வியாழன், 1 ஆகஸ்ட், 2024

வயநாடு நிலச்சரிவு - பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவி செய்வோம்

 

இரு தினங்களுக்கு முன்பு கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவின் மூலம் ஏற்பட்ட பாதிப்புகள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதன்கிழமை இரவு வரை வந்த செய்தியில் சுமார் 250 பேர் பலி என்றும் இன்னும் பலி எண்ணிக்கை அதிகமாகும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.  பொதுவாக  மலைப் பிரதேசங்களில்  மழை அதிகமாகப் பெய்யும்போது மண் சரிவு ஏற்படுவது  இயல்பு என்றாலும் தற்போதைய ஆய்வுகள் சொல்லும் உண்மை என்னவென்றால் இத்தகைய பாதிப்புகளுக்கு முக்கியக் காரணம் மரங்கள் அதிகமாக வெட்டப்படுவதும் விதிமுறை மீறி கட்டப்படும் கட்டடங்களும்தான்  மண்ணின் கெட்டித் தன்மையைக் குறைத்து நிலச் சரிவுக்குக் காரணமாக அமைகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. எது எப்படி இருந்தாலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நாம் முடிந்தவரை மனிதாபமான அடிப்படையில் உதவி செய்யக் கடமைப் பட்டுள்ளோம்.

சிரமத்தில் இருப்பவருக்கு உதவுவது நபிமார்களின் நல்ல குணமாகும்

وَلَمَّا تَوَجَّهَ تِلْقَاءَ مَدْيَنَ قَالَ عَسَى رَبِّي أَنْ يَهْدِيَنِي سَوَاءَ السَّبِيلِ (22) وَلَمَّا وَرَدَ مَاءَ مَدْيَنَ وَجَدَ عَلَيْهِ أُمَّةً مِنَ النَّاسِ يَسْقُونَ وَوَجَدَ مِنْ دُونِهِمُ امْرَأَتَيْنِ تَذُودَانِ قَالَ مَا خَطْبُكُمَا قَالَتَا لَا نَسْقِي حَتَّى يُصْدِرَ الرِّعَاءُ وَأَبُونَا شَيْخٌ كَبِيرٌ (23) فَسَقَى لَهُمَا ثُمَّ تَوَلَّى إِلَى الظِّلِّ فَقَالَ رَبِّ إِنِّي لِمَا أَنْزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ (24) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلَى اسْتِحْيَاءٍ قَالَتْ إِنَّ أَبِي يَدْعُوكَ لِيَجْزِيَكَ أَجْرَ مَا سَقَيْتَ لَنَا فَلَمَّا جَاءَهُ وَقَصَّ عَلَيْهِ الْقَصَصَ قَالَ لَا تَخَفْ نَجَوْتَ مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ (25) قَالَتْ إِحْدَاهُمَا يَا أَبَتِ اسْتَأْجِرْهُ إِنَّ خَيْرَ مَنِ اسْتَأْجَرْتَ الْقَوِيُّ الْأَمِينُ (26) قَالَ إِنِّي أُرِيدُ أَنْ أُنْكِحَكَ إِحْدَى ابْنَتَيَّ هَاتَيْنِ عَلَى أَنْ تَأْجُرَنِي ثَمَانِيَ حِجَجٍ فَإِنْ أَتْمَمْتَ عَشْرًا فَمِنْ عِنْدِكَ وَمَا أُرِيدُ أَنْ أَشُقَّ عَلَيْكَ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ مِنَ الصَّالِحِينَ (27) القصص

சிரமத்தில் சிக்கியவருக்கு உதவுவது ஹஜ்ஜுடைய நன்மையைப் பெற்றுத் தரும்

عَنْ عَبْدِ اللَّهِ بن عُمَرَ قَالا : مَنْ مَشَى فِي حَاجَةِ أَخِيهِ الْمُسْلِمِ أَظَلَّهُ اللَّهُ تَعَالَى بِخَمْسَةٍ وَسَبْعِينَ أَلْفَ مَلَكٍ يَدْعُونَ لَهُ ، وَلَمْ يَزَلْ يَخُوضُ فِي الرَّحْمَةِ حَتَّى يَفْرُغَ ، فَإِذَا فَرَغَ كَتَبَ اللَّهُ لَهُ حَجَّةً وَعُمْرَةً ، وَمَنْ عَادَ مَرِيضًا أَظَلَّهُ اللَّهُ بِخَمْسَةٍ وَسَبْعِينَ أَلْفَ مَلَكٍ ، لا يَرْفَعُ قَدَمًا إِلا كُتِبَتْ لَهُ حَسَنَةٌ ، وَلا يَضَعُ قَدَمًا إِلا حُطَّتْ عَنْهُ سَيِّئَةٌ ، وَرُفِعَ بِهَا دَرَجَةً حَتَّى يَقْعُدَ فِي مَقْعَدِهِ ، فَإِذَا قَعَدَ غَمَرَتْهُ الرَّحْمَةُ ، فَلا يَزَالُ كَذَلِكَ إِذَا أَقْبَلَ حَتَّى يَنْتَهِيَ إِلَى مَنْزِلِهِ . لا يُرْوَى هَذَا الْحَدِيثُ عَنِ ابْنِ عُمَرَ إِلا بِهَذَا الإِسْنَادِ رواه الطبراني في المعجم الكبير

 யார் முஸ்லிமான தனது சகோதரரின் தேவையை நிறைவேற்றி வைப்பதற்காகச் செல்கிறாரோ அவருக்காக 75 ஆயிரம் மலக்குகள் தம் இறக்கைகளை விரித்த படி துஆ செய்கிறார்கள். அவரது தேவையையும் நிறைவேற்றி வைத்து விட்டால் அவருக்கு ஒரு ஹஜ் மற்றும் உம்ராவின் நன்மை கிடைக்கும். அவர் திரும்பி வரும் வரை அல்லாஹ்வின் ரஹ்மத்தில் மூழ்கியவராக இருப்பார். யார் முஸ்லிமான நோய்வாய்ப்பட்ட தனது சகோதரரை நலம் விசாரிப்பதற்காகச் செல்கிறாரோ அவருக்காக 75 ஆயிரம் மலக்குகள் தம் இறக்கைகளை விரித்த படி துஆ செய்கிறார்கள். அவர் அந்த நோயாளியிடம் அமரும் வரை இச்சிறப்பு இருக்கும். அவர் அந்த நோயாளியிடம் சென்று நலம் விசாரிக்க அமர்ந்து விட்டால் அல்லாஹ்வின் ரஹ்மத் அவரைச் சூழ்ந்து கொள்ளும். மேலும் அவர் அங்கிருந்து திரும்பி தன் வீட்டுக்கு வரும் வரை அவரது ஒவ்வொரு எட்டுக்கும் நன்மை எழுதப்பட்டு, பாவம் மன்னிக்கப்பட்டு அந்தஸ்து உயர்த்தப்படுகிறது.         

عن علي بن حسين ، قال : خرج الحسن يطوف بالكعبة ، فقام إليه رجل فقال : يا أبا محمد ، اذهب معي في حاجة إلى فلان ، فترك الطواف وذهب معه ، فلما ذهب قام إليه رجل حاسد للرجل الذي ذهب معه ، فقال : يا أبا محمد ، تركْتَ الطواف وذهبتَ معه ؟ قال : فقال له الحسن : وكيف لا أذهب معه ؟ ورسول الله صلى الله عليه وسلم قال :  من ذهب في حاجة لأخيه المسلم فقضيت حاجته كتبت له حجة وعمرة ، وإن لم يقض كتبت له عمرة فقد اكتسبت حجة وعمرة ورجعت إلى طوافي (بيهقي في شعب الايمان

ஹஸன் ரழி தவாஃப் செய்து கொண்டிருக்கும்போது ஒரு நண்பர் வந்து அபூ முஹம்மத் அவர்களே வாருங்கள். நாம் இருவரும் இணைந்து ஒரு மனிதரின் முக்கியமான அவசியத்தேவையை நிறைவேற்ற வேண்டியுள்ளது என்று கூறியவுடன் ஹஸன் ரழி அவர்கள் உடனே தவாஃபை விட்டு விட்டு அவருடன் சென்று விட்டார்கள். அப்போது அந்த நண்பருக்கு வேண்டாத மற்றொருவர் இதைக் கவனித்து விட்டு ஹஸன் ரழி அவர்களிடம் வந்து அவர் அழைத்தவுடன் நீங்கள் தவாஃபை பாதியில் விட்டு விட்டுச் சென்று விட்டீர்களே இது நியாயமா என்று பொறாமையுடன் கூறினார். அப்போது ஹஸன் ரழி அவர்கள் நான் எப்படி அவருடன் செல்லாமல் இருக்க முடியும் நபி ஸல்ல ல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள் யார் முஸ்லிமான தனது சகோதரரின் தேவையை நிறைவேற்றி வைப்பதற்காகச் சென்று அவரது நிறைவேற்றியும் வைத்து விட்டால் அவருக்கு ஒரு ஹஜ் மற்றும் உம்ராவின் நன்மை கிடைக்கும். அதே நேரத்தில் அவரது தேவையை நிறைவேற்றி வைப்பதற்காக இவர் புறப்பட்டுச் சென்றும் அதற்கான வாய்ப்பு இவருக்குக் கிடைக்கா விட்டால் புறப்பட்டுச் சென்றதற்காக ஒரு உம்ராவின் நற்கூலி வழங்கப்படுகிறது என நபி ஸல்ல ல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியிருக்கும்போது நான் எப்படி அவருடன் செல்லாமல் இருக்க முடியும். இப்போது நான் ஹஜ், உம்ராவின் நன்மையையும் அடைந்து கொண்டேன். என்னுடைய தவாஃபை விட்டதில் இருந்து திரும்ப ஆரம்பித்து அதன் நன்மையையும் பெற்றுக் கொண்டேன் என்று பதில் கூறினார்கள்.                                                         

عَن أَنَس بن مالك : أن رسول الله صلى الله عليه وسلم قال : من أغاث ملهوفا كتب الله له ثلاثا وسبعين مغفرة مغفرة واحدة منها فيها صلاح لأمره كله وثنتان وسبعون إلى يوم القيامة ، أو ذخرها له يوم القيامة. (مسند البزار

யார் பாதிக்கப் பட்டவருக்கு உதவுவாரோ அல்லாஹ் அவருக்கு 73 மஃபிரத்துகளை வழங்குகிறான். அவற்றில் ஒரு மஃபிரத் மட்டுமே அவருடைய இம்மையின் ஈடேற்றத்திற்குப் போதுமாகும். மூதமுள்ள 72 மஃபிரத் அவருடைய மறுமையின் நலனுக்காக சேமித்து வைக்கப்படும்.

عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ....مَنْ كَانَ فِي حَاجَةِ أَخِيهِ كَانَ اللَّهُ فِي حَاجَتِه (مسلم

எவர் தன் உடன் பிறவா சகோதரரின் தேவையை நிறைவேற்றுவதில் ஈடுபட்டிருப்பாரோ

அவருடைய தேவையை நிறைவேற்றுவதில் அல்லாஹ் ஈடு பட்டிருப்பான்.

عَنْ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَثَلُ الْمُؤْمِنِينَ فِي تَوَادِّهِمْ وَتَرَاحُمِهِمْ وَتَعَاطُفِهِمْ مَثَلُ الْجَسَدِ إِذَا اشْتَكَى مِنْهُ عُضْوٌ تَدَاعَى لَهُ سَائِرُ الْجَسَدِ بِالسَّهَرِ وَالْحُمَّى (مسلم

ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வதில் உண்மை முஃமின்களுக்கு உதாரணம் ஒரே உடலைப் போன்றாகும். உடலின் ஒருபகுதிக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் மற்ற பகுதிகளும் அதில் ஒத்துழைக்கின்றன. விழித்திருப்பது, காய்ச்சல் போன்றவைகள் மூலம் மற்ற உறுப்புக்கள் சிரமத்தில் பங்கெடுத்துக் கொள்கின்றன.

عَنِ الْبَرَاءِ ...قَالَ.. مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَوْمٍ جُلُوسٍ فِي الطَّرِيقِ قَالَ إِنْ كُنْتُمْ لَا بُدَّ فَاعِلِينَ فَاهْدُوا السَّبِيلَ وَرُدُّوا السَّلَامَ وَأَغِيثُوا الْمَظْلُوم – احمد

 عن أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ رضي الله عنه  قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى كُلِّ مُسْلِمٍ صَدَقَةٌ قَالُوا فَإِنْ لَمْ يَجِدْ قَالَ فَيَعْمَلُ بِيَدَيْهِ فَيَنْفَعُ نَفْسَهُ وَيَتَصَدَّقُ قَالُوا فَإِنْ لَمْ يَسْتَطِعْ أَوْ لَمْ يَفْعَلْ قَالَ فَيُعِينُ ذَا الْحَاجَةِ الْمَلْهُوفَ قَالُوا فَإِنْ لَمْ يَفْعَلْ قَالَ فَيَأْمُرُ بِالْخَيْرِ أَوْ قَالَ بِالْمَعْرُوفِ قَالَ فَإِنْ لَمْ يَفْعَلْ قَالَ فَيُمْسِكُ عَنْ الشَّرِّ فَإِنَّهُ لَهُ صَدَقَةٌ (بخاري

சிரமமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் உஸ்மான் ரழி அவர்கள் சிறந்த முன்மாதிரி

قال رسول الله صلى الله عيه وسلم من يشتري بئر رومة فيجعلها للمسلمين يضرب بدلوه فى دلائهم وله بها مشرب فى الجنة فساومه فيها عثمان فأبى أن يبيعها كلها فاشترى نصفها باثنى عشر ألف درهم وجعل ذلك للمسلمين وجعل له يوما ولليهودى يوما فإذا كان يوم عثمان استقى المسلمون ما يكفيهم يومين فلما رأى اليهودى ذلك قال لعثمان أفسدت على ركيتى فاشترى النصف الآخر بثمانية آلاف (سيرة الحلبية

மதீனாவில் மிகவும் சுவையான கிணறாக இது இருந்தது நபி ஸல் ஒருமுறை  யார் இதை அந்த யூதனிடமிருந்து வாங்கி மக்களுக்கு வக்ஃப் செய்வார்களோ அவருக்கு சுவனத்தில் அதுபோன்றக நீர் நிலை உண்டு என்றவுடன் உஸ்மான் ரழி போட்டி போட்டுக் கொண்டு அதை வாங்க யூதனிடம் சென்ற போது அதை அவன் விட்டுக் கொடுக்க மறுத்தான் எப்படியோ சம்மதிக்க வைத்து 12 ஆயிரம் திர்ஹம் தந்து ஒருநாள் விட்டு ஒருநாள் என்ற அடிப்படையில் அந்தக் கிணற்றின் உரிமையை பெற்றார்கள். தனக்கான அந்த நாளில் அனைத்து மக்களுக்கு தண்ணீரை இலவசமாக சப்ளை செய்தார்கள். ஆனால் அந்த யூதன் காசுக்கு மட்டுமே விற்றான். நாளடைவில் அவனிடம் காசு கொடுத்து யாரும் வாங்காத ஒரு நிலை ஏற்பட்டது. ஏனெனில் உஸ்மான் ரழி தனக்கான அந்த நாளில் அனைத்து மக்களுக்கும் தண்ணீரை இலவசமாக சப்ளை செய்ததால் அவனிடம் யாரும் வாங்கவில்லை. கடைசியில் வேறு வழியில்லாமல் அவன் மீதி உரிமையையும் விட்டுத் தந்தான். மொத்தம் 20 ஆயிரம் திர்ஹம் தந்து விலைக்கு வாங்கி மக்களின் தண்ணீர் கஷ்டத்தைப் போக்கினார்கள்.- சீரத்துல் ஹலபிய்யா      

மக்களின் சிரமத்தைப் போக்குவதில் முஸ்லிம் முன்னோடிகளின் பங்கு

பக்தாத் பேரரசர் கலீபா ஹாருன் ரஷீதின் மனைவி ஜுபைதா  அம்மையார் மக்காவில் ஏற்பட்ட தண்ணீர்க் கஷ்டத்தைப் போக்கக் கால்வாய் ஒன்றை பத்துமைல் நீளத்திற்கு உருவாக்கினார்.  நஹ்ர் ஜுபைதா என்ற பெயரில் இன்றும் உள்ளது.

நிநச்சரிவு  ஏற்படாமல் பாதுகாப்பதில் மரங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.

                                   எனவே மரங்களை முடிந்த வரை வெட்டக் கூடாது

சிலர் இந்த பூமியில் என்ன அசம்பாவிதங்கள் நடந்தாலும் அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டம் என்று கூறி அத்தோடு நிறுத்திக் கொள்வார்கள். ஆனால் அல்லாஹ்வின் நாட்டம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் சில நேரங்களில் மனிதர்களின் தவறுகள் காரணமாக இந்த பாதிப்புகள் ஏற்படும். அல்லாஹ் நாடியே அது ஏற்படும்.

وَمَا أَصَابَكُمْ مِنْ مُصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُو عَنْ كَثِيرٍ (30) الشوري

ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي النَّاسِ لِيُذِيقَهُمْ بَعْضَ الَّذِي عَمِلُوا لَعَلَّهُمْ يَرْجِعُونَ (41) الروم

  குறிப்பாக மரங்களை வெட்ட வேண்டாம் என்றும் மரங்களை வளர்க்க வேண்டும் எனவும்  நிறைய நபிமொழிகள் வந்துள்ளன.

عن أَنَس بْن مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنْ قَامَتْ السَّاعَةُ وَبِيَدِ أَحَدِكُمْ فَسِيلَةٌ فَإِنْ اسْتَطَاعَ أَنْ لَا يَقُومَ حَتَّى يَغْرِسَهَا فَلْيَفْعَلْ  (ابن ماجة

உலகம் அழியப் போகிறது என்ற நிலையிலும் உங்களிடம் ஒரு மரக்கன்று இருந்தால் முடிந்த வரை அதனை நட்டு விடுங்கள்

மரம் வளர்ப்பது கடமை

عَنْ جَابِرٍ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَى أُمِّ مُبَشِّرٍ الْأَنْصَارِيَّةِ فِي نَخْلٍ لَهَا فَقَالَ لَهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ غَرَسَ هَذَا النَّخْلَ أَمُسْلِمٌ أَمْ كَافِرٌ فَقَالَتْ بَلْ مُسْلِمٌ فَقَالَ لَا يَغْرِسُ مُسْلِمٌ غَرْسًا وَلَا يَزْرَعُ زَرْعًا فَيَأْكُلَ مِنْهُ إِنْسَانٌ وَلَا دَابَّةٌ وَلَا شَيْءٌ إِلَّا كَانَتْ لَهُ صَدَقَةٌ (مسلم)

சுருக்கம்- நபிகளார்(ஸல்) ஒரு அன்சாரிப் பெண்ணிடம் வருகை தந்த போது  அங்கு ஒரு மரம்  நடப்பட்டதைக் கண்டு இதை யார் நட்டி வைத்தார்கள் முஸ்லிமா அல்லதா அல்லது முஸிலிம் அல்லாதவரா என்று கேட்டார்கள். முஸ்லிம் தான் என்று கூறப் பட்ட போது நபி ஸல் கூறினார்கள்.நீங்கள் ஒரு மரத்தையோ செடியையோ நட்டால் அதிலிருந்து கால்நடைகளோ,விலங்குகளோ, மனிதர்களோ பயனைடைந்தால் உங்கள் கணக்கில் தர்மம் செய்ததாக எழுதப்படும்.

 

  மனிதனாகப் பிறந்த அனைவரும் தன்னுடைய வாழ்நாளில் ஒரு மரமாவது நட்டு இருக்க வேண்டும். மரம் வளர்ப்பதை இஸ்லாம் அந்த அளவுக்கு வலியுறுத்துகிறது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தோம். அங்கு வருகை தந்த அத்தனை விருந்தினர்களுக்கும் அவர்கள் திரும்பிச் செல்லும்போது மரக்கன்றுகள் அன்பளிப்பாகத் தரப்பட்டன. இது நல்ல ஒரு முன்மாதிரியாகத் தெரிந்தது. மரங்கள் வளர்ப்பதால் நாமும் பயனடையலாம். மற்ற உயிரனங்களும் பயனடையும். தொழிற்சாலைகள் மற்றும் பூமியை மாசு படுத்தும் பல்வேறு வாயுக்கள் மூலமாக உருவாகும் கார்பன் டை ஆக்ஸைடு என்ற நச்சு வாயுவை உள் வாங்கிக் கொண்டு உயிரினங்களுக்கு மிகவும்  தேவையான ஆக்ஸிஜனை மரங்கள் வெளிப்படுத்துகின்றன.

 மேலும் இந்த மரங்களின் வேர்கள் நன்கு பூமியில் வேரூன்றுவதின் காரணமாக நிலச்சரிவுகள் ஏற்படாமல் பெரும்பாலும் பாதுகாக்கப்படும். அத்தகைய மரங்களை வெட்டுவதும் நிலச்சரிவுகள் அவ்வப்போது ஏற்படுவதற்கான காரணமாக அமையலாம். தேவையான நேரத்தில் பருவ மழை பெய்வதற்கும் இந்த மரங்கள் காரணமாக அமைகின்றன.

 

இந்த பூமியில் எந்த ஒரு அசம்பாவிதம் நடந்தாலும் அதிகமாக முஸ்லிம்கள் பாதிக்கப்படுவதற்கு என்ன காரணம்

عَنْ أَبِي مُوسَى قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُمَّتِي هَذِهِ أُمَّةٌ مَرْحُومَةٌ لَيْسَ عَلَيْهَا عَذَابٌ فِي الْآخِرَةِ عَذَابُهَا فِي الدُّنْيَا الْفِتَنُ وَالزَّلَازِلُ وَالْقَتْلُ (ابوداود

  நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்: என்னுடைய இந்த சமுதாயம் கிருபை செய்யப்பட்ட சமுதாயமாகும்.இந்த உம்மத்தைச் சார்ந்த முஸ்லிம்களுக்கு மறுமையில் கடின வேதனை கிடையாது. ஏனெனில் மறுமையில் கடின வேதனையைக் குறைப்பதற்காக இம்மையில் அல்லாஹ் இவர்களுக்கு தரும் சோதனைகளாகிறது குழப்பங்களும், சில நடுக்கங்களும், கொலைச் சம்பவங்களும் ஆகும்.

(நூல் அபூதாவூத்)

வீடுகள் கட்டுவதற்காக மரங்கள் அதிக அளவில் வெட்டப் படுவதும் நிலச்சரிவுக்கு முக்கியக் காரணம்

ஆடம்பரத்திற்காக மனிதன் காடுகளை அழிக்கிறான். மரங்களை வெட்டுகிறான். ஆனால் அந்த மரங்கள்தான் மழை பொழிய முக்கியக் காரணம். ஒரு கவிஞர் இப்படிக் கூறுவார்.

மரந்தான் மரந்தான்

எல்லாம் மரந்தான்

மறந்தான் மறந்தான்

மனிதன் மறந்தான்

ஏரி,குளம்,குட்டைகளை ஆக்கிரமித்து மனிதன் வீடுகளைக் கட்டுகிறான். இன்று நாம் சந்தித்துக்கொண்டிருக்கும் தண்ணீர் பஞ்சம் மேலும் அதிகரிப்பதற்கு இதுவும் காரணம்.நம்முடைய தவறுகளால் வாயில்லா ஜீவன்களுக்கும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. மனிதன் உயிர்வாழ விலங்குகள் தடையாக இருந்தது ஒரு காலம். ஆனால் இன்றைக்கு விலங்குகள் உயிர் வாழ்வதற்கு மனிதன் தடையாக இருக்கின்றான்.

ஒரேயொரு விஷயத்தை நாம் சிந்திக்கவேண்டும்.எந்த ஒரு பறவையும் காட்டை அழித்து கூடு கட்டுவதில்லை. எந்த விலங்கும் குளத்தைக்குடைந்து குடிசை போடுவது கிடையாது. இவற்ற்றைச் செய்வதெல்லாம் மனிதப் பிறவிதான். இதன் விளைவு தமிழகத்தில் எத்தனையோ ஆறுகள் அடையாளம் இல்லாமல் போய்விட்டன. எத்தனையோ குளங்கள் குன்றி விட்டன. எத்தனையோ நதிகள்  நாதியில்லாமல் போய்விட்டன. எத்தனையோ ஓடைகள் ஓடிப்போய் விட்டன. இவ்வளவு நடந்தும் இந்த மனிதனின் அட்டூழியங்கள் குறைவதில்லை.

