04-09-2026
ரபீஉல் அவ்வல் - 21
நேபாள வெள்ளப்பெருக்கும் அதன் படிப்பினைகளும்
https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம்
لَقَدْ كَانَ لِسَبَأٍ فِي مَسْكَنِهِمْ آيَةٌ جَنَّتَانِ عَنْ يَمِينٍ وَشِمَالٍ كُلُوا مِنْ رِزْقِ رَبِّكُمْ وَاشْكُرُوا لَهُ بَلْدَةٌ طَيِّبَةٌ وَرَبٌّ غَفُورٌ (15) فَأَعْرَضُوا فَأَرْسَلْنَا عَلَيْهِمْ سَيْلَ الْعَرِمِ وَبَدَّلْنَاهُمْ بِجَنَّتَيْهِمْ جَنَّتَيْنِ ذَوَاتَيْ أُكُلٍ خَمْطٍ وَأَثْلٍ وَشَيْءٍ مِنْ سِدْرٍ قَلِيلٍ (16) سبأ
கடந்த2026 ஆகஸ்ட் 26 அன்று காலை, திபெத் எல்லைக்கு அருகில் உள்ள நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் இமயமலையின் பனிச்சிகரங்கள் உருகியதால் ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ள பாதிப்புகளை நாம் அறிவோம். மழை, காற்று, இடி, மின்னல், வெள்ளம் ஆகியவை அல்லாஹ்வின் வலிமையான இராணுவம் என்பதை இதன் மூலம் நாம் அறிய வேண்டும். எவ்வளவு பெரிய கட்டிடங்களையும் கண்ணிமைக்கும் நேரத்தில் வாரிச் சுருட்டிக் கொண்டு சென்றதை சிந்திக்கும்போது தண்ணீருக்கு அல்லாஹ் எந்த அளவுக்கு வலிமையை ஏற்படுத்தியுள்ளான் என்பதை நாம் உணர் வேண்டும். மேலும் 45 கோடி ரூபாய் சொத்து மதிப்புள்ள ஒரு கோடீஸ்வரர் இந்த வெள்ள பாதிப்பால் அனைத்தையும் இழந்து அவர் உடுத்துவதற்கான சட்டையைக் கூட கடனாக பெற வேண்டிய நிலைக்கு ஆளானார் என்பதை எண்ணிப் பார்க்கும் போது உலகம் இவ்வளவு தான் என்பதை அறிந்து திருந்தி வாழ முயற்சி செய்ய வேண்டும். மேலும் நேபாளத்தின் திரிசூலி ஆற்றின் அழகும் அதனுடைய இரு புறங்களிலும் இருந்த அழகான கட்டிடங்களின் அழகும் இன்று அலங்கோலமாக மாறி விட்டன. இதைப் பார்க்கும்போது குர்ஆனில சபா என்ற சூராவில் இடம் பெற்றுள்ள சம்பவத்தில் மஆரிப் என்ற அணைக்கட்டு உடைந்து அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அழகான ஊர் அலங்கோலமாகவும் சேறும் சகதியுமாக மாறியதைப் பற்றி அல்லாஹ் கூறுவது நினைவுக்கு வருகிறது. அதன் விபரம் பின்னால் கூறப்படும். மேலும் அத்தனை வீடுகளையும் வெள்ளம் சுருட்டிக் கொண்டு போன நிலையிலும் அதற்கு மத்தியில் குறிப்பிட்ட ஒரு வீடு மட்டும் தப்பியதைப் பற்றி அது கட்டிடக் கலையின் திறன் என்று பலர் பேசினாலும் முஃமினின் உள்ளத்தில் அல்லாஹ் யாரைப் பாதுகாக்க நினைக்கிறானோ அவர்களை எப்படியும் பாதுகாப்பான் என்ற சிந்தனை தான் ஏற்பட வேண்டும். உயரமான மலைகளை விட மிக உயரத்தில் நூஹ் அலை அவர்களின் கப்பல் ஆறு மாதங்கள் ஓடிய போதும் அதிலுள்ள 80 பேரை அல்லாஹ் பாதுகாத்தான். காரணம் கப்பலின் கட்டுமானத் திறமை என்பதை விட அல்லாஹ்வின் வல்லமை என்பது தான் ஒரு முஃமினின் சிந்தனையாக இருக்க வேண்டும்.
பனிப்பாறைகள் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள்
இந்த பூமியில் 10 சதவீதம் அளவு பனிப்பாறைகள் உள்ளன. சுமார் 2 இலட்சம் பனிப்பாறைகள் உள்ளன. இவை குளிர் காலத்தில் தண்ணீரை தனக்குள்ளே தேக்கி வைத்து வெயில் காலத்தில் உருகுவதால் மக்களின் தண்ணீர் தேவை பூர்த்தியடைவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எப்படியிருந்தாலும் நன்மைக்குரியதே அழிவுக்குரியதாக மாற்றுவது அல்லாஹ்வின் வல்லமை..
இத்தகைய பனிப்பாறைகளால் நிறைய நன்மைகளும் உள்ளன. பனி மூடிய நிறைய மலைச் சிகரங்களுக்கு மத்தியில் அல்லாஹ்வின் அத்தாட்சிகள் நிறைய பொதிந்துள்ளன. யஃஜூஜ் மஃஜூஜ் இன்றும் இருக்கிறார்கள் என்றும் அவர்களைச் சுற்றி துல்கர்னைன் அலைஹிஸ்ஸலாம் அமைத்த தடுப்புச்சுவர் இன்றும் இருக்கிறது என்றும் நாம் குர்ஆன் மூலமாக அறிகிறோம். ஆனால் அந்த தடுப்புச்சுவர் எங்கே இருக்கிறது என்று அறியப்படவில்லை. பனி மூடிய ஆர்மீனியா மலைத் தொடர்களுக்கு அப்பால் மனிதர்களால் செல்ல முடியாத இடத்தில் அல்லாஹ் மறைத்து வைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்பல் 5000 வருடங்களைக் கடந்தும் ரஷ்யாவின் ஆர்மீனியாமலைத்தொடர்களில் பனிப்பாறைகளுக்கு நடுவே பாதுகாப்பாக உள்ளது என்பதை இன்று கண்டறியப்பட்டுள்ளது. காரணம் அதை அத்தாட்சியாக விட்டு வைப்போம் குர்ஆனில் ஸாஃப்பாத் சூராவில் 78 வது வசனத்தில் அல்லாஹ் கூறியுள்ளான்.
وتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ (78) سَلَامٌ عَلَى نُوحٍ فِي الْعَالَمِينَ (79) الصافات
முதல் உலக யுத்தத்தின் போது விளாடி மீர் என்ற ரஷ்ய விஞ்ஞானி ஆர்மீனியா மலைத் தொடரிலுள்ள ஜூதி என்ற மலை உச்சியில் பனிப்படலத்திற்கு அடியில் கப்பல் ஒன்று இருப்பதை கண்டு பிடித்துச் சொன்ன போது மாஸ்கோவிலிருந்து சில ஆராய்ச்சிக் குழுவினர் சென்று பனிப்பாறைகளை பிளந்து அந்த கப்பலை முழுவதுமாக ஆராய்ந்தனர். அதில் பல பெரிய அறைகளும் பல சிறிய அறைகளும் இருந்தன. ரஷ்ய புரட்சியின்காரணமாக அந்த ஆராய்ச்சி முடிவுகள் பிரபலமடையவில்லை. பிறகு துருக்கி நாட்டிலிருந்து ஒரு குழுவினர் ஒரு ஐரோப்பிய நிபுணருடன் சென்று ஆராய்ந்து அந்த கப்பல் கோபர் என்ற ஒரு வகை சவுக்கு மரத்தினால் செய்யப்ப்பட்டது என்றும் ஆயிரம் வருடங்களுக்கு மேல் அந்த மரம் தாக்குப்பிடிக்காது என்றாலும் பனிப்படலங்கள் அந்த கப்பலை சுமார் 5000 வருடங்களாக காத்து வருகிறது என்றும் கண்டு பிடித்துள்ளனர். சில வருடங்களுக்கு முன் “அராரத் மலைச் சிகரத்தில் கண்டு பிடிக்கப்ட்டது பைபிளில் கூறப்பட்ட நோவாவின் கப்பலா? என்ற தலைப்பில் தினத்தந்தியில் கட்டுரை வெளியானது குறிப்பிடத்தக்கது.
பூமியில் பனிப் பாறைகள் உள்ளதைப் போல விண்ணுலகில் மிகவும் பிரமாண்டமான பனி மலைகள் உள்ளன. அங்கிருந்தே பூமிக்கு மழை பெய்வதாக குர்ஆன் கூறுகிறது
وَيُنَزِّلُ مِنَ السَّمَاءِ مِنْ جِبَالٍ فِيهَا مِنْ بَرَدٍ فَيُصِيبُ بِهِ مَنْ يَشَاءُ وَيَصْرِفُهُ عَمَّنْ يَشَاءُ(43النور)قَوْل بعض الْمُفَسِّرِينَ مَعْنَاهُ أَنَّ فِي السَّمَاء جِبَال بَرَد يُنَزِّل اللَّه مِنْهَا الْبَرَد (تفسير ابن كثير)فإن قلتَ :ما معنى) مِن جِبَالٍ فِيهَا مِن بَرَدٍ؟ قلتُ:فيه معنيان أحدهما:أن يخلق الله في السماء جبال برد كما خلق في الأرض جبال حجر-والثاني:أن يريد الكثرة بذكر الجبال كما يقال:فلان يملك جبالاً من ذهب كما خلق في الأرض جبال حجر(الكشاف)
இயற்கை அழகு எங்கே உள்ளதோ அங்கு ஆபத்தும் இருக்கும்
அல்லாஹ் நாடினால் எவ்வளவு அழகான ஊரையும் அலங்கோலமாக ஆக்க முடியும்
