09-09-2026
ரபீஉல் அவ்வல் – 28
இறுதி நபியின் இறுதி நாட்கள்
https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம்
மவ்த்தாகும் விஷயத்தில் நபிமார்களுக்கு வழங்கப்பட்ட சிறப்புச் சலுகை. மற்ற மனிதர்களிடம் மலக்குல் மவ்த் நான் வருவேன் என முன்னறிவிப்பு செய்ய மாட்டார். ஆனால் நபிமார்களுக்கு அவ்வாறல்ல.. மூஸா அலைஹிஸ்ஸலாம் மலக்குல் மவ்த் வருகை தந்த சம்பவம் இதற்கு உதாரணம். மலக்குல் மவ்த்தின் கன்னத்தில் மூஸா அலைஹிஸ்ஸலாம் அறைந்த சம்பவம் .
தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்காக ஆதம் அலைஹிஸ்ஸலாம் அறுபது வயதை விட்டுக் கொடுத்த சம்பவத்தை கூறலாம்
மவ்த் விஷயத்தில் மற்ற நபிமார்களை விட மேலாக நபி ஸல் அவர்களுக்கு சிறப்புச் சலுகை வழங்கப்பட்டது
மூஸா (அலை) அவர்களிடம் உங்கள் கைக்குள் இந்த மாட்டின் முடிகள் எத்தனை அடங்குமோ அத்தனை ஆண்டுகள் நீங்கள் விரும்பினால் வாழலாம் என சலுகை வழங்கப்பட்டது. ஆனால் நபி (ஸல்) அவர்களுக்கு அவ்வாறு வரையறுக்கப்படவில்லை
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَا مِنْ نَبِيٍّ يَمْرَضُ إِلَّا خُيِّرَ بَيْنَ الدُّنْيَا وَالْآخِرَةِ وَكَانَ فِي شَكْوَاهُ الَّذِي قُبِضَ فِيهِ أَخَذَتْهُ بُحَّةٌ شَدِيدَةٌ فَسَمِعْتُهُ يَقُولُ {مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنْ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ}فَعَلِمْتُ أَنَّهُ خُيِّرَ (بُخَارِي) كتاب التفسير (بُحَّةٌ:وَهِيَ غِلَظٌ فِي الصَّوْت)
‘இம்மை-மறுமை (இரண்டுக்கும்) இடையில் (மறுமையைத்) தேர்ந்தெடுக்காத வரையில் எந்த நபியும் மரணிப்பதில்லை என்பதை நான் செவியுற்றிருந்தேன். நபி(ஸல்) அவர்கள், தான் மரணித்த அவர்களது அந்த நோயின் போது, ‘அல்லாஹ் அருள் புரிந்தவர்களுடன்…’ என்ற ஆயத்தை ஓதினார்கள். அப்போது, நபி(ஸல்) அவர்கள் மரணத்தைத் தேர்ந்தெடுத்து விட்டார்கள் என நான் நினைத்தேன்’ என ஆயிஷா(ரலி)அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஸஹீஹ் புகாரி)
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَلَسَ عَلَى الْمِنْبَرِ فَقَالَ إِنَّ عَبْدًا خَيَّرَهُ اللَّهُ بَيْنَ أَنْ يُؤْتِيَهُ مِنْ زَهْرَةِ الدُّنْيَا مَا شَاءَ وَبَيْنَ مَا عِنْدَهُ فَاخْتَارَ مَا عِنْدَهُ فَبَكَى أَبُو بَكْرٍ وَقَالَ فَدَيْنَاكَ بِآبَائِنَا وَأُمَّهَاتِنَا فَعَجِبْنَا لَهُ وَقَالَ النَّاسُ انْظُرُوا إِلَى هَذَا الشَّيْخِ يُخْبِرُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ عَبْدٍ خَيَّرَهُ اللَّهُ بَيْنَ أَنْ يُؤْتِيَهُ مِنْ زَهْرَةِ الدُّنْيَا وَبَيْنَ مَا عِنْدَهُ وَهُوَ يَقُولُ فَدَيْنَاكَ بِآبَائِنَا وَأُمَّهَاتِنَا فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هُوَ الْمُخَيَّرَ وَكَانَ أَبُو بَكْرٍ هُوَ أَعْلَمَنَا بِهِ (بُخَارِي)باب هِجْرَة النَّبِىِّ صلى الله عليه وسلم وَأَصْحَابِهِ إِلَى الْمَدِينَة كتاب مناقب الأنصار
நபியின் மரணத்தை சஹாபாக்களால் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால் அல்லாஹ் அதைப் பற்றி முன்னறிவிப்புச் செய்தான்
إِنَّكَ مَيِّتٌ وَإِنَّهُمْ مَيِّتُونَ (30 الزمر) وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِنْ مَاتَ أَوْ قُتِلَ انْقَلَبْتُمْ عَلَى أَعْقَابِكُمْ ال عمران)144
தன்னுடைய வஃபாத்தைப் பற்றி நபி ஸல் அவர்கள் தன் தோழர்களிடம் கூறிய முன்னறிவிப்பு
عن عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يقول حِينَ صَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَاشُورَاءَ وَأَمَرَ بِصِيَامِهِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ يَوْمٌ تُعَظِّمُهُ الْيَهُودُ وَالنَّصَارَى فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا كَانَ الْعَامُ الْمُقْبِلُ إِنْ شَاءَ اللَّهُ صُمْنَا الْيَوْمَ التَّاسِعَ قَالَ فَلَمْ يَأْتِ الْعَامُ الْمُقْبِلُ حَتَّى تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (مسلم) وفي رواية قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَئِنْ بَقِيتُ إِلَى قَابِلٍ لَأَصُومَنَّ التَّاسِعَ(مسلم) - كِتَاب الصِّيَامِ
சுருக்கம்- நபியவர்கள் முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் மட்டுமே நோன்பு நோற்று வந்தார்கள். இது விஷயத்தில் யூதர்களுக்கு மாறு செய்ய அவர்கள் விரும்பும் போது அடுத்த வருடம் நான் உயிருடன் இருந்தால் ஒன்பதையும் சேர்த்துப் பிடிப்பேன் என்றார்கள். இதன் மூலமாகவும் தன்னுடைய வஃபாத்தைப் பற்றி முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்.
عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ رَضِىَ اللَّهُ عَنْهُ : أَنَّهُ لَمَّا بَعَثَهُ النَّبِىُّ -صلى الله عليه وسلم- إِلَى الْيَمَنِ خَرَجَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- مَعَهُ يُوصِيهِ بِوَصِيَّةٍ وَمُعَاذٌ رَاكِبٌ وَرَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يَمْشِى تَحْتَ رَاحِلَتِهِ فَلَمَّا فَرَغَ قَالَ :« يَا مُعَاذُ أَنْتَ عَسَى أَنْ لاَ تَلْقَانِى بَعْدَ عَامِى هَذَا وَلَعَلَّكَ أَنْ تَمُرَّ بِمَسْجِدِى وَقَبْرِى ». (سنن الكبري للبيهقي )
முஆத் ரழி அவர்களை யமனுக்கு நபி ஸல் அனுப்பிய போது முஆத் ரழி அவர்கள் வாகனத்தில் அமர்ந்த பிறகும் அவருக்கு உபதேசம் செய்தவர்களாகவே நபி ஸல் அவர்கள் அந்த வாகனத்துடன் நடந்தார்கள். இறுதியாக நபி ஸல் அவர்கள் முஆத் ரழி அவர்களிடம் முஆதே நீர் அடுத்த வருடம் திரும்பி வரும்போது என்னை சந்திக்க முடியாமல் போகலாம். என்னுடைய மஸ்ஜிதையும் கப்ரையும் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம் என முன்னறிவிப்புச் செய்தார்கள்.
தன் மரணத்தைப் பற்றி தன் குடும்பத்தவர்களுக்கு சொன்ன முன்னறிவிப்பு (இரண்டு விதமான ரிவாயத்)
عَنْ عَائِشَةَ رضى الله عنها قَالَتْ أَقْبَلَتْ فَاطِمَةُ تَمْشِى، كَأَنَّ مِشْيَتَهَا مَشْىُ النَّبِىِّ صلى الله عليه وسلم فَقَالَ النَّبِىُّ صلى الله عليه وسلم مَرْحَبًا بِابْنَتِى ثُمَّ أَجْلَسَهَا عَنْ يَمِينِهِ أَوْ عَنْ شِمَالِهِ ثُمَّ أَسَرَّ إِلَيْهَا حَدِيثًا فَبَكَتْ فَقُلْتُ لَهَا لِمَ تَبْكِينَ ثُمَّ أَسَرَّ إِلَيْهَا حَدِيثًا فَضَحِكَتْ فَقُلْتُ مَا رَأَيْتُ كَالْيَوْمِ فَرَحًا أَقْرَبَ مِنْ حُزْنٍ فَسَأَلْتُهَا عَمَّا قَالَ فَقَالَتْ مَا كُنْتُ لأُفْشِىَ سِرَّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى قُبِضَ النَّبِىُّ صلى الله عليه وسلم فَسَأَلْتُهَا فَقَالَتْ أَسَرَّ إِلَىَّ "إِنَّ جِبْرِيلَ كَانَ يُعَارِضُنِى الْقُرْآنَ كُلَّ سَنَةٍ مَرَّةً وَإِنَّهُ عَارَضَنِى الْعَامَ مَرَّتَيْنِ وَلاَ أُرَاهُ إِلاَّ حَضَرَ أَجَلِى وَإِنَّكِ أَوَّلُ أَهْلِ بَيْتِى لَحَاقًا بِى فَبَكَيْتُ فَقَالَ أَمَا تَرْضَيْنَ أَنْ تَكُونِى سَيِّدَةَ نِسَاءِ أَهْلِ الْجَنَّةِ أَوْ نِسَاءِ الْمُؤْمِنِينَ فَضَحِكْتُ لِذَلِك (بخاري) باب عَلاَمَاتِ النُّبُوَّةِ فِى الإِسْلاَمِ-كتاب المناقب -
சுருக்கம்- ஆயிஷா (ரலி) கூறுகிறார்கள் நபி (ஸல்) அவர்கள் தம்முடைய மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களை அழைத்து. எதையோ இரகசியமாக அவர்களிடம் சொன்னார்கள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் அழுதார்கள். பிறகு அவர்களை அழைத்து மீண்டும் ஏதோ இரகசியமாகக் கூற அவர்கள் சிரித்தார்கள். நான் அதைப் பற்றி ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் என்னிடம் நபி (ஸல்) அவர்கள் இரகசியமாக கூறிய செய்தியை நான் அவர்கள் இருக்கும் வரை வெளியே சொல்ல மாட்டேன் என்று கூறி விட்டார்கள். அதற்குப் பிறகு அவர்களிடம் நான் கேட்ட போது அவர்கள் நபி ஸல் கூறியதாக என்னிடம் கூறினார்கள். நபி ஸல் என்னிடம் எப்போதும் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் வருடத்தில் ஒருமுறை இதுவரை இறங்கிய குர்ஆன் முழுவதையும் ஓதிக் காட்டுவார்கள். ஆனால் இந்த முறை என்னிடம் இதுவரை இறங்கிய குர்ஆன் முழுவதையும் ஓதிக் காட்டினார்கள். அதனால் என்னுடைய வஃபாத் நெருங்கி விட்டதாக நான் கருதுகிறேன். மேலும் அவர்களின் வீட்டாரில் முதலாவதாக அவர்களைத் தொடர்ந்து (இறைவனிடம்) செல்லவிருப்பது (ஃபாத்திமாவாகிய) நீ தான் என்று இரகசியமாக எனக்குத் தெரிவித்தார்கள். அதனால், நான் (துக்கம் தாளாமல்) அழுதேன். பிறகு அவர்கள் என்னிடம் சுவனத்துப் பெண்களின் தலைவியாக நீ ஆகுவதை நீ பொருந்திக் கொள்ளவில்லையா என்று கூற, அதனால் நான் (மகிழ்ச்சியடைந்து) சிரித்தேன்” என்று பதிலளித்தார்கள்.