 

أَلْهَاكُمُ التَّكَاثُرُ  (1) حَتَّى زُرْتُمُ الْمَقَابِرَ (2)

ஆபத்து வருவதற்கு முன்பே சுதாரித்துக் கொள்வதை கற்றுத் தரும் இஸ்லாம்

يُوسُفُ أَيُّهَا الصِّدِيقُ أَفْتِنَا فِي سَبْعِ بَقَرَاتٍ سِمَانٍ يَأْكُلُهُنَّ سَبْعٌ عِجَافٌ وَسَبْعِ سُنْبُلَاتٍ خُضْرٍ وَأُخَرَ يَابِسَاتٍ لَعَلِّي أَرْجِعُ إِلَى النَّاسِ لَعَلَّهُمْ يَعْلَمُونَ (46) قَالَ تَزْرَعُونَ سَبْعَ سِنِينَ دَأَبًا فَمَا حَصَدْتُمْ فَذَرُوهُ فِي سُنْبُلِهِ إِلَّا قَلِيلًا مِمَّا تَأْكُلُونَ (47) ثُمَّ يَأْتِي مِنْ بَعْدِ ذَلِكَ سَبْعٌ شِدَادٌ يَأْكُلْنَ مَا قَدَّمْتُمْ لَهُنَّ إِلَّا قَلِيلًا مِمَّا تُحْصِنُونَ (48) ثُمَّ يَأْتِي مِنْ بَعْدِ ذَلِكَ عَامٌ فِيهِ يُغَاثُ النَّاسُ وَفِيهِ يَعْصِرُونَ (سورة يوسف49)...

இச்சம்பவத்தில் நிறைய படிப்பினைகள் உண்டு. பஞ்சமான அந்த வருடங்களை தன்னால் சிறப்பாக சமாளிக்க முடியும் என்பதால் நபி யூசுஃப் அலை தானாக விரும்பி இந்தப் பொறுப்பைத் தனக்குத் தரும்படி கேட்டார்கள். பஞ்சமான அந்தக் கால கட்டங்களில் நபி யூசுஃப் அலை ஒரு நேரம் மட்டுமே உணவு உண்டார்கள் என்றும் சில விரிவுரைகளில் உள்ளது. தகுதியுள்ள தலைவர்கள் மக்களுக்குப் பொறுப்பேற்பதை விட்டும் ஒதுங்கக் கூடாது என்பதற்கு இது சிறந்த சான்றாகும்.                 

وفي الخبر: "يرحم الله أخي يوسف لو لم يقل اجعلني على خزائن الأرض لاستعمله من ساعته ولكن أخر ذلك سنة" . وقيل: إنما تأخر تمليكه إلى سنة لأنه لم يقل إن شاء الله. (قرطبي

நபி யூசுஃப் அலை தானாக விரும்பி பொறுப்பைக் கேட்காமல் இருந்திருந்தால் அப்போதே அந்த அரசர் பொறுப்பை ஒப்படைத்திருப்பார். எனினும் அவ்வாறு விரும்பிக் கேட்டதால் ஒரு வருடம் சோதித்துப் பார்த்த பிறகே அந்த அரசர் பொறுப்பை ஒப்படைத்தார் என்றும் மற்றொரு அறிவிப்பில் நபி யூசுப் அலை இன்ஷா அல்லாஹ் சொல்லாததால் ஒரு வருடம் தாமதம் ஆனது என்றும் கூறப்பட்டுள்ளது.                     

 

திடீர் ஆபத்துகள் வராமல் பாதுகாக்க ஹதீஸில் கூறப்பட்டுள்ள துஆக்கள்

வியாழன், 25 ஜூலை, 2024

உலக காரியங்களில் நிதானமும் ஆலோசனை கேட்பதும்

சில காரியங்களில் அவசரப்படுவது அவசியம். சில காரியங்களில் நிதானம் அவசியம்.

துன்யாவுடைய காரியங்களில் நிதானம் அவசியம். ஒரு தொழில் தொடங்க வேண்டுமானால் ஒரு திருமணம் நடத்த வேண்டுமானால் அதற்கு மாப்பிள்ளை அல்லது மணப்பெண் பார்க்க வேண்டுமானால் நிதானம் மிக அவசியம். 

துன்யாவின் காரியங்களில் எடுத்தோம், கவிழ்த்தோம் என்றில்லாமல் நிதானமும், நடுநிலையும் மிகச் சிறந்தது

عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ عَنْ أَبِيهِ  عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ التُّؤَدَةُ فِي كُلِّ شَيْءٍ إِلَّا فِي عَمَلِ الْآخِرَةِ (ابوداود) بَاب فِي الرِّفْقِ- كِتَاب الْأَدَبِ

எந்தக் காரியத்திலும் அதன் பின் விளைவுகளைப் பற்றி நன்கு சிந்தித்து அக்காரியத்தில் இறங்க வேண்டும்

عَنْ أَنَسٍ ، أَنَّ رَجُلا قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : أَوْصِنِي ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : خُذِ الأَمْرَ بِالتَّدْبِيرِ ، فَإِنْ رَأَيْتَ فِي عَاقِبَتِهِ خَيْرًا ، فَأَمْضِهِ ، وَإِنْ خِفْتَ غَيًّا ، فَأَمْسِكْ "(شرح السنة- مشكاة- باب الحذر والتأني- باب السلام

ஒரு மனிதர் நபி ஸல் அவர்களிடம் வந்து எனக்கு அறிவுரை கூறுங்கள் என்றார்.அதற்கு நபி ஸல் அவர்கள் (எந்த ஒரு உலக) காரியத்தையும் திட்டமிட்டு, யோசித்துச் செய்யுங்கள். அதன் பின் விளைவு நல்லதாக இருந்தால் அதைச் செயல்படுத்துங்கள். அதன் பின் விளைவு கெட்டதாக இருந்தால் அதைச் செய்யாமல் விட்டு விடுங்கள்.  

மறுமையின் நன்மையான காரியத்தைச் செய்வதற்கு யோசிக்கக்கூடாது.

عَنْ عُقْبَةَ بْنِ الْحَارِثِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعَصْرَ فَلَمَّا سَلَّمَ قَامَ سَرِيعًا دَخَلَ عَلَى بَعْضِ نِسَائِهِ ثُمَّ خَرَجَ وَرَأَى مَا فِي وُجُوهِ الْقَوْمِ مِنْ تَعَجُّبِهِمْ لِسُرْعَتِهِ فَقَالَ ذَكَرْتُ وَأَنَا فِي الصَّلَاةِ تِبْرًا4 عِنْدَنَا فَكَرِهْتُ أَنْ يُمْسِيَ أَوْ يَبِيتَ عِنْدَنَا فَأَمَرْتُ بِقِسْمَتِهِ (بخاري) وَقَالَ عُمَرُ رضى الله عنه إِنِّى لأُجَهِّزُ جَيْشِى وَأَنَا فِى الصَّلاَةِ (بخاري) باب تَفَكُّرِ الرَّجُلِ الشَّىْءَ فِى الصَّلاَةِ-كتاب العمل في الصلاة

அசர் தொழுது முடித்து சலாம் கொடுத்தவுடன் வேகமாக நபி ஸல் அவர்கள் தன் மனைவிமார்களில் ஒருவரின் வீட்டுக்கு விரைந்து சென்றார்கள். பிறகு திரும்பி வந்தார்கள், அவர்களின் இந்த விரைவுக்கு காரணம் தெரியாமல் தோழர்கள் விழித்த போது நான் எங்களிடம் இருந்த ஒரு தங்க கட்டியை உரியவருக்குக் கொடுத்த எண்ணியிருந்தேன் அது இப்போது தான் நினைவுக்கு வந்தது. அது மாலை வரை அல்லது இரவு வரை என் வீட்டில் இருப்பதை நான் விரும்பவில்லை அதனால் அதை உரியவர்களுக்குப் பங்கிட்டுத் தரும்படி என் வீட்டாரிடம் சொல்லி விட்டு வந்தேன் என்றார்கள்.  

இமாம் அபூஹனீஃபா ரஹ் அவர்களிடம் சிலர் வருகை தந்து மஸ்ஜிதுக்காக அன்பளிப்புக் கேட்டபோது யோசிக்காமல் உடனே இடது கை அருகில் இருந்த ஒரு பண முடிப்பை எடுத்து அப்படியே தந்து விட்டார்கள். வந்தவர்களுக்கு ஒருபுறம் சந்தோஷம் என்றாலும் இடது கையால் எடுத்துக் கொடுத்ததில் கவலையும் இருந்தது. அதற்கு இமாம் அபூஹனீஃபா ரஹ் அவர்கள் விளக்கம் கூறினார்கள். என்னுடைய இடது கையில் இருந்து வலது கைக்கு மாறுவதற்குள் என்னுடைய மனம் மாறி விட்டால் என்ன செய்வது அதனால் தான் இடது கையால் தந்தேன் என்றார்கள்.                                       


وقال الطيبي : معناه أن الأمور الدنيوية لا يعلم أنها محمودة العواقب حتى يتعجل فيها أو مذمومة حتى يتأخر عنها بخلاف الأمور الأخروية لقوله سبحانه (فاستبقوا الخيرات) (فيض القدير) (إلا في عمل الآخرة) فإنه غير محمود بل الحزم بذل الجهد فيه لتكثير القربات ورفع الدرجات ذكره القاضي

துன்யாவின் காரியங்களில் யோசித்து நிதானமாக முடிவெடுக்க வேண்டும்.

عن الزهري عن رجل من بَلِىٍّ قال  أتيت رسول الله صلى الله عليه وسلم مع أبي فنَاجى أبي دُوني قال فقلتُ لأبي ما قال لك قال إذا أردتَ أمرا فعليك بالتؤدة حتى يُريَك الله منه المخرج أو حتى يجعل الله لك مخرجا رواه البخاري في الأدب المفرد

என் தந்தையுடன் நபி ஸல் அவர்கள் ரகசியம் பேசினார்கள். நான் என் தந்தையிடம் என்ன பேசினீர்கள் என்று கேட்ட போது ஒரு காரியத்தைச் செய்ய நாடினால் அதில் அல்லாஹ் உனக்கு ஏதேனும் வழியை ஏற்படுத்தும் வரை நிதானத்தை கடை பிடித்துக் கொள்ளுங்கள் என நபி ஸல் கூறியதாக என் தந்தை கூறினார்கள்.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَرْجِسَ الْمُزَنِيِّ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ السَّمْتُ الْحَسَنُ وَالتُّؤَدَةُ وَالِاقْتِصَادُ جُزْءٌ مِنْ أَرْبَعَةٍ وَعِشْرِينَ جُزْءًا مِنْ النُّبُوَّةِ (ترمذي)

அழகிய மவுனமும் உலக காரியங்களில் நிதானமும் நடுநிலையும் நுபுவ்வத்தின் 24 பங்குகளில் ஒன்றாகும். 

விளக்கம்- நுபுவ்வத் என்பது பல பாகங்களாகப் பிரிவது கிடையாது. இருப்பினும் மேற்காணும் தன்மைகள் நபிமார்களின் தன்மைகளைப் போன்றதாகும். நூல் மிர்காத் நபிமார்கள் யோசித்தே முடிவெடுப்பார்கள்.  

நிதானம் அல்லாஹ்வைச் சார்ந்தது. அவசரம் ஷைத்தானைச் சார்ந்தது

عن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال : الأَنَاةُ مِنَ اللَّهِ وَالْعَجَلَةُ مِنَ الشَّيْطَانِ (ترمذي)  عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِأَشَجِّ عَبْدِ الْقَيْسِ إِنَّ فِيكَ خَصْلَتَيْنِ يُحِبُّهُمَا اللَّهُ الْحِلْمُ وَالْأَنَاةُ (ترمذي) بَاب مَا جَاءَ فِي التَّأَنِّي وَالْعَجَلَةِ-بَاب مَا جَاءَ فِي بِرِّ الْوَالِدَيْنِ

துன்யாவின் ஒரு காரியத்தைப் பற்றிய தெளிவு இல்லாமல்,அவசரப்பட்டுச் செய்தால் அக்காரியம் கெட்டு விடும்

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِىَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ النَّبِىُّ صلى الله عليه وسلم : إِذَا تَأَنَّيْتَ. وَفِى رِوَايَةِ الْمُعَاذِىِّ وَالشُّعَيْبِىِّ وَالْهَرَوِىِّ :« إِذَا تَبَيَّنْتَ أَصَبْتَ أَوْ كِدْتَ تُصِيبُ وَإِذَا اسْتَعْجَلْتَ أَخْطَأْتَ أَوْ كِدْتَ تُخْطِئُ ».(سنن الكبري)

நன்கு யோசித்து அதைச் செய்ய முடிவெடுத்தாலும் அதற்காக இஸ்திகாரா தொழுவது சுன்னத். ஏதேனும் முக்கியமான (உலக) காரியத்தை தொடங்கும் முன்போ அல்லது அதை தொடங்குவதில் குழப்பம் ஏற்படும்போதோ நல்ல முறையில் உளூச் செய்து, மன ஓர்மையுடன் இஸ்திகாரா தொழுகை இரண்டு ரக்அத் தொழுது பின்வரும் துஆவை ஓதினால் 

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُنَا الِاسْتِخَارَةَ فِي الْأُمُورِ كُلِّهَا كَمَا يُعَلِّمُنَا السُّورَةَ مِنْ الْقُرْآنِ يَقُولُ إِذَا هَمَّ أَحَدُكُمْ بِالْأَمْرِ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ مِنْ غَيْرِ الْفَرِيضَةِ ثُمَّ لِيَقُلْ اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ فَإِنَّكَ تَقْدِرُ وَلَا أَقْدِرُ وَتَعْلَمُ وَلَا أَعْلَمُ وَأَنْتَ عَلَّامُ الْغُيُوبِ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي أَوْ قَالَ عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ فَاقْدُرْهُ لِي وَيَسِّرْهُ لِي ثُمَّ بَارِكْ لِي فِيهِ وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي أَوْ قَالَ فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ وَاقْدُرْ لِي الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ أَرْضِنِي قَالَ وَيُسَمِّي حَاجَتَهُ. (بخاري) باب الدُّعَاءِ عِنْدَ الاِسْتِخَارَةِ .- الدعوات

பொருள்- யாஅல்லாஹ் உன்னுடைய ஞானத்தின் பொருட்டால் நான் தொடங்கும் இக்காரியத்தில் நலம் உண்டாகுவதை உன்னிடம் கேட்கிறேன். உன்னுடைய ஆற்றலின் பொருட்டால் இக்காரியத்தை நான் துணிவுடன் செய்வதையும் உன்னிடம் கேட்கிறேன். உன்னுடைய அருளையும் நான் வேண்டுகிறேன். என்னிடம் எவ்வித ஆற்றலும் இல்லை. நீ தான் ஆற்றல் உடையவன். (எந்தக் காரியத்திலும் அதன் பின் விளைவு பற்றி) நான் எதையும் அறியாதவன். நீ அனைத்தையும் அறிந்தவன். நீ மறைவானவைகளை அறியும் ஞானமுள்ளவன். ஆகவே (நான் தொடங்கும்  அல்லது நான் செல்லும்)இக்காரியம்  என் இம்மைக்கும், மறுமைக்கும், என் இறுதி முடிவுக்கும் நன்மையாக அமையும் என்று நீ அறிந்தால் இதை செய்வதற்குரிய ஆற்றலை எனக்கு தருவாயாக ! இதை எனக்கு எளிதாக்குவாயாக! இதில் எனக்கு பரக்கத்தையும் தருவாயாக ! அதற்கு மாறாக  (நான் தொடங்கும்  அல்லது நான் செல்லும்) இக்காரியம்  என்னுடைய இம்மைக்கும், மறுமைக்கும், என் இறுதி முடிவுக்கும் தீமையாக அமையும் என்று நீ அறிந்தால் இக்காரியத்தையும் விட்டும் என்னையும் திருப்புவாயாக ! என்னை விட்டு இக்காரியமும் திரும்பிச் செல்ல வைப்பாயாக ! இதை விட நன்மை எங்கே, எதில் இருக்குமோ அதை எனக்கு ஏற்படுத்துவாயாக ! அதை எனக்கு பிடித்தமானதாகவும் ஆக்கி வைப்பாயாக !  நூல்- புஹாரீ-5382

இஸ்திகாரா தொழுத பின் வேறு எந்த சகுணமும் பார்க்காமல் 

அல்லாஹ் மீது முழு நம்பிக்கையுடன் காரியத்தை துவங்குவது

عن ابْن عَبَّاسٍ رضي الله عنه قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عُرِضَتْ عَلَيَّ الْأُمَمُ فَأَخَذَ النَّبِيُّ يَمُرُّ مَعَهُ الْأُمَّةُ وَالنَّبِيُّ يَمُرُّ مَعَهُ النَّفَرُ وَالنَّبِيُّ يَمُرُّ مَعَهُ الْعَشَرَةُ وَالنَّبِيُّ يَمُرُّ مَعَهُ الْخَمْسَةُ وَالنَّبِيُّ يَمُرُّ وَحْدَهُ فَنَظَرْتُ فَإِذَا سَوَادٌ كَثِيرٌ قُلْتُ يَا جِبْرِيلُ هَؤُلَاءِ أُمَّتِي قَالَ لَا وَلَكِنْ انْظُرْ إِلَى الْأُفُقِ فَنَظَرْتُ فَإِذَا سَوَادٌ كَثِيرٌ قَالَ هَؤُلَاءِ أُمَّتُكَ وَهَؤُلَاءِ سَبْعُونَ أَلْفًا قُدَّامَهُمْ لَا حِسَابَ عَلَيْهِمْ وَلَا عَذَابَ قُلْتُ وَلِمَ قَالَ كَانُوا لَا يَكْتَوُونَ وَلَا يَسْتَرْقُونَ وَلَا يَتَطَيَّرُونَ وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ فَقَامَ إِلَيْهِ عُكَّاشَةُ بْنُ مِحْصَنٍ فَقَالَ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ قَالَ اللَّهُمَّ اجْعَلْهُ مِنْهُمْ ثُمَّ قَامَ إِلَيْهِ رَجُلٌ آخَرُ قَالَ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ قَالَ سَبَقَكَ بِهَا عُكَّاشَةُ (بخاري) باب مَنْ لَمْ يَرْقِ-كتاب الطب

 “எனக்குப் பல சமுதாயத்தவர் (மிஃராஜின் போது) எடுத்துக் காட்டப்பட்டனர். அங்கு, ஒரு நபி பத்துக்கும் குறைவான) ஒரு சிறுகுழுவினரோடு இருந்தார். அவ்வளவு தான் அவருடைய உம்மத். பிறகு இரண்டே இரண்டு பேர் மட்டுமே உம்மத்தாக இருக்கும் மற்றொரு இறைத்தூதரையும் நான் கண்டேன். ஒருவர் கூட இல்லாத (தனியாளான) இறைத்தூதர் ஒருவரும் அங்கிருந்தார். பின்னர் எனக்கு ஒரு பெருங்கூட்டம் காட்டப்பட்டது. அவர்கள் என் சமுதாயத்தவர் என்று நான் எண்ணினேன். ஆனால், “இது (இறைத்தூதர்) மூஸாவும் அவருடைய சமுதாயமும் தான்; அடிவானத்தைப் பாருங்கள்” என்று என்னிடம் கூறப்பட்டது. அவ்வாறே நான் பார்த்தேன். அங்கு ஒரு பெரும் மக்கள் கூட்டம் இருந்தது.மேலும்,“மற்றோர் அடிவானத்தைப் பாருங்கள்” என்றும் என்னிடம் கூறப்பட்டது; பார்த்தேன். அங்கு மாபெரும் மக்கள் கூட்டம் இருந்தது. அப்போது, “இதுதான் உங்கள் சமுதாயம். எந்த விசாரணையும் வேதனையுமின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேரும் இவர்களுள் அடங்குவர்” என்று எனக்குச் சொல்லப்பட்டது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறிவிட்டு, தம் இல்லத்துக்குள் சென்று விட்டார்கள்.

 எனவே, விசாரணையும் வேதனையுமின்றி சொர்க்கம் செல்வோர் யாவர் என்பது பற்றி மக்கள் விவாதிக்கத் தொடங்கினார்கள். சிலர், “நபி (ஸல்) அவர்களின் தோழமையைப் பெற்றவர்களே அவர்களாக இருக்கலாம்” என்று கூறினர். வேறு சிலர்,“இஸ்லாத்தில் பிறந்து, அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காதவர்களாக இருக்கலாம்” என்றும் இன்னும் பலவற்றையும் கூறிக் கொண்டிருந்தனர்.

  அப்போது நபி (ஸல்) அவர்கள் அங்கு வந்து, “எதைப் பற்றி நீங்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டனர். அப்போது, மக்கள் (நடந்த விவாதங்களைத்) தெரிவித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவர்கள் யாரெனில், யாருக்கும் (ஷிர்க்கான முறையில்) மந்திரிக்க மாட்டார்கள்; யாரிடத்திலும் (ஷிர்க்கான முறையில்)மந்திரித்துக் கொள்ள மாட்டார்கள்; பறவைகளை வைத்து சகுனம் பார்க்கமாட்டார்கள்; தம்முடைய காரிங்களில் முற்றிலும் தம் இறைவனையே சார்ந்திருப்பார்கள்” என்று கூறினார்கள்.

 அப்போது உக்காஷா பின் மிஹ்ஸன் (ரலி) அவர்கள் எழுந்து, “அவர்களுள் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவர்களுள் நீரும் ஒருவர்தாம்” என்று கூறினார்கள். பிறகு மற்றொருவர் எழுந்து, “அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “இந்த விஷயத்தில் உக்காஷா உம்மை முந்தி விட்டார்” என்று சொன்னார்கள். 

அல்லாஹ்வின் மீது நம்பிக்கையும் வேண்டும் முயற்சியும் வேண்டும். பறவை பறந்து  செல்கிறது அல்லாஹ் உணவளிக்கிறான்

عن عُمَرَ رضي الله عنه يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَوْ أَنَّكُمْ تَوَكَّلْتُمْ عَلَى اللَّهِ حَقَّ تَوَكُّلِهِ لَرَزَقَكُمْ كَمَا يَرْزُقُ الطَّيْرَ تَغْدُو خِمَاصًا وَتَرُوحُ بِطَانًا (ابن ماجة)  بَاب التَّوَكُّلِ وَالْيَقِينِ- كِتَاب الزُّهْدِ

எங்கும் செல்ல முடியாத இயலாதவர்களுக்கு அவர்களுடைய இருப்பிடம் தேடி உணவு வரலாம். தவக்குல் இருந்தால்.... பாறைக்குள் இருக்கும் தேரைக்கும், வயிற்றுக்குள் வளரும் குழந்தைக்கும் அல்லாஹ் உணவளிப்பது போல

முக்கியமான விஷயங்களில் குடும்பத்தில் மூத்த உறுப்பினர்களின் ஆலோசனைகளையோ அல்லது நமக்கு மிக நெருக்கமான நல்லடியாரின் ஆலோசனையைக் கேட்டு நிதானமாக முடிவெடுப்பது. 

وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ (ال عمران159) وَالَّذِينَ اسْتَجَابُوا لِرَبِّهِمْ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَمْرُهُمْ شُورَى بَيْنَهُمْ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ (سورة الشوري 38)عن أَبي الْهَيْثَمِ رضي الله عنه... فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَلْ لَكَ خَادِمٌ قَالَ لَا قَالَ فَإِذَا أَتَانَا سَبْيٌ فَأْتِنَا فَأُتِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَأْسَيْنِ لَيْسَ مَعَهُمَا ثَالِثٌ فَأَتَاهُ أَبُو الْهَيْثَمِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اخْتَرْ مِنْهُمَا فَقَالَ يَا نَبِيَّ اللَّهِ اخْتَرْ لِي فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الْمُسْتَشَارَ مُؤْتَمَنٌ خُذْ هَذَا فَإِنِّي رَأَيْتُهُ يُصَلِّي وَاسْتَوْصِ بِهِ مَعْرُوفًا (ترمذي) بَاب مَا جَاءَ فِي مَعِيشَةِ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- كِتَاب الزُّهْدِ

 அபுல் ஹைதம் ரழி அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் உனக்கு அடிமைகள் உள்ளார்களா என்று கேட்டார்கள். அவர் இல்லை என்று கூறியவுடன் நபி ஸல் அவர்கள் நம்மிடம் அடிமைகள் யாரேனும் வந்தால் நீங்கள் வாருங்கள். நான் உமக்கு அடிமைகளைத் தருகிறேன் என்று கூற, அவ்வாறே நபி ஸல் அவர்களிடம் இரண்டு அடிமைகள் கொண்டு வரப்பட்டபோது அபுல் ஹைதம் ரழி அங்கு வந்தார்கள். அவரிடம் நபி ஸல் அவர்கள் இந்த இரு அடிமைகளில் யாரேனும் ஒருவரை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். என்று கூற, அதற்கு அபுல் ஹைதம் ரழி அவர்கள் நீங்களே எனக்குத் தேர்ந்தெடுத்துத் தாருங்கள் என்று கூற, அதற்கு நபி ஸல் அவர்கள் நிச்சயமாக ஆலோசனை கேட்பவர் நஷ்டங்களை விட்டும் பாதுகாக்கப்பட்டவர் என்று கூறி விட்டு இந்த இரு அடிமைகளில் இதோ இவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இவர் தொழுவதை நான் பார்த்தேன். இவரிடம் நல்ல விதமாகவும் நீங்கள் நடந்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.                 

ஆலோசித்து முடிவெடுப்பது தவக்குலுக்கு மாற்றமாகாது. தவக்குல் மட்டும் போதும் ஆலோசனை எதற்கு என்றும் கருதக்கூடாது

المسألة الثانية : دلت الآية على أنه ليس التوكل أن يهمل الانسان نفسه ، كما يقوله بعض الجهال ، وإلا لكان الأمر بالمشاورة منافياً للأمر بالتوكل ، بل التوكل هو أن يراعي الانسان الأسباب الظاهرة ، ولكن لا يعول بقلبه عليها ، بل يعول على عصمة الحق .

மனைவியிடம் ஆலோசனை கேட்கலாம். எனினும் எல்லா முடிவுகளையும் மனைவியிடமே ஒப்படைத்து விடுவது தான் தவறு. 

ولما فرغ رسول الله صلى الله عليه وسلم من قضية الكتاب قال : ( قوموا فانحروا ) ، فوالله ما قام منهم أحد حتى قال ثلاث مرات، فلما لم يقم منهم أحد قام فدخل على أم سلمة، فذكر لها ما لقي من الناس، فقالت : يا رسول الله، أتحب ذلك ؟ اُخْرج، ثم لا تكلم أحداً كلمة حتى تنحر بدنك، وتدعو حالقك فيحلقك، فقام فخرج فلم يكلم أحداً منهم حتى فعل ذلك، نحر بُدْنَه، ودعا حالقه فحلقه، فلما رأي الناس ذلك قاموا فنحروا، وجعل بعضهم يحلق بعضاً،(الرحيق المختوم

ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது மக்கா பயணம் ரத்தாகி விட நபி (ஸல்) அவர்கள் நபித் தோழர்களிடம் அனைவரும் எழுந்து முடியை நீக்குங்கள் என்றார்கள். மூன்று முறை நபி (ஸல்) அவர்கள் கூறியும் யாரும் எழுந்திருக்கவில்லை. காஃபிர்களின் ஒருதலைப் பட்சமான உடன்படிக்கையை நாம் ஏன் ஏற்க வேண்டும் என்ற ஆதங்கம் சஹாபாக்களுக்கு இருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள் மனைவி உம்முசல்மா (ரழி) அவர்களிடம் சென்று ஆலோசித்த போது அவர்கள் அல்லாஹ்வின் தூதரே நீங்கள் முதலில் யாரிடமும் எதுவும் பேசாமல் உங்களுடைய ஒட்டகத்தை அறுத்து விடுங்கள். முடியையும் நீக்கி விடுங்கள். அதற்குப் பிறகு அனைவரும் வேறு வழியின்றி முடியை நீக்கி விடுவார்கள் என்று கூற,அவ்வாறே நபி(ஸல்) செய்தார்கள். அவர்கள் செய்வதைப் பார்த்து நபித்தோழர்களும் தங்களின் முடிகளை நீக்கினார்கள்.                                                              

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ أُمَرَاؤُكُمْ خِيَارَكُمْ وَأَغْنِيَاؤُكُمْ سُمَحَاءَكُمْ وَأُمُورُكُمْ شُورَى بَيْنَكُمْ فَظَهْرُ الْأَرْضِ خَيْرٌ لَكُمْ مِنْ بَطْنِهَا وَإِذَا كَانَ أُمَرَاؤُكُمْ شِرَارَكُمْ وَأَغْنِيَاؤُكُمْ بُخَلَاءَكُمْ وَأُمُورُكُمْ إِلَى نِسَائِكُمْ فَبَطْنُ الْأَرْضِ خَيْرٌ لَكُمْ مِنْ ظَهْرِهَا (ترمذي) بَاب مَا جَاءَ فِي النَّهْيِ عَنْ سَبِّ الرِّيَاحِ- كِتَاب الْفِتَنِ

எதுவரை உங்களில் தலைவர்கள் நல்லவர்களாகவும் உங்களில் செல்வந்தர்கள் தர்மம் செய்பவர்களாகவும் இருந்து உங்களின் காரியங்கள் உங்களுக்கு மத்தியில் ஆலோசித்து முடிவெடுக்கப்படுமோ அதுவரை இந்த பூமியின் மேற் பரப்பு பூமியின் கீழ் பரப்பை விட நல்லதாகும். அதாவது பூமியில் நீங்கள் வாழ்வது நல்லதாக இருக்கும். ஆனால் உங்களில் தலைவர்கள் கெட்டவர்களாகவும் உங்களில் செல்வந்தர்கள் கஞ்சர்களாகவும் உங்களின் காரியங்கள் முற்றிலுமாக பெண்களிடம் ஒப்படைக்கப்படுவதாகவும் ஆகிவிடுமோ அப்போது இந்த பூமியின் கீழ்பரப்பு பூமியின் மேற்பரப்பை விட நல்லது. அதாவது பூமியில் நீங்கள் வாழ்வது நல்லதாக இருக்காது. ஆபத்துகள் நிறைந்திருக்கும்.                   

ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு  கால் என்பது போல் எந்த ஒரு காரியத்திலும் ரெண்டுங்கெட்டான் நிலை இருக்கக்கூடாது. ஆலோசனைக்குப்பின் அல்லது இஸ்திகாரா தொழுகைக்குப்பின் ஒரு காரியத்தை செய்ய முடிவெடுத்து விட்டால் அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கை வைத்து துணிவுடன் இறங்க வேண்டும்

وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ (159)المعنى أنه إذا حصل الرأي المتأكد بالمشورة فلا يجب أن يقع الاعتماد عليه بل يجب أن يكون الاعتماد على إعانة الله وتسديده وعصمته ، والمقصود أن لا يكون للعبد اعتماد على شيء إلا على الله في جميع الأمور

துன்யாவின் எத்தனையோ காரியங்களில் சின்னச் சின்ன விஷயங்களில் கூட ரெண்டுங்கெட்டான் நிலையில் இருக்கக்கூடாது என கற்றுத் தரப்பட்டுள்ளது உதாரணம்..... பாதி நிழலிலும், பாதி வெயிலிலும் உட்காரக் கூடாது 

عن أَبي هُرَيْرَةَ يَقُولُ قَالَ رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ أَحَدُكُمْ فِي الشَّمْسِ فَقَلَصَ عَنْهُ الظِّلُّ وَصَارَ بَعْضُهُ فِي الشَّمْسِ وَبَعْضُهُ فِي الظِّلِّ فَلْيَقُمْ (ابوداود) بَاب فِي الْجُلُوسِ بَيْنَ الظِّلِّ وَالشَّمْسِ- كِتَاب الْأَدَبِ

உங்களில் ஒருவர் வெயிலில் அமர்ந்திருக்கும்போது வெயில் அந்த இடத்தை விட்டும் நீங்கி நிழல் வந்து விட்டால் பாதி வெயிலிலும் பாதி நிழலிலும் அவர் அமர வேண்டாம். அந்த இடத்தை விட்டும் எழுந்து விடட்டும்.

செருப்பணிந்தால் இரண்டு காலிலும் அணிவது அல்லது இரண்டையும் கழட்டி விடுவது. ஒரு காலில் மட்டும் அணியக்கூடாது

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَمْشِي أَحَدُكُمْ فِي نَعْلٍ وَاحِدَةٍ لِيُحْفِهِمَا جَمِيعًا أَوْ لِيُنْعِلْهُمَا جَمِيعًا (بخاري) باب لاَ يَمْشِى فِى نَعْلٍ وَاحِدٍ- اللباس

பாதி மொட்டை பாதி முடி – இதுவும் கூடாது

عَنْ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ الْقَزَعِ (بخاري) باب الْقَزَعِ- كتاب اللباس- القزع : هو أن يحلق رأس الصبى فيترك بعض شعره

வியாழன், 11 ஜூலை, 2024

ஆஷூரா தினத்தில் செய்யக் கூடாதவை

 

فَلَنَأْتِيَنَّكَ بِسِحْرٍ مِثْلِهِ فَاجْعَلْ بَيْنَنَا وَبَيْنَكَ مَوْعِدًا لَا نُخْلِفُهُ نَحْنُ وَلَا أَنْتَ مَكَانًا سُوًى (58) طه

ஆஷூரா தினத்தில் என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதை முதலில் கூறிய பின்பு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இரண்டாவதாக பார்ப்போம்

ஆஷூரா நாளில் ஷியாக்களும் பஞ்சா வழிபாடு செய்பவர்களும் நடத்தும் அனாச்சாரங்கள் இப்லீஸின் தூண்டுதலாகும்

யாருடைய இறப்பிற்காகவும் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கொண்டாடுவது கூடாது. கணவனை இழந்த மனைவியைத் தவிர

عَنْ زَيْنَبَ ابْنَةِ أَبِى سَلَمَةَ قَالَتْ لَمَّا جَاءَ نَعْىُ أَبِى سُفْيَانَ مِنَ الشَّأْمِ دَعَتْ أُمُّ حَبِيبَةَ  رضى الله عنها بِصُفْرَةٍ فِى الْيَوْمِ الثَّالِثِ ، فَمَسَحَتْ عَارِضَيْهَا وَذِرَاعَيْهَا وَقَالَتْ إِنِّى كُنْتُ عَنْ هَذَا لَغَنِيَّةً ، لَوْلاَ أَنِّى سَمِعْتُ النَّبِىَّ صلى الله عليه وسلم  يَقُولُ لاَ يَحِلُّ لاِمْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ أَنْ تُحِدَّ عَلَى مَيِّتٍ فَوْقَ ثَلاَثٍ ، إِلاَّ عَلَى زَوْجٍ، فَإِنَّهَا تُحِدُّ عَلَيْهِ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا (بخاري) كتاب الجنائز

 சிரியாவில் அபூ சுஃப்யான் அவர்கள் இறந்த செய்தி (சுஃப்யான் அவர்களின் மகளும் நபி ஸல் அவர்களின் மனைவியுமான) உம்மு ஹபீபா ரழி அவர்களுக்குத்  தெரிய வந்த போது மூன்றாவது நாளில் மஞ்சள் கலர் திரவியத்தைக் கொண்டு வரச் சொல்லி அதை தன்னுடைய இரு கண்ணங்களிலும் முழங்கைகளிலும் தேய்த்துக் கொண்டார்கள். மேலும் கூறினார்கள். நிச்சயமாக (என்னுடைய தந்தை இறந்த துக்கம் மனதில் இருப்பதால்) இந்த வாசனைத் திரவியத்தை விட்டும் தேவையற்ற நிலையில் தான் நான் இருக்கிறேன். இருந்தாலும் நபி ஸல் கூறியுள்ளார்கள். அல்லாஹ்வையும் மறுமையையும் நம்புகின்ற ஒரு பெண் தன் கணவர் அல்லாத வேறு யாருடைய இறப்பிற்காகவும் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கொண்டாடுவது கூடாது என்று தடுத்துள்ளார்கள். கணவருக்காக மட்டும் நான்கு மாதங்கள் மற்றும் பத்து நாட்கள் துக்கம் கொண்டாட வேண்டும் (என கூறியதால் என் தந்தைக்காக நான் துக்கம் கொண்டாடவில்லை என்பதை வெளியில் காட்டுவதற்காகவே இவ்வாறு நடந்து கொண்டேன் என உம்மு ஹபீபா ரழி அவர்கள் கூறினார்கள்.)

  மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கொண்டாடுவது கூடும் என்றிருந்தால் நாம் முதலில் துக்கம் அனுஷ்டிக்க வேண்டியது நபி ஸல் அவர்களுக்காகத் தான். ஆனால் அப்படி எதுவும்  ஷரீஅத்தில் இல்லை. குர்ஆன் ஓதிக் கொண்டிருக்கும் போதே கொடூரமாக கொலை செய்யப்பட்ட உஸ்மான் ரழி, மிஹ்ராபில் வைத்தே வெட்டப்பட்ட உமர் ரழி, வஞ்சித்துக் கொல்லப்பட்ட அலீ ரழி ஆகியோர் ஹுஸைன் அவர்களை விட மேலானவர்களாக இருப்பினும் அவர்களுக்காக யாரும் இவ்வாறு அனுஷ்டிப்பதில்லை.ஆகவே ஷியாக்கள் இன்று செய்யும் செயல்கள் ஷைத்தானால் உருவாக்கப் பட்டவையாகும்.                             

எத்தனையோ நபிமார்கள் கொடூரமாக கொல்லப் பட்டுள்ளார்கள். அதற்காக யாரும் இவ்வாறு துக்கம் கொண்டாடியதில்லை

وقتل الحسين ليس هو بأعظم من قتل الأنبياء وقد قُدّم رأس يحيى عليه السلام مهراً لبغي وقتل زكريا عليه السلام وكثير من الأنبياء قتلوا كما قال تعالى : قُلْ قَدْ جَاءَكُمْ رُسُلٌ مِنْ قَبْلِي بِالْبَيِّنَاتِ وَبِالَّذِي قُلْتُمْ فَلِمَ قَتَلْتُمُوهُمْ إِنْ كُنْتُمْ صَادِقِينَ (183) آل عمران 183

ஒருவரின் இறப்பிற்காக ஒப்பாரி வைப்பதும் ஷரீஅத்தில் தடுக்கப்பட்டுள்ளது

عن أَبي مَالِكٍ الْأَشْعَرِيَّ رضي الله عنه قال  أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ... النَّائِحَةُ إِذَا لَمْ تَتُبْ قَبْلَ مَوْتِهَا تُقَامُ يَوْمَ الْقِيَامَةِ وَعَلَيْهَا سِرْبَالٌ مِنْ قَطِرَانٍ وَدِرْعٌ مِنْ جَرَبٍ (مسلم) بَاب التَّشْدِيدِ فِي النِّيَاحَةِ- كِتَاب الْجَنَائِزِ –

ஒப்பாரி வைத்து அழும் பழக்கம் உள்ள பெண் இறப்புக்கு முன்பு தவ்பா செய்யா விட்டால் மறுமை நாளில் தார் பூசப்பட்ட நீண்ட அங்கி உடையவளைப் போன்றும் சொரி, சிரங்கால் உருவான உருக்குச் சட்டை அணிவிக்கப் பட்டவளைப் போன்றும் எழுப்பப் படுவாள். கருத்து- ரோடு போடுவற்குப் பயன்படும் தார் போன்ற திரவம் அது கொதிக்க வைக்கப்பட்ட நிலையில் உடல் முழுவதும் ஊற்றப்படும். அது நீண்ட அங்கியைப் போன்று இருக்கும். அவளுடைய உடலின் மேல் பகுதியில் உருவாக்கப்படும் சொரி, சிரங்கு அது நிரம்பியிருப்பதால் சொரி, சிரங்கால் உருவான உருக்குச் சட்டை அணிவிக்கப் பட்டவளைப் போன்று இருக்கும்.                 

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اثْنَتَانِ فِي النَّاسِ هُمَا بِهِمْ كُفْرٌ الطَّعْنُ فِي النَّسَبِ وَالنِّيَاحَةُ عَلَى الْمَيِّتِ (مسلم) بَاب إِطْلَاقِ اسْمِ الْكُفْرِ عَلَى الطَّعْنِ فِي النَّسَبِ وَالنِّيَاحَةِ - كِتَاب الْإِيمَانِ

மக்களிடம் பரவியுள்ள இரண்டு விஷயங்கள் குஃப்ராகும். (அதாவது குஃப்ருக்கு நெருக்கமானதாகும். சண்டை வந்தால்) எதிராளியின் பரம்பரையைத் திட்டுவது, இறந்தவருக்காக ஒப்பாரி வைப்பது.          

عن عَائِشَةَ رضي الله عنها قالت لَمَّا جَاءَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَتْلُ ابْنِ حَارِثَةَ وَجَعْفَرِ بْنِ أَبِي طَالِبٍ وَعَبْدِ اللَّهِ بْنِ رَوَاحَةَ جَلَسَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعْرَفُ فِيهِ الْحُزْنُ قَالَتْ وَأَنَا أَنْظُرُ مِنْ صَائِرِ الْبَابِ شَقِّ الْبَابِ فَأَتَاهُ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ نِسَاءَ جَعْفَرٍ وَذَكَرَ بُكَاءَهُنَّ فَأَمَرَهُ أَنْ يَذْهَبَ فَيَنْهَاهُنَّ فَذَهَبَ فَأَتَاهُ فَذَكَرَ أَنَّهُنَّ لَمْ يُطِعْنَهُ فَأَمَرَهُ الثَّانِيَةَ أَنْ يَذْهَبَ فَيَنْهَاهُنَّ فَذَهَبَ ثُمَّ أَتَاهُ فَقَالَ وَاللَّهِ لَقَدْ غَلَبْنَنَا يَا رَسُولَ اللَّهِ قَالَتْ فَزَعَمَتْ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اذْهَبْ فَاحْثُ فِي أَفْوَاهِهِنَّ مِنْ التُّرَابِ.. (بخاري)كتاب الجنائز

ஆயிஷா ரழி கூறினார்கள். மூத்தா போரில் ஜைதுப்னு ஹாரிஸா ரழி,மற்றும் ஜஃபர் இப்னு அபூதாலிப் ரழி, மற்றும் அப்துல்லாஹிப்னு ரவாஹா ரழி ஆகியோர் கொல்லப்பட்ட செய்தி நபி ஸல் அவர்களுக்குக் கிடைத்த போது நபி ஸல் அவர்கள் சோகத்துடன் அமர்ந்திருந்தார்கள். நான் கதவு இடுக்கின் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் வந்து அல்லாஹ்வின் தூதரே ஜஃபர் ரழி அவர்களின் குடும்பத்துப் பெண்கள் ஒப்பாரி வைத்து அழுகிறார்கள் என்று கூறினார். அப்போது நபி ஸல் அவர்கள் அவரிடம் அப்பெண்களை அதை விட்டும் தடுக்கும் படி சொல்லி அனுப்ப, அவர் மீண்டும் திரும்பி வந்து, அந்தப் பெண்கள் தனக்குக் கட்டுப்படவில்லை என்றார். இரண்டாவது தடவையும் அவ்வாறே அனுப்ப, அப்போதும் அவர் திரும்பி வந்து அதே பதிலைக் கூறினார். பின்பு மூன்றாம் தடவையும் அவ்வாறே அனுப்ப, அப்போதும் அவர் திரும்பி வந்து அதே பதிலைக் கூறினார். அப்போது நபி ஸல் அவர்கள் அவரிடம் நீர் சென்று அந்தப் பெண்களின் வாயில் மண்ணை அள்ளிப் போடுங்கள் என்று கோபத்துடன் கூறினார்கள்.                                                                     

 وعن ابن عباس، قال: ((ماتت زينب بنت رسول الله - صلى الله عليه وسلم - ، فبكت النساء، فجعل عمر يضربهن بسوطه، فأخره رسول الله - صلى الله عليه وسلم - بيده، وقال: مهلاً يا عمر! ثم قال: إياكن ونعيق الشيطان، ثم قال: إنه مهما كان من العين ومن القلب، فمن الله عزوجل  وما كان من اليد ومن اللسان فمن الشيطان " . رواه أحمد (مشكاة المصابيح)

நபி ஸல் அவர்களின் மகள் ஜைனப் ரழி அவர்கள் இறந்த போது சில பெண்கள் சப்தமிட்டு அழ ஆரம்பித்தார்கள். அப்போது உமர் ரழி அவர்கள் அப்பெண்களை சாட்டையால் அடிக்க முனைந்தார்கள். அப்போது நபி ஸல் அவர்கள் உமர் ரழி அவர்களை விலக்கி விட்டு, உமரே பொறுமை கொள்ளுங்கள் என்று கூறி விட்டு, பிறகு அப்பெண்களிடம் ஷைத்தானைப்போல் ஒப்பாரி வைப்பதை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். என்று கூறினார்கள் மேலும் துக்கம் என்பது எதுவரை கண்களின் வழியாகவும் கல்பின் வழியாகவும் வெளிப்படுமோ அதுவரை அது அல்லாஹ்வைச் சார்ந்ததாகும். ஆனால் எப்போது கைகளின் வழியாகவும் நாவின் வழியாகவும் வெளிப்படுமோ அப்போது அது ஷைத்தானைச் சார்ந்ததாகும் என்று கூறினார்கள்.                                     

ஹுஸைன் ரழி அவர்கள் கொல்லப் பட்டதால் முஹர்ரம் பத்தாம் நாளை துக்க தினமாக கொண்டாடுவதும், அந்த நாளில் நெஞ்சில் அடித்துக் கொள்வதும், தீ மிதிப்பதும் இஸ்லாமிய நடைமுறை அல்ல.

عَنْ عَبْدِ اللَّهِ  رضى الله عنه  عَنِ النَّبِىِّ  صلى الله عليه وسلم قَالَ لَيْسَ مِنَّا مَنْ ضَرَبَ الْخُدُودَ ، وَشَقَّ الْجُيُوبَ ، وَدَعَا بِدَعْوَى الْجَاهِلِيَّةِ (بخاري)  باب لَيْسَ مِنَّا مَنْ ضَرَبَ الْخُدُودَ -كتاب الجنائز-

عن أَبي بُرْدَةَ بْنُ أَبِي مُوسَى قَالَ وَجِعَ أَبُو مُوسَى وَجَعًا فَغُشِيَ عَلَيْهِ وَرَأْسُهُ فِي حَجْرِ امْرَأَةٍ مِنْ أَهْلِهِ فَصَاحَتْ امْرَأَةٌ مِنْ أَهْلِهِ فَلَمْ يَسْتَطِعْ أَنْ يَرُدَّ عَلَيْهَا شَيْئًا فَلَمَّا أَفَاقَ قَالَ أَنَا بَرِيءٌ مِمَّا بَرِئَ مِنْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَرِئَ مِنْ الصَّالِقَةِ وَالْحَالِقَةِ وَالشَّاقَّةِ (مسلم) باب تَحْرِيمِ ضَرْبِ الْخُدُودِ وَشَقِّ الْجُيُوبِ-كتاب الايمان – وهكذا رواه البخاري في كتاب الجنائز -الحالقة:التى تحلق رأسها عند المصيبة-الشاقة: التى تشق ثوبها- الصالقة:التى ترفع صوتها عند المصيبة

 அபூ மூஸா ரழி அவர்கள் நோயால் பாதிக்கப்பட்ட போது இலேசான மயக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள். அப்போது அவர்களுடைய குடும்பப் பெண்களில் ஒருவர் சப்தமிட்டு அழுதார். மயக்கத்தில் இருந்ததால் அவரால் அதை  தடுக்க முடியவில்லை. மயக்கம்  தெளிந்த மயக்கம் தெளிந்தவுடன் தன் குடும்பத்தாரிடம் நபி ஸல் அவர்கள் யாரை விட்டும் நீங்கி விட்டதாக அறிவித்தார்களோ அவர்களை விட்டும் நானும் நீங்கி விட்டேன். நபி ஸல் துக்கம் காரணமாக சப்தமாக அழுகின்ற,  முடியை மழித்துக் கொள்ளுகின்ற,  ஆடையைக் கிழித்துக் கொள்கின்ற பெண்களை விட்டும் தாம் நீங்கி விட்டதாக நபி ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள்   

ஐந்து தெய்வக் கொள்கையை ஊக்குவிக்கும் பஞ்சா வழிபாடு

பஞ்சா என்றால் ஐந்து என்பதைக் குறிக்கும்.பிறர் எவ்வாறு பல தெய்வங்களை வழிபடுகிறார்களோ அதுபோல் முஸ்லிம்களிடம் உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஷைத்தானால் உருவாக்கப்பட்டது தான் இந்த பஞ்சா.. அதாவது அல்லாஹ் ஒருவனே இறைவன் என்ற கொள்கையை முஸ்லிம்கள் மறந்து முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், அலீ ரழி, பாத்திமா ரழி, ஹஸன், ஹுஸைன் ரழியல்லாஹுஅன்ஹுமா ஆகிய ஐந்து பேரையும் ஐந்து விரல்களாக கற்பனை செய்து அதை வழிபடுவது தான் பஞ்சா என்பதாகும். சிலை வணக்கத்திற்கு ஒப்பான இந்த உருவ வழிபாட்டுக்கு ஒருபோதும் நாம் துணை போகக் கூடாது. உருவ வழிபாடு செய்த நிலையில் இறந்தவர்களை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்க மாட்டான்

 முஹர்ரம் மாதத்தில் ஷியாக்களைப் போல் நம்மில் சிலரும் பிறை 1 முதல் 10 வரை அசைவம் சாப்பிடக்கூடாது. கணவன்,மனைவி சேரக்கூடாது என்று கருதுகின்றனர். இதுவும் இஸ்லாத்தில் இல்லாத மூட நம்பிக்கையாகும்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُحَرِّمُوا طَيِّبَاتِ مَا أَحَلَّ اللَّهُ لَكُمْ وَلَا تَعْتَدُوا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ (87المائدة)

ஆஷூரா தினத்தில் என்ன செய்ய வேண்டும்

عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ مَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَرَّى صِيَامَ يَوْمٍ فَضَّلَهُ عَلَى غَيْرِهِ إِلَّا هَذَا الْيَوْمَ يَوْمَ عَاشُورَاءَ وَهَذَا الشَّهْرَ يَعْنِي شَهْرَ رَمَضَانَ (بخاري)باب صِيَامِ يَوْمِ عَاشُورَاءَ -كتاب  الصوم- عن بْن عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُحِينَ صَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَاشُورَاءَ وَأَمَرَ بِصِيَامِهِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ يَوْمٌ تُعَظِّمُهُ الْيَهُودُ وَالنَّصَارَى فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا كَانَ الْعَامُ الْمُقْبِلُ إِنْ شَاءَ اللَّهُ صُمْنَا الْيَوْمَ التَّاسِعَ قَالَ فَلَمْ يَأْتِ الْعَامُ الْمُقْبِلُ حَتَّى تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (مسلم) بَاب أَيُّ يَوْمٍ يُصَامُ فِي عَاشُورَاءَ-كِتَاب الصِّيَامِ

ஆஷூரா தினத்தில் தன் குடும்பத்திற்கான முக்கியமான செலவுகள் செய்வது வருடம் முழுவதும் பரக்கத்..

عن عبد الله : عن النبي صلى الله عليه و سلم قال : من وسع على عياله يوم عاشوراء لم يزل في سعة سائر سنته (طبراني

ஆஷூரா தினத்தில் பல்வேறு வரலாற்றுச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன

மூஸா அலை அவர்களும், அவர்கள் சமூகத்தினரும் காப்பாற்றப்பட்டு  ஃபிர்அவ்னும் அவனது படையும் அழிக்கப்பட்ட நாள்

عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ فَرَأَى الْيَهُودَ تَصُومُ يَوْمَ عَاشُورَاءَ فَقَالَ مَا هَذَا قَالُوا هَذَا يَوْمٌ صَالِحٌ هَذَا يَوْمٌ نَجَّى اللَّهُ بَنِي إِسْرَائِيلَ مِنْ عَدُوِّهِمْ فَصَامَهُ مُوسَى قَالَ فَأَنَا أَحَقُّ بِمُوسَى مِنْكُمْ فَصَامَهُ وَأَمَرَ بِصِيَامِهِ (بخاري)باب صِيَامِ يَوْمِ عَاشُورَاءَ -كتاب 

ஃபிர்அவ்னின் உடல் இன்று வரை பாதுகாப்பாக இருப்பது உலக மக்களுக்கு மாபெரும் படிப்பினை

فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ (يونس92)

உனது உடலை நாம் பாதுகாப்போம் என்ற இறை வசனத்திற்கேற்ப ஃபிர்அவ்னின் உடல் கி.பி. 1889 இல் கண்டு பிடிக்கப்பட்டு எகிப்து தலைநகர் கெய்ரோவிற்கு கொண்டு வரப்பட்டு 1907 முதல் அரச சடலங்கள் வைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 1975 –ல் இது பரிசோதிக்கப்பட்டு நீரில் மூழ்கி இறந்த ஃபிர்அவ்னின் உடல் தான் என்று முடிவு செய்யப்பட்டது. மற்ற அரச சடலங்கள் உருக்குலைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட போது ஃபிர்அவ்னின் சடலம் மட்டும் உருக்குலையாமல் கண்டெடுக்கப்பட்டது குர்ஆனின் கூற்றை உண்மைப்படுத்துவதாகும்

நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்பல் மலை மீது கரை ஒதுங்கிய நாள்

وَهِىَ تَجْرِى بِهِمْ فِى مَوْجٍ كَالْجِبَالِ وَنَادَى نُوحٌ ابْنَهُ وَكَانَ فِى مَعْزِلٍ ياَبُنَىَّ ارْكَبَ مَّعَنَا وَلاَ تَكُن مَّعَ الْكَافِرِينَ قَالَ سَآوِىإِلَى جَبَلٍ يَعْصِمُنِى مِنَ الْمَآءِ قَالَ لاَ عَاصِمَ الْيَوْمَ مِنْ أَمْرِ اللَّهِ إِلاَّ مَن رَّحِمَ وَحَالَ بَيْنَهُمَا الْمَوْجُ فَكَانَ مِنَ الْمُغْرَقِينَ وَقِيلَ ياَأَرْضُ ابْلَعِى مَآءَكِ وَياَسَمَآءُ أَقْلِعِى وَغِيضَ الْمَآءُ وَقُضِىَ الاَمْرُ وَاسْتَوَتْ عَلَى الْجُودِىِّ وَقِيلَ بُعْدًا لِّلْقَوْمِ الظَّالِمِينَ (سورة هود)

عن عبد العزيز بن عبد الغفور عن أبيه قال رسول الله صلى الله عليه وسلمفي أول يوم من رجب ركب نوح السفينة فصام هو وجميع من معه،وجرت بهم السفينة ستةَ أشهر، فانتهى ذلك إلى المحرم، فأرست السفينة على الجوديّ يوم عاشوراء، فصام نوح ، وأمر جميع من معه من الوحش والدوابّ فصامُوا شكرًا لله -عن ابن جريج قال: كانت السفينة أعلاها للطير، ووسطها للناس وفي أسفلها السباع وكان طولها في السماء ثلاثين ذراعًا، ودفعت من عَين وردة يوم الجمعة لعشر ليالٍ مضين من رجب، وأرست على الجوديّ يوم عاشوراء،(زاد المسير)

ரஜப்ஆரம்பத்தில் கப்பல் பயணத்தை துவங்கியது. அன்று நூஹ் அலை அவர்களும் அவர்களுடன் இருந்தவர்களும் நோன்பு வைத்தார்கள். ஆறு மாதங்கள் ஓடிய பின் ஜூதி மலை மீது தரை தட்டியது. அப்போதும் நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அவர்களுடன் இருந்தவர்களும் நோன்பு வைத்தார்கள்.

படிப்பினை- துவங்கும் காரியம் அல்லது பயணம் சிறப்பாக அமைவதற்காக நோன்பு வைக்கும் வழமை அன்றே இருந்துள்ளது.இன்றும் முஸ்லிம்களிடம் நிகாஹ் போன்ற வைபவங்கள் நடைபெறும்முன் இந்த வழமை உள்ளது

கப்பலின் மேற்பகுதியில் பறவைகளும் நடுப்பகுதியில் மனிதர்களும் கீழ் பகுதியில் விலங்குகளும் இருந்த நிலையில் கப்பல் புறப்பட்ட பின் பறவைகள் விலங்குகள் உட்பட அனைவரும் நோன்பை கடைபிடித்தனர்.

عَنِ ابْنِ عَبَّاسٍرض كَانَ مَعَ نُوحٍ فِي السَّفِينَةِ ثَمَانُونَ رَجُلا مَعَهُمْ أَهْلُوهُمْ وَأَنَّهُمْ كَانُوا فِي السَّفِينَةِ مِائَةً وَخَمْسِينَ يَوْمًا وَأَنَّ اللَّهَ وَجَّهَ السَّفِينَةَ إِلَى مَكَّةَ فَزَارَتِ الْبَيْتَ أَرْبَعِينَ يَوْمًا، ثُمَّ وَجَّهَهَا اللَّهُ إِلَى الْجُودِيِّ فَاسْتَقَرَّتْ عَلَيْهِ فَبَعَثَ نُوحٌ الْغُرَابَ لِيَأْتِيَهُ بِخَبَرِ الأَرْضِ، فَذَهَبَ فَوَقَعَ إِلَى الْجِيَفِ يَعْنِي فَأَبْطَأَ عَلَيْهِ فَبَعَثَ الْحَمَامَةَ فَأَتَتْهُ بِوَرِقِ الزَّيْتُونِ وَلَطَّخَتْ رِجْلَيْهَا بِالطِّينِ فَعَرَفَ نُوحٌ أَنَّ الْمَاءَ قَدْ نَضَبَ فَهَبَطَ إِلَى أَسْفَلِ الْجُودِيِّ فَأَتَى قَرْيَةً وَسَمَّاهَا ثَمَانِينَ، فَأَصْبَحُوا ذَاتَ يَوْمٍ وَقَدْ تَبَلْبَلَتْ أَلْسِنَتُهُمْ عَلَى ثَمَانِينَ لُغَةً أَحَدُهَا اللِّسَانُ الْعَرَبِيُّ فَكَانَ بَعْضُهُمْ لا يَفْقَهُ كَلامَ بَعْضٍ وَكَانَ نُوحٌ يُعَبِّرُ عَنْهُمْ (تفسير ابن ابي حاتم

 அந்தக் கப்பல் சுமார் 150 நாட்கள் பயணம் செய்தது. வரும் வழியில் மக்காவில் மட்டும் கஃபாவை நாற்பது நாட்கள் அக்கப்பல் சுற்றிச் சுற்றி வந்தது.  (கஃபாவின் உண்மையான உயரம் பைத்துல் மஃமூர் வரை என்பது குறிப்பிடத்தக்கது.) பின்பு ஜூதி மலையில் தரை தட்டிய பின் நபி நூஹ் அலை நீர் வற்றி விட்டதா என்று பார்க்க காகத்தை அனுப்ப, அது ஒரு பிணத்தைப் பார்த்தவுடன் அதன் மீது உட்கார்ந்து சாப்பிடத் துவங்கி விட்டது. திரும்பி வரத் தாமதம் ஆனதால் புறாவை அனுப்பினார்கள். அது சென்று பார்த்து விட்டு வந்த போது அதன் காலில் சேறும், அதன் வாயில் ஜைத்தூன் மர இலையும் இருப்பதைக் கண்டார்கள். (தூஃபானுக்குப் பின் முதலில் விளைந்த மரம் ஜைத்தூன் மரம் தான்.) நீர் வற்றியதை அறிந்து அங்கிருந்து கீழே இறங்கி மலையடிவாரத்தில் தங்கினார்கள். அந்த இடத்திற்கு ஸமானூன் என்று பெயரும் வைத்தார்கள். காரணம் அவர்கள் மொத்தம் 80 பேர் இருந்தார்கள். அந்த 80 பேரும் தூங்கும்போது ஒரே பாஷை பேசுபவர்களாக இருந்தனர். ஆனால் தூங்கி எழுந்த பின் அவர்களின் பாஷைகள் அனைத்தயும் அல்லாஹ் மாற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாஷை பேசுபவர்களாக மாறி விட்டனர். ஒருவரின் பாஷை மற்றவருக்குப் புரியாது. எல்லா பாஷைகளையும் புரிந்தவர்கள் நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் மட்டும் தான். அல்லாஹ் தன் ஆற்றலை வெளிக்காட்ட இவ்வாறு செய்தான்.

இப்போதுள்ள நதிகள், ஆறுகள், கடல்கள் உருவானது வெள்ளப் பிரளயத்திற்குப் பின்னால் தான்

{وقيل يا أرض ابلعي ماءك} وقف قوم على ظاهر الآية وقالوا : إِنما ابتلعت مانبع منها ، ولم تبتلع ماء السماء فصار ذلك بحاراً وأنهاراً  وهو معنى قول ابن عباس وذهب آخرون إِلى أن المراد: ابلعي ماءك الذي عليك وهو ما نبع من الأرض ونزل من السماء وذلك بعد أن غرق ما على وجه الأرض (زاد المسير)

வானமும் தன் நீரை பொழிந்தது. பூமியும் தனக்குள் உள்ள நீரை வெளியே மேலே கொண்டு வந்தது. ஆறு மாதங்களுக்குப் பின் அல்லாஹ் வானமே நீ உன் தண்ணீரை நிறுத்திக்கொள். பூமியே நீ உன் தண்ணீரை மீண்டும் விழுங்கிக் கொள் என அல்லாஹ் உத்தரவிட்டான். அதன் படி பூமி தன்னுடைய தண்ணீரை மட்டும் தான் விழுங்கியது. வானம் பொழிந்த நீரை விழுங்கவில்லை. அவைகள் ஆறுகளாகவும், நதிகளாகவும், கடல்களாகவும் ஆகி விட்டன என்பது சிலரின் கூற்றாகும்.

நூஹ் அலைஹிஸ்ஸலாம் உடைய கப்பலும் இன்று வரை பாதுகாக்கப்படுகிறது

முதல் உலக யுத்தத்தின் போது விளாடி மீர் என்ற ரஷ்ய விஞ்ஞானி ஆர்மீனியா மலைத் தொடரிலுள்ள ஜூதி என்ற மலை உச்சியில் பனிப்படலத்திற்கு அடியில் கப்பல் ஒன்று இருப்பதை கண்டு பிடித்துச் சொன்ன போது மாஸ்கோவிலிருந்து சில ஆராய்ச்சிக் குழுவினர் சென்று பனிப்பாறைகளை பிளந்து அந்த கப்பலை முழுவதுமாக ஆராய்ந்தனர். அதில் பல பெரிய அறைகளும் பல சிறிய அறைகளும் இருந்தன. ரஷ்ய புரட்சியின்காரணமாக அந்த ஆராய்ச்சி முடிவுகள் பிரபலமடையவில்லை. பிறகு துருக்கி நாட்டிலிருந்து ஒரு குழுவினர் ஒரு ஐரோப்பிய நிபுணருடன் சென்று ஆராய்ந்து அந்த கப்பல் கோபர் என்ற ஒரு வகை சவுக்கு மரத்தினால் செய்யப்ப்பட்டது என்றும் ஆயிரம் வருடங்களுக்கு மேல் அந்த மரம்  தாக்குப்பிடிக்காது என்றாலும்  பனிப்படலங்கள் அந்த கப்பலை சுமார் 5000 வருடங்களாக காத்து வருகிறது என்றும் கண்டு பிடித்துள்ளனர். சில வருடங்களுக்கு முன் அராரத் மலைச் சிகரத்தில் கண்டு பிடிக்கப்ட்டது பைபிளில் கூறப்பட்ட நோவாவின் கப்பலா? என்ற தலைப்பில் தினத்தந்தியில் கட்டுரை வெளியானது

யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய உம்மத்துக்கு

வேதனை அருகில் வந்த பின் வேதனை விளக்கிக் கொள்ளப்பட்ட தினம்

عَنْ عَلِيٍّ، قَالَ:"تِيبَ عَلَى قَوْمِ يُونُسَ يَوْمَ عَاشُورَاءَ(تفسير ابن ابي حاتم)روي عن ابن مسعود وغيره: أنّ قوم يونس كانوا بأرض نِيْنَوى من أرض الموصل ، فأرسل الله تعالى إليهم يونس عليه السلام ،يدعوهم إلى الإيمان فدعاهم فأبوا فقيل له :إنّ العذاب مصبحهم إلى ثلاثة أيام فأخبرهم بذلك فقالوا: إنا لم نجرب عليك كذباً ،فانظروا فإن بات فيكم تلك الليلة فليس بشيء،وإن لم يبت فاعلموا أنّ العذاب مصبحكم فلما كان في جوف تلك الليلة خرج يونس عليه السلام من بين أظهرهم ، فلما أصبحوا تغشاهم العذاب فكان فوق رؤوسهم قدر ميل. وقال وهب : غامت السماء غيماً عظيماً ، أسود هائلاً يدخن دخاناً عظيماً فهبط حتى غشى مدينتهم واسودّت سطوحهم ، فلمارأوا ذلك أيقنوا بالهلاك ، فطلبوا يونس بينهم فلم يجدوه وقذف الله تعالى في قلوبهم التوبة، فخرجوا إلى الصعيد بأنفسهم ونسائهم وأولادهم ودوابهم ولبسوا المسوح  وأظهرواالإيمان والتوبة  وأخلصوا النية ، وفرّقوا بين كل والدة وولدها من النساء والدواب فحنّ بعضها إلى بعض وعلت أصواتها واختلطت بأصواتهم ، وعجوا وتضرّعوا إلى الله تعالى وقالوا آمنا بما جاء به يونس عليه السلام  فرحمهم الله تعالى  واستجاب دعاءهم  وكشف عنهم العذاب بعد ما أظلهم. وكل ذلك يوم عاشوراء يوم الجمعة ،وقيل :خرجوا إلى شيخ من بقية علمائهم فقالوا :قد نزل بنا العذاب فما ترى ؟فقال لهم : قولوا يا حيّ حين لا حيّ ، ويا حيّ محيي الموتى ، ويا حيّ لا إله إلا أنت. فقالوها ، فكشف عنهم. (تفسير السراج المنير)

யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இராக்கில் உள்ள நீனவா என்ற ஊருக்கு நபியாக அனுப்பப்பட்டார்கள். அந்த மக்கள் இஸ்லாத்தை ஏற்காத போது அல்லாஹ்வின் கட்டளைப்படி உங்களுக்கு மூன்றே நாளில் வேதனை வரும் என்று கூறினார்கள். இதன் பின்பு அவர்களின் உள்ளத்தில் பயம் வந்து விட்டது. இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் யூனுஸ் அலை சொல்வது உண்மையாகவும் இருக்கலாம். நாம் அந்த நாள் வரை பொறுத்திருந்து பார்ப்போம். அந்த நாளில் அவர் நம்மோடு இருந்தால் நாம் அஞ்சத் தேவையில்லை. ஆனால் அவர் நம்மோடு இல்லாமல் வெளியேறி விட்டால் அவர் சொல்வதை நம்புவோம் என்று முடிவு செய்தனர். யூனுஸ் அலை அந்த நாளுக்கு முந்தைய இரவில் வெளியேறினார்கள். அடுத்த நாள் காலையில் வானில் கருமேகம் போன்று வேதனை ஒரு மைல் தூரத்தில் இறங்கி வந்து கொண்டே இருந்தது. எல்லாம் இருட்டாகி விட்டது. அப்போது அம்மக்கள் திருந்தி தவ்பா செய்தவர்களாக யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களைத் தேடினார்கள். பின்பு மைதானத்தில் அவர்களும் அவர்களின் குழந்தைகளும் முதியவர்களும் கால்நடைகளும் கந்தலான ஆடைகளுடன் ஒன்று கூடி அழுதார்கள். அல்லாஹ் கடைசி நேரத்தில் அவர்கள் மீது வர வேண்டிய வேதனையை விலக்கிக் கொண்டான். இது ஆஷூரா நாளில் நடைபெற்றது.          

فَلَوْلَا كَانَتْ قَرْيَةٌ آمَنَتْ فَنَفَعَهَا إِيمَانُهَا إِلَّا قَوْمَ يُونُسَ لَمَّا آمَنُوا كَشَفْنَا عَنْهُمْ عَذَابَ الْخِزْيِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَمَتَّعْنَاهُمْ إِلَى حِينٍ (98) يونس

படிப்பினை - கடைசி நேரத்தில் தவ்பா ஏற்றுக் கொள்ளப்பட்டது இவர்கள் விஷயத்தில் மட்டும் தான். மற்ற மனிதர்கள் விஷயத்தில் கடைசி நேர தவ்பா ஏற்கப்படாது.

நபி யஃகூப் அலைஹிஸ்ஸலாம் தன் பிள்ளைகளுக்கு பிரார்த்தனை செய்வதற்காக தேர்ந்தெடுத்த நாள்

قَالُوا يَا أَبَانَا اسْتَغْفِرْ لَنَا ذُنُوبَنَا إِنَّا كُنَّا خَاطِئِينَ (97) قَالَ سَوْفَ أَسْتَغْفِرُ لَكُمْ رَبِّي إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ (98سورة يوسف)قال ابن عباس : أخَّر دعاءه إلى السحر وقال المثنى بن الصباح عن طاوس قال : سحر ليلة الجمعة ووافق ذلك ليلة عاشوراء (قرطبي)

நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கைத்தடி  ராட்சத பாம்பாக மாறி, சூனியக்காரர்கள் உருவாக்கிய பாம்புகள் அனைத்தையும் விழுங்கியதும், அந்த சூனியக்காரர்கள் அனைவரும் இஸ்லாத்தை ஏற்றதும் இதே நாளில் தான்

قَالَ أَجِئْتَنَا لِتُخْرِجَنَا مِنْ أَرْضِنَا بِسِحْرِكَ يَا مُوسَى(57)فَلَنَأْتِيَنَّكَ بِسِحْرٍ مِثْلِهِ فَاجْعَلْ بَيْنَنَا وَبَيْنَكَ مَوْعِدًا لَا نُخْلِفُهُ نَحْنُ وَلَا أَنْتَ مَكَانًا سُوًى (58) قَالَ مَوْعِدُكُمْ يَوْمُ الزِّينَةِ وَأَنْ يُحْشَرَ النَّاسُ ضُحًى (59) فَتَوَلَّى فِرْعَوْنُ فَجَمَعَ كَيْدَهُ ثُمَّ أَتَى (60....قَالُوا يَا مُوسَى إِمَّا أَنْ تُلْقِيَ وَإِمَّا أَنْ نَكُونَ أَوَّلَ مَنْ أَلْقَى (65) قَالَ بَلْ أَلْقُوا فَإِذَا حِبَالُهُمْ وَعِصِيُّهُمْ يُخَيَّلُ إِلَيْهِ مِنْ سِحْرِهِمْ أَنَّهَا تَسْعَى (66) فَأَوْجَسَ فِي نَفْسِهِ خِيفَةً مُوسَى- قُلْنَا لَا تَخَفْ إِنَّكَ أَنْتَ الْأَعْلَى (68) وَأَلْقِ مَا فِي يَمِينِكَتَلْقَفْ مَا صَنَعُوا إِنَّمَا صَنَعُوا كَيْدُ سَاحِرٍ وَلَا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَى (69) فَأُلْقِيَ السَّحَرَةُ سُجَّدًا قَالُوا آمَنَّا بِرَبِّ هَارُونَ وَمُوسَى (طه) عَنِ ابْنِ عَبَّاسٍرضأَنَّ يَوْم الزِّينَة الْيَوْم الَّذِي أَظْهَرَ اللَّه فِيهِ مُوسَى عَلَى فِرْعَوْن وَالسَّحَرَة يَوْم عَاشُورَاء(تفسير ابن كثير

நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் வானத்திற்கு உயர்த்தப்பட்டதும் இந்த தினத்தில்...

وَقَوْلِهِمْ إِنَّا قَتَلْنَا الْمَسِيحَ عِيسَى بْنَ مَرْيَمَ رَسُولَ اللَّهِ وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ وَلَكِنْ شُبِّهَ لَهُمْ وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُوا فِيهِ لَفِي شَكٍّ مِنْهُ مَا لَهُمْ بِهِ مِنْ عِلْمٍ إِلَّا اتِّبَاعَ الظَّنِّ وَمَا قَتَلُوهُ يَقِينًا (157) بَلْ رَفَعَهُ اللَّهُ إِلَيْهِ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا (النساء158) وقال الضحاك : رفعه في يوم عاشوراء بين صلاتي المغرب والعشاء .(بحر العلوم)

ஹிஜ்ரத்

 12-06-2026 துல்ஹஜ்- 25 بسم الله الرحمن الرحيم          ஹிஜ்ரத்தை நினைவு படுத்தும்  இஸ்லாமியப் புத்தாண்டு https://chennaijamaathulula...