لَقَدْ كَانَ لِسَبَأٍ فِي مَسْكَنِهِمْ آيَةٌ جَنَّتَانِ عَنْ يَمِينٍ وَشِمَالٍ كُلُوا مِنْ رِزْقِ رَبِّكُمْ وَاشْكُرُوا لَهُ بَلْدَةٌ طَيِّبَةٌ وَرَبٌّ غَفُورٌ (15) فَأَعْرَضُوا فَأَرْسَلْنَا عَلَيْهِمْ سَيْلَ الْعَرِمِ وَبَدَّلْنَاهُمْ بِجَنَّتَيْهِمْ جَنَّتَيْنِ ذَوَاتَيْ أُكُلٍ خَمْطٍ وَأَثْلٍ وَشَيْءٍ مِنْ سِدْرٍ قَلِيلٍ (16) ذَلِكَ جَزَيْنَاهُمْ بِمَا كَفَرُوا وَهَلْ نُجَازِي إِلَّا الْكَفُورَ (17) وَجَعَلْنَا بَيْنَهُمْ وَبَيْنَ الْقُرَى الَّتِي بَارَكْنَا فِيهَا قُرًى ظَاهِرَةً وَقَدَّرْنَا فِيهَا السَّيْرَ سِيرُوا فِيهَا لَيَالِيَ وَأَيَّامًا آمِنِينَ (18) فَقَالُوا رَبَّنَا بَاعِدْ بَيْنَ أَسْفَارِنَا وَظَلَمُوا أَنْفُسَهُمْ فَجَعَلْنَاهُمْ أَحَادِيثَ وَمَزَّقْنَاهُمْ كُلَّ مُمَزَّقٍ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِكُلِّ صَبَّارٍ شَكُورٍ (19) سبا
{وَجَعَلْنَا بَيْنَهُمْ وَبَيْنَ الْقُرَى الَّتِي بَارَكْنَا فِيهَا قُرىً ظَاهِرَةً } قال الحسن: يعني بين اليمن والشأم. والقرى التي بورك فيها: الشام والأردن1 وفلسطين. والبركة: قيل إنها كانت أربعة آلاف وسبعمائة قرية بورك فيها بالشجر والثمر والماء. فيقيلون3 في قرية ويروحون فيبيتون في قرية. وقيل: كان على كل ميل قرية بسوق، وهو سبب أمن الطريق. (تفسير القرطبي
விளக்கம்- இவர்கள் வாழ்ந்த யமனில் இருந்து சிரியா செல்லும் பாதை முழுவதும் ஒவ்வொரு மைல்களுக்கும் ஒரு ஊரை அல்லாஹ் அமைத்து அச்சமற்று பயணம் செய்யும் நிலையை உருவாக்கியும் அவர்கள் அதை மறுத்து எங்களுடைய பிரயாணத்தில் ஊர்கள் தூரமாக இருக்க வேண்டும் எனக் கூறினர். மற்றொரு அறிவிப்பில் அவர்களுக்குள் ஒரு தலைவன் இருந்தான். அவன் அதிகம் ஜோசியம் பார்ப்பவனாக இருந்தான். அவனுடைய ஒவ்வொரு ஜோசியத்தையும் அந்த மக்கள் நம்பினார்கள். பயணம் செய்யும் போது ஊர்கள் தூர தூரமாக இருக்க வேண்டும் என்பதும் அவன் கணித்த ஜோசியத்தின் அடிப்படையில் உள்ளது தான்.
இவர்களின் பல்வேறு தவறுகளால் செழிப்பாக இருந்த இவர்களின் ஊரை அல்லாஹ் முற்றிலும் மாற்றி விட்டான்.
أَنَّ الْمَرْأَة كَانَتْ تَمْشِي تَحْت الْأَشْجَار وَعَلَى رَأْسهَا مِكْتَل أَوْ زِنْبِيل وَهُوَ الَّذِي تُخْتَرَف فِيهِ الثِّمَار فَيَتَسَاقَط مِنْ الْأَشْجَار فِي ذَلِكَ مَا يَمْلَؤُهُ مِنْ غَيْر أَنْ يَحْتَاج إِلَى كُلْفَة وَلَا قِطَاف لِكَثْرَتِهِ وَنُضْجه وَاسْتِوَائِهِ وَكَانَ هَذَا السَّدّ بِمَأْرِبِ بَلْدَة بَيْنهَا وَبَيْن صَنْعَاء ثَلَاث مَرَاحِل وَيُعْرَف بِسَدِّ مَأْرِب وَذَكَرَ آخَرُونَ أَنَّهُ لَمْ يَكُنْ بِبَلَدِهِمْ شَيْء مِنْ الذُّبَاب وَلَا الْبَعُوض وَلَا الْبَرَاغِيث وَلَا شَيْء مِنْ الْهَوَامّ (تفسير ابن كثير
ஒரு பெண் காலியான கூடையை தலையில் சுமந்த வண்ணமாக அந்த ஊரின் ஒரு எல்லையில் இருந்து மறு எல்லை வரை நடந்து சென்றாலே போதும் எந்த ஒரு மரத்தில் இருந்தும் எதையும் பறிக்காமல் அவளின் கூடை வித விதமான பழங்களால் நிரம்பி விடும். அந்த அளவுக்கு ஊர் முழுக்க மரங்களும் அதில் கனிகளும் நிறைந்திருக்கும். அந்த ஊர் முழுக்க ஒரு கொசுவையோ ஒரு ஈயையோ பார்க்கவே முடியாது. அந்த அளவுக்கு அந்த ஊரின் தட்ப வெப்ப நிலையை அல்லாஹ் சீராக வைத்திருந்தான்.
وَذَكَر غَيْر وَاحِد مِنْهُمْ اِبْن عَبَّاس وَوَهْب بْن مُنَبِّه وَقَتَادَة وَالضَّحَّاك أَنَّ اللَّه عَزَّ وَجَلَّ لَمَّا أَرَادَ عُقُوبَتهمْ بِإِرْسَالِ الْعَرِم عَلَيْهِمْ بَعَثَ عَلَى السَّدّ دَابَّة مِنْ الْأَرْض يُقَال لَهَا الْجُرَذ نَقَبَتْهُ قَالَ وَهْب بْن مُنَبِّه وَقَدْ كَانُوا يَجِدُونَ فِي كُتُبهمْ أَنَّ سَبَب خَرَاب هَذَا السَّدّ هُوَ الْجُرَذ فَكَانُوا يَرْصُدُونَ عِنْده السَّنَانِير بُرْهَة مِنْ الزَّمَان فَلَمَّا جَاءَ الْقَدَر غَلَبَتْ الْفَأْر السَّنَانِير وَوَلَجَتْ إِلَى السَّدّ فَنَقَبَتْهُ فَانْهَارَ عَلَيْهِمْ (تفسير ابن كثير)
அல்லாஹ்வின் அருட்கொடைகளையும் மறுத்து குஃப்ர் என்ற பாவச் செயலையும் செய்த அந்த ஊர் மக்களை தண்டிக்க நாடிய போது சபா என்ற அணைக்கட்டை அழிக்க அல்லாஹ் எங்கிருந்தோ பல்லாயிரக்கணக்கான எலிகளை அல்லாஹ் சாட்டினான். அந்த எலிகளை ஒழிக்க அந்த மக்கள் எங்கிருந்தெல்லாமோ பூனைகளை வரவழைத்தார்கள். ஆனால் அல்லாஹ்வின் படைகளான எலிகளை பூனைகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை இறுதியில் அணைக்கட்டு உடைந்து ஊர் அழிந்தது.
படிப்பினை – நேபாளத்தில் நடைபெற்ற பேரழிவுகளைப் பார்க்கும்போது சபா வாசிகளின் நினைவு ஏற்படுகிறது.
அனைத்தையும் வாரிச் சுருட்டிக் கொண்டு போகும் அளவுக்கு வெள்ளம் மற்றும் காற்றின் வலிமை
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَمَّا خَلَقَ اللَّهُ الْأَرْضَ جَعَلَتْ تَمِيدُ فَخَلَقَ الْجِبَالَ فَعَادَ بِهَا عَلَيْهَا فَاسْتَقَرَّتْ فَعَجِبَتْ الْمَلَائِكَةُ مِنْ شِدَّةِ الْجِبَالِ قَالُوا يَا رَبِّ هَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنْ الْجِبَالِ قَالَ نَعَمْ الْحَدِيدُ قَالُوا يَا رَبِّ فَهَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنْ الْحَدِيدِ قَالَ نَعَمْ النَّارُ فَقَالُوا يَا رَبِّ فَهَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنْ النَّارِ قَالَ نَعَمْ الْمَاءُ قَالُوا يَا رَبِّ فَهَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنْ الْمَاءِ قَالَ نَعَمْ الرِّيحُ قَالُوا يَا رَبِّ فَهَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنْ الرِّيحِ قَالَ نَعَمْ ابْنُ آدَمَ تَصَدَّقَ بِصَدَقَةٍ بِيَمِينِهِ يُخْفِيهَا مِنْ شِمَالِهِ (ترمذي
அல்லாஹ் பூமியைப் படைத்த பொழுது அது அசைந்து நடுங்கியது. உறுதியாக நிலை நிறுத்தி அதன் மேல் அவன் மலைகளை வைத்தான். பிறகு வானவர்கள் இறைவனிடம், “இறைவா! உன் படைப்பில் இந்த மலைகளை விட வலிமையுள்ளது எது?” என்று கேட்டார்கள். அதற்கு மறுமொழியாக, “மலைகளை விட இரும்பு வலிமையுள்ளது. ஏனென்றால் அது அவற்றை உடைக்கிறது” என்றான். பின்னர் வானவர்கள், “இரும்பை விட வலிமையானது எதுவும் உண்டா?” என்று கேட்டார்கள். அதற்கு இறைவன், “ஆம், நெருப்பு இரும்பை விட பலமுள்ளது. ஏனெனில், அது இரும்பை உருக்கி விடுகின்றது” என்றான். மறுபடியும் வானவர்கள், “இறைவா, நெருப்பை விட வன்மை அதிகமுள்ளது வேறு ஏதும் உண்டா?” என்று வினவினார்கள். “ஆம் தண்ணீர் இருக்கிறது. ஏனென்றால், அது நெருப்பை அணைத்து விடுகிறது” என்றான் இறைவன். உடனே வானவர்கள், “தண்ணீரை விட வலிமையானது வேறு ஏதும் உள்ளதா?” என்றூ கேட்டார்கள். இறைவனும், “ஆம். காற்று இருக்கிறதே. அது தண்ணீரை வெற்றி கொண்டு அலையாடச் செய்து விடுகிறது” என்றான். அதன் பின்னர் வானவர்கள், “இறைவா, காற்றை விட வலிமையானது எதுவும் உன் படைப்பில் இருக்கின்றதா?” என்று கேட்டனர். கடைசியாக இறைவன், “ஆம், தானம் செய்யும் நல்ல மனிதன். இடது கையால் தானம் செய்து, அதை வலது கையிலிருந்து மறைப்பவன். அவன் எல்லாவற்றையும் வெற்றி கொள்வான்” என்றான்.
படிப்பினை- இவ்வளவு பெரிய பூமியில் மலைகளை நங்கூரமாக ஆக்கியவுடன் உடனே அசைவதை நிறுத்திய போது தான் மலைகளின் வலிமையை மலக்குகள் உணர்ந்தார்கள்
பின்வரும் பாவச்செயல்கள் பூமியில் அதிகரித்து விட்டால் பூமிக்கு பாதிப்புகள் அடிக்கடி ஏற்படும்
عَنْ أَبِى هُرَيْرَةَ رضي الله عنه قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا اتُّخِذَ الْفَىْءُ دُوَلاً1 وَالأَمَانَةُ مَغْنَمًا2 وَالزَّكَاةُ مَغْرَمًا3 وَتُعُلِّمَ لِغَيْرِ الدِّينِ وَأَطَاعَ الرَّجُلُ امْرَأَتَهُ وَعَقَّ أُمَّهُ وَأَدْنَى صَدِيقَهُ وَأَقْصَى أَبَاهُ وَظَهَرَتِ الأَصْوَاتُ فِى الْمَسَاجِدِ وَسَادَ الْقَبِيلَةَ فَاسِقُهُمْ وَكَانَ زَعِيمُ الْقَوْمِ أَرْذَلَهُمْ4 وَأُكْرِمَ الرَّجُلُ مَخَافَةَ شَرِّهِ وَظَهَرَتِ الْقَيْنَاتُ5 وَالْمَعَازِفُ6 وَشُرِبَتِ الْخُمُورُ وَلَعَنَ آخِرُ هَذِهِ الأُمَّةِ أَوَّلَهَا فَلْيَرْتَقِبُوا عِنْدَ ذَلِكَ رِيحًا حَمْرَاءَ وَزَلْزَلَةً وَخَسْفًا وَمَسْخًا وَقَذْفًا وَآيَاتٍ تَتَابَعُ كَنِظَامٍ بَالٍ7 قُطِعَ سِلْكُهُ فَتَتَابَعَ (ترمذي) وَتُعُلِّمَ لِغَيْرِ الدِّينِ أي يتعلمون العلم لطلب المال والجاه لا للدين(تحفة الاحوذي
கருத்து- 1.எப்போது பொதுச்சொத்துக்கள் தன் சொத்துக்களாக பாவிக்கப்படுமோ 2. எப்போது அமானிதம் துஷ்பிரயோகம் செய்யப்படுமோ 3.எப்போது ஜகாத் நிறைவேற்றப்படாத கடனாக ஆகி விடுமோ 4. எப்போது மார்க்கத்தை மார்க்கம் அல்லாத நோக்கத்திற்காக கற்றுக் கொள்ளப்படுமோ 5. எப்போது ஒரு ஆண் மனைவிக்குக் கட்டுப்படுபவனாக ஆகி விடுவானோ 6. எப்போது ஒரு ஆண் தன் தாயை வெறுத்து 7.நண்பனைப் பெரிதாகக் கருதி 8.தந்தையை ஒதுக்குவானோ 9. எப்போது மஸ்ஜித்களில் வீண் சப்தங்கள் பெருகி விடுமோ 10. எப்போது சமுதாயத்தில் கெட்டவன் தலைவனாக ஆக்கப் பட்டு 11. நல்லவர்கள் ஓரங்கட்டப் படுவார்களோ 12. எப்போது ஒருவனின் தீமைக்கு பயந்து மக்கள் அவனுக்கு மரியாதை செய்வார்களோ 13. எப்போது பாடகிகள் பெருகி, இசை அதிகரித்து விடுமோ 14. எப்போது மது அதிகரித்து விடுமோ 15. எப்போது இந்த உம்மத்தின் பிந்தியவர்கள் முந்தியவர்களைக் குறை கூற ஆரம்பித்து விடுவார்களோ அப்போது சிவப்பு நிற அனல் காற்று வீசுவதையும் பூகம்பம் அடிக்கடி ஏற்படுவதையும் பூமி பிளக்குதல் ஏற்படுவதையும் உருமாற்றம் ஏற்படுவதையும் எரி கற்கள் எறியப்படுதையும் எதிர் பாருங்கள். எந்த அளவுக்கெனில் பாசி மாலை அறுந்தால் தொடர்ச்சியாக பாசிகள் கீழே விழுவது போன்று தொடர்ச்சியாக இவைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.
மேற்படி தவறுகள் நிகழ்ந்தால் பூகம்பம் அடிக்கடி ஏற்படும் என்ற நபி ஸல் அவர்களின் சொல்லுக்கேற்ப, இன்றை. விஞ்ஞானிகள் கூறும்போது ஒரு வருடத்தில் சுமார் 10 இலட்சம் நில அதிர்வுகள் ஏற்படுகின்றன. உலகில் ஒரு வினாடி கூட நில அதிர்வு ஏற்படாத நமிடமே இல்லை. ஒவ்வொரு வினாடியும் உலகின் எங்கேனும் ஒரு பகுதியில் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும் என்கிறார்கள் عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُقْبَضَ الْعِلْمُ وَتَكْثُرَ الزَّلَازِلُ وَيَتَقَارَبَ الزَّمَانُ وَتَظْهَرَ الْفِتَنُ وَيَكْثُرَ الْهَرْجُ وَهُوَ الْقَتْلُ الْقَتْلُ حَتَّى يَكْثُرَ فِيكُمْ الْمَالُ فَيَفِيضَ (بخاري
கடைசி காலத்தில் முறையில்லாமல் பிறந்த குழந்தைகள் பெருகுவதாலும் அழிவுகள் அதிகரிக்கும்
عَنْ مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا تَزَالُ أُمَّتِي بِخَيْرٍ مَا لَمْ يَفْشُ فِيهِمْ وَلَدُ الزِّنَا فَإِذَا فَشَا فِيهِمْ وَلَدُ الزِّنَا فَيُوشِكُ أَنْ يَعُمَّهُمْ اللَّهُ عَزَّ وَجَلَّ بِعِقَابٍ(احمد)
கருத்து- முறையில்லாமல் பிறந்த குழந்தைகள் அதிகரிக்காமல் இருக்கும் வரை என்னுடைய உம்மத் நலவோடு வாழுவார்கள். எப்போது முறையற்ற குழந்தைகள் பெருகி விடுமோ அப்போது சோதனைகளை அல்லாஹ் பொதுவாக்கி விடுவான். அப்போது ஏற்படும் சோதனைகளால் நல்லவர்களும் பாதிக்கப்படுவார்கள். நூல் அஹ்மத் இக்காலத்தில் கலப்புத் திருமணங்கள் பெருகி விட்டன. முஸ்லிம் அல்லாதவரைத் திருமணம் செய்து அவருடன் குடும்பம் நடத்தும் எத்தனையோ முஸ்லிம் பெண்கள் உள்ளனர் அவர்களையும் இது எடுத்துக் கொள்ளும். திருமணம் செய்யாமலே குடும்பம் நடத்துபவர்களையும் இது எடுத்துக் கொள்ளும்.
தவறை உணர்ந்து பின்பு முறையாக திருமணம் செய்து கொண்டால் அது ஏற்றுக் கொள்ளப்படுமா?
عَنْ عَلْقَمَةَ بْنِ قَيْسٍ أَنَّ رَجُلاً أَتَى ابْنَ مَسْعُودٍ رَضِي الله عنها فَقَالَ:رَجُلٌ زَنَى بِامْرَأَةٍ ثُمَّ تَابَا وَأَصْلَحَا أَلَهُ أَنْ يَتَزَوَّجَهَا؟ فَتَلاَ هَذِهِ الآيَةَ (ثُمَّ إِنَّ رَبَّكَ لِلَّذِينَ عَمِلُوا السَّوْءَ بِجَهَالَةٍ ثُمَّ تَابُوا مِنْ بَعْدِ ذَلِكَ وَأَصْلَحُوا إِنَّ رَبَّكَ مِنْ بَعْدِهَا لَغَفُورٌ رَحِيمٌ)قَالَ فَرَدَّدَهَا عَلَيْهِ مِرَارًا حَتَّى ظَنَّ أَنَّهُ قَدْ رُخِّصَ فِيهَا(سنن الكبري)-عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِ فِيمَنْ فَجَرَ بِامْرَأَةٍ ثُمَّ تَزَوَّجَهَا قَالَ:أَوَّلُهُ سِفَاحٌ وَآخِرُهُ نِكَاحٌ لاَ بَأْسَ بِهِ-
மழை, இடி, மின்னல், புயல் ஆகியவை அல்லாஹ்வின் படைகளாகும்
قال الله تعالي فَكُلا أَخَذْنَا بِذَنْبِهِ فَمِنْهُمْ مَنْ أَرْسَلْنَا عَلَيْهِ حَاصِبًا وَمِنْهُمْ مَنْ أَخَذَتْهُ الصَّيْحَةُ وَمِنْهُمْ مَنْ خَسَفْنَا بِهِ الأرْضَ وَمِنْهُمْ مَنْ أَغْرَقْنَا وَمَا كَانَ اللَّهُ لِيَظْلِمَهُمْ وَلَكِنْ كَانُوا أَنْفُسَهُمْ يَظْلِمُونَ (40)سورة العنكبوت
இந்தப் புயலால் கடந்த காலங்களில் சில உம்மத்துகள் அழிக்கப்பட்டுள்ளனர். காற்றின் மூலமாக ஆத் கூட்டத்தார்கள் அழிக்கப்பட்டார்கள். மேலும் அதே காற்றின் மூலமாக அகழ்ப்போரின் போது மக்கா காஃபிர்களை அல்லாஹ் விரட்டியடித்தான்
عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ نُصِرْتُ بِالصَّبَا وَأُهْلِكَتْ عَادٌ بِالدَّبُورِ (بخاري) باب غَزْوَةُ الْخَنْدَقِ وَهْىَ الأَحْزَابُ -كتاب المغازي
விளக்கம்- சுமார் பத்தாயிரம் பேர் மக்காவிலுருந்து திரண்டு வருவதைக் கேள்விப்பட்ட நபி ஸல் அவர்கள் மதீனாவுக்குள் அவர்களை வர விடாமல் தடுக்க அகழ் தோண்டினார்கள். காஃபிர்களின் படை அகழிக்கு அந்தப்பக்கம் இருந்து கொண்டு கற்களையும் அம்புகளையும் வீசி தாக்க்குதல் நடத்தினார்கள் பதிலுக்கு முஸ்லிம்களும் அதேபோல் தாக்கினார்கள் இந்தச் சண்டை சுமார் 15 நாட்கள் நீடித்தது. அதன் பின்பு அல்லாஹ் எதிரிகளின் பகுதியில் மட்டும் சூறாவளி காற்றை அல்லாஹ் அனுப்பினான் அது அவர்களின் கூடாரங்கள் நாசமாக்கியது அவர்கள் மூட்டியிருந்த அடுப்புகளையெல்லாம் அணைத்து விட்டது இறுதியில் அவர்கள் வேறு வழியில்லாமல் அங்கிருந்து விரண்டோடினார்கள்.
தபூர் என்ற புயல் காற்றின் மூலம் ஆது கூட்டம் அழிக்கப்பட்ட விதம்
வானில் மேகங்கள் திரண்டபோது மழை வரப் போகிறது என ஆது கூட்டம் மகிழ்ந்தார்கள். ஆனால் கடும் புயலாக இருந்தது.
عن ابن عباس رضي الله عنه في قوله تعالى : فَلَمَّا رَأَوْهُ عَارِضًا مُسْتَقْبِلَ أَوْدِيَتِهِمْ(الاحقاف24 قالوا :غيم فيه مطر قال : بل هو ما استعجلتم به ريح فيها عذاب أليم وأول ما عرفوا أنه عذاب رأوا ما كان خارجا من رجالهم ومواشيهم يطير من السماء إلى الأرض مثل الريش دخلوا بيوتهم ، وأغلقوا أبوابهم فجاءت الريح ففتحت أبوابهم ومالت عليهم بالرمل ، فكانوا تحت الرمل سبع ليال وثمانية أيام حسوما لهم أنين ثم أمر الريح فكشفت عنهم الرمل وأمر بها فطرحتهم في البحر فهو قوله تعالى : فأصبحوا لا يرى إلا مساكنهم (رواه ابن ابي الدنيا)
ஆது கூட்டத்தினர் ஆகாயத்தில் பார்த்த போது ஏதோ மழை மேகம் என்று எண்ணி மகிழ்ந்தார்கள். ஆனால் கீழே இறங்க இறங்க அது கடும் புயலாக மாறியது. அந்தப் புயலின் வேகத்தால் மனிதர்களும், கால்நடைகளும் வானத்தில் காகிதம் போல பறப்பதைப் பார்த்து மற்றவர்கள் தங்களின் வீடுகளுக்குள் புகுந்து கதவுகளைத் தாழிட்டனர். ஆனால் அந்தப் புயல் வீசிய வேகத்தில் கதவுகள் தானாக திறந்தவுடன் வெளியே உள்ள மண்ணையெல்லாம் கொண்டு வந்து உள்ளே போட்டது. வீடு முழுவதும் மண்ணால் நிரம்ப அதற்கடியில் அவர்கள் சிக்கிய படி முனகியபடி உயிருக்குப் போராடினார்கள். ஆனால் அவர்களின் உயிரையும் அல்லாஹ் போக்கவில்லை. எட்டு நாட்கள் கடந்து மீண்டும் புயல் வீட்டுக்குள் இருந்த மண்ணையெல்லாம் வெளியே கொண்டு வந்து போட்டு அவர்களையும் வெளியே கொண்டு வந்தது. வானத்தில் காகிதம் போல பறந்தார்கள். கடைசியில் தங்களை பலசாலிகள் என பெருமையடித்த அவர்கள் அனைவரும் கடலில் தூக்கி வீசப்பட்டார்கள்.
நபிகளாரின் காலத்தில் ஒரே ஒரு கெட்ட மனிதனின் அழிவுக்காகவும் புயல் வீசியுள்ளது
عَنْ جَابِرٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدِمَ مِنْ سَفَرٍ فَلَمَّا كَانَ قُرْبَ الْمَدِينَةِ هَاجَتْ رِيحٌ شَدِيدَةٌ تَكَادُ أَنْ تَدْفِنَ الرَّاكِبَ فَزَعَمَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بُعِثَتْ هَذِهِ الرِّيحُ لِمَوْتِ مُنَافِقٍ فَلَمَّا قَدِمَ الْمَدِينَةَ فَإِذَا مُنَافِقٌ عَظِيمٌ مِنْ الْمُنَافِقِينَ قَدْ مَاتَ (مسلم) قيل هو رفاعة بن دريد والسفر غزوة تبوك
நபி ஸல் அவர்கள் ஒரு பிரயாணத்தில் இருந்து திரும்பும்போது கடும் புயல் வீசியது. வாகன ஓட்டியைக் கீழே தள்ளும் அளவுக்க்கு அதன் கடுமை இருந்தது. அப்போது நபி ஸல் அவர்கள் இந்தப் புயல் ஒரு முனாஃபிக்குடைய மவ்த்திற்காக அவனது இறப்பின் அடையாளமாக அனுப்புப் பட்டுள்ளது என்றார்கள். அவ்வாறே மதீனாவை அடைந்த போது ரிஃபாஆ என்ற முனாஃபிக் இறந்திருந்தான்.
ஒரே ஒரு மனிதருக்காக மழையும் பெய்துள்ளது
عَنْ أَبِي هُرَيْرَةَ رض عَن النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بَيْنَا رَجُلٌ بِفَلَاةٍ مِنْ الْأَرْضِ فَسَمِعَ صَوْتًا فِي سَحَابَةٍ اسْقِ حَدِيقَةَ فُلَانٍ فَتَنَحَّى ذَلِكَ السَّحَابُ فَأَفْرَغَ مَاءَهُ فِي حَرَّةٍ فَإِذَا شَرْجَةٌ مِنْ تِلْكَ الشِّرَاجِ قَدْ اسْتَوْعَبَتْ ذَلِكَ الْمَاءَ كُلَّهُ فَتَتَبَّعَ الْمَاءَ فَإِذَا رَجُلٌ قَائِمٌ فِي حَدِيقَتِهِ يُحَوِّلُ الْمَاءَ بِمِسْحَاتِهِ فَقَالَ لَهُ يَا عَبْدَ اللَّهِ مَا اسْمُكَ قَالَ فُلَانٌ لِلِاسْمِ الَّذِي سَمِعَ فِي السَّحَابَةِ فَقَالَ لَهُ يَا عَبْدَ اللَّهِ لِمَ تَسْأَلُنِي عَنْ اسْمِي فَقَالَ إِنِّي سَمِعْتُ صَوْتًا فِي السَّحَابِ الَّذِي هَذَا مَاؤُهُ يَقُولُ اسْقِ حَدِيقَةَ فُلَانٍ لِاسْمِكَ فَمَا تَصْنَعُ فِيهَا قَالَ أَمَّا إِذْ قُلْتَ هَذَا فَإِنِّي أَنْظُرُ إِلَى مَا يَخْرُجُ مِنْهَا فَأَتَصَدَّقُ بِثُلُثِهِ وَآكُلُ أَنَا وَعِيَالِي ثُلُثًا وَأَرُدُّ فِيهَا ثُلُثَهُ (بخاري) باب الصَّدَقَةِ فِى الْمَسَاكِينِ- كتاب الزهد
பேரழிவுகளால் நல்லவர்கள், சிறு குழந்தைகள் பாதிக்கப்பட்டாலும் மறுமையில் நற்கூலி அவர்களுக்கு உண்டு
عن عَائِشَة رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَغْزُو جَيْشٌ الْكَعْبَةَ فَإِذَا كَانُوا بِبَيْدَاءَ مِنْ الْأَرْضِ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ وَفِيهِمْ أَسْوَاقُهُمْ وَمَنْ لَيْسَ مِنْهُمْ قَالَ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ ثُمَّ يُبْعَثُونَ عَلَى نِيَّاتِهِمْ (بخاري
கருத்து-நபி ஸல் கூறினார்கள் கடைசி காலத்தில் கஃபாவை இடிப்பதற்காக ஒரு கும்பல் படை திரண்டு வரும். அவர்கள் ஒரு பாலைவனத்தை கடந்து செல்லும்போதுஅங்கு வசிப்பவர்களுடன் இணைந்து இந்தப் படையினரும் முதலாவது நபர் முதல் கடைசி நபர் வரை பூகம்பத்தால் விழுங்கப் படுவார்கள் என நபி ஸல் கூறியபோது ஆயிஷா ரழி அவர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே எதற்காக முதலாவது நபர் முதல் கடைசி நபர் வரை பூகம்பத்தால் விழுங்கப் படுவார்கள்?அங்கு கடை வைத்திருக்கும் நல்லவர்களும் இன்னும் தவறு செய்யாதவர்களும் சேர்ந்து ஏன் பூகம்பத்தால் பாதிக்கப்பட வேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு நபி ஸல் கூறினார்கள். முதலாவது நபர் முதல் கடைசி நபர்வரை அனைவரும் பூகம்பத்தால் விழுங்கப்படுவார்கள். அதாவது நல்லவர்களும் சேர்ந்து விழுங்கப்படுவர். பின்பு அவரவர் நிய்யத்துக்கு ஏற்ப மறுமையில் நல்ல நிலையில் எழுப்பப் படுவார்கள்.
பேரழிவுகள் ஏற்படும்போது அதிகமாக அல்லாஹ்விடம் தவ்பா செய்ய வேண்டும்
عن أبي الدرداء قال : كان رسول الله صلى الله عليه و سلم إذا كانت ليلة ريح شديدة كان مفزعه إلى المسجد حتى يسكن الريح وإذا حدث في السماء حدث من خسوف شمس أو قمر كان مفزعه إلى المصلى حتى ينجلي (كنز العمال
عن صفية ، قالت : « زلزلت المدينة على عهد عمر رضي الله عنه فقال : أيها الناس ، ما هذا ؟ ما أسرع ما أحدثتم ، لئن عادت لا أساكنكم فيها »
கருத்து- உமர் ரழி அவர்களின் காலத்தில் பூகம்பம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் மக்களிடம் மக்களே உங்களிடம் அது என்ன பேசுகிறது என்பதை உணர்ந்து செயல்படுங்கள். மீண்டும் ஒரு முறை பூமி அதிர்ந்தால் நான் உங்களை விட்டும் தனிமையில் இருந்து அமல்களில் ஈடுபட்டு விடுவேன்.
وروي عن عمر بن عبد لعزيز - رحمه الله - أنه كان يكتب إلى أمرائه عند وجود الزلزلة أن يتصدعوا. الزلزال.. عبرة وعظة
நபி ஸல் அவர்களின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு உடனே நின்ற நில நடுக்கம்
عَنْ قَتَادَةَ أَنَّ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ حَدَّثَهُمْ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَعِدَ أُحُدًا وَأَبُو بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ فَرَجَفَ بِهِمْ فَقَالَ اثْبُتْ أُحُدُ فَإِنَّمَا عَلَيْكَ نَبِيٌّ وَصِدِّيقٌ وَشَهِيدَانِ (بخاري
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக