08-05-2026 بسم الله الرحمن الرحيم
நபி வழித் திருமணம்
https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம்
கோடை விடுமுறையில் தொடர் திருமணங்கள் நடைபெறுவதை முன்னிட்டு எடுக்கப்பட்ட தலைப்பு
திருமணத்தை பகிரங்கப்படுத்துவதும்,அதை மஸ்ஜிதில் நடத்துவதும் சுன்னத்
عَنْ عَائِشَةَ رضي الله عنها قَالَت قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْلِنُوا هَذَا النِّكَاحَ وَاجْعَلُوهُ فِي الْمَسَاجِدِ وَاضْرِبُوا عَلَيْهِ بِالدُّفُوفِ (ترمذي
A :பகிரங்கப்படுத்துதல் : ஹராமான முறையில் ஒரு பெண்ணை அடைபவன் யாருக்கும் தெரிவிக்க மாட்டான். அதுபோன்று திருமணம் ஆகி விடக்கூடாது என்ற கருத்தில் மேற்படி ஹதீஸ் கூறப்பட்டுள்ளது. எனவே பகிரங்கப்படுத்துதல் என்ற பெயரில் தேவைக்கு மீறிய ஆடம்பரம் வெறுக்கப்பட்டதாகும். பத்திரிக்கை அச்சடிப்பதிலும் எளிமையை கையாள வேண்டும்.
B திருமணத்தை மஸ்ஜிதில் நடத்துவது : இதில் பல நன்மைகள் உண்டு 1.பகிரங்கப்படுத்துதல் 2.செலவை மிச்சப்படுத்துதல் 3.புனிதமான காரியத்தை புனிதமான இடத்தில் நடத்துதல் 4.பள்ளியில் அமரும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் நன்மை உண்டு. 5. பல மண்டபங்களில் ஆண்களும், பெண்களும் ஒன்றாக கலந்து விடுவார்கள். மஸ்ஜிதில் அது சாத்தியமில்லை.
عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ أَعْظَمَ النِّكَاحِ بَرَكَةً أَيْسَرُهُ مُؤْنَةً رواه احمد
எளிமையான திருமணத்தில் பரக்கத் உள்ளது என்ற நபிமொழிக்கு பல்வேறு விளக்கங்கள் கூறலாம். முதலில் பரக்கத் என்ற வார்த்தைக்கே பல்வேறு அர்த்தங்கள் உண்டு. பரக்கத் என்றால் நிம்மதி என்ற அர்த்தமும் உண்டு. பல இலட்சம் செலவு செய்து ஆடம்பரமாக நடைபெறும் திருமணங்களில் பரக்கத் இருப்பதில்லை. அதாவது அந்த தம்பதிகளிடம் ஒற்றுமை இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படுவதும் பரக்கத் இல்லாத நிலைக்கு உதாரணமாக கூறலாம்
திருமணத்தில் குத்பா ஓதுவதும், அதில் ஷஹாதத் கலிமாவின் முக்கியத்துவமும்.....
قال النبي صلي الله عليه وسلم في خطبة حجة الوداع فَاتَّقُوا اللَّهَ فِي النِّسَاءِ فَإِنَّكُمْ أَخَذْتُمُوهُنَّ بِأَمَانِ اللَّهِ وَاسْتَحْلَلْتُمْ فُرُوجَهُنَّ بِكَلِمَةِ اللَّهِ (رواه مسلم) عن الربيع بن أنس فإن "كلمة الله" هي التشهد في الخطبة.(تفسير ابن كثير) كااليدالجذماءகுஷ்டரோகியின் கை
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّ خُطْبَةٍ لَيْسَ فِيهَا تَشَهُّدٌ فَهِيَ كَالْيَدِ الْجَذْمَاءِ (ترمذي)
எந்த் குத்பாவில் தஷஹ்ஹுத் இல்லையோ அது குஷ்டரோகியின் கை போன்று குறையுள்ளதாகும்
قال ابن أبي حاتم :كَانَ فِيمَا أُعْطِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ أُسْرِيَ بِهِ، قَالَ: "جَعَلْتُ أُمَّتَكَ لا تَجُوزُ لَهُمُ الْخِطْبَةُ حَتَّى يَشْهَدُوا أَنَّكَ عَبْدِي وَرَسُولِي" (تفسير ابن كثير)
மிஃராஜ் பயணத்தில் நபி ஸல் அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியவைகளில் பின்வரும் விஷயமும் அடங்கும். நபியே உங்களுடைய உம்மத்தில் நடைபெறும் திருமணப்பேச்சுக்கள் ஷஹாதத் கலிமா(வை உள்ளடக்கிய குத்பா) இல்லாமல் ஆகி விடக்கூடாது
عَنْ عَبْدِ اللَّهِ قَالَ عَلَّمَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ التَّشَهُّدَ فِي الصَّلَاةِ وَالتَّشَهُّدَ فِي الْحَاجَةِ قَالَ التَّشَهُّدُ فِي الْحَاجَةِ أَنْ الْحَمْدُ لِلَّهِ نَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ اللَّهُ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ وَيَقْرَأُ ثَلَاثَ آيَاتٍ (رواه النسائ باب مَا يُسْتَحَبُّ مِنْ الْكَلَامِ عِنْدَ النِّكَاحِ)قَالَ عَبْثَرٌ فَفَسَّرَهُ لَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ{ اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ }{ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا{ اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا }رواه الترمذي
மஹர் கொடுப்பதின் அவசியம்
قال الله تعالي وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً (4) سورة النساء
عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ أَنَّ امْرَأَةً جَاءَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ جِئْتُ لِأَهَبَ لَكَ نَفْسِي فَنَظَرَ إِلَيْهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَعَّدَ النَّظَرَ إِلَيْهَا وَصَوَّبَهُ ثُمَّ طَأْطَأَ رَأْسَهُ فَلَمَّا رَأَتْ الْمَرْأَةُ أَنَّهُ لَمْ يَقْضِ فِيهَا شَيْئًا جَلَسَتْ فَقَامَ رَجُلٌ مِنْ أَصْحَابِهِ فَقَالَ أَيْ رَسُولَ اللَّهِ إِنْ لَمْ تَكُنْ لَكَ بِهَا حَاجَةٌ فَزَوِّجْنِيهَا فَقَالَ هَلْ عِنْدَكَ مِنْ شَيْءٍ قَالَ لَا وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ قَالَ اذْهَبْ إِلَى أَهْلِكَ فَانْظُرْ هَلْ تَجِدُ شَيْئًا فَذَهَبَ ثُمَّ رَجَعَ فَقَالَ لَا وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ مَا وَجَدْتُ شَيْئًا قَالَ انْظُرْ وَلَوْ خَاتَمًا مِنْ حَدِيدٍ فَذَهَبَ ثُمَّ رَجَعَ فَقَالَ لَا وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ وَلَا خَاتَمًا مِنْ حَدِيدٍ وَلَكِنْ هَذَا إِزَارِي (قَالَ سَهْلٌ مَا لَهُ رِدَاءٌ) فَلَهَا نِصْفُهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا تَصْنَعُ بِإِزَارِكَ إِنْ لَبِسْتَهُ لَمْ يَكُنْ عَلَيْهَا مِنْهُ شَيْءٌ وَإِنْ لَبِسَتْهُ لَمْ يَكُنْ عَلَيْكَ مِنْهُ شَيْءٌ فَجَلَسَ الرَّجُلُ حَتَّى طَالَ مَجْلِسُهُ ثُمَّ قَامَ فَرَآهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُوَلِّيًا فَأَمَرَ بِهِ فَدُعِيَ فَلَمَّا جَاءَ قَالَ مَاذَا مَعَكَ مِنْ الْقُرْآنِ قَالَ مَعِي سُورَةُ كَذَا وَسُورَةُ كَذَا وَسُورَةُ كَذَا عَدَّدَهَا قَالَ أَتَقْرَؤُهُنَّ عَنْ ظَهْرِ قَلْبِكَ قَالَ نَعَمْ قَالَ اذْهَبْ فَقَدْ مَلَّكْتُكَهَا بِمَا مَعَكَ مِنْ الْقُرْآنِ رواه البخاري5149 عن ظهر قلبكமனப் பாடமாக
மேற்படி ஹதீஸின் அடிப்படையில் குர்ஆனின் சூராக்களைக் கற்றுத் தருவதை மஹராக வைத்து திருமணம் நடத்துவது நபி ஸல் அவர்களுக்குப் பின் வேறு யாருக்கும் அனுமதி இல்லை
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம்முடைய மனைவிமார்களுக்கு கொடுத்த மஹர் 500 திர்ஹங்கள்
عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّهُ قَالَ سَأَلْتُ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمْ كَانَ صَدَاقُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ كَانَ صَدَاقُهُ لِأَزْوَاجِهِ ثِنْتَيْ عَشْرَةَ أُوقِيَّةً وَنَشًّا قَالَتْ أَتَدْرِي مَا النَّشُّ قَالَ قُلْتُ لَا قَالَتْ نِصْفُ أُوقِيَّةٍ فَتِلْكَ خَمْسُ مِائَةِ دِرْهَمٍ فَهَذَا صَدَاقُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَزْوَاجِهِ رواه مسلم 500 திர்ஹங்கள் என்பது 1 கிலோ, 531 கிராம் வெள்ளிக்குச் சமம்
மஹர் அளவுக்கு மீறி வாங்கப்பட்ட காலத்தில் அதைக் கட்டுப்படுத்துவது பற்றி உமர் ரழி மிம்பரில் ஏறிப் பேசிய போது அதை எதிர்த்த பெண்
عن مسروق، قال: ركب عمر بن الخطاب منبر رسول الله ثم قال: أيها الناس، ما إكثاركم في صُدُق النساء وقد كان رسول الله صلى الله عليه وسلم وأصحابه وإنماالصدقات فيما بينهم أربعمائة درهم فما دون ذلك. ولو كان الإكثار في ذلك تقوى عند الله أو كرامة لم تسبقوهم إليها. فَلا أعرفَنَّ ما زاد رجل في صداق امرأة على أربعمائة درهم قال : ثم نزل فاعترضته امرأة من قريش فقالت: يا أمير المؤمنين، نَهَيْتَ الناس أن يزيدوا النساء صداقهم على أربعمائة درهم؟ قال: نعم. فقالت: أما سمعت ما أنزل الله في القرآن؟ قال: وأي ذلك؟ فقالت: أما سمعت الله يقول: وَآتَيْتُمْ إِحْدَاهُنَّ قِنْطَارًا فَلا تَأْخُذُوا مِنْهُ شَيْئًا أَتَأْخُذُونَهُ بُهْتَانًا وَإِثْمًا مُبِينًا قال: فقال:اللهم غَفْرًا، كُلُّ الناس أفقه من عمر ثم رجع فركب المنبر فقال: إني كنت نهيتكم أن تزيدوا النساء في صداقهن على أربعمائة درهم، فمن شاء أن يعطي من ماله ما أحب (تفسير ابن كثير)
வசதி உள்ளவர் எவ்வளவு மஹர் கொடுத்தாலும் கூடும்.ஆனால் கொடுத்த மஹரை நிர்பந்தித்து கேட்கக் கூடாது
وآتَيْتُمْ إِحْدَاهُنَّ قِنْطَارًا فَلا تَأْخُذُوا مِنْهُ شَيْئًا [النساء: 20]
கொடுத்த மஹரையே கட்டாயப் படுத்திக் கேட்கக் கூடாது என்றால் மாப்பிள்ளை வீட்டார் வரதட்சனை கேட்பது மாபெரும் பாவம்
முறையில்லாமல் கொடுப்பவரின் மன திருப்தி இல்லாம்ல் வாங்கும் பணத்தில் பரக்கத் இருப்பதில்லை
عَنْ حَكِيمَ بْنَ حِزَامٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَعْطَانِي ثُمَّ سَأَلْتُهُ فَأَعْطَانِي ثُمَّ قَالَ لِي يَا حَكِيمُ إِنَّ هَذَا الْمَالَ خَضِرٌ حُلْوٌ فَمَنْ أَخَذَهُ بِسَخَاوَةِ نَفْسٍ بُورِكَ لَهُ فِيهِ وَمَنْ أَخَذَهُ بِإِشْرَافِ نَفْسٍ لَمْ يُبَارَكْ لَهُ فِيهِ وَكَانَ كَالَّذِي يَأْكُلُ وَلَا يَشْبَعُ وَالْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنْ الْيَدِ السُّفْلَى (وفي رواية فَالْيَدُ الْعُلْيَا هِيَ الْمُنْفِقَةُ وَالسُّفْلَى هِيَ السَّائِلَةُ) قَالَ حَكِيمٌ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ لَا أَرْزَأُ أَحَدًا بَعْدَكَ شَيْئًا حَتَّى أُفَارِقَ الدُّنْيَا فَكَانَ أَبُو بَكْرٍ يَدْعُو حَكِيمًا لِيُعْطِيَهُ الْعَطَاءَ فَيَأْبَى أَنْ يَقْبَلَ مِنْهُ شَيْئًا ثُمَّ إِنَّ عُمَرَ دَعَاهُ لِيُعْطِيَهُ فَيَأْبَى أَنْ يَقْبَلَهُ فَقَالَ يَا مَعْشَرَ الْمُسْلِمِينَ إِنِّي أَعْرِضُ عَلَيْهِ حَقَّهُ الَّذِي قَسَمَ اللَّهُ لَهُ مِنْ هَذَا الْفَيْءِ فَيَأْبَى أَنْ يَأْخُذَهُ فَلَمْ يَرْزَأْ حَكِيمٌ أَحَدًا مِنْ النَّاسِ بَعْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى تُوُفِّيَ رَحِمَهُ اللَّهُ رواه البخاري2750
قال الله تعالى:الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاءِ بِمَا فَضَّلَ اللَّهُ بَعْضَهُمْ عَلَى بَعْضٍ وَبِمَا أَنْفَقُوا مِنْ أَمْوَالِهِمْ [النساء:34]
வரதட்சனையால் சீர்குலையும் குடும்ப உறவுகள், வரதட்சனையால் பெருகிப்போன பெண் சிசுக் கொலைகள்
எத்தனையோ பெற்றோர்கள் வரதட்சனைக்கு பயந்து தன் மகளுக்கு முறையாக திருமணம் செய்து வைக்காமல் அவளே ஒருவரை விரும்பி அவருடன் செல்ல அனுமதித்து விடுகின்றனர். எத்தனையோ குடும்பங்களில் சிறு பிரச்சனை ஏற்படும் போதெல்லாம் கணவன் வாங்கிய வரதட்சனையை சுட்டிக்காட்டி, மனைவி அவனை சிறுமைப்படுத்தி விடுகின்றாள். பாலினம் அறியும் நவீன கருவிகள் மூலம் குறைந்த செலவில் பெண் சிசுவைக் கொன்று விடுகிறார்கள். வரதட்சனையோடு ஒப்பிடும்போது இது பெரும் செலவே இல்லை என்று சாதாரணமாக கூறுகின்றனர்
வரதட்சனையால் பெருகிப்போன தங்க வினியோகம், தங்கம் எடுப்பதற்காக அழிக்கப்படும் இயற்கை வளங்கள்
பசுமைத்தாயகம் என்ற அமைப்பினர் “தங்கம் வாங்குவது பாவச்செயல்” என பிரச்சாரம் செய்கின்றனர். அவர்களின் பேட்டி : இந்திய அளவில் அதிக தங்கம் விற்பனையாகும் பகுதி தென்னிந்தியாதான். அட்சய திருதியை நாளில் மட்டும் 70,000 கிலோ தங்கம் விற்பனையாகி உள்ளது. ஏற்கெனவே இந்திய மக்களிடம் உள்ள தங்கத்தின் அளவு சுமார் 14 ஆயிரம் டன் ஆகும். தங்கத்தின் மீதான மோகம் தான் வரதட்சனைக் கொடுமை, பெண் சிசுக் கொலை ஆகியவற்றுக்குக் காரணம்.
மேலும் ஒரு மோதிரத்திற்காக 20 டன் மண் வெட்டப்படுகிறது. மலைகளும் காடுகளும் அழிகின்றன. மண்ணிலிருந்து தங்கத்தை பிரிக்கும் சயனைடு நஞ்சால் நீர் மாசுபடுகிறது. எனவே அவசியமின்றி தங்கம் வாங்காதீர் – தினகரன் 21-4-2007
மாப்பிள்ளைக்கு மருதாணி இடுவது கூடாது மருதாணி என்பது பெண்களுக்கு மட்டும் உரித்தானது
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِمُخَنَّثٍ قَدْ خَضَّبَ يَدَيْهِ وَرِجْلَيْهِ بِالْحِنَّاءِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا بَالُ هَذَا فَقِيلَ يَا رَسُولَ اللَّهِ يَتَشَبَّهُ بِالنِّسَاءِ فَأَمَرَ بِهِ فَنُفِيَ إِلَى النَّقِيعِ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ أَلَا نَقْتُلُهُ فَقَالَ إِنِّي نُهِيتُ عَنْ قَتْلِ الْمُصَلِّينَ قَالَ أَبُو أُسَامَةَ وَالنَّقِيعُ نَاحِيَةٌ عَنْ الْمَدِينَةِ وَلَيْسَ بِالْبَقِيعِ رواه ابوداود
பெண் போன்று வேடமிட்ட ஒருவரை நபி ஸல் அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. அவருடைய கைகளிலும் கால்களிலும் மருதாணி தடவியிருந்தார். அதைக் கண்டு வெறுத்த நபி ஸல் யார் இந்த ஆள்... என்று கேட்க, அல்லாஹ்வின் தூதரே இவர் தன்னை பெண் போன்று ஆக்கிக் கொண்டார் என்றார்கள். அப்போது நபி ஸல் அவர்கள் அவருக்கு தண்டைனை கொடுப்பதற்காக நகீஃ என்ற இடத்திற்கு அழைத்துச் செல்லும்போது அல்லாஹ்வின் தூதரே இவரைக் கொன்று விட வேண்டாமா என்று நபியவர்களிடம் கேட்க, வேண்டாம் நிச்சயமாக நான் தொழுகையாளிகளை தண்டிப்பதை விட்டும் தடுக்கப்பட்டுள்ளேன் என்று கூறினார்கள்
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طِيبُ الرِّجَالِ مَا ظَهَرَ رِيحُهُ وَخَفِيَ لَوْنُهُ وَطِيبُ النِّسَاءِ مَا ظَهَرَ لَوْنُهُ وَخَفِيَ رِيحُهُ (ترمذي)
வெளியே செல்லும்போது ஆண்கள் தடவும் திரவியங்களில் வாசனை இருக்கலாம் ஆனால் நிறம் இருப்பது கூடாது அதற்கு நேர் மாற்றமாக ஒரு பெண் வெளியே செல்லும்போது அவள் தடவும் திரவியங்களில் நிறம் இருக்கலாம் ஆனால் வாசனை இருப்பது கூடாது
மணமகனுக்கு தங்க மோதிரம் அணிவிப்பது கூடுமா ?
عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ حُرِّمَ لِبَاسُ الْحَرِيرِ وَالذَّهَبِ عَلَى ذُكُورِ أُمَّتِي وَأُحِلَّ لِإِنَاثِهِمْ رواه الترمذي
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ أَحَبَّ أَنْ يُحَلِّقَ حَبِيبَهُ حَلْقَةً مِنْ نَارٍ فَلْيُحَلِّقْهُ حَلْقَةً مِنْ ذَهَبٍ وَمَنْ أَحَبَّ أَنْ يُطَوِّقَ حَبِيبَهُ طَوْقًا مِنْ نَارٍ فَلْيُطَوِّقْهُ طَوْقًا مِنْ ذَهَبٍ وَمَنْ أَحَبَّ أَنْ يُسَوِّرَ حَبِيبَهُ سِوَارًا مِنْ نَارٍ فَلْيُسَوِّرْهُ سِوَارًا مِنْ ذَهَبٍ وَلَكِنْ عَلَيْكُمْ بِالْفِضَّةِ فَالْعَبُوا بِهَا ابوداود
எவர் தனக்குப் பிரியமானவருக்கு நரகத்தின் காப்பை அணிவிக்க விரும்புவாரோ அவர் தங்க மோதிரம் அணிவிக்கட்டும்
எவர் தனக்குப் பிரியமானவருக்கு நரகத்தின் மாலை அணிவிக்க விரும்புவாரோ அவர் தங்க மாலை அணிவிக்கட்டும்
எவர் தனக்குப் பிரியமானவருக்கு நரகத்தின் வளையலை அணிவிக்க விரும்புவாரோ அவர் தங்க வளையல் அணிவிக்கட்டும்
திருமணத்தில் அனாச்சாரங்கள், வீண் விரயங்கள்
திருமணம் என்ற ஒரு சுன்னத்தை நிறைவேற்ற 99 அனாச்சாரங்கள் கலக்கப் படுகின்றன. திருமணம் என்பது நமது மார்க்கத்தில் மிகவும் இலகுவாக்கப்பட்ட ஒரு விஷயமாகும். அதை நமது மக்கள் மிகவும் கடினமானதாக ஆக்கி விட்டார்கள். 1.மணமகன் 2.மணப்பெண் 3.இரு சாட்சிகள் 4.மஹர் தொகை 5. ஈஜாப், கபூல் உடைய வாசகம். அதாவது மணமகளின் பொறுப்புதாரி நான் இன்ன பெண்ணை உனக்கு திருமணம் செய்து தந்தேன் என்று கூறுவதும் பதிலுக்கு மாப்பிள்ளை நான் அவளை திருமணம் செய்து கொண்டேன் என மொழிவதுமாகும். வேறு எந்த விஷயங்கள் இல்லாமலும் நிகாஹ் நடந்து விடலாம். ஆனால் இந்த ஐந்து விஷயங்கள் இல்லாமல் நிகாஹ் என்பது நடைபெறாது. குத்பா ஓதுவதும் துஆ ஓதுவதும் சுன்னத்தான செயல்களாகும். விருந்து தருவதும் நல்ல விஷயம் தான். ஆனால் வலீமா விருந்துக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
விருந்துகளில் முதன்மையானது வலீமா விருந்து. அதைக் கூட ஆடம்பரம் இல்லாமல் வசதிக்கு ஏற்ப செய்ய வேண்டும்
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى عَلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ أَثَرَ صُفْرَةٍ فَقَالَ مَا هَذَا قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي تَزَوَّجْتُ امْرَأَةً عَلَى وَزْنِ نَوَاةٍ مِنْ ذَهَبٍ قَالَ فَبَارَكَ اللَّهُ لَكَ أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ رواه البخاري5155
عَنْ أَنَسٍ قَالَ مَا أَوْلَمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى شَيْءٍ مِنْ نِسَائِهِ مَا أَوْلَمَ عَلَى زَيْنَبَ أَوْلَمَ بِشَاةٍ رواه البخاري5171
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ أَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ خَيْبَرَ وَالْمَدِينَةِ ثَلَاثًا يُبْنَى عَلَيْهِ بِصَفِيَّةَ بِنْتِ حُيَيٍّ فَدَعَوْتُ الْمُسْلِمِينَ إِلَى وَلِيمَتِهِ فَمَا كَانَ فِيهَا مِنْ خُبْزٍ وَلَا لَحْمٍ أُمِرَ بِالْأَنْطَاعِ فَأَلْقَى فِيهَا مِنْ التَّمْرِ وَالْأَقِطِ وَالسَّمْنِ فَكَانَتْ وَلِيمَتَهُ رواه البخاري5085 اقطபாலாடைக்கட்டி
عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا دُعِيَ أَحَدُكُمْ إِلَى الْوَلِيمَةِ فَلْيُجِبْ رواه مسلم عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ كَانَ يَقُولُ شَرُّ الطَّعَامِ طَعَامُ الْوَلِيمَةِ يُدْعَى لَهَا الْأَغْنِيَاءُ وَيُتْرَكُ الْفُقَرَاءُ وَمَنْ تَرَكَ الدَّعْوَةَ فَقَدْ عَصَى اللَّهَ وَرَسُولَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رواه البخاري5177
இன்றைய திருமண விருந்துகளில் பஃபே சிஷ்டம் என்ற மேற்கத்திய கலாச்சாரம் வேகமாக பரவி வருவதைப் பற்றி......
عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَتَتَّبِعُنَّ سَنَنَ مَنْ قَبْلَكُمْ شِبْرًا بِشِبْرٍ وَذِرَاعًا بِذِرَاعٍ حَتَّى لَوْ سَلَكُوا جُحْرَ ضَبٍّ لَسَلَكْتُمُوهُ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ الْيَهُودَ وَالنَّصَارَى قَالَ فَمَنْ ؟ رواه البخاري3456 جحر ضبஉடும்பின் பொந்தில் நுழைந்தாலும்
[திருமண மண்டபங்களில் வசதி படைத்தவர்களும் கூட தட்டை கையில் ஏந்திய படி வரிசையில் நின்று தேவையானதை வாங்கி வந்து அதை நின்று கொண்டே சாப்பிடும் அளவுக்கு மேற்கத்திய கலாச்சாரம் நம்மிடம் ஊடுருவி உள்ளது]
آداب الضيافة في الاسلام - قال الله تعالي هَلْ أَتَاكَ حَدِيثُ ضَيْفِ إِبْرَاهِيمَ الْمُكْرَمِينَ (24) إِذْ دَخَلُوا عَلَيْهِ فَقَالُوا سَلَامًا قَالَ سَلَامٌ قَوْمٌ مُنْكَرُونَ (25) فَرَاغَ إِلَى أَهْلِهِ فَجَاءَ بِعِجْلٍ سَمِينٍ (26) فَقَرَّبَهُ إِلَيْهِمْ قَالَ أَلَا تَأْكُلُونَ (27) سورة الذاريات وهذه الآية انتظمت آداب الضيافة؛ فإنه جاء بطعامه من حيث لا يشعرون بسرعة، ولم يمتن عليهم أولا فقال: "نأتيكم بطعام؟" بل جاء به بسرعة وخفاء، وأتى بأفضل ما وجد من ماله، وهو عجل فتي سمين مشوي، فقربه إليهم، لم يضعه، وقال: اقتربوا، بل وضعه بين أيديهم، ولم يأمرهم أمرا يشق على سامعه بصيغة الجزم، بل قال: { أَلا تَأْكُلُونَ } على سبيل العرض والتلطف، كما يقول القائل اليوم: إن رأيت أن تتفضل وتحسن وتتصدق،فافعل ابن كثير)
நிச்சயிக்கப்பட்ட, அல்லது நிச்சயிக்கப்படவிருக்கும் பெண்ணை மணமகன் பார்ப்பது கூடுமா?
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خَطَبَ أَحَدُكُمْ الْمَرْأَةَ فَإِنْ اسْتَطَاعَ أَنْ يَنْظُرَ إِلَى مَا يَدْعُوهُ إِلَى نِكَاحِهَا فَلْيَفْعَلْ قَالَ فَخَطَبْتُ جَارِيَةً فَكُنْتُ أَتَخَبَّأُ لَهَا حَتَّى رَأَيْتُ مِنْهَا مَا دَعَانِي إِلَى نِكَاحِهَا وَتَزَوُّجِهَا فَتَزَوَّجْتُهَا رواه ابوداود
ஒருவர் ஒரு பெண்ணை பெண் பேசினால் அவளைத் திருமணம் செய்வதின் பால் தூண்டும் வகையில் ஒருமுறை அவளைப் பார்த்துக் கொள்ளட்டும் இதை அறிவிக்கும் ஜாபிர் ரழி கூறினார்கள் நான் ஒரு பெண்ணை பெண் பேசியிருந்தேன். அவரை நான் மறைந்திருந்து பார்த்தேன். அது அவரைத் திருமணம் செய்யத் தூண்டும் வகையில் அமைந்து அவரைத் தான் நான் திருமணம் செய்து கொண்டேன்
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ كُنْتُ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَاهُ رَجُلٌ فَأَخْبَرَهُ أَنَّهُ تَزَوَّجَ امْرَأَةً مِنْ الْأَنْصَارِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَظَرْتَ إِلَيْهَا قَالَ لَا قَالَ فَاذْهَبْ فَانْظُرْ إِلَيْهَا فَإِنَّ فِي أَعْيُنِ الْأَنْصَارِ شَيْئًا رواه مسلم (بَاب نَدْبِ النَّظَرِ إِلَى وَجْهِ الْمَرْأَةِ وَكَفَّيْهَا لِمَنْ يُرِيدُ تَزَوُّجَهَا)மணப்பெண்ணை
பார்க்காமலேயே திருமணம் செய்ததால் விவாகரத்து வரை சென்று விட்ட வழக்குகள் நிறைய உள்ளன.
عَنْ مُحَمَّدِ بْنِ مَسْلَمَةَ قَالَ خَطَبْتُ امْرَأَةً فَجَعَلْتُ أَتَخَبَّأُ لَهَا حَتَّى نَظَرْتُ إِلَيْهَا فِي نَخْلٍ لَهَا فَقِيلَ لَهُ أَتَفْعَلُ هَذَا وَأَنْتَ صَاحِبُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِذَا أَلْقَى اللَّهُ فِي قَلْبِ امْرِئٍ خِطْبَةَ امْرَأَةٍ فَلَا بَأْسَ أَنْ يَنْظُرَ إِلَيْهَا ابن ماجة
முஹம்மது இப்னு மஸ்லமா ரழி ஒரு பெண்ணை பெண் பேசியிருந்தார்கள். அந்தப் பெண்ணை அவர் மறைந்திருந்து பார்த்த போது நபித்தோழராக இருந்து கொண்டு இப்படிச் செய்யலாமா என்று கேட்கப்பட்டது அதற்கு அவர் நான் நபி ஸல் கூற கேட்டுள்ளேன். ஒரு பெண்ணை பெண் பேச வேண்டும் என்ற எண்ணத்தை அல்லாஹ் உங்களின் மனதில் போட்டால் அவளை ஒருமுறை பார்ப்பது தவறில்லை
عَنْ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَالَ أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرْتُ لَهُ امْرَأَةً أَخْطُبُهَا فَقَالَ اذْهَبْ فَانْظُرْ إِلَيْهَا فَإِنَّهُ أَجْدَرُ أَنْ يُؤْدَمَ بَيْنَكُمَا فَأَتَيْتُ امْرَأَةً مِنْ الْأَنْصَارِ فَخَطَبْتُهَا إِلَى أَبَوَيْهَا وَأَخْبَرْتُهُمَا بِقَوْلِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَأَنَّهُمَا كَرِهَا ذَلِكَ قَالَ فَسَمِعَتْ ذَلِكَ الْمَرْأَةُ وَهِيَ فِي خِدْرِهَا فَقَالَتْ إِنْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَكَ أَنْ تَنْظُرَ فَانْظُرْ وَإِلَّا فَأَنْشُدُكَ كَأَنَّهَا أَعْظَمَتْ ذَلِكَ قَالَ فَنَظَرْتُ إِلَيْهَا فَتَزَوَّجْتُهَا فَذَكَرَ مِنْ مُوَافَقَتِهَا رواه ابن ماجة
ஆயிஷா நாயகியை திருமணத்திற்கு முன்பே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பார்த்தார்களா?
عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُرِيتُكِ فِي الْمَنَامِ مَرَّتَيْنِ إِذَا رَجُلٌ يَحْمِلُكِ فِي سَرَقَةِ حَرِيرٍ فَيَقُولُ هَذِهِ امْرَأَتُكَ فَأَكْشِفُهَا فَإِذَا هِيَ أَنْتِ فَأَقُولُ إِنْ يَكُنْ هَذَا مِنْ عِنْدِ اللَّهِ يُمْضِهِ رواه البخاري5078
ஆயிஷாவே உன்னை திருமணம் செய்யும் முன்பு கனவில் உன்னை எனக்கு காட்டப்பட்டது. ஒரு வானவர் பெரிய பட்டுத்துணியில் உன்னைச் சுமந்தவாறு வந்து இவர் தான் உங்களுடைய வருங்கால மனைவி என்று கூற, அதற்கு நான் இது அல்லாஹ்வின் புறத்திலிருந்து உள்ளதாக இருந்தால் அது நடக்கட்டும் என்றேன்.
முறைப்படி பெண் கேட்பதும், இன்னொருவருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணின் விஷயத்தில் குறுக்கிடாமல் இருப்பதும்
عَنْ عُرْوَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطَبَ عَائِشَةَ إِلَى أَبِي بَكْرٍ فَقَالَ لَهُ أَبُو بَكْرٍ إِنَّمَا أَنَا أَخُوكَ فَقَالَ أَنْتَ أَخِي فِي دِينِ اللَّهِ وَكِتَابِهِ وَهِيَ لِي حَلَالٌ رواه البخاري عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَخْطُبْ الرَّجُلُ عَلَى خِطْبَةِ أَخِيهِ رواه ابن ماجة
عَن بْن عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يُحَدِّثُ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ حِينَ تَأَيَّمَتْ حَفْصَةُ بِنْتُ عُمَرَ مِنْ خُنَيْسِ بْنِ حُذَافَةَ السَّهْمِيِّ وَكَانَ (أي زوجها) مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتُوُفِّيَ بِالْمَدِينَةِ فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ أَتَيْتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ فَعَرَضْتُ عَلَيْهِ حَفْصَةَ فَقَالَ سَأَنْظُرُ فِي أَمْرِي فَلَبِثْتُ لَيَالِيَ ثُمَّ لَقِيَنِي فَقَالَ قَدْ بَدَا لِي أَنْ لَا أَتَزَوَّجَ يَوْمِي هَذَا قَالَ عُمَرُ فَلَقِيتُ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ فَقُلْتُ إِنْ شِئْتَ زَوَّجْتُكَ حَفْصَةَ بِنْتَ عُمَرَ فَصَمَتَ أَبُو بَكْرٍ فَلَمْ يَرْجِعْ إِلَيَّ شَيْئًا وَكُنْتُ أَوْجَدَ عَلَيْهِ مِنِّي عَلَى عُثْمَانَ فَلَبِثْتُ لَيَالِيَ ثُمَّ خَطَبَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَنْكَحْتُهَا إِيَّاهُ فَلَقِيَنِي أَبُو بَكْرٍ فَقَالَ لَعَلَّكَ وَجَدْتَ عَلَيَّ حِينَ عَرَضْتَ عَلَيَّ حَفْصَةَ فَلَمْ أَرْجِعْ إِلَيْكَ شَيْئًا قَالَ عُمَرُ قُلْتُ نَعَمْ قَالَ أَبُو بَكْرٍ فَإِنَّهُ لَمْ يَمْنَعْنِي أَنْ أَرْجِعَ إِلَيْكَ فِيمَا عَرَضْتَ عَلَيَّ إِلَّا أَنِّي كُنْتُ عَلِمْتُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ ذَكَرَهَا فَلَمْ أَكُنْ لِأُفْشِيَ سِرَّ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَوْ تَرَكَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبِلْتُهَا رواه البخاري 5122 (تأيّمتவிதவையாகி விட்ட போது)
இன்றைய திருமணங்களில் ஆடியோ வீடியோ இரண்டும் படுத்தும் பாடு
திருமண மண்டபங்களில் நடைபெறும் மார்க்க விரோத காரியங்களில் ஒன்றாக ஆண்களும், பெண்களும் ஒன்றாக கலந்து விடுவதை கூறலாம். சில இடங்களில் ஆண்கள், பெண்கள் என தனியாக இருந்தாலும் வீடியோ மூலம் பெண்களை படம் பிடித்து ஆண்களுக்கு காட்டுகின்றனர். ஆண்கள் தங்களுக்கு முன்னால் உள்ள T.V.மூலம் அலங்கரிக்கப்பட்ட மணப்பெண் உட்பட மற்ற பெண்களையும் பார்க்கும் நிலை உருவாகிறது. சபல புத்தி உள்ள சில ஆண்களுக்கு இது சவுகரியமாகி விடும்
قال الله تعالي قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ (30) سورة النور
عن أبي هريرة، رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: "كل عين باكية يوم القيامة إلا عينًا غَضّت عن محارم الله، وعينًا سهِرت في سبيل الله، وعينًا يخرج منها مثل رأس الذباب، من خشية الله، عز وجل" (تفسير ابن كثير)
وعنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كُتِبَ عَلَى ابْنِ آدَمَ نَصِيبُهُ مِنْ الزِّنَا مُدْرِكٌ ذَلِكَ لَا مَحَالَةَ فَالْعَيْنَانِ زِنَاهُمَا النَّظَرُ وَالْأُذُنَانِ زِنَاهُمَا الِاسْتِمَاعُ وَاللِّسَانُ زِنَاهُ الْكَلَامُ وَالْيَدُ زِنَاهَا الْبَطْشُ وَالرِّجْلُ زِنَاهَا الْخُطَا وَالْقَلْبُ يَهْوَى وَيَتَمَنَّى وَيُصَدِّقُ ذَلِكَ الْفَرْجُ وَيُكَذِّبُهُ رواه مسلم
இசை ஆடியோ- இது இல்லாமல் திருமணமே கூடாது என சிலர் கருதுகின்றனர். ரஹ்மத்துடைய மலக்குகளை வெளியே அனுப்பி விட்டு, கெட்ட ஷைத்தான்களை உள்ளே கொண்டு வருபவைகளாக இசை ஆடியோ கேசட்டுகள் பயன்படுகின்றன.
திருமணத்திற்கு சிறந்த மாதமும், மணமக்களுக்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் செய்த பிரார்த்தனையும்
عَنْ عَائِشَةَرض قَالَتْ تَزَوَّجَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي شَوَّالٍ وَبَنَى بِي فِي شَوَّالٍ وَكَانَتْ عَائِشَةُ تَسْتَحِبُّ أَنْ يُبْنَى بِنِسَائِهَا فِي شَوَّالٍ (ترمذي)
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَفَّأَ الْإِنْسَانَ إِذَا تَزَوَّجَ قَالَ بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ رواه ابوداود
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ قَالَ تَزَوَّجَ عَقِيلُ بْنُ أَبِي طَالِبٍ فَخَرَجَ عَلَيْنَا فَقُلْنَا بِالرَّفَاءِ وَالْبَنِينَ فَقَالَ مَهْ لَا تَقُولُوا ذَلِكَ فَإِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ نَهَانَا عَنْ ذَلِكَ وَقَالَ قُولُوا بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَبَارَكَ لَكَ فِيهَا (رواه احمد,والدارمي,وابن ابي شيبة,والطبراني,والحاكم)
திருமணத்தில் ஒழிக்கப்பட வேண்டிய இன்னும் சில அனாச்சாரங்கள்
திருமணத்திற்காக நாள், நட்சத்திரங்கள் பார்ப்பது, ஜோசியம், ஜாதகம், ஜோடிப் பார்ப்பது, நேரம், காலம் பார்ப்பது, வளர் பிறை, தேய்பிறை பார்ப்பது, மாவிலைத் தோரணங்கள் கட்டுவது சடங்கு என்ற அடிப்படையில் வாழை மரங்கள் நடுவது மாப்பிள்ளை ஊர்வலம், மணமகன் தங்கம் அணிவது,, நிச்சயதார்த்தம் என்ற பெயரில் வீண் செலவுகள், இத்தனை பேருக்கு விருந்து கொடுக்க வேண்டும் என்று மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரை நிர்பந்திப்பது, மொய் என்ற அன்பளிப்பை கட்டாயமாக்குவது
குறிப்பு- மார்க்கத்திற்கு விரோதமான வகையில் பல இலட்சங்கள் நம்முடைய திருமணங்களில் செலவழிக்கப்படுகிறது. பகட்டுக்காகவும், பெருமைக்காகவும் நடத்தப்படும் திருமணங்களில் இன்னும் நிறைய பணங்கள் வீணாக்கப்படுகிறது. இந்தப் பணத்தை மிச்சப்படுத்தி ஏழைக்குமர்களுக்கு திருமணம் செய்து வைத்தால் நன்மையாவது மிஞ்சும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக