசயீத் ரழி கூறினார்கள் நாங்கள் ஒரு ஆட்டை வாங்கி வைத்திருந்தோம். அதன் பித்தட்டுப் பகுதியை (மற்றொரு அறிவிப்பில் அதன் காதை) ஒரு ஓநாய் கடித்து சேதப்படுத்தி விட்டது. அதைப் பற்றி நபி ஸல் அவர்களிடம் கேட்டோம். அதற்கு நபி ஸல் அவர்கள் அதையே குர்பானி கொடுக்க ஏவினார்கள். 

இறந்தவருக்காக குர்பானி கொடுக்கலாம்

عَنْ حَنَشٍ قَالَ رَأَيْتُ عَلِيًّا يُضَحِّي بِكَبْشَيْنِ فَقُلْتُ لَهُ مَا هَذَا فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْصَانِي أَنْ أُضَحِّيَ عَنْهُ فَأَنَا أُضَحِّي عَنْه(ابو داود

நபி ஸல் அவர்களின் வஃபாத்துக்குப் பிறகு அலீ ரழி அவர்கள் இரண்டு ஆடுகளை குர்பானி கொடுப்பார்கள். காரணம் கேட்ட போது நபி ஸல் அவர்கள் தனக்காகவும் குர்பானி தரும்படி எனக்கு வஸிய்யத் செய்தார்கள் அதனால் அவர்களுக்கு சேர்த்து நான் தருகிறேன் என்றார்கள்.

உம்மத்தின் மீது பேரன்பு

 28-09-2026 ரபீஉல் அவ்வல் - 14 بسم الله الرحمن الرحيم   (اُمَّتِي.. اُمَّتِي )   உம்மத்தீ...   உம்மத்தீ... https://chennaijamaathululama.blo...