மற்றொரு அறிவிப்பில் என்னிடம் நபி (ஸல்) அவர்கள் இரகசியமாக, தன்னுடைய வஃபாத்தைப் பற்றித் தெரிவித்தார்கள். அதைக் கேட்டு அழுதேன். பிறகு அவர்களின் வீட்டாரில் முதலாவதாக அவர்களைத் தொடர்ந்து (இறைவனிடம்) செல்லவிருப்பது நீ தான் என்று இரகசியமாக எனக்குத் தெரிவித்தார்கள். அதனால் நான் (மகிழ்ச்சியடைந்து) சிரித்தேன்” என்று பதிலளித்தார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சகராத் நோயின் ஆரம்பம்
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ رَجَعَ إِلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ مِنْ جَنَازَةٍ بِالْبَقِيعِ وَأَنَا أَجِدُ صُدَاعًا6 فِي رَأْسِي وَأَنَا أَقُولُ وَا رَأْسَاهْ7 قَالَ بَلْ أَنَا وَا رَأْسَاهْ قَالَ مَا ضَرَّكِ لَوْ مِتِّ قَبْلِي فَغَسَّلْتُكِ وَكَفَّنْتُكِ ثُمَّ صَلَّيْتُ عَلَيْكِ وَدَفَنْتُكِ قُلْتُ لَكِنِّي أَوْ لَكَأَنِّي بِكَ وَاللَّهِ لَوْ فَعَلْتَ ذَلِكَ لَقَدْ رَجَعْتَ إِلَى بَيْتِي فَأَعْرَسْتَ فِيهِ بِبَعْضِ نِسَائِكَ قَالَتْ فَتَبَسَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ بُدِئَ بِوَجَعِهِ الَّذِي مَاتَ فِيهِ رواه أحمد (نسائ) بدء علة النبي صلى الله عليه وسلم كتاب الوفاة) (ابن ماجة- بَاب مَا جَاءَ فِي غَسْلِ الرَّجُلِ امْرَأَتَهُ- كِتَاب مَا جَاءَ فِي الْجَنَائِزِ
பொருள்- 6,தலைவலி 7,எனக்கு தலை வலிக்கிறதே 8,தொண்டை 9,கழுத்தின் உயிர் நரம்பு
சுருக்கம் – நபி ஸல் அவர்கள் பகீஃ ஒரு ஜனாஸாவில் கலந்து கொண்டு திரும்பினார்கள். அப்போது ஆயிஷா நாயகி ரழியல்லாஹுஅன்ஹா அவர்கள், ‘அந்தோ என் தலையே’ என்று தலைவலியால் புலம்பிக் கொண்டிருந்தார்கள்.உள்ளே நுழைந்த பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்; அவர்கள் ‘ஆயிஷா! எனக்கும்தான் தலை வலிக்கிறது’ என்று கூறித் தங்களின் தலையைக் கையால் பிடித்துக் கொண்டார்கள். அதன்பின் தங்கள் அருமை மனைவியாரின் அருகில் அமர்ந்து ‘ஆயிஷா! இந்தத் தலைவலியால் நீ இப்பொழுதே மரணமடைந்து நானே உன்னைக் குளிப்பாட்டி கஃபனிட்டுத் தொழுவித்து என் கரங்களாலேயே அடக்கம் செய்ய நேரிட்டால் எப்படி இருக்கும்?’ என்று வேடிக்கையாக கேட்டார்கள். இதைக் கேட்டு ஆயிஷா நாயகி அவர்கள், என்னை அடக்கம் செய்து விட்டு நீங்கள் வீடு திரும்பியவுடன் என்னுடைய இந்த வீட்டில் நீங்கள் இன்னொரு மனைவியோடு சந்தோஷமாக இருப்பீர்கள் என்று தமாஷாக கேட்டார்கள். அதைக் கேட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிரித்தார்கள். அப்போதிருந்து அவர்களின் சகராத் வேதனை தொடங்கியது.
நபி ஸல் அவர்களின் சகராத் வேதனையின் போது அவர்களுக்கு ஆயிஷா ரழி ஓதிப் பார்த்த சூராக்களும், அதன் சிறப்புகளும்
عَنْ عَائِشَةَ رضى الله عنها أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا اشْتَكَى يَقْرَأُ عَلَى نَفْسِهِ بِالْمُعَوِّذَاتِ وَيَنْفُثُ فَلَمَّا اشْتَدَّ وَجَعُهُ كُنْتُ أَقْرَأُ عَلَيْهِ وَأَمْسَحُ بِيَدِهِ رَجَاءَ بَرَكَتِهَا (بخاري) عَنْ عَائِشَةَ رضي الله عنها أَنَّ النَّبِىَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ كُلَّ لَيْلَةٍ جَمَعَ كَفَّيْهِ ثُمَّ نَفَثَ فِيهِمَا فَقَرَأَ فِيهِمَا ( قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ) وَ ( قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ ) وَ ( قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ ) ثُمَّ يَمْسَحُ بِهِمَا مَا اسْتَطَاعَ مِنْ جَسَدِهِ يَبْدَأُ بِهِمَا عَلَى رَأْسِهِ وَوَجْهِهِ وَمَا أَقْبَلَ مِنْ جَسَدِهِ يَفْعَلُ ذَلِكَ ثَلاَثَ مَرَّاتٍ (بخاري){ باب فَضْلِ } الْمُعَوِّذَاتِ-كتاب فضائل القرآن
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோயுற்றால் பாதுகாப்புக் கோரும் குல் சூராக்களை ஓதி தன் மீது ஊதுவார்கள். மற்றொரு அறிவிப்பில் (112, 113, 114) அத்தியாயங்கள் மூன்றையும் ஓதி, தம் உள்ளங்கைகளில் ஊதி அவற்றால் தமது முகத்தையும், தம் இரு கரங்கள் உடலில் எங்கெல்லாம் படுமோ அந்த இடங்களையும் தடவிக் கொள்வார்கள். அவர்கள் நோயுற்ற போது நான் அவற்றை அவர்களின் கரங்களின் மீது ஓதி ஊதி அதை தடவ வைத்தேன். காரணம் அவர்களுடைய கரங்களின் பரக்கத் காரணமாக....
مواظبة النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ علي الصلاة في مرض موته:
عَنْ الْأَسْوَدِ قَالَ كُنَّا عِنْدَ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا فَذَكَرْنَا الْمُوَاظَبَةَ عَلَى الصَّلَاةِ وَالتَّعْظِيمَ لَهَا قَالَتْ لَمَّا مَرِضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَضَهُ الَّذِي مَاتَ فِيهِ فَحَضَرَتْ الصَّلَاةُ فَأُذِّنَ فَقَالَ مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ فَقِيلَ لَهُ إِنَّ أَبَا بَكْرٍ رَجُلٌ أَسِيفٌ إِذَا قَامَ فِي مَقَامِكَ لَمْ يَسْتَطِعْ أَنْ يُصَلِّيَ بِالنَّاسِ وَأَعَادَ فَأَعَادُوا لَهُ فَأَعَادَ الثَّالِثَةَ فَقَالَ إِنَّكُنَّ صَوَاحِبُ يُوسُفَ مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ فَخَرَجَ أَبُو بَكْرٍ فَصَلَّى فَوَجَدَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ نَفْسِهِ خِفَّةً فَخَرَجَ يُهَادَى بَيْنَ رَجُلَيْنِ كَأَنِّي أَنْظُرُ رِجْلَيْهِ تَخُطَّانِ مِنْ الْوَجَعِ فَأَرَادَ أَبُو بَكْرٍ أَنْ يَتَأَخَّرَ فَأَوْمَأَ إِلَيْهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ مَكَانَكَ ثُمَّ أُتِيَ بِهِ حَتَّى جَلَسَ إِلَى جَنْبِهِ قِيلَ لِلْأَعْمَشِ وَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي وَأَبُو بَكْرٍ يُصَلِّي بِصَلَاتِهِ وَالنَّاسُ يُصَلُّونَ بِصَلَاةِ أَبِي بَكْرٍ فَقَالَ بِرَأْسِهِ نَعَمْ (بخاري) باب حَدِّ الْمَرِيضِ أَنْ يَشْهَدَ الْجَمَاعَةَ- كتاب الأذان
நபியவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தபோது, "அபூபக்ரிடம் சொல்லுங்கள், அவர் மக்களுக்குத் தொழுகை நடத்தட்டும்" என்று கூறினார்கள். அதற்கு ஆயிஷா (ரலி), தன் தந்தை மென்மையான இதயம் கொண்டவர் என்பதால், நபியவர்கள் நின்ற இடத்தில் நின்று அவரால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியாது என்று கூறி, உமர் (ரலி) அவர்களைத் தொழுகை நடத்தச் சொல்லுமாறு இருமுறை நபியவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்கள். ஆனால் நபியவர்கள் அதை ஏற்காமல், "நீங்கள் யூசுப் (அலை) அவர்களின் தோழியரைப் போல் பேசுகிறீர்கள்! அபூபக்ரையே தொழ வைக்கச் சொல்லுங்கள்" என்று உறுதியாகக் கூறினார்கள். அவ்வாறே அபூபக்கர் ரழி அவர்கள் தொழ வைக்க ஆரம்பித்தார்கள். பிறகு நபி ஸல் அவர்களின் உடலில் சிறிய முன்னேற்றம் உணரப் பட்ட போது இரு கால்கள் தரை கூட்ட இரு நபித்தோழர்கள் கைத்தாங்கலாக அழைத்து வரப்பட்டார்கள். அதைக் கண்ட அபூபக்கர் ரழி அவர்கள் பின்னால் வர முயற்சி செய்ய போது வேண்டாம். அப்படியே நில்லுங்கள் என நபி ஸல் சைக்கினை செய்தார்கள். நபி ஸல் அவர்களை அபூபக்கர் ரழி அவர்களின் அருகில் அமர வைக்கப்பட்டது. நபி ஸல் அவர்களைப் பின்பற்றி அபூபக்கர் ரழி அவர்கள் தொழ, அபூபக்கர் ரழி அவர்களைப் பின்பற்றி மக்கள் தொழுதார்கள்.
ஹிஜ்ரீ 8 – ல் கைபர் போரில் நபி (ஸல்) அவர்களுக்கு கொடுக்கப்பட்ட விஷம் தான் இந்த வேதனைக்கு காரணம்
عَنْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ يَا عَائِشَةُ مَا أَزَالُ أَجِدُ أَلَمَ الطَّعَامِ الَّذِي أَكَلْتُ بِخَيْبَرَ فَهَذَا أَوَانُ وَجَدْتُ انْقِطَاعَ أَبْهَرِي9 مِنْ ذَلِكَ السُّمِّ (بُخَارِي) باب مَرَضِ النَّبِىِّ صلى الله عليه وسلم وَوَفَاتِهِ – كتاب المغازى (أَبْهَرِي:أي عرق يتعلق به القلب)
விளக்கம்- அல்லாஹ் நபி ஸல் அவர்களுக்கு ஷஹீத் என்ற அந்தஸ்தையும் கொடுக்க நாடினான். கைபர் போரின் போது உட்கொண்ட உணவில் கலக்கப்பட்ட விஷத்தின் விளைவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உணர ஆரம்பித்தார்கள். 'ஆயிஷாவே! கைபர் தினத்தில் நான் உண்ட உணவின் வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் அந்த விஷத்தினால் எனது நரம்புகள் துண்டாவதை நான் உணர்கிறேன்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல்: ஸஹீஹுல் புகாரி)
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْبَلُ الْهَدِيَّةَ وَلَا يَأْكُلُ الصَّدَقَةَ فَأَهْدَتْ لَهُ يَهُودِيَّةٌ بِخَيْبَرَ شَاةً مَصْلِيَّةً سَمَّتْهَا فَأَكَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْهَا وَأَكَلَ الْقَوْمُ فَقَالَ ارْفَعُوا أَيْدِيَكُمْ فَإِنَّهَا أَخْبَرَتْنِي أَنَّهَا مَسْمُومَةٌ فَمَاتَ بِشْرُ بْنُ الْبَرَاءِ بْنِ مَعْرُورٍ الْأَنْصَارِيُّ فَأَرْسَلَ إِلَى الْيَهُودِيَّةِ مَا حَمَلَكِ عَلَى الَّذِي صَنَعْتِ قَالَتْ إِنْ كُنْتَ نَبِيًّا لَمْ يَضُرَّكَ الَّذِي صَنَعْتُ وَإِنْ كُنْتَ مَلِكًا أَرَحْتُ النَّاسَ مِنْكَ فَأَمَرَ بِهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُتِلَتْ (ابوداود) بَاب فِيمَنْ سَقَى رَجُلًا سَمًّا أَوْ أَطْعَمَهُ فَمَاتَ أَيُقَادُ مِنْهُ- كِتَاب الدِّيَاتِ
வேறு சில அறிவிப்புகளில் அந்தப்பெண்ணை மன்னித்ததாக வாசகங்கள் இடம் பெற்றிருந்தாலும் அது ஸஹீஹானதாக இல்லை
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடைசியாக தொழ வைத்த தொழுகை
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنْ أُمِّ الْفَضْلِ بِنْتِ الْحَارِثِ قَالَتْ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الْمَغْرِبِ بِالْمُرْسَلَاتِ عُرْفًا ثُمَّ مَا صَلَّى لَنَا بَعْدَهَا حَتَّى قَبَضَهُ اللَّهُ (بُخَارِي) باب مَرَضِ النَّبِىِّ صلى الله عليه وسلم وَوَفَاتِهِ – كتاب المغازى
நபி ஸல் அவர்களுடைய புன்னகை தவழும் முகத்தை கடைசியாக சஹாபாக்கள் பார்த்தது
عن أَنَس رضى الله عنه أَنَّ الْمُسْلِمِينَ بَيْنَا هُمْ فِى صَلاَةِ الْفَجْرِ مِنْ يَوْمِ الاِثْنَيْنِ وَأَبُو بَكْرٍ يُصَلِّى لَهُمْ لَمْ يَفْجَأْهُمْ إِلاَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ كَشَفَ سِتْرَ حُجْرَةِ عَائِشَةَ فَنَظَرَ إِلَيْهِمْ وَهُمْ فِى صُفُوفِ الصَّلاَةِ. ثُمَّ تَبَسَّمَ يَضْحَكُ فَنَكَصَ أَبُو بَكْرٍ عَلَى عَقِبَيْهِ لِيَصِلَ الصَّفَّ وَظَنَّ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُرِيدُ أَنْ يَخْرُجَ إِلَى الصَّلاَةِ فَقَالَ أَنَسٌ وَهَمَّ الْمُسْلِمُونَ أَنْ يَفْتَتِنُوا فِى صَلاَتِهِمْ فَرَحًا بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَشَارَ إِلَيْهِمْ بِيَدِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ أَتِمُّوا صَلاَتَكُمْ ثُمَّ دَخَلَ الْحُجْرَةَ وَأَرْخَى السِّتْرَ (بُخَارِي) باب مَرَضِ النَّبِىِّ صلى الله عليه وسلم وَوَفَاتِهِ – كتاب المغازى
அனஸ் (ரலி) கூறினார் (அபூ பக்கர் (ரலி) இமாமாக நிற்க முஸ்லிம்கள் ஃபஜ்ருத் தொழுது கொண்டிருந்தபோது, நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) யின் அறையிலுள்ள திரையை விலக்கி மக்கள் அணிவகுத்து நிற்பதைப் பார்த்தார்கள். அது மக்களுக்குத் திடுக்கத்தை ஏற்படுத்தியது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் புன்னகை செய்தார்கள். நபி (ஸல்) அவர்கள் பள்ளிக்கு வரப்போகிறார்கள் என்று எண்ணி அபூ பக்கர் (ரலி) பின்னால் நகர்ந்து வரிசையில் சேர்ந்து கொள்ள முற்பட்டார்கள். தங்கள் தொழுகைகளே குழம்பிப் போகுமோ என்று முஸ்லிம்கள் எண்ணலானார்கள். உங்கள் தொழுகையைப் பூரணமாக்குங்கள்! என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சைகை செய்துவிட்டுத் திரையைத் தொங்கவிட்டார்கள். அன்றைய தினத்தின் இறுதியில் நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்தார்கள். (புகாரி)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கடைசி நிமிடங்களும், கடைசி வார்த்தைகளும்
عَنْ عَائِشَةَ رضى الله عنها أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَسْأَلُ فِى مَرَضِهِ الَّذِى مَاتَ فِيهِ يَقُول أَيْنَ أَنَا غَدًا أَيْنَ أَنَا غَدًا يُرِيدُ يَوْمَ عَائِشَةَ فَأَذِنَ لَهُ أَزْوَاجُهُ يَكُونُ حَيْثُ شَاءَ فَكَانَ فِى بَيْتِ عَائِشَةَ حَتَّى مَاتَ عِنْدَهَا (بُخَارِي)باب مَرَضِ النَّبِىِّ صلى الله عليه وسلم وَوَفَاتِهِ–كتاب المغازى - عن عائشة رَضي الله عنها قالت إِنَّ مِنْ نِعَمِ اللَّهِ عَلَيَّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تُوُفِّيَ فِي بَيْتِي وَفِي يَوْمِي وَبَيْنَ سَحْرِي وَنَحْرِي وَأَنَّ اللَّهَ جَمَعَ بَيْنَ رِيقِي وَرِيقِهِ عِنْدَ مَوْتِهِ دَخَلَ عَلَيَّ عَبْدُ الرَّحْمَنِ وَبِيَدِهِ السِّوَاكُ وَأَنَا مُسْنِدَةٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَأَيْتُهُ يَنْظُرُ إِلَيْهِ وَعَرَفْتُ أَنَّهُ يُحِبُّ السِّوَاكَ فَقُلْتُ آخُذُهُ لَكَ فَأَشَارَ بِرَأْسِهِ أَنْ نَعَمْ فَتَنَاوَلْتُهُ فَاشْتَدَّ عَلَيْهِ وَقُلْتُ أُلَيِّنُهُ لَكَ فَأَشَارَ بِرَأْسِهِ أَنْ نَعَمْ فَلَيَّنْتُه1 فَأَمَرَّهُ2 وَبَيْنَ يَدَيْهِ رَكْوَةٌ فِيهَا مَاءٌ فَجَعَلَ يُدْخِلُ يَدَيْهِ فِي الْمَاءِ فَيَمْسَحُ بِهِمَا وَجْهَهُ يَقُولُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ إِنَّ لِلْمَوْتِ سَكَرَاتٍ ثُمَّ نَصَبَ يَدَهُ فَجَعَلَ يَقُولُ فِي الرَّفِيقِ الْأَعْلَى حَتَّى قُبِضَ وَمَالَتْ يَدُهُ (بُخَارِي) عن عَائِشَةَ رضي الله عنها أَنَّهَا سَمِعَتِ النَّبِىَّ صلى الله عليه وسلم وَأَصْغَتْ إِلَيْهِ قَبْلَ أَنْ يَمُوتَ وَهْوَ مُسْنِدٌ إِلَىَّ ظَهْرَهُ يَقُولُ اللَّهُمَّ اغْفِرْ لِى وَارْحَمْنِى وَأَلْحِقْنِى بِالرَّفِيقِ (بُخَارِي) باب مَرَضِ النَّبِىِّ صلى الله عليه وسلم وَوَفَاتِهِ – كتاب المغازى
ஆயிஷா ரழி கூறினார்கள். “நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) என் அறையில் எனக்குரிய தினத்தில் எனது கழுத்துக்கும் நெஞ்சுக்குமிடையில் மரணமானார்கள். அவர்களது மரண நேரத்தில் எனது எச்சிலையும் அவர்களது எச்சிலையும் ஒன்று சேர்த்தேன். எனது சகோதரர் அப்துர் ரஹ்மான் அறைக்குள் வந்தார். அவரது கரத்தில் மிஸ்வாக் இருந்தது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை எனது மடியில் கிடத்தியிருந்தேன். அப்துர் ரஹ்மான் கரத்திலுள்ள மிஸ்வாக்கை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பார்த்தார்கள். அவர்கள் மிஸ்வாக் செய்ய விரும்புகிறார்கள் என புரிந்து கொண்டேன். “நான் உங்களுக்கு அதனை வாங்கித் தரவா?” என்று கேட்டபோது, “ஆம்!” என தலை அசைத்தார்கள். அதனை வாங்கிக் கொடுத்தேன். அது அவர்களுடைய பற்களுக்கு சிரமமாக இருந்தது. “நான் அதனை மிருதுவாக்கி தரட்டுமா?” என்று கேட்டேன். தலை அசைத்து “ஆம்!” என்றார்கள். நான் அதனை மிருதுவாக்கிக் கொடுத்தேன்.” இன்னொரு அறிவிப்பில் வருவதாவது: “நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மிக அழகிய முறையில் அக்குச்சியால் பல் துலக்கினார்கள். அவர்களுக்கருகில் நீர் நிரம்பிய குவளை இருந்தது. அதில் கைகளை விட்டு முகத்தில் தடவிக் கொண்டார்கள். )“லாஇலாஹஇல்லல்லாஹ் இன்னலில் மவ்த்தி சகராத்- வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. மரணத்திற்குப் பல மயக்கங்கள் இருக்கின்றன”( என்றார்கள். (ஸஹீஹுல் புகாரி)
நபி ஸல் அவர்களின் ரூஹ் பிரிந்த பின் அவர்களின் அவர்களை அபூபக்ர் அவர்கள் முத்தமிட்டு அதன் கூறிய வார்த்தை
عَنْ عَائِشَةَ وَابْنِ عَبَّاسٍ رضى الله عنهما أَنَّ أَبَا بَكْرٍ رضى الله عنه قَبَّلَ النَّبِىَّ صلى الله عليه وسلم بَعْدَ مَوْتِهِ (بُخَارِي) باب مَرَضِ النَّبِىِّ صلى الله عليه وسلم وَوَفَاتِهِ – كتاب المغازى- عَنْ عَائِشَةَ رضى الله عنها أَنَّ أَبَا بَكْرٍ قَبَّلَ بَيْنَ عَيْنَيْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مَيِّتٌ (نسائ) باب تَقْبِيلُ الْمَيِّتِ- كِتَاب الْجَنَائِزِ- عن عَائِشَةَ رضى الله عنها أَنَّ أَبَا بَكْرٍ رضى الله عنه أَقْبَلَ عَلَى فَرَسٍ مِنْ مَسْكَنِهِ بِالسُّنْحِ4 حَتَّى نَزَلَ فَدَخَلَ الْمَسْجِدَ فَلَمْ يُكَلِّمِ النَّاسَ حَتَّى دَخَلَ عَلَى عَائِشَةَ فَتَيَمَّمَ5 (اي قصد) رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ مُغَشًّى بِثَوْبِ حِبَرَةٍ فَكَشَفَ عَنْ وَجْهِهِ ثُمَّ أَكَبَّ عَلَيْهِ فَقَبَّلَهُ وَبَكَى ثُمَّ قَالَ بِأَبِى أَنْتَ وَأُمِّى وَاللَّهِ لاَ يَجْمَعُ اللَّهُ عَلَيْكَ مَوْتَتَيْنِ أَمَّا الْمَوْتَةُ الَّتِى كُتِبَتْ عَلَيْكَ فَقَدْ مُتَّهَا الْبُخَارِيّ باب مَرَضِ النَّبِىِّ صلى الله عليه وسلم وَوَفَاتِهِ –كتاب المغازى- شرح:(بِالسُّنُحِ) مَوْضِع بِعَوَالِي الْمَدِينَة- لاَ يَجْمَعُ اللَّهُ عَلَيْكَ موتتين )لا تحيا بعد ذلك في الدنيا ثم تموت قاله ردا على من قال إنه لم يمت وَسَيُبْعَثُ- قال الداودي لم يجمع الله عليك شدة بعد الموت لأن الله تعالى قد عصمك من أهوال القيامة وقيل لا يجمع الله موت نفسك وموت شريعتك(عمدة)
நபி ஸல் அவர்களின் வஃபாத் செய்தியை தாங்க முடியாமல் தன் நிலை மறந்த உமர் ரழி அவர்கள்
عَنْ ابْنِ عَبَّاسٍ، أَنَّ أَبَا بَكْرٍ خَرَجَ وَعُمَرُ بْنُ الخَطَّابِ يُكَلِّمُ النَّاسَ فَقَالَ: اجْلِسْ يَا عُمَرُ، فَأَبَى عُمَرُ أَنْ يَجْلِسَ، فَأَقْبَلَ النَّاسُ إِلَيْهِ، وَتَرَكُوا عُمَرَ، فَقَالَ أَبُو بَكْرٍ: " أَمَّا بَعْدُ : فَمَنْ كَانَ مِنْكُمْ يَعْبُدُ مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَإِنَّ مُحَمَّدًا قَدْ مَاتَ، وَمَنْ كَانَ مِنْكُمْ يَعْبُدُ اللَّهَ فَإِنَّ اللَّهَ حَيٌّ لاَ يَمُوتُ، قَالَ اللَّهُ: {وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ} [آل عمران: 144] (بخاري
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள். நபி(ஸல்) அவர்களின் உடலைப் பார்த்துவிட்டு) அபூ பக்ர்(ரலி) வெளியே வந்தார்கள். அப்போது உமர்(ரலி) மக்களிடம் (நபியவர்கள் இறக்கவில்லை என்று கோபமாகப்) பேசிக்கொண்டிருந்ததைக் கண்டதும் “உமரே! அமருங்கள்“ என்று அபூ பக்ர்(ரலி) கூறினார். உமர்(ரலி) உட்கார மறுத்தார்கள்.அப்போது மக்கள் உமர்(ரலி) அவர்களை விட்டுவிட்டு அபூ பக்ர்(ரலி) அவர்களை நோக்கி வந்தார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு(மக்களே) அறிந்து கொள்ளுங்கள் உங்களில் யார் முஹம்மத்(ஸல்) அவர்களை (இறைவன் என நம்பி) வணங்கிக் கொண்டிருந்தார்களோ அவர்கள் முஹம்மத்(ஸல்) நிச்சயம் இறந்து விட்டார்கள் என்பதை அறிந்துகொள்ளட்டும். உங்களில் யார் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தார்களோ அவர்கள் “அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன்; மரணிக்கவேமாட்டான்“ என்பதை அறிந்து கொள்ளட்டும். அல்லாஹ் கூறினான்; முஹம்மது (ஸல்) அவர்கள் ஒரு (இறைத்) தூதரேயன்றி வேறல்லர்; அவருக்கு முன்னரும் (என்) தூதர்கள் பலர் (வந்து) சென்றிருக்கிறார்கள்; எனவே அவர் இறந்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டால் நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (பழை மதத்திற்கே) திரும்பிவிடுவீர்களா? அப்படி யாரேனும் தம் கால் சுவட்டில் திரும்பினால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும செய்துவிட முடியாது; அன்றியும் அல்லாஹ் நன்றியுடையோருக்கு விரைவில் பிரதிபலன் வழங்குவான்“ (திருக்குர்ஆன் 3:144) என்றார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூ பக்ர்(ரலி) இவ்வசனத்தை அங்கு ஓதிக்காட்டும் வரை அல்லாஹ் அருளிய இவ்வசனத்தை இதற்கு முன்னர் அறியாதவர்கள் போன்றும் அபூ பக்ர்(ரலி) மூலமாகத்தான் இதை அவர்கள் அறிந்தது போன்றும் இதனை ஓதக் கேட்ட மக்கள் யாவரும் இதனைத் திரும்பத் திரும்ப ஓதிக் கொண்டேயிருந்தார்கள். உமர் (ரலி) கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! அபூபக்ர் (ரலி)அவர்கள் இந்த வசனத்தை ஓத நான் கேட்டபோது தான் அது என் நினைவுக்கே வந்தது. எனவே அதிர்ச்சியடைந்தேன். அப்போது என் கால்களால் என் (உடல்) சுமையை தாங்க முடியவில்லை. அபூ பக்ர்(ரலி) ஓதிக்காட்டிய இவ்வசனத்தைக் கேட்டு நபி(ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை உணர்ந்து நான் தரையில் விழுந்துவிட்டேன்.
நபி ஸல் அவர்களை குளிப்பாட்டிய போது நபித் தோழர்கள் காதில் கேட்ட அசரீரியான சப்தம். நபி ஸல் அவர்களின் கண்ணியம் கருதி மற்ற ஜனாஸாக்களைப்போல் ஆடையைக் கழற்றி குளிப்பாட்டப்படவில்லை.
عن عَائِشَةَ رض لَمَّا أَرَادُوا غَسْلَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالُوا وَاللَّهِ مَا نَدْرِي أَنُجَرِّدُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ ثِيَابِهِ كَمَا نُجَرِّدُ مَوْتَانَا أَمْ نَغْسِلُهُ وَعَلَيْهِ ثِيَابُهُ فَلَمَّا اخْتَلَفُوا أَلْقَى اللَّهُ عَلَيْهِمْ النَّوْمَ حَتَّى مَا مِنْهُمْ رَجُلٌ إِلَّا وَذَقْنُهُ فِي صَدْرِهِ ثُمَّ كَلَّمَهُمْ مُكَلِّمٌ مِنْ نَاحِيَةِ الْبَيْتِ لَا يَدْرُونَ مَنْ هُوَ أَنْ اغْسِلُوا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ ثِيَابُهُ فَقَامُوا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَغَسَلُوهُ وَعَلَيْهِ قَمِيصُهُ يَصُبُّونَ الْمَاءَ فَوْقَ الْقَمِيصِ وَيُدَلِّكُونَهُ بِالْقَمِيصِ دُونَ أَيْدِيهِمْ.(ابوداود) - كتاب الجنائز
நபி ஸல் அவர்களைக் குளிப்பாட்ட வேண்டும் என்று நாங்கள் எண்ணிய போது மற்ற ஜனாஸாக்களைப் போன்று அவர்களின் ஆடைகளைக் கழற்றிக் குளிப்பாடுவதா அல்லது ஆடையுடன் குளிப்பாட்டுவதா என்று நாங்கள் யோசித்துக் கொண்டிருந்த போது அல்லாஹ் அங்கு குழுமியிருந்த எங்கள் அனைவருக்கும் சிறு தூக்கத்தை ஏற்படுத்தினான். நாங்கள் அனைவரும் எங்களுடைய தாடையை நெஞ்சின் மீது கவிழ்த்தவர்களாக எங்களையும் அறியாமல் தூங்கினோம். நாங்கள் கண் விழித்த போது அந்த அறையின் ஒரு மூலையில் இருந்து சப்தம் வந்த து. நபி ஸல் அவர்களை ஆடையுடன் குளிப்பாட்டுங்கள் என்று சப்தம் மட்டும் வந்தது. அவ்வாறே குளிப்பாட்டினோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக